வெள்ளை நிறத்தில் ஒரு வானவில் – Crime Novel

தங்கை கதம்பாவின் திருமண விஷயமாக அப்பாவுடன் மதுரை செல்கிறாள் கிருஷ்ணகுமாரின் மனைவி லதிகா. வக்கீலான கிருஷ்ணகுமார் கேஸ் விஷயமாக பெங்களுர் செல்ல இருந்த நிலையில் அவனுடைய பெங்களூர் நண்பன் சிவாவிடம் இருந்து போன் வருகிறது. பெங்களூரில் இருந்து கிருஷ்ணகுமாரை சந்திக்க சென்னை வந்திருந்தான் சிவா. உடல் மெலிந்து எலும்பும் தோலுமாய் காட்சி அளித்த சிவாவைப் பார்த்த கிருஷ்ணகுமார் அதிர்ந்தான். தன்னுடைய மனைவி புனிதாவின் நடத்தை சரி இல்லாததால் விவாகரத்து கேட்டு வந்திருந்தான் சிவா. பெஸ்ட் தம்பதிகள் என்று... Continue Reading →

ஊதா நிற தேவதை – Crime Novel

சாயந்திர நேரம்.. மழையில் சொட்ட சொட்ட நனைந்து ரோட்டில் நின்று கொண்டிருந்தாள் ஹரிணி. அவளுடைய அழகில் மயங்கிய காந்தன் அவளுக்கு உதவி செய்வதுபோல் அருகில் காரை கொண்டு வந்து நிறுத்தினான். தன்னுடைய பெயரை மாற்றிக் கூறிய ஹரிணி அவனுடன் காரில் ஏறிக்கொள்கிறாள். அந்த நாளில் இருந்து காந்தன் காணாமல் போகிறான். இன்னும் இருபது நாட்களில் திருமணம் நடக்கவிருந்த நிலையில் திடீரென காணாமல் போன தன்னுடைய மகள் பவித்ராவைத் தேடித் தருமாறு கமிஷனரிடம் உதவி கேட்கிறார் பெருமாள் நம்பி.... Continue Reading →

ஆகஸ்ட் அதிர்ச்சி – Crime Novel

மோகன்ராஜின் ஒரே மகளான கோடீஸ்வரியான சில்பா தன்னுடைய ஸ்டேட்டஸிற்கு கொஞ்சம் கூட பொருத்தம் இல்லாத விக்னேஷைக் காதலிக்கும் விஷயம் அவருக்குத் தெரிய வருகிறது. மேற்கொண்டு தன் மகள் சில்பா அவனுடன் பழகாமல் இருக்க விக்னேஷைக் கொலை செய்ய திட்டம் போடுகிறார் மோகன்ராஜ். தன்னுடைய பிஏ விஜயராகவனை வைத்து விக்னேஷை சுட்டுக் கொல்கிறார் மோகன்ராஜ். விக்னேஷின் உடலை மில்லுக்கு கொண்டு செல்லும் வழியில் போலீசிடம் பிடிபடுகின்றனர். எப்படியோ இன்ஸ்பெக்டரிடம் பேரம் பேசி பிணத்தை இருவருமாக சேர்ந்து மில்லில் உள்ள... Continue Reading →

விலையாக ஒரு கொலை – Crime Novel

தன்னுடைய ஒரே மகளான அனுவிற்குத் திருமணம் செய்துவைக்க தீவிரமாக மாப்பிள்ளை தேடிக்கொண்டிருந்தார் செல்வகிருஷ்ணன். கூடவே அனுவின் சித்தியான சரளாவும் தன்னுடைய கணவனிடம் அனுவின் திருமணத்திற்காக நச்சரித்துக்கொண்டிருந்தாள். ஆனால், அனுவோ மோகனைத் தீவிரமாக காதலித்துக்கொண்டிருந்தாள். அனுவின் வீட்டிற்கு நேர் எதிரில் குடியிருந்தான் முரளி. சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு மலேசியாவில் இருந்த  தன்னுடைய அப்பா அம்மாவை விட்டுவிட்டு சென்னை வந்துவிட்டவன். சான்ஸுக்காக நிறைய டைரக்டர்களைத் தேடி அலைந்துகொண்டிருந்தான் முரளி. அனுவின் அப்பா இரவு அவசர வேலையாக கம்பனிக்கு சென்றிருந்ததால், அவளுடைய... Continue Reading →

நான் ஏன் இறந்தேன் – Crime Novel

பேசியபடி வரதட்சணை பணத்தைக் கொடுக்கத் தாமதமானதால் பைரவியை மணவறைக்குச் செல்லவிடாமல் தடுக்கிறார் மாப்பிள்ளை சசியின் அப்பா சிகாமணி. பைரவியின் அப்பா ராமலிங்கம் எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தும் பலனில்லாமல் போகிறது. ஒருவழியாக ராமலிங்கம் எதிர்பார்த்த இடத்திலிருந்து பணம் வந்து சேர, திருமணத்திற்கு மறுப்பு தெரிவிக்கிறாள் பைரவி. பைரவியின் மறுப்பை எதிர்பார்க்காத மாப்பிள்ளை வீட்டார் மணமேடையில் நின்று போன கல்யாணம் நடந்ததாக சரித்திரம் இல்லை என்று கோபத்தில் அவளைக் கறுவிவிட்டு அங்கிருந்து நகர்ந்தனர். அதே நேரத்தில் கூடியிருந்த கூட்டத்தில் இருந்து... Continue Reading →

ஒரு லட்சம் வினாடிகள் – Crime Novel

காதலனுடன் வீட்டை விட்டு ஓடிப்போன தன்னுடைய மகள் பூமொழியின் இருப்பிடத்தை அறிந்துகொள்வதற்காக அம்பாள் அடிமை ஜோசியரிடம் ஆலோசனை கேட்கிறார் பைரவமூர்த்தி. அவர்களின் குடும்ப ஜோதிடர் சோழிகளை உருட்டிப் பார்க்கிறார். இப்போதிருந்து மிகச் சரியாக ஒரு லட்சம் வினாடிகளுக்குள் பூமொழியைக் கண்டுபிடித்து அவளை இந்த வீட்டிற்கு கூட்டி வந்தால் அவர்கள் இருவரையும் பிரித்துவிடலாம். குறிப்பிட்ட இந்த நேரத்தைத் தாண்டிவிட்டால் இனி பூமொழி நமக்கு கிடைக்க மாட்டாள் என்று சொல்கிறார் அம்பாள் அடிமை. பூமொழியின் இரண்டு அண்ணன்களும் அவளை ஊர்... Continue Reading →

ஒரு பௌர்ணமி மரணம் – Crime Novel

அன்றைய தினம் திருமணம் முடிந்து ரிசப்ஷனில் நின்றுகொண்டிருந்தனர் ஜெயந்த்-சுப்ரியா தம்பதியினர். ரிசப்ஷனுக்கு வந்திருந்த ஜெயந்தின் நண்பன் மனோஜ் தேனிலவிற்காக புதுமணத் தம்பதியரை தன்னுடைய கெஸ்ட் ஹவுஸிற்கு அழைக்கிறான். ஜெயந்தும் சுப்ரியாவும் ஊட்டியில் உள்ள மனோஜின் ஜண்டேவாலா எஸ்டேட்டிற்குச் சென்றபோது மனோஜ் வேலை விஷயமாக வெளியூர் கிளம்பிக்கொண்டிருந்தான். எஸ்டேட் மேனேஜர் விஜய்யிடம் ஜெயந்த்-சுப்ரியாவிற்குத் தேவையான வசதிகளை செய்து தருமாறு கூறிவிட்டு கிளம்பிவிடுகிறான் மனோஜ். அங்கு வந்த விஜயைப் பார்த்த சுப்ரியா திடுக்கிட்டாள். காலேஜில் தன்னைக் காதலிப்பதாகக் கூறி தன்... Continue Reading →

போகப் போகத் தெரியும் – Crime Novel

சொந்த கிராமமான தாழையூருக்கு நண்பன் ரவிச்சந்திரனையும் விடுமுறைக்கு அழைத்துச் செல்கிறான் விநோத். தாழையூரில் உள்ள விநோத்தின் மாமா சோமநாத குருக்கள் வீட்டிற்கு இருவரும் செல்கின்றனர். கிராமத்திற்குச் செல்லும் கடைசி பஸ்ஸையும் தவறவிட்ட இருவரும் டாக்ஸியில் நெருக்கியடித்துக் கொண்டு பயணிக்கின்றனர். அப்போது அதே டாக்ஸியில் உடன் வந்த பெரியவர் தாழையூரைப் பற்றி திடுக்கிடும் தகவல் ஒன்றைக் கூறுகிறார். இரவு நேரங்களில் வழியில் உள்ள ஆற்றங்கரை கோவில் அருகில் காத்து கறுப்பு நடமாட்டம் இருப்பதை பெரியவரின் மூலம் அறிகின்றனர். நிறைவேறாத... Continue Reading →

சத்யாவின் சபதம் – Crime Novel

பத்ரியும் வகுளாவும் முகநூல் நண்பர்கள். இரண்டு வருடங்களாக முகநூலில் மட்டுமே பேசி வந்த பத்ரி திடீர் சர்ப்ரைஸாக வகுளாவை சந்திக்க நேரில் வருகிறான். இதை சற்றும் எதிர்பாராத வகுளா அதிர்ச்சி அடைந்து பின் சந்தோஷமடைகிறாள். பத்ரி வீட்டிற்கு வந்த நேரம் சாயங்கால வேளை, அதுமட்டுமில்லாமல் அவன் வீட்டிற்கு வந்த போது அவள் மட்டுமே தனியாக வீட்டில் இருந்தாள். மேலும் வகுளாவின் அண்ணா நவீன் இரவு 8 மணிக்கு தான் வீட்டிற்கு வருவான். பேசிக்கொண்டே இருந்த பத்ரி அவளை... Continue Reading →

கறுப்பு வானவில் – Crime Novel

தந்தையை இழந்த அரவிந்துக்கு கல்யாண வயதில் ஒரு அக்காவும், இரண்டு தங்கைகளும் இருக்க, குடும்பத்தில் வருமானம் இல்லாததால் அக்கா ரேணுகாவின் திருமணம் தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது. இரண்டு வருடங்களாக வேலை தேடி சலித்துப் போன அரவிந்த் அன்றைய தினம் இன்டர்வியூவிற்கு கிளம்பிக்கொண்டிருந்தான். பிரபலமான கங்கா கௌரி கம்பெனியில் இன்டர்வியூ. அவநம்பிக்கையுடன் இன்டர்வியூ கிளம்பிய அவனுக்கு எதிர்பாராத விதமாக அந்தக் கம்பெனியில் வேலை கிடைக்கிறது, கூடவே விபரீதமான ஒரு கோரிக்கையுடன். தன்னுடைய மகள் தேன்மொழியின் தற்கொலைக்குக் காரணமாக இருந்த... Continue Reading →

அருகில் ஒரு நரகம் – Crime Novel

தன்னுடைய தம்பி சத்தியமூர்த்தியின் தற்கொலைக்குக் காரணமான அகிலாவையும் அவளுடைய கணவன் யோகேஸ்வரனையும் தீர்த்துக்கட்ட முடிவு செய்கிறான் பரமேஷ். கூட்டாளிகளுடன் சேர்ந்து அகிலா-யோகேஸ்வரன் வரவிருக்கும் வழியில் சாலையில் காத்திருக்கின்றனர் பரமேஷும் அவனுடைய நண்பர்களும். சத்தியமூர்த்தியைக் காதலித்துக்கொண்டிருந்த அகிலா, பணக்காரனான யோகேஸ்வரன் கிடைக்கவும் அவனைக் கல்யாணம் செய்து கொள்கிறாள். அகிலா கிடைக்காத காரணத்தால் ரயில் முன் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொள்கிறான் சத்தியமூர்த்தி. மழைத் தூறல் அப்போது தான் ஆரம்பித்திருந்தது. அதே வேளையில் கிரைம் பிரான்ச் ஆபீஸரான அசோக் நிறைமாத... Continue Reading →

நயாகரா புயல் – Crime Novel

நயாகரா நீர்வீழ்ச்சியைப் பார்ப்பதற்காக விவேக்-ரூபலா இருவரும் கனடாவில் உள்ள விண்ட்ஸர் சிட்டி ஏர்போர்ட்டிற்கு வருகின்றனர். அவர்களை ரிஸீவ் பண்ணுவதற்காக விவேக்கின் நண்பன் தமிழ்மணி ஏர்போர்ட்டில் காத்திருக்கிறான். விவேக் ஏர்போர்ட்டில் காலடி எடுத்து வைத்த நேரம் அவனுக்காக ஒரு கேஸ் கனடாவில் காத்துக்கொண்டிருந்தது. மூவரும் காரில் பயணித்துக்கொண்டிருக்க வழியில் ஒரு ஃபாதர் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கிறார். அவரைக் காப்பாற்றி ஹாஸ்பிடலைஸ் பண்ணுவதற்குள் அவர் உயிரிழக்கிறார். போலீஸ் விசாரணையில் இறந்த நபர் ஃபாதர் இல்லை என்பதும், அவன் தேடப்பட்டு வரும் தூக்குத்தண்டனைக்... Continue Reading →

வளைவுகள் அபாயம் – Crime Novel

தன்னை சிலர் தொடர்ந்து மிரட்டி வருவதாகச் சொல்லி சத்யேஷிடம் உதவி கேட்டு வருகிறாள் சுகிர்தா. சத்யேஷ் தற்காப்புக் கலை நிபுணன். மேலும் சிறுவர்களுக்கான தற்காப்பு பயிற்சி மையத்தை நடத்தி வருபவன். சூரத் சத்யேஷின் உதவியாளன். தன்னுடைய பயிற்சி மையத்தில் பெண்களுக்கு அனுமதி இல்லை என்று உதவ மறுத்துவிடுகிறான் சத்யேஷ். ஆனால் சுகிர்தா அவனை சந்தித்து விட்டு சென்ற சிறிது நேரத்திலேயே சத்யேஷிற்கு ஒரு மிரட்டல் பேர்வழி போன் செய்கிறான். சுகிர்தா விஷயத்தில் ஒதுங்கி இருக்குமாறு சத்யேஷை மிரட்டுகிறான்... Continue Reading →

