மனிதன் – Crime Novel

காரில் கிடைத்த அந்த ஆண் பிணத்தைப் பற்றி கேள்விப்பட்ட விவேக்கிற்கு விசித்திரமாக இருந்தது. உடலில் வேறெந்த ரத்தக்காயமும் இல்லை. ஆனால், அவனுடைய மார்புப்பகுதியில் ஒரு ஓட்டை போட்டு மொத்த ரத்தத்தையும் உறிஞ்சியிருந்தார்கள். இந்தப் பிணம் கிடைத்த சிறிது நேரத்தில் டாக்டர் பரமேஸ்வரன் லாரி ஏற்றிக் கொலை செய்யப்பட, இரண்டு கேஸிலும் ஒரு நூலிழை ஒற்றுமை இருப்பதாக விவேக் உணர்ந்தான். விசாரணையில் முதலில் கொலை செய்யப்பட்ட நபர் சிதம்பரத்தைப் பற்றி ஒரு முக்கிய தகவல் கிடைத்தது. ரேர் ப்ளட்... Continue Reading →

Top 5 Rajeshkumar Crime Novels in Tamil

தமிழகத்தில் க்ரைம் கதைகள் என்றால் வாசகர்கள் உச்சரிப்பது "ராஜேஷ்குமார்" என்ற பெயரையே. ராஜேஷ்குமார் ஆயிரக்கணக்கில் கிரைம் கதைகளை எழுதியுள்ளார். பலரது நீண்ட தூரப் பயணம், தனிமை நேரங்கள், சுவாரஸ்ய பொழுதுபோக்கிற்கு தோழனாக இருந்தவை இந்த நாவல்கள். இதில் நான் படித்தது சிறிதளவே. ஆனால், அவற்றில் மிகுந்த சுவாரஸ்யத்தையும், வாசிப்பிற்கு பிள்ளையார் சுழி போட விரும்புபவர்களுக்கு ஏற்ற ஐந்து நாவல்கள் பற்றி இங்கே.. அதிரடி ஆட்டம் : - க்ரைம் கதைகள் பல தளங்களில் அமைத்து எழுதப்படுபவை. அதில்... Continue Reading →

விவேக் இன் டோக்கியா – Crime Novel

சிபிஐ டைரக்டர் மங்கள் பாண்டேவிடம் ரிப்போர்ட்டை ஒப்படைக்க டெல்லி சென்ற விவேக்-விஷ்ணுவிடம் ஒரு உதவி கோரினார் மங்கள் பாண்டே. மாஜி ஜட்ஜ் ஸ்வாதி சிங்கின் அதிரடி தீர்ப்புகளால் அவருக்கு அரசியல் ரீதியாக எதிரிகள் இருப்பதாகவும், அதனால் அவருடைய மகள் ஹன்ஸாவிற்கு அந்த மன அழுத்தத்தின் காரணமாக ரேர் ஹார்ட் ப்ராப்ளம் வந்திருப்பதாகவும் கூறிய பாண்டே, டோக்கியோவில் உள்ள ஒரு மருத்துவமனையில் மட்டுமே இந்த நோயை சரி செய்ய முடியும் என்பதையும் கூறினார். ஸ்வாதி சிங் மற்றும் ஹன்ஸா... Continue Reading →

விவேக் விஷ்ணு ஒரு விடுகதை – Crime Novel

தற்கொலை செய்துகொள்ளும்படி தன்னுடைய காதில் அடிக்கடி ஒரு குரல் ஒலிப்பதாகக் கூறி மனநல மருத்துவர் மணிமேகலையைச் சந்திக்க வருகிறாள் தமயந்தி. ஆனால், டாக்டரிடம் வந்துவிட்டு சென்ற சில மணி நேரங்களிலேயே வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொள்கிறாள். உயிருடன் இருக்கும்போதே டி.ஐ.ஜி. பால்ராஜூக்கும் ஐஏஎஸ் ரவீந்திரனுக்கும் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டை அனுப்பிய எதிரி அந்த ரிப்போர்ட்டில் இருப்பது போலவே பாம்பு கடிக்க வைத்து இருவரையும்  கொலை செய்கிறான். அதேபோல் தன் பெயர் “ச ரி க ம... Continue Reading →

வென்று வா விவேக் – Crime Novel

நான் ஒரு கைதி. டெல்லி பாலிகஞ்ச் சிறை. இந்த மாதம் 17 ஆம் தேதி. விபரீதம் ஆபத்து. தடுக்கவும். உங்கள் உயர் அதிகாரிகளை மட்டும் தொடர்பு கொள்க. இதை அலட்சியப்படுத்த வேண்டாம். அந்த அதிகாலை வேளையில் ஒரு டாக்ஸி டிரைவர் கொண்டு வந்த எச்சரிக்கைக் கடிதத்தைப் படித்த விவேக் திகைத்தான். உடனே டெல்லி கிளம்பிய விவேக் அங்கிருந்த மேலதிகாரிகளை சந்தித்து, நடக்கப் போகிற விபரீதத்தைத் தடுக்க முதலில் சிறைக்கு சென்று பார்வையிட முடிவு செய்தான். சிறையில் அவர்களுக்கு... Continue Reading →