ஜூன், ஜூலை, ஆ… – Crime Novel

சாரதாவின் வீட்டில் இருந்து கிளம்பிய மருதநாயகம் இரவு பத்தரை மணிக்கு வீட்டை அடைந்தார். வாசலிலேயே அவருடைய மனைவி ஜானகி கோபத்தில் காத்திருந்தாள். சாரதாவின் மேல் உள்ள ஆசையால் அவளுக்கு பங்களா வாங்கிக் கொடுத்து தனியாக வைத்திருந்தார் மருதநாயகம். அன்றைக்கு சாயந்திரம் ஜானகியின் உத்தரவின் பேரில் இருவரும் படத்திற்குச் செல்ல இருந்தனர். அதனால் அன்று சாரதாவை சந்திக்க வர முடியாததை முன்னமே அவளிடம் சொல்லிவிட்டார். திடீரென எதிர்வீட்டுப் பெண் ஜானகியை மாங்கல்ய பூஜைக்கு அழைத்துவிட்டுச் செல்ல அங்கு செல்ல... Continue Reading →

இது தப்பிக்கும் வேளை – Crime Novel

பிரபல சினிமா நடிகையான கார்த்திஜாவைப் பெண் கேட்டு வருகிறான் சிங்கப்பூரின் கோடீஸ்வரர்களில் ஒருவனான மதன். ஆரம்பத்தில் திருமணத்திற்கு யோசித்த அவள் பிறகு மதனுக்கு ஒரு கண்டிஷன் போடுகிறாள். திருமணத்திற்குப் பிறகு கார்த்திஜாவின் சொத்துக்களை மதன் எதிர்பார்க்கக் கூடாது என்பதே அந்த கண்டிஷன். கார்த்திஜாவின் கண்டிஷனுக்கு ஒத்துக்கொள்கிறான் மதன். இந்நிலையில் மதனைப் பற்றிய மோசமான விஷயங்களுடன் ஒரு கடிதம் கார்த்திஜாவின் வீட்டிற்கு வருகிறது. மதன் ஊரில் உள்ள அத்தனை அயோக்கியத்தனங்களையும் செய்பவன் என்பதைப் படித்த அவள் அதிர்ந்தாள். மேற்கொண்டு... Continue Reading →

சொர்க்கத்தின் சாவி – Crime Novel

பாகிஸ்தானின் கராச்சியில் நடக்கவிருந்த கல்ச்சுரல் ப்ரோக்ராம்மில் பங்கேற்க ஒரு மாதம் இருந்த நிலையில் தயாராகிக்கொண்டிருந்தாள் பிரபல டான்சரான சமுத்திரா. அவளை சந்திக்க ஒரு கடிதத்துடன் வருகிறார் அசிஸ்டண்ட் கமிஷனர் வகுளாம்பரன். அந்தக் கடிதத்தில் சமுத்திரா கல்ச்சுரல் ப்ரோகிராம்மை புறக்கணிக்க வேண்டுமெனவும்,  மீறி கராச்சி சென்றால் இரண்டு கால்களையும் இழக்க நேரிடும் என லிட்டில் டெவில்ஸ் என்ற தீவிரவாத அமைப்பு அவளை எச்சரித்திருந்தது. மிரட்டல் கடிதத்தைப் பொருட்படுத்தாமல்  ப்ரோக்ராம்மில் கலந்துகொள்வதில் உறுதியாக இருந்தாள் சமுத்திரா. தக்க ஏற்பாடுகளுடன் பாதுகாப்பாக... Continue Reading →

உயிரின் ஒலி – Crime Novel

பரமானந்த ரிஷியின் தீவிர பக்தனான தமிழ்ச்செல்வன் தனது மனைவி வைஷ்ணவியுடன் ரிஷிகளின் ஆசிரமத்திற்குச் சென்றுகொண்டிருந்தான்.  ஆசிரமத்திற்குள் நுழையும் முன் இயற்கை உபாதை அதிகரிக்க ஒரு பெரிய பாறையின் மறைவில் ஒதுங்கினான் தமிழ்ச்செல்வன். பாறைக்குப் பின்னால் இருந்து இருவர் கிசுகிசுப்பாக பரமானந்த ரிஷிகளைப் பற்றி அவதூறாகப் பேசிக்கொண்டிருந்தது  இவனுடைய காதில் விழுந்தது. உச்சகட்ட கோபமடைந்த தமிழ்ச்செல்வன் அவர்களை உலுக்கி எடுக்க, பேசிக்கொண்டிருந்த இருவரும் பரமானந்த ரிஷிகளின் சீடர்கள் என்பது தாமதமாக தமிழ்ச்செல்வனுக்குப் புரிகிறது. இரண்டு சீடர்களிடம் இருந்து பரமானந்த... Continue Reading →

அபயம்…அபாயம்..அருணா.! – Crime Novel

விவேக் ஸ்தலத்திற்குச் சென்ற போது கரிக்கட்டையாய் மாறி புகைந்து கொண்டிருந்தான் கல்லூரி மாணவன் எழில் செல்வன். போதையின் உச்சத்தில் இருந்த எழில் செல்வன் போதை தலைக்கேறி ட்ரான்ஸ்பார்மரில் ஏறியதில் ஷாக் அடித்து மரணம். சிட்டியில் கல்லூரி மாணவர்களிடையே பரவி வரும் போதை பழக்கத்தால் இப்படிப்பட்ட அசாதாரண மரணங்கள் அதிகரிப்பது வழக்கமாகி இருந்தது. கல்லூரி மாணவர்களிடம் விசாரித்ததில் போதை மருந்து விற்பனையில் முக்கிய மந்திரி சம்பந்தப்பட்டிருப்பதை விவேக் அறிகிறான். விவேக் விசாரித்துக்கொண்டிருந்த நேரத்தில், மந்திரி அடைக்கலராஜ் தன்னுடைய டாக்டர்... Continue Reading →

இந்தியன் என்பது என் பேரு – Crime Novel

ஹாங்காங்கில் வேலை செய்யும் அண்ணன் தருணை சந்திக்க ஏர்போர்ட் வந்திறங்குகிறாள் அட்சதா. வருடத்திற்கு ஒருமுறை வந்து இரண்டு வாரம் தங்கிவிட்டு செல்வது அவளது வழக்கம். இந்த முறை அவள் ஏர்போர்ட்டில் இறங்கியவுடன் மெலன் லீ என்ற சீனப் பெண் அவளாகவே வந்து அறிமுகம் செய்து கொண்டு காஃபி ஷாப்பிற்கு அட்சதாவை அழைக்கிறாள். அட்சதா மிகவும் அழகாக இருப்பதாகவும் இந்தியர்களை அவளுக்கு மிகவும் பிடிக்கும் எனவும் கூறுகிறாள். மெலன் லீயை நம்பி காஃபி ஷாப் செல்கிறாள் அட்சதா. அங்கு... Continue Reading →

இன்று இறப்பு விழா – Crime Novel

லண்டனில் நடக்கவிருந்த ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்காக பம்பாய் வந்தடைகின்றனர் ஒலிம்பிக் வீரர்கள். பம்பாயில் தங்கியிருந்து மீதிப் பயிற்சியையும் முடித்துக் கொண்டு அங்கிருந்து லண்டன் செல்வதாகத் திட்டம். ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் பூபேஷ் அனைவரையும் ஹோட்டல் அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்கிறார். இந்நிலையில் ஒலிம்பிக் வீரர்கள் பம்பாய் வந்த உடனேயே ஒரு சம்பவம். ஹாக்கி கேப்டனான உத்தமும் கோச் குருதேவ் சிங்கும் போய்க்கொண்டிருந்த காரில் திடீரென குண்டு வெடித்து பீஸ் பீஸாக சிதறினர். குண்டுவெடிப்பு சம்பவத்தைப் பற்றி போலீஸ்... Continue Reading →

அவள் ஒரு ஆச்சரியக்குறி – Crime Novel

கல்லூரிக்குச் சென்ற வனிதா ஸ்பெஷல் கிளாஸ் முடிந்து வழக்கமான நேரத்தைத் தாண்டியும் வீடு வந்து சேரவில்லை. பயந்த அவளுடைய அப்பா ராமநாதன் பஸ் ஸ்டாப்பிற்குச் சென்று வனிதாவிற்காகக் காத்திருக்கிறார். நேரம் தான் போய்க்கொண்டிருந்ததே தவிர எந்த பஸ்ஸிலும் வனிதா வரவில்லை. கடைசி பஸ்ஸும் போய்விட, பதற்றத்துடன் வீடு திரும்பிய ராமநாதன் மனைவி சாவித்திரியிடம் சொல்லிவிட்டு, வனிதாவின் தோழி மாலதி வீட்டிற்குச் சென்று விசாரிக்கிறார். மாலதி சொன்ன தகவல் ராமநாதனை திடுக்கிட வைக்கிறது. வனிதா ஸ்பெஷல் கிளாஸிற்கே அன்று... Continue Reading →

ஒரு கால் சுவடு தொடர்கிறது – Crime Novel

ஐந்து மாதங்களுக்குப் பிறகு அன்றைக்குத் தான் சிங்கப்பூரில் உள்ள அத்தை வீட்டில் இருந்து இந்தியாவிற்கு திரும்புகிறாள் ராகினி. ஏர்போர்ட்டில் அவளுடைய அப்பா ஜகதீஸ்வரனைத் தேட, அவர் அவள் கண்ணில் சிக்கவில்லை. மேற்கொண்டு அப்பாவிற்காக காத்திருக்காமல் டாக்ஸி பிடித்து வீட்டிற்குச் செல்கிறாள் ராகினி. வீட்டிற்குப் போகும் வழியிலேயே ரோட்டில் கூட்டம் கூடியிருக்க அவளுக்கு பழக்கமான அம்பாசடர் கார் நடுரோட்டில் நிற்க காரைச் சுற்றிலும் ஒரே நெரிசல். காரை நோக்கிச் சென்ற ராகினி அதிர்ந்தாள். அங்கே காரில் ஏராளமான கத்திக்குத்துகளுடன்... Continue Reading →

இந்த ரோஜாவுக்கு நிறமில்லை – Crime Novel

போலீஸ் வேலையை விட்டுவிடுமாறு ப்ரதீபாவை சில நாட்களாகவே வற்புறுத்திக் கொண்டிருந்தான் அவளது கணவன் மகேஷ். முதன்முதலில் பஸ்ஸில் ரவுடிகளை தைரியமாக எதிர்த்து நின்ற ப்ரதீபாவின் துணிச்சலை தான் முதலில் விரும்பினான் மகேஷ். வீட்டில் தன்னுடைய விருப்பத்தைச் சொல்லிய மகேஷ் ஆரவாரமாக குடும்பத்தினருடன் ப்ரதீபாவின் வீட்டுக்கு பெண் பார்க்க வந்தான். வீட்டில் ப்ரதீபா இல்லை. மேலும் ப்ரதீபா போலீஸ் என்ற உண்மை தெரிந்ததும் வந்தவர்கள் அப்படியே திரும்பிச் சென்றனர். பெண்கள் போலீஸ் வேலைக்கு செல்வதை விரும்பாத மகேஷின் ஆர்த்தடாக்ஸ்... Continue Reading →

இந்திய நாடு என் வீடு – Crime Novel

இந்திய ராணுவ ரெஜிமென்டில் அந்நிய நாட்டுத் தீவிரவாதிகள் சதி செய்ய இருப்பதாக பாதுகாப்பு அமைச்சகத்திடம் இருந்து மேஜர் காசிநாத்திற்கு ரகசியத் தகவல் வந்து சேர்கிறது. தீவிரவாதிகளின் ஊடுருவலைத் தடுத்து ரெஜிமென்ட்டைப் பாதுகாக்க உயரதிகாரிகள் கொண்ட கூட்டத்தைக் கூட்டுகிறார் மேஜர். அந்தக் கூட்டமே அந்த ரெஜிமெண்ட்டில் இருந்த தருணின் மேல் சந்தேகப்பட்டு அவனுடைய ரியாக்ஷனைச் சோதிப்பதற்குத் தான். அன்றைக்கு மனைவியுடன் ஷாப்பிங் சென்றிருந்த தருணைப் பற்றி எல்லாத் தகவல்களும் அறிந்த ஒருவன் தருணிடம் தனியாகப் பேசுவதற்காக அழைக்கிறான். மனைவியை... Continue Reading →

உயிரின் உயிரே – Crime Novel

காபரே டான்சர்களைத் தீவிரமாக வெறுக்கும் மனநோயாளியான ஹரி, தனியார் மனநல மருத்துவமனையில் இருந்து தப்பிச் செல்கிறான். மருத்துவமனை பேர் கெட்டுவிடக் கூடாது என்பதற்காக டாக்டர் வேணுகோபால் ஹரி காணாமல் போன இரவே விஷயத்தைப் போலீசிடம் கொண்டு போகாமல் லேசர் டிடெக்ட்டிவ் ஏஜென்சியைச் சேர்ந்த நரேனிடம் உதவி கோருகிறார். ஆனால், எதிர்பாராத விதமாக அடுத்த நாளே தாரா ஹோட்டலில் காபரே டான்சரான தீபிகா கழுத்து நெரிக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்படுகிறாள். தீபிகாவும் அதே ஹோட்டலில் மேனேஜராக இருந்த சங்கீத்தும்... Continue Reading →