ஹாங்காங் விழிகள் – Crime Novel

பிரபல டைரக்டர் ஜெயக்கொடி தன் மகள் நிஷாவிற்கு பார்த்திருந்த ஹாங்காங் மாப்பிள்ளையின் குணநலன்களைப் பற்றி விசாரிக்க ஸ்கைவியூ டிடெக்டிவ் சரண்-வெண்ணிலாவிடம் உதவி கேட்கிறார். ஆனால், நிஷா வேறு ஒருவரைக் காதலிப்பது சரணுக்குத் தெரிய வருகிறது. அதே நேரத்தில் ஜமீன் பரம்பரைக்குச் சொந்தமான கடத்தப்பட்ட இரு வைரங்களை மறைமுகமாக வாங்க வைதேகியும் வந்தியத்தேவனும் ஹாங்காங் விரைகிறார்கள். இதற்கிடையில் ஹாங்காங்கில் இருந்த சரண்-வெண்ணிலா அறையில் கத்திக்குத்துப் பட்ட ஒருவன் வந்து ஒரு பொருளைக் கொடுத்து அதை உரிய நபர்களிடம் சேர்ப்பிக்கச்... Continue Reading →

ஒரு நிமிஷ நிசப்தம் – Crime Novel

தனக்கு வரப்போகும் மாப்பிள்ளை குறைந்தது பத்து லட்சமாவது வைத்திருக்க வேண்டும் என்ற தன் அப்பாவின் கோரிக்கையைக் கேட்ட அபிநயா தன் காதலை அவரிடம் சொல்லவந்து பின் நிறுத்திக்கொண்டாள். பலமாக யோசித்த அபி ஒரு முடிவுக்கு வந்து தன் திட்டத்தை காதலன் சபரியிடம் ஒப்பித்தாள். திட்டப்படி அபியை ஒரு ஆள் கடத்தி பத்து லட்சம் பணம் கேட்டு அவள் அப்பாவை மிரட்டி பணம் வாங்குவது, சில நாட்கள் கழித்து அபியைப் பெண் கேட்டு திருமணம் செய்து கொள்வது. அனைத்தும்... Continue Reading →

ஒளிந்தாலும் விடமாட்டேன் – Crime Novel

பணத்திற்கு மசியாமல், ஒழுக்கமான நடிகையாக வலம்வந்து கொண்டிருந்த நடிகை தாமினியைத் தன் வலையில் வீழ்த்தத் திட்டம் போட்டு அவளைத் தன் வீட்டிற்கு வரவழைக்கிறார் கலாச்சாரத் துறை அமைச்சர். அவருடைய விருப்பத்திற்கிணங்காத தாமினி அவரை எதிர்த்துப் போராடுகிறாள். இதனால் கோபமடைந்த அமைச்சரின் மூலமாக பட வாய்ப்புகளை இழக்கிறாள் தாமினி. மேலும், அமைச்சர் கொலைமுயற்சியும் செய்ய அது தோல்வியில் முடிகிறது. அமைச்சரை எதிர்த்து எதுவும் செய்ய முடியாமல் தவிக்கிறாள் தாமினி. திடீரென்று ஒருநாள் ஜூவாலஜிகல் வெப்பன் மூலமாக அமைச்சர் இறந்த... Continue Reading →

தலையுதிர் பருவம் – Crime Novel

புதிதாக திருமணமான சரவணகுமாரும் மதுலிகாவும் முன்னிரவு நேரத்தில் நண்பன் ரவிஷங்கரின் கெஸ்ட் ஹவுஸ் போய்ச் சேர்ந்த போது காற்றில் சில்வண்டுகளின் சப்தம் மனதில் ஒரு கிலியை ஏற்படுத்தியது. வாட்ச்மேனும் சொந்த வேலையாக வெளியே சென்றுவிட ஆளரவமற்ற அந்த அத்துவானக் காட்டில் இருவரும் தனித்து விடப்பட்டனர். திடீரென இரவில் அறைக்கு வெளியே யாரோ நடக்கும் சப்தம் கேட்க திடுக்கிட்டு விழித்த மது கணவனிடம் தான் கேட்டதைக் கூற இங்கிருந்து கதை சூடு பிடிக்க ஆரம்பிக்கிறது. தொடர்ந்து டெலிபோன் இணைப்பு... Continue Reading →

அடுத்த இலக்கு – Crime Novel

அமிலத்தில் சிதைந்த ஒரு பெண்ணின் பிணம் ஹோட்டலில் கிடைத்த  போது அது யாரென்று தெரியாமல் போலீஸ் திணறிக் கொண்டிருந்தது. அதே நேரம் தங்களுடைய பெண் அபூர்வாவைக் காணவில்லை என அவளுடைய அப்பாவும் அம்மாவும் பத்து நாட்களாகத் தேடிக் கொண்டிருந்தனர். அபூர்வமாக பிணத்தில் இருந்து கிடைத்த ஒரு தடயம் அந்தப் பெண் டிவி நடிகை நிரஞ்சனா என்று சொல்லியது. கொலைக்கான மோட்டிவ் புரியாமல் தவித்துக் கொண்டிருந்த போலீசின் சந்தேகம் பிரபலமான மாஜி எம்எல்ஏ மீது விழுந்தது. நிரஞ்சனாவின் மரணத்திற்கான... Continue Reading →