கறுப்பு ரத்தம் – Crime Novel

சேவியரும் லாரன்ஸும் அவசர அவசரமாக குணசீலியை பிக் அப் செய்வதற்காக ரயில்வே ஸ்டேஷனை வந்தடைந்தனர். ஒரு மாத கல்லூரி விடுமுறைக்காக சென்னையில் இருந்து கோவைக்கு வந்து கொண்டிருந்தாள் குணசீலி. ட்ரெயின் அப்போது தான் ஸ்டேஷன் வந்தடைகிறது. குணசீலி அவளுடைய கம்பார்ட்மெண்ட்டில் இருந்து இறங்காததால், இருவரும் ரயிலுக்குள்ளே சென்று பார்க்கிறார்கள். அங்கே குணசீலியின் பொருட்கள் மட்டும் பெர்த்தில் இருக்க அவளைக் காணவில்லை. ரயில் முழுவதும் தேடிவிட்டு கடைசியாக பாத்ரூம் பூட்டப்பட்டிருப்பதை கண்டுபிடித்த சேவியர், கதவைத் தட்ட உள்ளே இருந்து... Continue Reading →

என் இனிய விரோதியே – Crime Novel

கெமிஸ்ட்ரி கோல்ட் மெடலிஸ்ட்டான கல்யாண் அன்று இன்டெர்வியூவிற்கு கிளம்பிக் கொண்டிருந்தான். கல்யாணின் அப்பா இன்ஸ்பெக்டர் கிருஷ்ணராஜின் கல்லூரி நண்பர்களான கமலசேகர் & சிவராமின் பெர்டிலைசர் கம்பெனி அது. எப்படியும் வேலை கிடைத்துவிடும் என்ற சந்தோசத்தில் கிளம்பிய கல்யாண் வழியில் அவனுடைய காதலி வந்தனாவை சந்தித்துவிட்டுச் செல்கிறான். கல்யாண் இன்டெர்வியூவிற்குச் செல்லும் அதே பெர்டிலைசர் கம்பெனியில் தான் வந்தனாவின் தோழி சுதந்திராவும் ரிஷப்ஷனிட்டாக வேலை பார்க்கிறாள். கம்பெனியின் பிரம்மாண்டத்தை ரசித்துக்கொண்டே வந்த அவன், சுதந்திராவிடம் இன்டெர்வியூ பற்றிய தகவல்களைத்... Continue Reading →

நீல நிலா – Crime Novel

காணாதது கண்டான் கோட்டை..?! சுட்டெரிக்கும் வெயிலிலும் இருண்டு கிடைக்கும் காணாதது கண்டான் கோட்டை. பௌர்ணமி நாளன்று மட்டும் நீல நிறத்தில் ஒளிர்கிறது. அதன் பின்னால் இருக்கும் மர்மம் என்ன..? அன்று.. அந்த மர்மத்தை ஆராய தொல்லியல் துறை தலைவர் பத்ரிநாராயணன் தலைமையில் 8 பேர் கொண்ட குழு வேனில் விரைந்து கொண்டிருந்தது. அடர்ந்த காட்டிற்குள் இருந்த அந்தக் கோட்டையை அடைவதற்குள் இருட்டிவிட, இரவு வனத்துறை செக்போஸ்ட் அருகிலேயே டென்ட் போட்டு தங்க முடிவு செய்கின்றனர். அப்போது அங்கு... Continue Reading →

இறந்து கிடந்த தென்றல் – Crime Novel

சென்னையில் இருந்து சொந்த ஊரான கோவைக்கு சொந்த வேலையாக பஸ்ஸில் சென்று கொண்டிருந்தான் ரிப்போர்ட்டரான குமரன். வழியில் ரயில்வே கேட் போடப்பட்டிருந்ததால், இயற்கை உபாதைக்காக  பஸ்ஸை விட்டு இறங்கி ஒதுக்குப்புறமாகப் பார்த்து ஒதுங்குகிறான். திடீரென காலில் ஏதோ தட்டுப்பட, அரைகுறை வெளிச்சத்தில் கீழே பார்த்த குமரன் திடுக்கிட்டான். கணுக்கால் அளவு வெட்டப்பட்டிருந்த நைந்து போன மனிதக் கால். ரிப்போர்ட்டர் என்பதால் தைரியமாக போலீசில் கம்ப்ளைண்ட் கொடுக்க நினைக்கிறான் அவன். பாதி வழியில் காட்டூர் போலீஸ் ஸ்டேஷனில் இறங்கிக்கொண்ட... Continue Reading →

நிலவுக்கும் நெருப்பென்று பேர் – Crime Novel

காதலர்களான புவனேஷும் முகிலாவும் திருட்டுத்தனமாகத் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்கின்றனர். புவனேஷின் பால்ய சிநேகிதன் தருண் திருமணத்திற்குத் திட்டம் தீட்டிக் கொடுக்கிறான். அன்று அதிகாலை திருமணம். ஆனால், வீட்டில் இருந்து கிளம்பிய முகிலா கோவில் வந்து சேரவில்லை. விஷயம் போலீசிற்கு செல்ல, விசாரணையில் முகிலா சென்ற டாக்ஸி கம்பெனி கண்டுபிடிக்கப்பட்டு டிரைவரை போலீஸ் விசாரிக்கிறது. ட்ரைவர் குடிபோதையில் இருக்க அவன் எடக்கு மடக்காக பதில் சொல்கிறான். மேலும் அவனுடைய டாக்ஸியில் உடைந்த கண்ணாடி வளையல்கள் கிடைக்கிறது. டிரைவரை... Continue Reading →

பஞ்சமாபாதகம் – Crime Novel

ஜர்னலிஸ்ட் என்ற போர்வையில் சென்னையில் இருந்து ஒடிஷாவிற்கு பயணப்படுகின்றனர் இனியனும் மான்யாவும். அவர்களுடன் தெர்மல் பிளாஸ்க்கில் பத்திரமாக கடத்தி வரப்பட்ட ஐஸ்வர்ய பெருமாள் சிலை. ஒடிஷாவில் மான்யாவின் தோழி பல்லவி வீட்டில் தங்கி, தாங்கள் கொண்டு வந்த சிலையை பெரும் தொகைக்கு விற்கத் திட்டம் தீட்டியிருந்தனர். தமிழ்நாட்டில் இருந்து கோயில்களில் சிலைகள் களவாடப்பட்டு அவை வெளிநாட்டிற்கு விற்கப்படுவதாகவும், அந்த சிலைக் கடத்தலைக் கண்டுபிடித்து அது பற்றி ஒரு ஆர்டிகிள் எழுதப் போவதாகவும் பல்லவியிடம் இருவரும் பொய்யுரைக்கின்றனர். இருவரும்... Continue Reading →

சிவப்பு வானம் – Crime Novel

ஏரோபிளேன் நடுவானில் பறந்து கொண்டிருக்க, நிதி அமைச்சர் தேவநந்தன் தன் குடும்பத்தினருடன் விமானத்தில் வெகேஷனிற்கு சென்று கொண்டிருந்தார். டாய்லெட் சென்றுவிட்டு வந்தமர்ந்த சிறிது நேரத்திலேயே நெஞ்சைப் பிடித்துக்கொண்ட அவர் அப்படியே உயிரை விடுகிறார். ஃபிளைட்டில் இருந்த டாக்டர் அவரது மரணத்தை உறுதி செய்கிறார். அமைச்சரின் மரணத்தில் சந்தேகமடைந்த ஐ.ஜி, இந்தக் கேஸை க்யூ பிரான்ச்சை சேர்ந்த சஞ்சீவிடம் ஒப்படைக்கிறார். ஐ.ஜியின் சந்தேகத்திற்கு காரணம் ஹை ஃப்ளை ஏர்லைன்ஸ்-ல் அடுத்தடுத்து வரிசையாக விஐபி-களுக்கு மட்டுமே நிகழ்ந்த ஹார்ட் அட்டாக்... Continue Reading →

அரேபிய ரோஜா..! – Crime Novel

இந்த நிமிடம்...ஃசாப்ட்வேர் என்ஜினீயரான மஹிமா அவளுடைய எக்ஸிகியூடிவ் டைரக்டர் அழைப்பை ஏற்று அவரை சந்திக்கச் சென்று கொண்டிருக்கிறாள். அறையின் உள்ளே நுழைந்த அவளுக்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. மஹிமாவின் நீண்ட நாளைய கனவு ப்ராஜெக்ட்டான "அரேபிய ரோஜா"வை துபாயில் அரங்கேற்றுவதற்கு அல் அராஃபத் கம்பெனியினர் ஒப்புக்கொண்டதுதான். சந்தோசத்தில் திக்குமுக்காடிப் போன மஹிமா உற்சாகத்தில் அறைக்குத் திரும்பியவுடன், அவளுடைய பர்சனல் கம்ப்யூட்டரை ஆன் செய்தபோது டிஸ்பிளேயில் இருந்த மிரட்டல் செய்தி அவளை அதிர வைத்தது. இதற்கு நடுவில் ப்ராஜெக்ட்... Continue Reading →

கானல் நீரில் நீந்தும் மீன்கள்..! – Crime Novel

விஷ்வா - அஜந்தா இருவரும் காதலர்கள். இரண்டு வீட்டார் பக்கமும் எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் காதல் அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது. இன்னும் மூன்று மாதங்களே கல்யாணத்திற்கு உள்ள நிலையில், ஒரு அதிர்ச்சியான செய்தி அவர்களை வந்தடைகிறது ஹரிதா மூலமாக. ஹரிதா - விஷ்வாவின் கல்லூரி தோழி, மும்பையில் வசித்து வருபவள். திடீரென மும்பையில் இருந்து சென்னை வந்த ஹரிதா நியூமராலஜியைக் காரணம் காட்டி, கல்யாணத்தை ஒரு வருடத்திற்கு தள்ளி வைக்குமாறு விஷ்வாவிடம் கூறுகிறாள். மீறி விஷ்வா திருமணம்... Continue Reading →

சிவப்பு இரவு..?! – Crime Novel

பிரபலம் இல்லாத டிவி சீரியல் நடித்துக்கொண்டிருந்தான் முத்துக்குமார். நீண்ட நாட்களாக உடல்நிலை சரியில்லாத அவனுடைய அம்மாவுக்கு உடனடியாக ஆபரேஷன் செய்ய வேண்டிய கட்டாயம். கையில் காசில்லாமல் இருந்த அவனுக்கு நண்பன் ராகவன் வலிய வந்து உதவி செய்கிறான். உதவியைப் பெற சென்றவனின் வாழ்க்கை சிக்கலில் சிக்கிக்கொண்டது. சூழ்நிலை மோசமானது. அண்ணாச்சியிடம்  பணத்தை வாங்கச் சென்ற முத்துக்குமாரிடம் ஒரு உதவி கேட்கிறார் அவர். தவிர்க்க முடியாமல் அண்ணாச்சி சொன்ன இடத்திற்கு ஆக்ட்டிங் டிரைவராகப் போகிறான் முத்துக்குமார். அங்கே தான்... Continue Reading →

சிறகடிக்க ஆசை..! – Crime Novel

அன்றைக்கும் ஒருவன் தன்னை பைக்கில் பின் தொடர்வதை அறிந்த லேகா கடுப்பானாள். இப்படி தினமும் கல்லூரி செல்லும்போதும், தோழிகளுடன் வெளியில் செல்லும்போதும் சிலர் தன்னைப் பின்தொடர்ந்து வருவதை சில நாட்களாகவே அவளும் கவனித்துக் கொண்டு தான் இருந்தாள். இதனாலேயே லேகா அவளுடைய அப்பா ராமகிருஷ்ணனை வெறுத்தாள். காரணம், லேகாவைக் கண்காணிக்க அவள் அப்பா அவளுக்கு பாடிகார்ட்ஸ் போட்டது தான். கோடீஸ்வரரான ராமகிருஷ்ணனின் ஒரே மகள் லேகா. சிறுவயதிலேயே தாயை இழந்த லேகாவிற்கு மிகவும் அரிதான நோய் இருந்ததால்,... Continue Reading →

மிஸ். ப்ரீதி, 545, பீச் ரோடு, மும்பை – Crime Novel

கலெக்டர் வகுளாபரணன் முக்கியமான மீட்டிங்கை அட்டென்ட் செய்வதற்காகக் கிளம்பிக்கொண்டிருந்தார். அந்த நேரத்தில் ஒரு முக்கியமான தகவலோடு ப்ரீதி என்ற ரிப்போர்ட்டர் பெண் கலெக்டரை சந்திக்க வருகிறாள். நீண்டகாலமாக கலெக்டர் தேடிக்கொண்டிருக்கும் ஸ்மக்ளர் சத்ரபதியைப் பற்றித் துப்பு கொடுக்க வந்திருப்பதாகச் சொல்லி கலெக்டரின் அனுமதிக்காகக் காத்திருக்கிறாள். அனுமதி கிடைத்ததும் தன்னுடைய சுயரூபத்தைக் காட்டுகிறாள் ப்ரீதி. ஸ்மக்ளர் சத்ரபதியின் மகள் தான் ப்ரீதி என்பதே பிறகு தான் கலெக்டருக்கே தெரியவருகிறது. கலெக்டர் வகுளாபரணனின் பெண் மதுமிதாவைக் கடத்தி வைத்துக்கொண்டு ஒரு... Continue Reading →