இந்தியனாய் இரு..! – Crime Novel

“இந்த இந்தியாவில் பிறந்ததற்காக நான் வெட்கப்படுகிறேன்” என்ற தலைப்பில் துங்கபத்ரா பேசி முடித்த அடுத்த நிமிடம் அரங்கமே கைதட்டலால் அதிர்ந்தது. கல்லூரிப் பேச்சுப்போட்டியில் அரசாங்கத்தை சாடி துங்கபத்ரா பேசிய பேச்சின் எதிரொலியாக டேனியல் என்பவன் அவளைச் சந்திக்க வந்தான். அவளும் தங்களைப் போலவே அரசாங்கத்தின் மீது தீராத கோபத்தில் இருப்பதால் தங்களுடைய இயக்கத்தில் அவளைச் சேர்க்கிறார்கள். அரசாங்கத்தை அதிரவைக்க சில விபரீதமான திட்டங்களை அவர்களுடன் சேர்ந்து துங்கபத்ரா செயல்படுத்திய அனைத்துமே புஸ்வாணமாகிப் போகிறது. இந்தியனாய் இருப்பதே வெற்றிதான்..... Continue Reading →

ரெடிமேட் சொர்க்கம் – Crime Novel

கஷ்டப்பட்டு பாடி சம்பாதித்த சொத்துக்களை தன்னுடைய இஷ்டப்படி பெற்றோர்கள் சிறிதும் நல்வழியில் செலவிட சம்மதிக்காததால் ஒரு கடத்தல் நாடகத் திட்டம் போடுகிறாள் பாடகி சுரபி. ரத்ததானம் செய்யப்போவதாகச் சொல்லி ரிக்கார்டிங் தியேட்டரிலிருந்து கிளம்பிய சுரபி, காதலன் ஹேமந்த் மற்றும் அவன் நண்பன் சையத்துடன் சேர்த்து கடத்தல் நாடகத்தைத் தொடங்க இருந்த நேரத்தில், நிஜ கடத்தல்காரர்களிடம் மாட்டிக்கொள்ள விஷயம் விஸ்வரூபம் எடுக்கிறது. கடத்தல்காரர்கள் நிர்பந்தித்த தொகையை எடுத்துச் சென்ற சுரபியின் தந்தை கொல்லப்படுகிறார். அதேபோல் அவளுடைய தாயும் கொல்லப்படுகிறாள்.... Continue Reading →

விடை சொல் விவேக் – Crime Novel

நண்பரைப் பார்க்க டெல்லிக்குச் சென்றிருந்த புரொபசர் பிரிஜேஷை சந்திக்க டெல்லி சென்றான் விவேக். காரணம் டெல்லியில் இருந்து சென்னைக்கு புரொபசருக்கு வந்திருந்த பார்சலில் விபரீதமான முறையில் இருந்த தலை முதல் கால் வரை உரித்து எடுக்கப்பட்டிருந்த மனிதத் தோல். பார்சலை டெல்லியிலிருந்து அனுப்பி வைத்தது ஒரு பெண். புரொபசர் தங்கியிருந்த வீட்டை அடைந்த விவேக்கை மேலும் திடுக்கிடச் செய்தது, கத்தியால் கொலையுண்டிருந்த ஒரு இளம்பெண். அந்த வீட்டில் புரொபசரும் இல்லை, அவரின் நண்பரும் இல்லை. பார்சலில் வந்திருந்த... Continue Reading →

அரை மில்லி மீட்டரில் ஓர் ஆபத்து..! – Crime Novel

இரண்டு வருடங்களாகியும் தனக்கு இன்னும் வேலை கிடைக்கவில்லையே என்ற விரக்தியில் இருந்த கிருஷ்ணாவால் தன்னுடைய காதலி சந்தியாவிற்கு அரசு வேலை கிடைத்ததை எண்ணி சந்தோஷப்பட முடியவில்லை. இதைத் தெரிந்துகொண்ட ஒருவன் அவனைத் தொடர்ந்து சென்று வேலைவாங்கித் தருவதாக ஒரு கம்பெனிக்கு அழைத்துச் செல்ல இங்கே இருந்து விபரீதம் ஆரம்பமாகிறது. கம்பெனியின் சட்டவிரோத காரியத்திற்கு தன்னைப் பகடைக்காயாக மாற்றப்போவதை உணர்ந்த கிருஷ்ணா உள்ளுக்குள் அதிர்ந்தான். இந்நிலையில் வாட்டர் போர்டு ஆபிசில் இருந்த முக்கியமான ஒரு ரெகார்டுக்காக கொலை நடக்கிறது.... Continue Reading →

சங்கமித்திரை – Crime Novel

இந்தியாவின் no.1 ஐ.டி.கம்பெனியில் சேர்வதற்காக இன்டர்வியூவிற்கு வந்திருந்தாள் சங்கமித்திரை. டெஸ்ட் பிரேக்கில் ரெஸ்ட்ரூம் போன அவளுக்கு காத்திருந்தது ஒரு அதிர்ச்சி. தலையில் அடிபட்டு செத்த நிலையில் ஒரு பெண் கீழே கிடக்க, மூன்று பேர் ரத்தக்கறையுடன் நின்றிருந்தனர். நடந்த விவரங்கள் எதுவும் தெரியாமல் கம்பெனியின் டைரக்டர் திவாரி இருக்க, டிடெக்டிவ் ஏஜென்சியைச் சேர்ந்த பாலச்சந்திரன் சங்கமித்திரையைத் தேடி அந்தக் கம்பெனிக்கு வருகிறார். வந்த இடத்தில் அவருக்கு கிடைத்த தகவல் வைரக்கடத்தல் கும்பல் வரை நீள்கிறது. சங்கமித்திரை என்னவானாள்?... Continue Reading →

ஃபர்ஸ்ட் ஃப்ளைட் டூ பாரீஸ் – Crime Novel

க்ரைம் பிரான்ச் மீட்டிங்கை அட்டென்ட் பண்ணுவதற்காக ரூபலாவுடன் பம்பாய் வந்த விவேக்குடன் ஒரு வழக்கும் தொடர்ந்து வந்துவிட்டது. கடுப்பான ரூபலாவைப் பொருட்படுத்தாமல் உயரதிகாரியை சந்திக்க சென்றான் விவேக். அடுத்த நாள் கிளம்பவிருக்கும் முதல் பாரீஸ் ஃப்ளைட்டுக்கு ஆபத்து என்று தகவல் சொல்லியது அந்த அறையில் இருந்த அனைத்து கம்ப்யூட்டர்களும். அந்த விமானத்தில் பறக்க இருந்த பிரபலமான நடிகர் சசிதரனுக்கும் நடிகை நட்சத்திராவுக்கும் விடப்பட்ட மிரட்டல் என்றெண்ணிய விவேக் அவர்களிடம் மட்டும் உண்மையைச் சொல்லிவிட்டு, உடனே ஒரு வியூகத்தை... Continue Reading →

இப்படிக்கு ஓர் இந்தியன் – Crime Novel

காலபைரவன் எச்சரிக்கை - சாலையில் வைக்கப்பட்டிருந்த அந்த விபரீதமான ஃபிளக்ஸ் போர்டை பார்த்த ஒருவர் போலீசிற்கு தகவல் தெரிவிக்க, விரைந்து வந்த போலீசார் இது வெற்று மிரட்டல் என்று நினைத்த நேரத்தில் அதே போன்று இன்னொரு ரயிலில் கிடைக்கிறது. இரண்டு ஃபிளக்ஸிலும் இருந்த போன் நம்பர்களுக்கும் போன் செய்து எச்சரிக்கை செய்தது போலீஸ். ஆனால் விபரீதம் வேறு வடிவத்தில் வந்தது. வேறு கேஸ் விஷயமாக கமிஷனரைப் பார்க்கப் போன விவேக்கிற்கு இந்த ஃபிளக்ஸ் விவகாரம் தெரிய வருகிறது.... Continue Reading →

வாடகை தேவதை – Crime Novel

சமீபத்தில் நடந்த டென்னீஸ் போட்டியில் வென்று உலக அளவில் இன்று பேசப்பட்டு வரும் குந்தவை டிவி பேட்டியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சளைக்காமல் பதில் சொல்லிக்கொண்டிருந்தாள். பேட்டியை முடித்துவிட்டு திரும்புகையில் வீட்டில் ஒரு பூகம்பம் காத்திருக்கிறது என்று அவளுக்கு அப்போது தெரியாது. ராமன் நாயரும் அவரது மனைவி தங்கம்மாவும் தான் குந்தவையின் உண்மையான அப்பா அம்மா என்று சொல்லி டாக்டர் பாரிஜாதம் நர்ஸ் சுந்தரவள்ளியுடன் அவர்கள் இருவரையும் குந்தவையின் வீட்டிற்கு அழைத்து வர, அதைக் கேட்ட குந்தவையின் பெற்றோர்கள்... Continue Reading →

காதல் தேசத்துக்கு ஒரு விசா..! – Crime Novel

மிஸ் இந்தியா பட்டம் வென்ற கையோடு கோயம்புத்தூர் ஏர்போர்ட்டில் கால் வைத்தாள் நர்த்தனா. தன்னுடைய அப்பா சொன்ன அடையாளங்களை வைத்து, புது கார் டிரைவரை அந்தக் கூட்டத்தில் தேடிக்கொண்டிருந்த போது இரண்டு ரௌடிகள் நர்த்தனாவிடம் வம்பிழுக்க, அவளைக் காப்பாற்றி வீட்டில் சேர்க்கிறான் டிரைவர் அசோக். அசோக்கின் சாதுர்யம் நர்த்தனாவிற்கு பிடித்துப் போக, அவன் விலகிச் சென்றாலும் வலிய போய் பேசுகிறாள் நர்த்தனா. இருவருக்கும் காதல் மலர, விஷயம் நர்த்தனாவின் அப்பா காதுக்கு செல்ல இங்குதான் விபரீதம் ஆரம்பமாகிறது.... Continue Reading →