ஒரு வீடு பூட்டிக் கிடக்கிறது..?! – Crime Novel

பிறந்த வீட்டிலிருந்து தன்னுடைய வீட்டிற்கு அன்று அதிகாலை தங்கை விஜயாவுடன் வந்து சேர்கிறாள் தாரிகா. நான்கு நாட்களுக்கு முன்பே கணவன் புஷ்பராஜ் வேலை விஷயமாக திருவனந்தபுரம் செல்வதாக தாரிகாவிற்குத் தகவல் தந்து விட்டுச் செல்கிறான். தன்னிடமிருந்த சாவியை உபயோகித்து பூட்டியிருந்த வீட்டிற்குள் நுழைந்த தாரிகா, சுவரில் இருந்த ரத்தத் துளிகளைப் பார்த்துத் திகைத்தாள். போலீசிற்குத் தகவல் தெரிவித்த அவள், கலக்கத்துடன் காத்திருந்தாள். ரத்தத் துளிகளைத் தொடர்ந்து சென்ற போலீஸ், வீட்டிற்குப் பின்புறம் தோட்டத்தில் மண் இளகியிருப்பதைக் கண்டுபிடிக்கின்றனர்.... Continue Reading →

விதி புதிது..! – Crime Novel

பெற்றோரை இழந்த வசந்தி சென்னைக்கு வேலை தேடி வருகிறாள். தோழி கல்பனாவிற்கு சர்ப்ரைஸ் கொடுக்க நினைத்து தகவல் கொடுக்காமல் இரவில் அவள் வீட்டை அடைகிறாள் வசந்தி. கல்பனாவின் வீடு பூட்டப்பட்டிருந்தது. விவரம் அறியாத வசந்தியைப் பின்தொடர்ந்து வந்த தேவ்-ரஷ்மி இருவரும் கல்பனாவைத் தேடி வந்தவர்கள் போல தங்களைக் காட்டிக் கொள்கிறார்கள். கல்பனாவிற்கு தெரிந்தவர்கள் என்று நம்பி அவர்கள் வீட்டிற்குச் செல்கிறாள் வசந்தி. ஆனால், பலான தொழில் செய்யும் தேவ்-ரஷ்மி இருவரும் அவளை இந்தத் தொழிலுக்குத் தள்ளத் திட்டம்... Continue Reading →

ராணி 2000..?!! – Crime Novel

இந்தியாவிற்கென ஒரு புதிய ஆபரேட்டிங் சிஸ்டம் கண்டுபிடிப்பில் மூழ்கியிருக்கிறாள் ராணி. சிறுவயது முதலே கம்ப்யூட்டர் துறையில் பூந்து விளையாடும் ராணி உலகம் முழுவதும் பேமஸ். இப்போது அவளுடைய திருமண வரவேற்பில் அவளைச் சந்திப்போம். ராணியின் திருமணத்திற்கு வந்திருந்த மாவட்ட கலெக்டர் முதல் அமெரிக்க நண்பர்கள் வரை அனைவரும் ராணியைப் பற்றி புகழ்ந்து சொல்லிவிட்டு செல்ல, ரவிச்சந்திரனுக்கு முகத்தில் ஈயாடவில்லை. முதலிரவிலேயே அவளுடைய கம்ப்யூட்டர் ஆராய்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க நினைக்கிறான் ரவிச்சந்திரன். தன்னுடைய ஆராய்ச்சியைப் பற்றிப் பெருமைப்படாமல் தனக்கு... Continue Reading →

ஜீவா ஜீவா ஜீவா – Crime Novel

டாக்டர் மகேந்திரனும் கம்ப்யூட்டர் ஸ்டுடென்ட்டான லலிதாவும் இரவு-பகலாக உழைத்து, மிகவும் கஷ்டப்பட்டு ஜீவா என்னும் கம்ப்யூட்டரைக் கண்டுபிடித்திருந்தனர். மனிதனின் மூளையை விட பத்து மடங்கு அதிகமாக சிந்திக்கும் திறனுடைய ரோபோ (ஜீவா) இப்போது இருப்பது Indian Institute of Science-ல். டெல்லியில் இருந்து Indian Institute of Science செமினாருக்குக் கலந்துகொள்ள வந்திருந்த புரபொசர் தன்பாலும் மித்ராவும் ஜீவாவை சந்திக்க விரும்பினர். ஜீவாவின் செயல்திறனைப் பார்த்து வியந்த மித்ரா ஆக்கப்பூர்வமான இந்தக் கண்டுபிடிப்பு அழிக்கப்பட வேண்டியது என்று... Continue Reading →

உயிர்த் திருடர்கள் – Crime Novel

தன்னுடைய திருமணப் பத்திரிக்கையை எடுத்துக் கொண்டு ஹோட்டல் ப்ளாக் ரோஸ்-க்கு கிளம்பிக் கொண்டிருந்தாள் பாரதி. அங்குதான் லதிகா தற்சயம் தங்கியிருந்தாள். லதிகா – மொத்த நாடும் பார்த்து மிரண்டு நிற்கும் துணிச்சலான ஒரு ஜர்னலிஸ்ட், பாரதியின் உயிர்த்தோழி. ஏற்கனவே தமிழ்நாட்டில் இருந்த இரண்டு மந்திரிகளின் வேலை போகக் காரணமாக இருந்தவள் லதிகா. அதனால் இயல்பாகவே அவளுக்கு எதிரிகள் அதிகம் இருந்தனர். இந்த வேளையில் தான் பாரதி அவளுக்கு பத்திரிக்கை கொடுக்க ஹோட்டலுக்குச் செல்கிறாள். எதிரிகள் பாரதி ஹோட்டலுக்குச்... Continue Reading →

நிழலின் குரல் – Crime Novel

சேகர் கிருஷ்ணாவிற்கும் சுகன்யாவிற்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு அழைப்பிதழ் அடித்த நிலையில், சேகர் கிருஷ்ணாவின் இரங்கல் செய்தி அடுத்த நாள் பேப்பரில் வெளியாகி சுகன்யாவையும் அவள் குடும்பத்தையும் அதிர்ச்சி அடையச் செய்கிறது. ஆனால், அது போலியான செய்தி என பின்னர் தெரியவர இருவருக்கும் திருமணம் நடக்கிறது. அன்றைய இரவே சேகர் கிருஷ்ணா கொலை செய்யப்படுகிறான். சேகர் கிருஷ்ணாவின் அப்பா ஐராவதமும் தம்பி முரளிகிருஷ்ணாவும் அடுத்தடுத்து கொலை செய்யப்படுகின்றனர். நடந்தகொலைகளுக்கெல்லாம் காரணகர்த்தா யார்? கொலைகளின் நோக்கம் என்ன? விவேக்கிடம் குற்றவாளி... Continue Reading →

மீண்டும் விவேக்கின் விஸ்வரூபம் – Crime Novel

இந்திய ராணுவத்திற்காக 90 நாட்கள் சிறப்புப் பயிற்சி கொடுக்கப்பட்டு உருவாக்கபட்ட 156 தலைசிறந்த வீரர்களை கவுரவிக்க நடந்து கொண்டிருந்த விழாவில் திடீரென வெடித்தது வெடிகுண்டு. அதில் 57 வீரர்கள் இறக்க, அரங்கில் வெடிகுண்டு வெடித்ததற்கான தடயமே ஃபாரன்சிக்கிற்கு கிடைக்கவில்லை. இந்த சம்பவத்தைக் காரணம் காட்டி சமூக ஆர்வலர் சத்யஸ்வரூப் பட்டாச்சார்யா அரசாங்கத்திற்கு எதிராக உண்மையான குற்றவாளியைக் கைது செய்ய உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார். போராட்டத்தின்போது அந்த வெடிகுண்டு சம்பவத்துக்கு இரண்டு மந்திரிகள் தான் காரணகர்த்தா எனவும் அவர்... Continue Reading →

சர்ப்ப வியூகம் – Crime Novel

ஊட்டியில் உள்ள பிரபல தொழில் அதிபரான உமாபதி தன்னுடைய ஒரே மகளான துர்காவிற்கு வரன் தேடுகிறார். ஆனால் துர்காவும் வல்லப்பும் ஒருவரையொருவர் விரும்புகின்றனர். வீட்டில் அப்பாவிடம் திருமணத்திற்கு சம்மதம் வாங்குகிறாள் துர்கா. இந்நிலையில் எல்லாமே பொருந்திவர ஜாதகத்தில் வல்லப்பிற்கு களத்திர தோஷம் இருப்பது தெரிய வருகிறது. அதாவது திருமணமான ஆறே மாதத்தில் வல்லப்பின் உயிருக்கு கெடு வைக்கிறார் துர்காவின் குடும்ப ஜோசியர் மாதையா. பிடிவாதமாக இருந்த துர்கா வல்லப்பை திருமணம் செய்து கொள்கிறாள். யாரும் எதிர்பாராத வகையில்... Continue Reading →

இனி இல்லை இலையுதிர்காலம்..! – Crime Novel

இரண்டு கிட்னியும் செயலிழந்த நிலையில் வாழ்வின் கடைசி நாட்களை எண்ணிக்கொண்டிருந்தார் நஞ்சுண்டேஸ்வரன். தான் வாழ்வில் முன்னேற காரணமாக இருந்த மாமா நஞ்சுண்டேஸ்வரனைக் காப்பாற்ற விபரீத முடிவை எடுக்கிறார் ஷிவ்ராஜ். தன்னுடைய புட் ப்ராடக்ட்ஸ் கம்பெனிக்கு ஆட்களை இன்டர்வியூ செய்வது போல் நடித்து மாமாவிற்குப் பொருந்தக்கூடிய கிட்னியை எடுக்க ஆரோக்கியமான நபரைத் தேடுகிறார்கள் ஷிவ்ராஜும் அவருடைய மூத்த மகனான விஷ்வாவும். அந்த லிஸ்டில் இன்டர்வியூவிற்கு வருகிறாள் ஜனனி. ஜனனி – ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த, வேலை தேடிக்கொண்டிருக்கும் பெண்.... Continue Reading →

நெஞ்சில் ஒரு நெருப்பு..! – Crime Novel

இரவு தூங்கிக்கொண்டிருந்த ராயப்பன் உட்பட அவரது குடும்பத்தைச் சேர்ந்த பதினொரு நபர்களும் அட்டைக்கரி போல் உடல் கருகி சாவு – செய்தி. பாறைப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த ராயப்பன் வீட்டிற்கு தீ வைக்கப்பட்டு வீடு எரிந்த கேஸில் துப்பு எதுவும் கிடைக்காமல் போலீஸ் திணறுகிறது. கேஸிற்கு முற்றுப்புள்ளி வைக்க அதே கிராமத்தைச் சேர்ந்த போலீஸ் ரத்தினகுமாரை அனுப்பி விரிவான விசாரணை மேற்கொள்ள கமிஷனரிடம் இருந்து உத்தரவு வருகிறது. ரத்தினகுமாருடன் புதிதாக வேலைக்குச் சேர்ந்திருந்த ரேகாவையும் உடன் அனுப்பி வைத்தார்... Continue Reading →

நவம்பர் ராத்திரிகள் – Crime Novel

தன்னுடைய திருமணப் பத்திரிக்கையை கொடைக்கானலில் உள்ள மாமா வீட்டிற்கு குடுத்து விட்டு கொண்டை ஊசி வளைவுகளில் நிதானமாக வண்டியை வளைத்து ஓட்டினான் சுபாஷ். மாலை நேர இருள் கவியும் நேரம். பைக்கை மறித்து நின்றாள் சித்ரா. காதலிப்பதாகச் சொல்லி சித்ராவுடன் ஊர் சுற்றிய சுபாஷ் பணக்கார சம்பந்தம் கிடைக்கவும் அவளைக் கேவலமாகப் பேசிவிட்டு அங்கிருந்து நழுவுகிறான். நடக்க இருந்த கல்யாணத்தைத் தடுத்து, சுபாஷின் மூச்சை நிறுத்த சித்ராவின் அண்ணன் அவளுக்கு ஒரு திட்டம் போட்டுக் குடுக்கிறான். எதிர்பாராத... Continue Reading →

விவேக் வியூகம் – Crime Novel

சேறும் சகதியுமாக இருந்த ரோட்டில் மிட்நைட்டில் பைக்கில் போய்க்கொண்டிருந்த மங்களேஷும் பாசுவும் விஜிலன்ஸ் ஆபிசர் சுக்தேவ்வை திட்டிக்கொண்டே சென்றனர். இதுவரை இரவில் இப்படி அழைத்திராத சுக்தேவ் திடீரென அழைத்ததற்கான காரணம் புரியாமல் அவர் வீட்டை அடைந்தனர். வீட்டிற்குள் செல்லும் முன்... நாட்டின் மொத்த கரன்சி நோட்டுக்களையும் பிரிண்ட் செய்யும் இண்டியா செக்யூரிட்டி பிரஸ்ஸில் (நாசிக்) எலெக்ட்ரானிக் இன்ஜீனியர்ஸாக வேலை பார்க்கும் இருவரும் சுக்தேவ் வீட்டை அடைந்த பொழுது உட்கார்ந்த நிலையில் அப்பொழுது தான் ரத்தம் சிந்தி அவர்... Continue Reading →

கொன்றாள்..கொன்றான்..கொன்றேன் – Crime Novel

மங்களூர் எக்ஸ்பிரஸ் வேகமாகப் போய்க்கொண்டிருக்க அந்தக் கூபேயில்  ஹரிபாபுவும் மேத்தாவும் மட்டுமே பயணித்துக்கொண்டிருந்தனர். டிக்கெட் செக் செய்ய வந்த டிடிஈ மோகன்ராஜை கூட்டு சேர்த்துக் கொண்டு குடித்து கும்மாளம் போட்டுக்கொண்டே வந்தனர். டிடிஈ-க்கு போதை அதிகமாகவே தங்களுடைய திட்டத்தை செயல்படுத்த ஆரம்பித்தனர் மேத்தாவும் ஹரிபாபுவும். கடத்திக் கொண்டுவந்திருந்த தங்க பிஸ்கெட்டுகளை டிடிஈ மோகன்ராஜின் பெட்டிக்குள் மறைத்து வைக்க உதவி கேட்கின்றனர். பயந்துகொண்டே ஒப்புக்கொண்ட டிடிஈ-யை இருவரும் சேர்ந்து சமாதானப்படுத்துகிறார்கள். இந்நிலையில் அடுத்த ஸ்டேஷனில் ஏறிய போலீஸ் மேத்தா-ஹரி... Continue Reading →