நிறம் மாறும் நிஜங்கள் – Crime Novel

கல்யாணத்தைப் பிடிவாதமாக மறுக்கும் மைத்ரேயி கல்யாணம் செய்து கொண்டால்தான் சொத்துக்கள் அவள் பெயருக்கு மாறும் என்று உயில் எழுதி வைத்துவிட்டு இறந்து விடுகிறார் மைத்ரேயியின் அப்பா. அதற்காக போலியாக ஒரு திருமணத்திற்கு ஏற்பாடு செய்ய முடிவெடுக்கிறாள். இந்நிலையில் மைத்ரேயியின் தோழி புவனா வேலை விஷயமாக அவள் வீட்டிற்கு வந்து தங்க, திருமணமான தன் தோழி புவனாவிடம் உதவி கேட்கிறாள் மைத்ரேயி. புவனா முதலில் மறுத்துப் பின், வரவிருக்கும் ஆபத்தை அறியாமல் தன் கணவனை மைத்ரேயியிற்குப் போலியாகத் திருமணம்... Continue Reading →

ஆபத்து இங்கே ஆரம்பம்..! – Crime Novel

விவேக் அந்த பிணத்தைப் பற்றி யோசித்துக்கொண்டே நடந்தவற்றை அசைபோட்டான். நீலேஷின் மனைவி கஸ்தூரி வேறு ஒருவனுடன் சென்று விட, மனைவியைப் பிரிந்த துக்கத்தில் இருந்த நீலேஷ் நண்பன் ரமணனின் கெஸ்ட் ஹௌசிற்கு ஓய்வெடுக்க வருகிறான். வந்த இடத்தில் ஒரு பெண்ணின் பிணம் கிடைக்கிறது. இதற்கிடையில் கேஸில் விவேக்கிற்கு ஒரு முக்கியமான தடயம் கிடைக்கிறது. அதை வைத்து விசாரித்துக் கொண்டிருந்த அவனுக்கு அந்தக் கொலைக்கான காரணம் தெரியவருகிறது. அந்தப் பெண்ணின் பிணம் யாருடையது என்பதை கிடைத்த தடயத்தின் மூலம்... Continue Reading →

முடிந்தால் உயிரோடு – Crime Novel

மாமனாருடன் சேர்ந்து வேலை செய்யாததால் சூழ்ச்சி செய்து தன்னுடைய கம்பெனியை தன்னுடைய மனைவியிடமே ஏலத்தில் இழந்துவிட்ட சோகத்தில் இருந்தான் குருப்ரசாத். இந்நிலையில் குருப்ரசாத்தை தங்கள் கம்பெனிக்கு இழுக்க முயற்சி செய்கிறாள் குருப்ரசாத்தின் மனைவி வர்ணா. பேச்சு கைகலப்பில் முடிந்து குருப்ரசாத் இறக்கிறான். குருப்ரசாத்தின் பி.ஏ ஜெயச்சந்திரனும் வர்ணாவும் சேர்ந்து அவனை கெஸ்ட் ஹௌசில் புதைக்கின்றனர். அண்ணனைத் தேடி வரும் மைதிலி அவனைக் காணாமல் விவேக்கிடம் உதவி கோர, விவேக்கால் முடிந்ததா என்பதே மீதிக்கதை. #one_minute_one_book #tamil #book... Continue Reading →

விளக்கம் ப்ளீஸ் விவேக்..!

சந்தேகம்... சந்தேகமா...? “சந்தேகம் சாத்தானின் பல்லக்கு அற்புதம்!!! எனக்கு நம்பிக்கை இல்லை ராமசாமி!!! நம்பிக்கைதான் ஆண்டவரின் நங்கூரம் அற்புதம்!!!” இந்த வசனத்தை super delux படத்தில் பார்த்திருப்பீர்கள். ஆனால், சந்தேகமும், புறணி பேசவும் ஆரம்பித்த பிறகு தான், சிந்தனையும் அறிவும் நமக்கு வளர்ந்ததாக ஆராய்ச்சி முடிவுகள் பறைசாற்றுகின்றன. ஆகையால் இதெல்லாம் நம் பிறவிகுணம். 20-களில் நம் சந்தேகங்களை கூகுள் பிதா தீர்த்து வைத்துக் கொண்டிருந்தார், நேற்றுவரை. ஆனால், 90-களில் அதாவது க்ரைம் நாவலில் விவேக் தோன்றியபின் அவரின்... Continue Reading →

தீர்ப்பு – Crime Novel

மழை தாறுமாறாகப் பெய்து கொண்டிருந்த நேரத்தில் நான்கு பேர் சேர்ந்து ஒருவனைக் கத்தியால் குத்துவதை இருட்டில் பார்த்துவிட்டாள் சாரதாமணி. அதில் ஒருவன் தன்னிடம் படித்த மாணவன் பரமேஷ். உண்மையை வெளியே சொன்னால் அவளுடைய மகளையும் மருமகனையும் கொன்றுவிடுவதாக மிரட்டிய பரமேஷைப் பார்த்த சாரதாமணிக்கு குலை நடுங்கியது. இந்நிலையில் க்ரைம் பிரான்ச்சில் இருக்கும் தன் மருமகன் அசோக்கிடம் உண்மையைச் சொல்லமுடியாமல் தவிக்கிறாள். அதேவேளையில் குற்றவாளிகளைப் பிடித்துவிட்டதாக நாடகமாடுகிறது போலீஸ். மேற்கொண்டு நடந்தது என்ன? #one_minute_one_book #tamil #book #review... Continue Reading →

ஒரு மதிப்பிற்குரிய குற்றம் – Crime Novel

கள்ளநோட்டு அடிப்பவர்களைப் பற்றி க்ரைம் பிராஞ்ச் விஜிலென்ஸ்-ஐ சேர்ந்த சத்யனுக்கு துப்பு கிடைக்க தனியாளாகச் சென்று அவர்களை மடக்க நினைத்து எதிரிகளிடம் மாட்டி உயிரிழக்கிறான். சூர்யகலாதரன் தன்னுடைய நண்பன் சத்யனின் மரணத்தைப் பற்றி விசாரித்துக்கொண்டிருக்கும்போதே அவனுடைய தங்கை தாரிகாவும் மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறாள். மூன்றாவதாக சூர்யகலாதரனின் மற்றொரு நண்பன் பிரதாப்பும் கொலை செய்யப்பட, இந்த இடத்தில் போலீசுக்கு கொலையில் ஒரு தடயம் கிடைக்கிறது. குற்றத்தை மதிப்பிற்குரிய விஷயமாகக் கருதும் எதிரிகள் யார்? கள்ளநோட்டு கும்பல் பிடிபட்டதா?... Continue Reading →

வெள்ளை நிழல்! – Crime Novel

ஈஸ்வரி தன்னுடைய அப்பாவிடம் தன் காதலைப் பற்றியும் கிரிதர் பற்றியும் கூற வெகுண்ட கோபாலகிருஷ்ணன், கிரிதரை நேரில் சந்திக்க வரச் சொல்கிறார். அவனுடைய அந்தஸ்தை முன்னிறுத்தி அவனை அவமானப்படுத்தி வெளியே அனுப்புகிறார் ஈஸ்வரியின் அப்பா. அவரை விட ஒருபடி மேலே வந்தபிறகு தான் இருவருக்கும் திருமணம் என்று முடிவெடுத்த அவன் அயராது உழைத்து முன்னேறுகிறான். கல்யாணம் ஈஸ்வரி அப்பாவின் சம்மதத்துடன் சிம்பிளாக நடக்க, ஒரு வாரத்திலேயே  அவளை விட்டு தனியாக மெட்ராஸ் செல்கிறான். திடீரென ஒருநாள் ஈஸ்வரி... Continue Reading →

2000 சதுர அடி சொர்க்கம் – Crime Novel

மிஸ்டர் டிஸ்ஸாஸ்டர் என்று வான இயல் வல்லுனர்களால் வர்ணிக்கப்பட்ட வால்நட்சத்திரத்தைப் பற்றி ஸ்பேஸ் ரிசர்ச் சென்டரின் ரிடையர்ட் டைரக்டர் ரவிசங்கரிடம் விசாரிக்க வருகிறாள் டாக்டர் வாணி சுந்தர். விபரீத வால்நட்சத்திரம் கடினமான உப்புக்களாலும் தாதுக்களாலும் உருவாக்கப்பட்டிருக்கும் வால்நட்சத்திரம் பூமியை உரசிச் செல்வதால் ஓசோனில் ஓட்டை உண்டாக்கி அதன் துகள்கள் பூமியின் மேற்பரப்பில் விழ வாய்ப்புள்ளதாகவும் முழுவதுமாக விவரித்தார் ரவிசங்கர். அடுத்ததாக அவள் கேட்ட கேள்வியில் அதிர்ந்து போன அவர் வந்திருப்பது டாக்டர் இல்லை என்பதை உணர்ந்தார். மேலும்,... Continue Reading →

1+1=0 – Crime Novel

‘வளையோசை’ பத்திரிக்கைக்கு பேட்டி கொடுப்பதற்காக பத்திரிக்கையின் சீஃப் சப்போர்ட்டர் சுடர்கொடிக்காகக் காத்திருந்த விவேக்கிற்கு வந்து சேர்ந்தது அந்த திடுக்கிடும் செய்தி. வேளச்சேரி ரயில்வே ஸ்டேஷனில் மர்ம நபர் ஒருவரால் அரிவாளால் வெட்டிக் கொல்லப்பட்டிருந்தாள், சுடர்கொடி. ஸ்பாட்டிற்கு விரைந்த விவேக்கின் கையில் கிடைத்தது முக்கியத் தடயமான சுடர்கொடியின் டயரி. மேலும், சுடர்கொடியின் வீட்டை சோதனையிடச் சென்றபோது அவளுடைய அண்ணன் தூக்கில் தொங்கிக்கொண்டிருக்க, அவளுடைய வீட்டில் கிடைத்த பொருள்கள் விவேக்கை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்நிலையில், விவேக்கிற்கு உதவிசெய்ய முன்வருகிறாள் சுடர்கொடியின்... Continue Reading →

ஒன்பதாவது திசை – Crime Novel

“ககாசல டபை தர பவறர் கச சன்டன ததி பகீறழே கபசத்டத படிறஆ கழ சம். டஒ தருபஅறமா கவாசசை டயிதல் பதோறண் கடி சனாடல் தசொபர் றண கசுசர டங்தக பம்ற..” இறக்கும் வேளையில் தன்னுடைய தந்தை தன்னிடம் சொன்ன அந்த ஒன்பதாவது திசை ஓலைச்சுவடி ஆறு மாதத்திற்கு பிறகு பூவிழி கையில் சிக்கியது. அதை எடுத்துக்கொண்ட அவள் ஓலைச்சுவடியை ஆராய்ச்சி செய்யும் நண்பன் சம்பத்தை சந்திக்க சித்தர் காடு விரைந்தாள். ஸ்டேஷனில் இருந்த கருப்பு... Continue Reading →