பகடைக் காய்கள்..! – Crime Novel

அண்டை நாடுகளுடனான போரை விலக்கி சமாதானத்தை முன்னிறுத்த பாராளுமன்றத்தில் இருந்து பொறுப்புள்ள எம்.பிக்களைக் கொண்ட ஒரு குழு பயணிகளுடன் சேர்ந்து விமானத்தில் பறக்க இருந்தது. அந்தத் திட்டத்தை முறியடித்து 7 எம்.பிக்களுக்கும் 8 பயணிகளுக்கும் விமானத்திலேயே சமாதி கட்டுவது தான் திட்டம். உஸ்மானும் பாபுராவும் முதலில் திட்டத்தை சொன்ன போது யோசித்த சென்னும் துவாரகேஷும் தொகை பெரிதாகப் பேசப்பட்டவுடன் இதற்கு ஒப்புக்கொண்டனர். இந்தத் திட்டத்திற்காக 25 கோடிக்கு விலை போன பைலட் சென்னும் கோ-பைலட் துவாரகேஷும் திட்டத்தை... Continue Reading →

தப்பு செய்.! தப்பிச்செல்..!! – Crime Novel

“குடுவைக்குள் இருந்து வெளியே எடுத்த 30 வினாடிக்குள் வெடிக்கும் ஒப்வா லசிகா ஒரு காந்தம் போன்று செயல்படக்கூடியது. டார்கெட் செய்த இடத்தில் இருக்கும் ஏதாவதொரு காரில் ஒட்ட வைத்துவிட்டால், பெட்ரோல் டாங்க் வெடித்து சேதாரம் அதிகமா இருக்கும் என்பதால் இந்த வெடிபொருள் தீவிரவாதிகளுக்கு மிகவும் பிடித்தமானதாக உள்ளது” என்ற தகவல் லலித் சர்மாவின் அடிவயிற்றைக் கலக்கியது. இந்தியாவின் இராணுவ ஏர் மார்ஷல் பிலிப்ஸ் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் இரவோடு இரவாக ரகசியமாக ரோமிற்கு வந்து இத்தாலியின் இராணுவ... Continue Reading →

தனித்திரு.! விழித்திரு..! – Crime Novel

பிரதாப்பை விரும்பும் அட்சதா தன்னுடைய முதலாளியின் பையன் சரணை ஏற்க மறுத்து விருப்பத்தைச் சொல்ல நாட்களைக் கடத்துகிறாள். இந்நிலையில் வேலை தேடிக்கொண்டிருந்த அட்சதாவின் அண்ணன் சபாபதிக்கு வேலை கிடைக்கிறது. ஒரு வாரம் ட்ரெய்னிங்கிற்காக அவன் மும்பை செல்ல வேண்டியிருந்தது. சிட்டியிலிருந்து ஒதுக்குப்புறமாக குடியிருக்கும் சபாபதியும் அட்சதாவும் சிறுவயதிலேயே பெற்றோரை இழந்தவர்கள். தங்கையைத் தனியே விட்டுச் செல்ல தயங்கிய சபாபதி, பால்ய நண்பன் லீலாகிருஷ்ணன்-வாசுகி வீட்டில் அவளை விட்டுச் செல்கிறான். ஏற்கனவே பிசினஸில் ஏகப்பட்ட நட்டம் ஏற்பட்டு கஷ்டத்தில்... Continue Reading →

BitTalk-இல் ராஜேஷ்குமார் நாவல் தொடர் இலவசமாகப் படிக்க – அமிர்தம் என்றால் விஷம்..!

வாராவாரம் ஆரவாரமாக ராஜேஷ்குமார் சாரின் “அமிர்தம் என்றால் விஷம்” திக் திக் தொடர் இலவசமாக BitTalk-இல் வலம்வந்து கொண்டிருக்கிறது. தமிழன் எக்ஸ்பிரஸ் வார இதழில் 36 வாரங்கள் தொடர்கதையாக வெளிவந்த இந்தப் புத்தகத்தின் அத்தியாயங்கள் உங்களுக்காக இப்போது BitTalk-இல். முகம் பத்திரிக்கை பிரஸ் ரிப்போர்ட்டர்ஸான பாரியும் நிருபமாவும் இருட்டு விலகாத அதிகாலை நேரத்திலேயே அமைச்சர் கார்மேகவண்ணனின் பிறந்தநாள் விழாவிற்கு புறப்பட்டுச் சென்றனர். கேமராவை மறந்து வண்டியிலேயே விட்டுச் சென்ற பாரி அதை எடுத்து வர வண்டி பார்க்... Continue Reading →

வாஷிங்டனில் விவேக்!! – Crime Novel

நள்ளிரவு நேரத்தில் சி.பி.ஐ ஆபிசிற்கு பைக்கில் விரைந்து கொண்டிருந்த விவேக்கின் வழியைக் குறுக்கிடும் விதமாக கார் ஒன்று ரோட்டை மறித்து நிறுத்தப்பட்டிருந்தது. வண்டியிலிருந்து இறங்கிய விவேக்கை நான்கு பேர் கொண்ட குழு கடத்திச் செல்ல, விவேக் யோசனையுடன் சென்றான். அங்கே அவனுக்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. சிபிஐ சீஃப் வாத்சல்யனுடன் இரண்டு சிஐஏ அதிகாரிகளான கேரி மற்றும் ஹோம்ஸை விவேக் அங்கு சந்தித்தான். வந்திருந்த அமெரிக்கர்களுக்கு தன்னுடைய திறமையை நிரூபிக்க நடத்தப்பட்ட டிராமா தான் இந்த கடத்தல்... Continue Reading →

அந்த ரத்த நாட்கள்?! – Crime Novel

சங்கர நாராயணன் டேப்பில் ரெக்கார்ட் செய்து எடுத்து வந்திருந்ததைப் போட்டுப் பார்த்த விவேக் அதிர்ந்து போனான். இரண்டு நபர்கள் உரையாடிய சம்பாஷணையின் சாராம்சம் இதுதான்..தமிழ்நாட்டில் வைத்து பிரதமர் ஆகாஷைக் கொல்வது. இதற்கு நடுவில் எதிர்கட்சித் தலைவர் காந்திலால் வயது மூப்பின் காரணமாக பாத்ரூமில் கால் இடறி கோமா ஸ்டேஜிற்குச் செல்கிறார். பிரதமரின் செயலாளர் வாத்வா சொன்ன இந்த செய்தியைக் கேட்டு அதிர்ந்த பிரதமர் ஆகாஷ், எப்பாடு பட்டாவது காந்திலாலைக் காப்பாற்ற சொல்கிறார். பிரதமர் கூறியதாகச் சொல்லி காந்திலாலை... Continue Reading →

என் வானம் மிக அருகில் – Crime Novel

சினிமாவில் கொஞ்ச கொஞ்சமாகப் பாட்டெழுதி பிரபலமாகிக் கொண்டு வந்தான் குறிஞ்சி. அன்றைய தினம் ஒரு பத்திரிக்கைக்குக் காரசாரமாகப் பேட்டி கொடுத்து முடித்துவிட்டு பாட்டை டைரக்டரிடம் பாடிக் காட்ட இருந்தவனுக்கு மிஞ்சியது ஏமாற்றம். பாடகியான தன் காதலி ரமாவும் குறிஞ்சியிcன் பாடல் வரிகளைக் கேட்டுவிட்டுப் பாராட்ட, டைரக்டரின் எதிர்பார்ப்போ வேறு மாதிரி இருந்தது. ஏற்கனவே எடுத்த படத்தில் புதுமுக கவிஞர் மோதி எழுதியிருந்த ரெட்டை அர்த்தப் பாடல்கள் ஹிட் அடித்ததால் குறிஞ்சியையும் அதேபோல் ரெட்டை அர்த்த வரிகளில் பாட்டெழுத... Continue Reading →

விபரீதங்கள் இங்கே விற்கப்படும்..! – Crime Novel

துப்பாக்கியோடு வந்து வித்தியாசமான முறையில் பிறந்தநாள் வாழ்த்து சொன்ன வளர்மதியைப் பார்த்து சற்று அரண்டு தான் போனார் ஈஸ்வர். பிரபல தொழிலதிபரான ஈஸ்வர் சொந்தப் பணத்தில் வருடந்தோறும் ஏழைப் பெண்களுக்கு இலவச திருமணம் செய்துவைக்கும் நல்ல உள்ளம் கொண்டவர். இப்படிப்பட்ட ஈஸ்வரை வேவு பார்க்க வந்தவள் தான் வளர்மதி. குடும்பத்திற்கும் கணவர் ஹரிக்கும் தெரியாமல் போலீஸ் இன்பார்மராக இருப்பவள். தைரியசாலியான வளரின் சிறுவயது போலீஸ் கனவு நிறைவேறாத காரணத்தால் மறைமுகமாக கமிஷனர் திரிபுரசுந்தரிக்கு கீழே இப்போது இன்பார்மராக... Continue Reading →

என்றாவது ஒருநாள்..! – Crime Novel

தந்தையுடன் மெட்ராஸில் இருந்து வந்திருந்த புனிதா, நாலு நாளாக அவளுடைய வீடு பூட்டிக் கிடப்பதாக பக்கத்து வீட்டு மாமி கூறியதும் அதிர்ச்சி அடைகிறாள். தன்னுடைய கணவன் ராதாகிருஷ்ணனுடைய ஆபிஸ் நம்பருக்கு போன் செய்த போது அவன் மெட்ராஸிற்கு சென்றிருப்பதாக கூறியவுடன் மேலும் கலக்கமடைந்தாள். சற்று நிதானித்த அவள் பிறகு மாமியிடம் இருந்து கீ பன்ச்சை வாங்கி வீட்டைத் திறக்க முற்படுகிறாள். அதற்குள் ராதாகிருஷ்ணனைப் பற்றிப் பார்த்து விடுவோம். டயர் கம்பெனியில் கிளார்க்காக வேலை செய்யும் ராதா, பகுதி... Continue Reading →

நீ மட்டுமே வேண்டும்..! – Crime Novel

ஏரியாவில் இருக்கும் சில ரௌடிகள் தன்னிடம் வம்பிழுப்பதாகவும், அதனால் தனக்கு கராத்தே சொல்லிக்கொடுக்கும்படி சத்யேசுவிடம் வேண்டிக் கேட்கிறாள் சுகிர்தா. ஆண்களுக்கு மட்டுமே கராத்தே சொல்லிக்கொடுத்து, பகுதி நேர டிடெக்டிவாகவும் இருக்கும் சத்யேசு யோசித்து முடிவெடுப்பதாகக் கூறி அவளை அனுப்பி வைக்கிறான். விதி வலியது. இந்தப் பெண்ணுக்காக தன்னுடைய கராத்தே பள்ளி விதிகளை கைவிட வேண்டுமா..? என்று எண்ணிக் கொண்டிருந்த சத்யேசுவிற்கு மிரட்டல் போன் வருகிறது. போன் செய்தவன் சுகிர்தாவிற்கு கராத்தே கற்றுக் கொடுக்கக் கூடாது என்று எச்சரிக்கிறான்.... Continue Reading →

இரத்தம் இல்லாத யுத்தம் – Crime Novel

படிப்பு வாசனையே அறிந்திராத பழங்குடியினர்கள் வாழும் நரிக்கொம்பு கிராமத்தில் இருந்து எழுதப்பட்டிருந்த அந்தக் கவிதையைப் படிக்க சொல்லி குணால், ஜெனிஃபரிடம் நீட்டினார் லென்ஸ் வார இதழின் எடிட்டர். சிம்பிளான வரிகளில் சிறப்பாக எழுதப்பட்டிருந்த அந்தக் கவிதையைப் படித்த இருவரும் வியந்தனர். அந்தக் கவிதையை எழுதியிருந்த இசக்கி என்ற பெண்ணை சந்தித்து மேலும் அந்த கிராமத்தில் நடப்பவற்றை கவர் ஸ்டோரியாகக் கொண்டு வர இருவரையும் நரிக்கொம்பு ஃபாரெஸ்ட்டுக்கு அனுப்புகிறார் எடிட்டர். பழங்குடியினக் குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்க அந்த கிராமத்திற்கு... Continue Reading →

கோடி கோடி மின்னல்கள்..! – Crime Novel

தற்கொலை எண்ணத்தில் இருப்பவர்களுக்கு கவுன்சிலிங் கொடுத்து அதிலிருந்து அவர்களை மீட்பதற்காக “மனசுக்குள் மழையா..?” என்ற பெயரில் சைலென்ட்டாக சமுதாயப் பணியாற்றிவரும் வைகை, அந்த ‘மெட்டியோசை’ பெண்கள் மாத இதழுக்கு பேட்டி கொடுக்க மறுத்து விடுகிறாள். மன நிம்மதிக்காக செய்யும் ஒரு விசயத்தை விளம்பரம் போட்டு வியாபாரமாக்குவதை விரும்பாத வைகை, ஹன்ஸா ஹாஸ்பிடலில் டைபிஸ்ட் வேலையில் இருப்பவர். அதிர்ஷ்டவசமாக வைகையின் தொண்டுப் பணிக்கு தயாநிதி அறக்கட்டளையில் சார்பில் 5 லட்ச ரூபாய் கிடைக்க, அதை வைத்து சேவையைத் தொடர... Continue Reading →

சிவப்பின் நிறம் கருப்பு..?! – Crime Novel

அந்த அதிகாலை வேளையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அருணாவின் வீட்டுக்கு வர, அவளுடைய அப்பா சத்தியமூர்த்தி சற்று திகைத்துப் போனார். பின் சுதாரித்த அவர், அருணாவை அழைத்து வந்தார். கைனகாலஜிஸ்ட் டாக்டரான அருணா, முந்தைய நாளிரவு நடந்த சம்பவங்களை அசைபோட்டபடியே வந்தாள். அந்த முன்னிரவு வேளையில் காரில் வந்துகொண்டிருந்த அருணா, ரோட்டில் அடிபட்டு உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த ஒருவனைக் காப்பாற்ற போலீசிற்கு தகவல் சொல்லிவிட்டு வீடு வந்து சேர்கிறாள். ஆனால், கதையின் முக்கிய திருப்பம் ஆரம்பத்திலேயே வந்து அருணாவைத் திணறடிக்கப்... Continue Reading →

வெற்றி என்றால் விவேக்.! – Crime Novel

மைக்ரோ பயலாஜிகல் ரிசர்ச் ஸ்காலரான ஸ்வப்னா காணாமல் போய் ஒரு வாரம் முடிந்திருந்த நிலையில், அன்றைய தினம் அவளுடைய பிணத்தைப் போலீசார் கைப்பற்றியிருந்தனர். ஸ்வப்னா கடைசியாக விவேக்கிற்கு எழுதிய முற்றுப்பெறாத அந்தக் கடிதம் போலீசிற்கு தடயமாகக் கிடைக்கிறது. அதில் அவள் “இந்த லெட்டருடன் நான் அனுப்பியுள்ள ஆ..” என்று ஆரம்பிப்பதற்குள் அவள் எழுதியிருப்பது தடைப்பட்டிருந்தது. இதன் மூலம் அவள் லெட்டருடன் வேறு எதையோ சேர்த்து அனுப்ப திட்டமிட்டிருப்பதை உணர்ந்த விவேக், விஷ்ணுவிடம் அந்த விசாரணையை மேற்கொள்ள சொல்லிவிட்டு... Continue Reading →

ஊசி முனையில் உஷா..! – Crime Novel

இந்த முறை ஆபிசிற்கே வந்து காதலை சொன்ன விஜயகுமாரை எரித்து விடுவது போல் உஷ்ணமாகப் பார்த்தாள் உஷா. ஆனால், அவன் விடுவதாக இல்லை. திடீர் விஜயமாக அன்று மாலையே குடும்பத்துடன் உஷாவைப் பெண் பார்க்க வீட்டிற்கே வந்துவிட்ட விஜயகுமாருக்கு ஒரு அதிர்ச்சி. திருமணம் நடக்க இருந்த நிலையில் திடீரென ஒரு விபத்தில் உயிரிழந்த காதலன் குணாவின் குடும்பத்தைத் தன் குடும்பமாக எண்ணி பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி வறுமையில் இருந்த குணாவின் குடும்பத்துடன் வாழ்ந்து வந்தாள் உஷா. உஷா... Continue Reading →

இன்னொரு அத்தியாயம் – Crime Novel

போனில் வந்த செய்தியைக் கேட்டதிலிருந்து நொறுங்கிப் போயிருந்தாள் சாந்தா. இதோடு இரண்டாவது முறையாக அவளுடைய அப்பாவிற்கு ஹார்ட் அட்டாக் வர அயர்ந்து போனாள். கணவனின் ஆபிசிற்கு போன் செய்து தகவலைத் தெரிவித்துவிட்டு, அவளுடைய ஆபிசில் லீவ் சொல்லிவிட்டு உடனே மருத்துவமனைக்குக் கிளம்பினாள். ஹாஸ்பிடலில் அவளுக்கு ஒரு திடுக்கிடும் செய்தி காத்திருந்தது. தன்னுடைய தந்தைக்கு உடனே பைபாஸ் சர்ஜரி செய்ய லட்ச ரூபாய் செலவாகும் என டாக்டர் சொல்ல இடிந்து போனாள் சாந்தா. மாலையில் சாவதானமாக மாமனாரைப் பார்க்க... Continue Reading →

அனு ஓர் ஆச்சர்யம் – Crime Novel

மனோவுடன் விவாகரத்து கிடைத்த சந்தோசத்துடன் கோர்ட்டை விட்டு வெளியே வந்த பிரபல நடிகை அனுலேகா, விரைவில் தொழிலதிபர் சுபாஷை மறுமணம் செய்யப் போவதாக பிரஸ் மீட்டில் தெரிவிக்கிறாள். அனுவை நடிகையாக்குவதற்காக அவளின் வளர்ச்சிக்காக பாடுபட்ட மனோ தனித்து விடப்பட்டான். சுபாஷ் பணத்திற்காகத் தான் அனுவிடம் பழகுவதாக முன்னாள் கணவன் மனோ அவளை எச்சரித்துச் செல்கிறான். சுபாஷின் உண்மையான சுயரூபம் அனுவின் மேனேஜர் மூலமாகத் தெரிய வருகிறது. அதன் பிறகு, உடன் நடிக்கும் ஹேமந்த்தின் அன்பை புரிந்துகொண்டு அவனுடன்... Continue Reading →

ராஜேஷ்குமார் க்ரைம் நாவல்களை இலவசமாகப் படிக்க..!

One india tamil-வலைத்தளத்தில் நமக்கு விருப்பமான, க்ரைம் கதைகளின் மன்னன் ராஜேஷ்குமார் அவர்களின் க்ரைம் நாவல்களை வாசித்து, திகிலை ரசித்து மகிழுங்கள்.. One india tamil-ல் தற்போது வாரந்தோறும் வெள்ளிக்கிழமை அன்று விறுவிறுப்பான “ஃப்ளாட் நெம்பர் - 144 அதிரா அப்பார்ட்மெண்ட்” தொடர் வெளிவந்து வாசகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. கீழே உள்ள லிங்க்கை க்ளிக்கி நாவலை வாசிக்கத் தொடங்குங்க வாசகர்களே..! https://tamil.oneindia.com/topic/%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-144-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D “விபரீதங்கள் இங்கே விற்கப்படும்” நாவலைப் படிக்க கீழே உள்ள லிங்க்கை க்ளிக்கவும்.. https://tamil.oneindia.com/topic/rajesh-kumar-crime-novels?page-no=4... Continue Reading →

பவளப் பள்ளத்தாக்கு – Crime Novel

புரபொசர் சூர்யநாராயணன் திடீரென கண்விழித்த போது, தான் ஒரு அறையில் அடைக்கப்பட்டிருப்பதை உணர்ந்தார். இதற்கு முன் நடந்த சம்பவங்கள் அவரது மனதில் ஓடின. ஜனாதிபதி கையால் விருது வாங்கக் காத்திருந்த அவர் திடீரென வியர்த்துக் கொட்டி, நெஞ்சைப் பிடித்துக் கொண்டு மயங்கி விழுந்திருந்தார். அந்த அறையில் இருந்த இருவர், புரபொசரைக் கேள்வியால் துளைத்துக் கொண்டிருந்தனர். அவர்களது கேள்வி இதுதான்.. பயோஸான் 4 நுண்ணுயிர்கள்!! அதைப் பற்றி தனக்கு ஒன்றும் தெரியாது மறுத்துக் கொண்டிருந்த புரபொசருக்கு முன்னால், அவர்கள்... Continue Reading →

சிம்லா ரம்யா..?! – Crime Novel

அன்று மாலை ரம்யாவைப் பெண் பார்க்க செல்ல இருந்தான் ரகுநாதன். ஆனால், தன்னுடைய மோசமான பழக்கவழக்கங்களைப் பற்றி அட்சரசுத்தமாக புட்டுப்புட்டு வைத்துவிட்டு சென்ற ரம்யாவை நினைத்து அந்த நிமிடம் மனதிற்குள் கறுவிக்கொண்டிருந்தான் ரகு. அவளைப் பழிவாங்க சமயம் பார்த்துக் காத்திருந்தான். அதே நேரம் தனக்கு வரும் வரன்களைக் காரணம் சொல்லி தட்டிக்கழித்துக் கொண்டிருந்த அந்த ரம்யா, பிரபாகரிடம் சற்று பயத்துடன் பேசிக்கொண்டிருந்தாள். பிரபாகரும் ரம்யாவும் காதலர்கள். வரன்களின் உண்மையான சுயரூபத்தை அவர்களிடமே சொல்லி விலக வைப்பது அவர்களின்... Continue Reading →

அதே இரவு..! – Crime Novel

நான்கு வருட சிறைத்தண்டனை முடிந்த ரதீஷ், தன்னுடைய காதலி சூர்யாவை சந்திக்க அவள் வீட்டிற்கு வருகிறான். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த சூர்யாவிற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜனுடன் திருமணம் முடிந்திருந்தது. திருமணமான விசயத்தைக் கேள்விப்பட்டு அதிர்ந்த ரதீஷின் கையில் இருந்தது சூர்யா கொடுத்திருந்த லவ் லெட்டர். சூழ்நிலை காரணமாக சூர்யாவிற்காக சிறைக்கு சென்ற ரதீஷ், தன்னை அவள் திருமணம் செய்யாமல் ஏமாற்றியதால், அந்த லெட்டரை வைத்து சூர்யாவிடம் பணம்கேட்டு அவளை ப்ளாக்மெயில் செய்கிறான். தன் கணவர் ராஜனுக்குத் தெரியாமல்,... Continue Reading →

நீல நிற நிமிஷங்கள்.! – Crime Novel

புகழ்பெற்ற டென்னிஸ் வீராங்கனையான கிருபாவின் அப்பாவிற்கு திடீரென ஹார்ட் அட்டாக் ஏற்பட, ஹாஸ்பிடலில் அட்மிட் செய்கிறார்கள். கிருபாவின் ரசிகை என சொல்லிக்கொண்டு ஹாஸ்பிடலுக்கே போன் வர, பெண் குரலில் பேசிய ஒருவன் கிருபாவிடம் தவறான நோக்கத்துடன் பேசுகிறான். இந்த விசயத்தைக் கிருபா தன் அம்மா வசுந்தராவிடம் கூற, கிருபாவின் அம்மாவிற்கும் அதேபோல் அழைப்பு வர, உதவி  போலீஸ் கமிஷனரிடம் விசயத்தைக் கொண்டுபோகிறாள் வசுந்தரா. மேற்கொண்டு தான் பார்த்துக்கொள்வதாக போலீஸ் சொல்லி செல்ல, ஒருநாள் வீட்டிற்கே வந்து மிரட்டுகிறான்... Continue Reading →

உதடுகள் சுடும்..?! – Crime Novel

மும்பையில் உள்ள தனது ஆட்டோ காரேஜை நிழல் காரியங்களுக்கு பயன்படுத்தி வந்த நகுல் லட்சாதிபதியாவதற்கு ஒரு பெரிய வாய்ப்பு வந்தது. குபேர் என்ற பணக்காரரிடம் உள்ள புகைபிடிக்கும் பைப்பில் கோடிக்கணக்கான மதிப்புள்ள டிவைன் வைரங்கள் இருப்பதாகவும், அதை எடுத்துக் கொடுத்தால் ஒரு கோடி ரூபாய் கொடுக்க ஆள் தயாராக இருப்பதாகவும் நண்பன் சாம்பமூர்த்தி சொல்ல, களத்தில் இறங்குகிறான் நகுல். ஐந்து லட்சத்திற்கு விலை போகக்கூடிய பழங்கால புகைக்கும் பைப் குபேரிடம் இருப்பதாகக்கூறி அதை எடுத்துத் தருமாறு, அவரது... Continue Reading →

அக்கறையாய் ஒரு அக்கிரமம் – Crime Novel

கார்த்தீஷ்-நிகிலாவின் எதிர்வீட்டிற்கு புதிதாக ஜெயபால்-ஹேமா தம்பதி குடிவருகின்றனர். முன்பகை காரணமாக சண்டை போட்டு பிரிந்திருந்த முன்னாள் நண்பன் ஜெயபாலைப் பார்த்த கார்த்தீஷ் வெகுண்டான். சமாதானப்படுத்த வந்த போலீஸ் இன்ஸ்பெக்டரான ஜெயபாலை சந்திக்க மறுக்கிறான் கார்த்தீஷ். லட்ச ரூபாய் மதிப்புள்ள கஞ்சா பொருட்களைக் கடத்த திட்டம் போட்ட கும்பலைப் பிடித்துக்கொடுத்த ஃபாரஸ்ட் ரேஞ்ச் ஆபிசர் கார்த்தீஷைப் பழிவாங்குவதற்காக அவன் வீட்டிற்குள் நுழைகிறான் ஒருவன். வீட்டில் அவன் மனைவி நிகிலா மட்டுமே இருக்க, அவளை மிரட்டி கார்த்தீஷ் வரும்வரை காத்திருந்து... Continue Reading →

உடைந்த இரவு – Crime Novel

மனைவி மைத்ரேயி வந்த நேரம் தான், தன்னுடைய கம்பெனியின் முன்னேற்றத்திற்குக் காரணம் என்று பெருமையாக நினைத்துக்கொண்டிருந்தான் தினேஷ். ஆனால், மைத்ரேயியோ அதற்கு நேர்மாறாக கணவனை ஏமாற்றிக்கொண்டே தன் முன்னாள் காதலன் பாஸ்கருடன் தவறான தொடர்பு வைத்திருந்தாள். இதற்கிடையில் தங்களுக்கு இடைஞ்சலாக இருக்கும் தினேஷை ஒரேயடியாக தீர்த்துக்கட்டி விட்டு இருவரும் சந்தோசமாக இருக்க முடிவு செய்கின்றனர். இந்நிலையில் திடீரென ஒரு பெண் போன் செய்து மைத்ரேயியை மிரட்டுகிறாள். பாஸ்கருடனான தொடர்பை விட்டுவிட வேண்டும் என்றும் இனி கணவனுடன் ஒழுங்காக... Continue Reading →