உயிர் உருகும் சத்தம்..! – Crime Novel

பத்திரிக்கைத் துறையில் வேலை பார்த்துவந்த ரூபனும் வானதியும் ‘மரணம் பார்க்காத வீடு’ பற்றி கேள்விப்பட்ட உடனே பேட்டி எடுக்க திண்டலில் இருந்த அந்த கிராமத்திற்கு விரைந்து வந்தனர். அந்த நிமிடம் மரணம் பார்க்காத வீடு அவர்களுக்குப் புரியாத புதிராகவே இருந்தது. சாகும் நிலையில் உள்ள ஒருவர் அந்த வீட்டில் இருக்கும் வரையில் அவரது உயிர் உடலை விட்டு வெளியே போகாது. மேலும் அந்த வீட்டில் உள்ள மாமரம் மற்றும் தென்னை மரத்தில் வருடத்திற்கு ஒரே ஒரு காய்... Continue Reading →

ஒரு மரணத்தின் மரணம் – Crime Novel

பிளாசிபோ..உயிர்காக்கும் மாமருந்து. உலகிலேயே இந்தியாவில் அதுவும் தமிழ்நாடு-ஆந்திரா எல்லைப்பகுதியில் உள்ள ‘வஜ்ராலு கொண்டா’ கல் க்வாரியில் இருப்பதை அறிந்த கிரணும் தாரகையும் அங்கு ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் புரொபசர் ஜெயப்ரகாஷைப் பேட்டி எடுக்க விரைந்தனர். செவ்வாய் கிரகத்தில் மட்டுமே கிடைக்கக்கூடிய அரிய பிளாசிபோ இந்தியாவிற்கு எப்படி வந்தது என்பதை அறிந்த கிரண்-தாரகை வியப்பின் உச்சிக்கே சென்றனர். வெளிநாட்டினர் பலர் வஜ்ராலு கொண்டா பகுதிக்கு வந்து ஆராய்ச்சி மேற்கொள்ள விரும்ப இந்திய அரசாங்கம் அதை மறுத்துவிட்டது. மேலும், பிளாசிபோவைத் தனியாக... Continue Reading →

அருந்ததியும் ஆறு தோட்டாக்களும் – Crime Novel

அந்தக் காலை வேளையிலேயே இண்டஸ்ட்ரியலிஸ்ட் திருஞானத்தை சந்திக்க இன்ஸ்பெக்டர் தமிழரசன் வந்திருந்தார். அவருடன் விபரீதமும் கூட வந்திருந்தது. அவர் கொண்டுவந்திருந்த அந்த அபாயகரமான பொருள் அருந்ததி என்று பெயர் பொறிக்கப்பட்ட ஆறு துப்பாக்கி தோட்டாக்கள். அந்த வகையான தோட்டாக்கள் கோயம்புத்தூரிலேயே திருஞானம் மற்றும் அவருடைய மகன் மதன் இருவரிடம் மட்டுமே இருந்தது. மதனிடம் விசாரணை செய்த இன்ஸ்பெக்டர் அவன் பொய் சொல்வதை அவனுடைய பேச்சிலிருந்தே உணர்ந்தார். மேலும் மேலும் பொய் மட்டுமே பேசிக்கொண்டிருந்த மதன் திடீரென போலீஸ்... Continue Reading →

எவன் அவன் – Crime Novel

தன்னுடைய மேலதிகாரியிடமிருந்து வாட்ஸ்அப்பில் அந்தத் தகவல் வந்தபோது சற்று அதிர்ந்துதான் போனான் விவேக். ஸ்தலத்திற்கு சென்ற விவேக்கிற்கு கிடைத்த தகவல்கள் மேலும் திடுக்கிட செய்தது. தனக்கான சவப்பெட்டியை சாவதற்கு இரண்டு நாட்கள் முன்னதாகவே ஆர்டர் செய்திருந்தார் தேவசகாயம். விவேக்கின் விசாரணை முதலில் சவப்பெட்டி தயாரித்தவனிடமிருந்து ஆரம்பிக்க முதல் பார்வையிலேயே அவனிடம் தப்பு இருப்பதைக் கண்டுபிடித்தான். அவனைத் தீர விசாரித்ததில் டிவைன் கிரிஸ்டோ மற்றும் விவித் பிங்கி பற்றிய திடுக்கிடும் பல விஷயங்கள் வெளியே வர அதிர்ச்சியின் உச்சிக்கே... Continue Reading →

அங்கே…இங்கே…எங்கே..? – Crime Novel

ஹிக்ஸ்-போசான் என்ற நுண் அணு ஆராய்ச்சி சம்பந்தமாக அமெரிக்காவிலிருந்து, சுற்றுலா பயணிகள் என்ற போர்வையில் இந்தியாவின் தமிழகத்திற்கு வரும் நாஸா விஞ்ஞானிகள். ஆராய்ச்சிக்கு பாதுகாப்பு அளிக்கும்படி மேலதிகாரியிடம் இருந்து வரும் உத்தரவை சிரமேற்கொண்டு விவேக் ஏற்பாடுகளைத் துரிதமாக்குகிறான். திடீரென, புகழ்பெற்ற ரியல் எஸ்டேட் ஓனரின் ஒரே மகனான கோகுல் ஒரு அதிகாலை வேளையில் ஏழாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ள, கேஸ் விவேக் கைக்கு மாறுகிறது. கோகுலின் இறுதிசடங்குகள் நடந்துகொண்டு இருக்கும்போதே தாய்மாமன் நஞ்சுண்டன் தூக்கிட்டு... Continue Reading →