விரைந்து வா விவேக் – Crime Novel

தன்னுடைய மனைவி நளினியின் நடத்தையில் சந்தேகப்படும் கெளதம், அவளைத் தீர்த்துக்கட்ட நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறான். ஓடும் ரயிலில் சிங் வேஷம் போட்டு நளினியைத் தீர்த்துக்கட்டிவிட்டு தற்கொலை போல சித்தரிக்கத் திட்டம் தீட்டுகிறான். இன்னொரு பக்கம் மந்திரி பதவி பறிபோகக் காரணமாகக் காரணமாக இருந்த ரிப்போர்ட்டர் நீரஜாவைத் தீர்த்துக்கட்ட காத்திருந்த கோதண்டத்திற்கு, தணல் தங்கராஜ் ஒரு மாஸ்டர் பிளான் போட்டுக்கொடுக்கிறான். அதன்படி ஒத்தக்கால் தாமஸ் என்ற ரவுடியை வைத்து ரயிலில் நீரஜாவின் உயிரைப் பறிப்பதாகத் திட்டம். கொலைத்திட்டங்களுக்கு நடுவில்... Continue Reading →

கிழக்கே போகும் உயிர்..?! – Crime Novel

அடிபட்டு விழுந்துகிடந்த அந்த இளைஞனின் பெயர் தாஸ் என்று அவன் டயரியை வைத்து டிராபிக் போலீஸ் கண்டுபிடித்தனர். ஸ்பாட்டுக்கு வந்த கோகுல்நாத்தும் அவினாஷும் வேறு தடயங்களைத் தேடிக் கொண்டிருக்க, ஒரு துண்டு சீட்டு அவன் பேண்ட் பாக்கெட்டில் இருந்து கிடைத்தது. “Life Towards East” என்று அந்த சீட்டில் எழுதப்பட்டிருந்த வார்த்தைக்கு அர்த்தம் புரியாமல் குழம்பிப் போயினர் போலீஸ். தாஸின் வீட்டை சோதனையிட்ட போலீசாருக்கு கிடைத்தது, அவன் காதலி சந்தியாவின் அட்ரஸ். சந்தியாவைத் தேடிச்சென்ற போலீஸுக்கு அவளின்... Continue Reading →

தித்திக்கும் தீ..! – Crime Novel

பைகாரா அணையைப் பற்றிப் பேட்டி எடுக்கப் போவதாக அணையின் நிர்வாகி சிக்கந்தரிடம் தன்னை அறிமுகம் செய்துகொண்ட லட்சணா,  அவரிடம் பேச்சுக்கொடுத்துக் கொண்டே அணையில் விழுந்து தற்கொலைக்கு முயற்சிக்கிறாள். நீச்சல் தெரியாத சிக்கந்தர் மிகவும் கஷ்டப்பட்டு அவளைக் காப்பாற்றி ஹாஸ்பிடலில் சேர்க்கிறான். உண்மையில் வந்திருந்த அவள் பிரஸ் ரிப்போர்ட்டர் இல்லை என்பதை அறிந்த சிக்கந்தர் திடுக்கிடுகிறான். சிறுவயதிலேயே பெற்றவர்களை இழந்து அனாதை விடுதியில் வளர்ந்த லட்சணா தன்னுடைய தற்கொலைக்கான காரணத்தை யாரிடமும் தெரிவிக்க மறுத்துவிடுகிறாள். காதல் தோல்வியால் தற்கொலைக்கு... Continue Reading →

விவேக் விஷ்ணு வெற்றி..! – Crime Novel

கண்டிப்புக்கு பேர்போன அந்த லேடிஸ் ஹாஸ்டலுக்கு விவேக் சென்ற போது நேரம் முன்னிரவைத் தாண்டியிருந்தது. வார்டனின் அவசர அழைப்பால் ஹாஸ்டலுக்கு விரைந்துவந்த விவேக் தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு சென்றான். மொட்டை மாடியில் தண்ணீர்த் தொட்டிக்கு அருகில் ஒரு இளைஞனின் பிணம் சாய்த்து உட்காரவைக்கப்பட்டிருந்தது. பிணத்திடம் இருந்து கிடைத்த தபால் ரசீதை தடயமாக வைத்துக்கொண்டு அது சம்பந்தமாக விசாரிக்க சென்ற விஷ்ணுவுக்கு, அதில் ஒரு பெண் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவருகிறது. அடையாளம் தெரியாத அந்தப் பிணத்தை பற்றிய உண்மையோடு... Continue Reading →

நிழலின் நிறம் சிவப்பு..?! – Crime Novel

ஸ்டெனோவாக வேலை பார்த்துக் கொண்டிருக்கும் பாக்யாவைப் பெண் பார்க்க வந்திருந்தவர்கள் அளவுக்கு அதிகமாக வரதட்சணை கேட்க, மாப்பிள்ளை வீட்டாரிடம் பாக்யா சண்டை போட, பார்த்துக்கொண்டிருந்த அவளின் அம்மா நெஞ்சைப் பிடித்துக்கொண்டு அப்படியே மடங்கி விழுகிறாள். பாக்யாவின் அம்மாவிற்கு உடனடியாக இருதயத்தில் ஆபரேஷன் செய்ய வேண்டிய சூழல். ஆபிசில் முதலாளி ரகோத்தமராவிடம் கடனாகப் பணம் கேட்கப் போன பாக்யாவிற்கு அதிர்ச்சி காத்திருந்தது. வயதான தன்னைத் திருமணம் செய்து கொண்டால் மட்டுமே பண உதவி கிடைக்கும் என முதலாளி சொல்ல..பாக்யா... Continue Reading →

எங்கும் விவேக்..! எதிலும் விவேக்..! – Crime Novel

அறிவியல் கருத்தரங்கில் கலந்துகொள்ளவிருக்கும் விஞ்ஞானிகளைக் கொல்வதற்கு டைனமைட்டை வெடிக்க வைக்க அந்தக் கூட்டத்திலேயே ஒரு கருப்பு ஆடு இருக்கிறது. இதுபற்றி உளவுத்துறைத் தலைவர் சக்ரவர்த்திக்கு ரகசிய தகவல் கிடைக்கிறது. உதவிக்கு விவேக்-விஷ்ணுவைக் கூப்பிட்ட உளவுத்துறைத் தலைவர், அந்தக் கருப்பு ஆடு யார் என்பதையும், அவருக்கு கிடைத்த தகவல் பற்றியும் கூற, விசயத்தைக் கேள்விப்பட்ட விவேக் திடுக்கிட்டான். கதையில் திடீர் திருப்பமாக ரகசிய தகவல் கொடுத்த ராஜமாணிக்கத்தின் சலடம் போலீசிற்கு கிடைக்கிறது. இதற்கடுத்ததாக ராஜமாணிக்கத்தின் காதலி புவனேஸ்வரியைக் கொலைவெறியுடன்... Continue Reading →

பணம்..பதவி..பலி..! – Crime Novel

MLA எலக்சனில் அமோக வெற்றி பெற்ற உற்சாகக் களிப்பில் இருந்த மாணிக்கராஜுக்கு ஒரு மிரட்டல் கடிதம் வந்தது. அதில் மந்திரிப் பதவியேற்றால் உயிர் பறிக்கப்படும் என்றிருக்க, அந்த மொட்டைக் கடுதாசியைக் குப்பையில் கிழித்துப் போட்டார் மாணிக்கராஜ். விதி வலியது..முதல்வரை சந்திக்கச் சென்னை செல்ல இருந்த மாணிக்கராஜ் ரயில்வே ஸ்டேஷனில் வைத்தே கொலை செய்யப்படுகிறார். இதற்கடுத்ததாக முதல்வராகப் போகும் ராமபத்ரனுக்கு ஒரு மிரட்டல் விடுக்கப்பட்டது. அந்த மிரட்டல் கடிதத்தில் ஐந்து பேரைக் குறிப்பிட்டு அவர்களுக்கு மந்திரி பதவி தரக்கூடாது... Continue Reading →

5am to 5 pm – Crime Novel

ஜப்பானில் தொழிற்பயிற்சியை முடித்துக்கொண்டு இந்தியா திரும்பிய கீர்த்தியுடன் திடீர் திருப்பமாக நிறைமாத கர்ப்பிணியான காதரினா வந்திறங்க, அண்ணன் லீலாகிருஷ்ணன் திடுக்கிடுகிறான். இந்நிலையில் அண்ணன் லீலாகிருஷ்ணனைப் பற்றிய ஒரு மொட்டை கடுதாசி தம்பியிடம் சிக்குகிறது. லாபத்தில் போய்க்கொண்டிருந்த கம்பெனி திடீரென நஷ்டத்தில் ஓடுவதாக கீர்த்திக்கு கணக்கு காண்பிக்கப்படுகிறது. உண்மையைக் கண்டுபிடித்த கீர்த்தி அவன் அண்ணனிடம் சண்டை போடுகிறான். மொத்த சொத்தையும் அபகரிக்கத் திட்டம் போட்ட லீலாகிருஷ்ணனும் அவன் மனைவியும் கீர்த்தியைத் தீர்த்துக்கட்ட முடிவு செய்கின்றனர். காதரினாவுடன் கீர்த்தி கிளம்பிய... Continue Reading →

திக்…திக்…டிசம்பர் – Crime Novel

வேலை கிடைத்த சந்தோசத்தின் உச்சத்தில் இருந்த ஹரிஷின் தலைக்குள் திடீரென ஒரு பிரளயம் ஏற்பட்டது. மூக்கில் இருந்து ரத்தம் வடிய அப்படியே சரிந்தான் அவன். ஹாஸ்பிடலில் அவனுக்கு எய்ட்ஸ் நோய் என்று ரிப்போர்ட் வருகிறது. அங்கேயே அவனுடைய அம்மா இறக்க, காதலி மீரா அவனை விட்டு விலக, இதனால் மனநோயாளியாகிறான் ஹரிஷ். ஸ்டெரிலைஸ் செய்யப்படாத ஊசி போட்டுக்கொண்டதால் தான், தனக்கு எய்ட்ஸ் வந்திருப்பதாக டாக்டர் ஒருவர் சொன்னதை நம்பிய ஹரிஷ் டாக்டர்களை வெறுக்கிறான். தன்னுடைய ரத்தத்தால் “ஐ... Continue Reading →

உள்ளத்தைக் கிள்ளாதே – Crime Novel

நீலேஷ் கம்பெனி விஷயமாக ஃபாரீன் சென்றுவிட்டதால், நிர்வாகப் பொறுப்பை சில மாதங்களுக்கு தங்கை திலக்ஷனா பார்த்துக்கொண்டிருந்தாள். தங்கள் கம்பெனியின் பெயிண்ட் ஃபார்முலா வேறொரு கம்பெனிக்கு விற்கப்பட்டதை அறிந்த திலக்ஷனா, அதற்கு காரணமான கணேஷமூர்த்தியை சஸ்பென்ட் செய்கிறாள். கோபத்தில் கொதித்த கணேஷமூர்த்தி திலக்ஷனாவைப் பழிதீர்க்க மோசமான ஒரு  திட்டம் தீட்டுகிறான். இதற்கிடையில் மூணுமாத கர்ப்பிணியான நிவேதனா, நீலேஷைத் தேடிக்கொண்டு புனேவில் இருந்து வந்து எதிர்பாராதவிதமாக கோமா நிலைக்கு செல்கிறாள். அவ்வப்போது கோமாவில் இருந்து நினைவு திரும்பும் நிவேதனா யார்..?... Continue Reading →

11 மணி 59 நிமிஷம் 59 வினாடிகள் – Crime Novel

ஒரு ரகசிய ப்ராஜெக்ட்டை, தன்னுடைய பர்சனல் அசிஸ்டெண்ட் ராஜூக்கு கூட தெரிவிக்காமல், பரம ரகசியமாக செய்து கொண்டிருந்தார் ப்ரொபசர் மெஹ்ரா. மெஹ்ராவின் இளம் மனைவி ரெஜிதாவை மட்டும் ஒருமுறை ப்ராஜெக்ட் அறைக்கு அழைத்துச் செல்கிறார். யாருமே அறிந்திராத அந்த ரகசிய ப்ராஜெக்ட் - மனித உணர்வுள்ள ரோபோ “ஸ்ரீ”. ரெஜிதாவைத் தவறாகப் பார்த்து அவளை அடைய நினைக்கிறது அந்த ஸ்ரீ. இந்நிலையில் ப்ராஜெக்ட் முடியும் தருவாயில் இருக்க, அதன் தகவல்களைத் திருடித் தருமாறு ராஜின் காதலியைக் கடத்தி,... Continue Reading →

ஜன்னல் நிலா! – Crime Novel

சாதாரண குடும்பத்தில் பிறந்த பெண்ணிற்கு, திடீரென நடிகையாகும் வாய்ப்பு கிடைக்கிறது. குடும்ப சூழ்நிலை காரணமாக சினிமாவைத் தேர்ந்தெடுக்கும் அவள், தன்னுடைய காதலைத் தியாகம் செய்ய நேரிடுகிறது. பிரபல நடிகரின் சூழ்ச்சியால் நடிகையான அவளுக்கு பின்னால் பின்னப்பட்டிருக்கும் சதியை அவள் உணரும்போது அவளுடைய காதலனை இழக்கிறாள். எல்லாவற்றிக்கும் மேலாக யாருக்காக தன்னுடைய காதலை இழந்தாலோ அவர்களின் சுயரூபம் அந்த நடிகைக்குத் தெரியவர, குழப்பத்தில் இருந்த அவள் சாவைத் தேர்ந்தெடுத்துப் பின் தன்னுடைய முடிவை மாற்றிக்கொள்கிறாள். குடும்ப சூழல் ஒரு... Continue Reading →

இருட்டுக்கு இரண்டு நிறம்..(?) – Crime Novel

எப்படியாவது சினிமாவில் பெரிய ஆளாக வந்துவிட வேண்டும் என்பது கணேசனின் அவா. மனோகரி ஒரு கம்பெனியில் டைபிஸ்ட்டாக வேலை செய்பவள். இருவரும் காதலர்கள். பணம் பத்தும் செய்யும் என்பது இவர்கள் இருவருக்கும் சரியாகப் பொருந்தும். சினிமா வாய்ப்பு தேடிச் சென்ற கணேசனுக்கு ஒரு பிரபல நடிகையைத் திருமணம் செய்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்க, மனோகரிக்கு அவள் முதலாளியைத் திருமணம் செய்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கிறது. இருவரும் ஒருவரை ஒருவர் நேசிப்பது போலவே நடித்து தங்கள் கனவு நிறைவேற... Continue Reading →

உறைந்து போன உண்மை – Crime Novel

அந்த நிமிடம் ஹாஸ்பிடலில் இருந்த கீர்த்தனாவுக்கு நடந்ததெல்லாம் ஒரு கனவு போல கண்முன் வந்துபோனது. கீர்த்தனாவின் அப்பா அஸ்வினிகுமாரை மாப்பிள்ளையாக செலக்ட் செய்தது, அஸ்வினிகுமாரை மீட் பண்ண கீர்த்தனா ரெஸ்டாரன்ட் போனது, அங்கே அவன் மூச்சுபேச்சற்ற நிலையில் இருந்தது, ஹாஸ்பிடலில் சேர்த்ததும் அவனுடைய செல்லுக்கு போலீசிடமிருந்து போன் வந்தது, இது எல்லாவற்றையும் விட அஸ்வினிகுமார் ஒரு மாதம் பாண்டிச்சேரி மென்டல் கேர் ஹாஸ்பிடலில் தங்கி ட்ரீட்மென்ட் எடுத்தது பற்றி அங்கிருந்த நர்ஸ் சொல்ல கீர்த்தனா சற்று ஆடித்தான்... Continue Reading →

அந்த சந்திரனே சாட்சி.! – Crime Novel

குன்னூர் இருட்டுக்குள் விழுந்துகொண்டிருந்த அந்த வேளையில், தன்னுடைய கார் ரிப்பேர் ஆனதால் கொண்டைஊசி வளைவில் கவலையுடன் உதவிக்கு காத்திருந்தாள் சுபலேகா. ஆனால், இரண்டு ரௌடிகளிடம் சுபலேகா மாட்டிக்கொள்ள அவளை வேனில் கடத்திச் செல்கிறார்கள். லேகாவின் பக்கத்து எஸ்டேட்டில் வேலை செய்யும் சதீஸ் அவளைக் காப்பாற்றுகிறான். இருவருக்கும் இடையே காதல் மலர்கிறது. இந்நிலையில் பெற்றோர்களை இழந்திருந்த லேகாவிற்கு திருமணம் செய்ய அவளுடைய மாமா அவளுக்கு மாப்பிள்ளை தேடுகிறார். இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி ஓடிப்போய் திருமணம் செய்துகொள்ள திட்டம் போடுகின்றனர்.... Continue Reading →

மீண்டும் விவேக்கின் விஸ்வரூபம் – Crime Novel

இந்திய ராணுவத்திற்காக 90 நாட்கள் சிறப்புப் பயிற்சி கொடுக்கப்பட்டு உருவாக்கபட்ட 156 தலைசிறந்த வீரர்களை கவுரவிக்க நடந்து கொண்டிருந்த விழாவில் திடீரென வெடித்தது வெடிகுண்டு. அதில் 57 வீரர்கள் இறக்க, அரங்கில் வெடிகுண்டு வெடித்ததற்கான தடயமே ஃபாரன்சிக்கிற்கு கிடைக்கவில்லை. இந்த சம்பவத்தைக் காரணம் காட்டி சமூக ஆர்வலர் சத்யஸ்வரூப் பட்டாச்சார்யா அரசாங்கத்திற்கு எதிராக உண்மையான குற்றவாளியைக் கைது செய்ய உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார். போராட்டத்தின்போது அந்த வெடிகுண்டு சம்பவத்துக்கு இரண்டு மந்திரிகள் தான் காரணகர்த்தா எனவும் அவர்... Continue Reading →

இனிமைக்கு இன்னொரு பெயர் அனிதா! – Crime Novel

அன்றுதான் அனிதாவுக்கும் கீர்த்திக்கும் திருமணம் முடிந்து ரிசப்ஷன். அழையா விருந்தாளியாக கம்பெனியில் உடன் வேலை பார்த்த முருகேஷ் வந்திருந்தான். முருகேஷ்-அனிதாவை ஒருதலையாக விரும்பியவன். அனிதாவும் கீர்த்தியும் தனியாக ஒரு மாதத்திற்கு கெஸ்ட்ஹவுஸில் தங்குவதாகத் திட்டம். ஆனால், ஆபிஸ் விஷயமாக கீர்த்தி உடனே  கிளம்பிவிட, இதைத் தெரிந்துகொண்ட முருகேஷ் தனியாக இருந்த அவளை பலவந்தப்படுத்த திடீரென துப்பாக்கியை எடுத்து அவனை சுட்டுவிடுகிறாள். ஆனால், உண்மையில் அந்தக் கொலையை அனிதா செய்யவில்லை. எப்படி..? என்பதே இனிமைக்கு இன்னொரு பெயர் அனிதா.... Continue Reading →

தீ நிலா – Crime Novel

ஆண்களின் தவறுகளை எல்லாம் தன் எழுத்துக்களில் தெறிக்கவிடும் எழுத்தாளர் இந்துவதனாவைச் சந்திப்பதை கடைசி ஆசையாக தூக்குத்தண்டனை விக்டர் தெரிவிக்கிறான். போலீஸ், நீதிபதி என யாரிடமும் இதுவரை சொல்லாதிருந்த கொலை செய்ததற்கான காரணத்தை இந்துவிடம் சொல்லி, எப்போதும் ஆண்கள் மட்டுமே தவறு செய்வதில்லை, தவறு செய்யும் பெண்களும் இருக்கிறார்கள் என்பதைச் சொல்லி தன் வாழ்க்கையை வைத்து ஒரு கதை எழுதக் கோருகிறான். விக்டர் விவகாரத்தில் முக்கியமாக மாஜி எம்எல்ஏ சம்பந்தப்பட்டிருக்க, அவரிடமிருந்து இந்துவிற்கு மிரட்டல் வருகிறது. அதைப் பொருட்படுத்தாத... Continue Reading →

மீண்டும் ஆகஸ்ட் 15 – Crime Novel

கடந்த இரண்டு வருடங்களாக மனநலம் பாதிக்கப்பட்ட கிராமமாக மாறிவரும் புதிரான வாடாமல்லி கிராமத்தைப் பற்றிக் கேள்விப்பட்ட ரெட்ஸ்டார் டிவியைச் சேர்ந்த நான்கு பேர் தீட்சண்யா தலைமையில் கிராமத்தை வந்தடைந்தனர். வந்த முதல் நாளே நான்குபேரில் ஒருவனான நித்தி காணாமல் போக விஷயம் விஸ்வரூபம் எடுக்கிறது. அதேநாளில் மனநலம் பாதிக்கப்பட்ட மாரம்மா என்ற பெண் கொலை செய்யப்பட, திக்கு தெரியாமல் போலீஸ் திணறுகிறது. இதற்கிடையே அமெரிக்காவிலிருந்து வாடாமல்லி கிராமத்திற்கு அனுப்பப்பட்ட ஒரு கடிதம் போலீஸ் கைக்குக் கிடைக்க அதுவே... Continue Reading →

அது ஒரு நிலாக் காலம்..! – Crime Novel

தன்னுடைய கணவர் இளங்கோவிற்கும், தன் தோழி நந்தினிக்கும் இடையே உள்ள தொடர்பை அறிந்து கொண்ட கவுசல்யா அதைத் தட்டிக்கேட்க, கோபத்தில் இளங்கோ கவுசல்யாவைத் தள்ளிவிடுகிறான். அதேவேளையில் கிடைத்த பியூன் வேலையை செய்யாமல், சினிமா சான்ஸுக்காக அலைந்துகொண்டிருந்த வேலுவின் உண்மையான சுயரூபம் விமலாவிற்குத் திருமணத்திற்குப் பிறகுதான் தெரியவருகிறது. பிறகு இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை வருகிறது. இதற்கிடையே கவுசல்யா காணாமல் போக, குடிபோதையில் சட்டையில் ரத்தக்கறையுடன் போலீசில் பிடிபடுகிறான் வேலு. ஒரே நேரத்தில் இரண்டு கணவன்-மனைவிகளின் வாழ்க்கையில் ஏற்படும்... Continue Reading →

விளக்கம் ப்ளீஸ் விவேக்..!

சந்தேகம்... சந்தேகமா...? “சந்தேகம் சாத்தானின் பல்லக்கு அற்புதம்!!! எனக்கு நம்பிக்கை இல்லை ராமசாமி!!! நம்பிக்கைதான் ஆண்டவரின் நங்கூரம் அற்புதம்!!!” இந்த வசனத்தை super delux படத்தில் பார்த்திருப்பீர்கள். ஆனால், சந்தேகமும், புறணி பேசவும் ஆரம்பித்த பிறகு தான், சிந்தனையும் அறிவும் நமக்கு வளர்ந்ததாக ஆராய்ச்சி முடிவுகள் பறைசாற்றுகின்றன. ஆகையால் இதெல்லாம் நம் பிறவிகுணம். 20-களில் நம் சந்தேகங்களை கூகுள் பிதா தீர்த்து வைத்துக் கொண்டிருந்தார், நேற்றுவரை. ஆனால், 90-களில் அதாவது க்ரைம் நாவலில் விவேக் தோன்றியபின் அவரின்... Continue Reading →

இனி, மின்மினி – Crime Novel

நியூயார்க்கில் உள்ள ஒரு தம்பதியின் மகள் சில்வியா. பெரிய பெரிய டாக்டர்களினாலேயே கண்டுபிடிக்க முடியாத விசித்திரமான நோய் அந்தப் பெண்ணுக்கு. தங்களுடைய வீட்டை விற்றால் தான் சில்வியாவின் மருத்துவ செலவைப் பார்க்க முடியும் என்ற சூழலில், வீட்டை விலை கேட்டு இந்தியாவிலிருந்து வருகிறார் விஜேஷ். உண்மையில் இதற்குமுன் அந்த வீட்டை விலைபேசி அக்ரிமெண்ட் போட்ட இருவரும் ஹார்ட் அட்டாக்கினால் இறக்க, விஜேஷை ஒரு பெண் போனில் எச்சரிக்கிறாள். மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணாக அனைவரும் நினைக்கும் சில்வியா, அவளுடைய... Continue Reading →

காதலுக்கு கண் இருக்கு..?! – Crime Novel

வைஷ்ணவியும் ராஜேந்திரனும் காதலர்கள். இருவரும் ஒருநாள் பீச்சில் இருந்து கிளம்பும்போது ராஜாக்கிளி என்ற ரௌடி ராஜேந்திரனை வம்பிழுக்க, பிரச்சினை போலீஸ் வரை செல்கிறது. ஆனால், அந்த வாரத்தில் ஒரு நாள் வைஷ்ணவியின் வீட்டில் கை வெட்டப்பட்ட நிலையில் ராஜாக்கிளி இறந்து கிடக்கிறான். இந்நிலையில் பணக்காரனான ராஜேந்திரனின் அப்பா அவர்களுடைய திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்க, கல்யாண வேலைகள் மும்முரமாக நடக்கின்றன. கல்யாணத்திற்குப் பத்திரிக்கை அடித்த நிலையில், ராஜேந்திரனை ரயில்வே ஸ்டேஷனுக்கு வரச் சொன்ன வைஷ்ணவி அவன் முன்னாலேயே சயனைட்... Continue Reading →

ஒன்றும் ஒன்றும் மூன்று – Crime Novel

சினிமா வாய்ப்புக்காக சென்னை சென்றுவிட்டு திரும்பிய கைலாஷ் வீடு பூட்டப்பட்டிருப்பதை அறிந்து அக்கம்பக்கத்தில் விசாரிக்கிறான். யாருக்கும் அவன் மனைவி தேவி எங்கே என்று தெரியவில்லை. தேவியைத் தேடிக் களைத்த கைலாஷ் உதவிக்கு போலீஸிடம் போகிறான். இதற்கிடையில் பார்சலில் ஒரு பெண்ணின் பிணம் போலீசிற்கு கிடைக்கிறது. அந்தப் பார்சலில் இருந்த பெண் தேவியோடு ஒத்துப்போக, கொலைக்கான காரணத்தை போலீஸ் வலைவீசி தேடுகிறது. அதே வேளையில் தேவியைப் பார்க்க வரவிருந்த அவளுடைய தோழி ஸ்வஸ்திகா திடீரென காணாமல் போகிறாள். ஸ்வஸ்திகாவின்... Continue Reading →

உலராத ரத்தம் – Crime Novel

விவேக் தன் முழங்கையில் பிசுபிசுத்த அந்த உலராத ரத்தத்தைப் பார்த்தவாறு இருட்டில் ஆழ்ந்திருந்த பங்களாவின் பின் வராந்தாவிற்கு வந்து பாத்ரூமை நோக்கி நடந்தான். ருத்ரமூர்த்தியும் அவர் குடும்பமும் ஒரு வாரத்திற்கு முன்புதான் அந்த பங்களாவிற்கு இடம்பெயர்ந்திருந்தனர். வந்த முதல்நாளே அமானுஷ்யங்கள் விரட்டத் தொடங்கியிருந்தது. அழுகிய தலையற்ற உடல், பேசி நகரும் பல் இளித்த மனித தலை, புகை உருவம், பூசாரியின் கோர கொலை, ருத்ரமூர்த்தியின் மருமகளின் மரணம். இவையனைத்தும் நம்பூதிரி சொல்படி இது ‘பச்சோரா’ வகை ஆவியின்... Continue Reading →

Powered by WordPress.com.

Up ↑