ரெட் அலர்ட் – Crime Novel

“குற்றங்கள் அதிகரிக்க அதிகரிக்க, தண்டனையின் தன்மையும் மாறுகிறது..” ஆபிசிற்கு ரெடியாகி கிளம்ப யத்தனித்த இன்ஸ்பெக்டர் சௌந்தர்யாவிற்கு கமிஷனரிடமிருந்து உடனடி அழைப்பு வர ஸ்கூட்டரில் பறந்தாள். அங்கே அவளுக்காக ஒரு வினோதமான கேஸ் காத்திருந்தது. ப்ளஸ் 2 படிக்கும் விநோதினி என்ற மாணவி மரணம். தற்கொலை கேஸ் என்று எண்ணப்பட்டு வந்த விநோதினியின் மரணம் கொலை கேஸாக மாறக் காரணம் அவள் வயிற்றில் வளர்ந்திருந்த இரண்டு மாதக் கரு. மறைமுகமாக கண்டுபிடிக்கச் சொல்லி வந்த உத்தரவை ஏற்று விசாரணையை... Continue Reading →

பேசும் ரோஜாக்கள்..! – Crime Novel

அமெரிக்காவில் தனக்கு கிடைத்த நர்ஸ் வேலைக்கு செல்வதற்காக விசா வாங்க அமெரிக்கன் எம்பஸியில் வேலை பார்க்கும் தோழி ஸ்வாதியை சந்திக்க செல்கிறாள் ஜென்யூன் ஹாஸ்பிடலில் நர்ஸாக இருக்கும் வேதிகா. அங்கே அமெரிக்கன் போஸ்ட் நாளிதழில் வெளியாகியிருந்த அந்த விபத்து செய்தியைப் பார்த்து திடுக்கிட்டாள் வேதிகா. அதில் ஏற்கனவே தான் வேலை பார்க்கும் ஹாஸ்பிடலில் ஒரு வருடத்திற்கு முன்பு இறந்திருந்த அமோகா என்ற பெண்ணின் படத்துடன் விபத்து செய்தி போடப்பட்டிருந்தது. இதற்கிடையில் ஜென்யூன் ஹாஸ்பிடலில் ட்ரீட்மென்ட் எடுத்த ‘அபயம்’... Continue Reading →

தாஜ்மஹால் நிழல் – Crime Novel

“காதலுக்காக காதலே எழுதிக்கொண்ட ஒரு காவியம்..”          -தாஜ்மஹால். மறைந்த தன் நெருங்கிய தோழி ஸ்வஸ்திகாவிற்கு அஞ்சலி செலுத்த பண்ணை வீட்டிற்குச் செல்கிறாள் பூஜ்யா. அந்த வீட்டில் கழுத்துடன் வெட்டியெடுக்கப்பட்ட மூன்று பெண்களின் தலை ஒரு திரவத்தில் மிதந்து கொண்டிருப்பதைப் பார்த்த அவள் அந்த இடத்திலிருந்து வெளியேறும் முன் போலீஸிடம் காண்பிக்க அதைத் தன்னுடைய மொபைலில் படமெடுத்துச் செல்கிறாள். அங்கிருந்து திரும்பிவந்த பூஜ்யா சிறிது நாட்களிலேயே மனஉளைச்சல் ஏற்பட்டு திடீரென ஒருநாள் இறக்க, இந்த இடத்திலிருந்து விவேக்... Continue Reading →

விவேக் இருக்க பயமேன் II – Crime Novel

பணிச்சுமையிலிருந்து சிறிது காலம் ஓய்வெடுக்க நண்பன் மனோவின் கெஸ்ட் ஹவுஸிற்கு சென்று விடுமுறையைக் கழிக்க ஆரம்பித்த முதல் நாளே ஒரு பிணம் கிடைக்க, விடுமுறையைத் தள்ளிவைத்து விட்டு கேஸிற்குள் மூக்கை நுழைக்கிறான் விவேக். அருகிலுள்ள வேறொரு எஸ்டேட் ஓனர் மீது விவேக்கிற்கு சந்தேகம் வர கேஸ் வேறொரு பரிமாணத்திற்கு நகர்கிறது. அதேவேளையில் தன்னுடனான பார்ட்னர்ஷிப்பை முடித்துக் கொண்டு, புதிதாக விளம்பரக் கம்பெனி வைக்கத் திட்டமிட்டிருக்கும் அமிர்தராஜைக் கொல்லநினைக்கும் பார்ட்னர் ஜோதிபாண்டியன். இன்னொரு பக்கத்தில் டில்லியில் பிரதமருடன் கைகோர்த்துக்... Continue Reading →

பஞ்சவர்ண கொலைகள் – Crime Novel

அந்த அதிகாலைக் குளிரையும் தாண்டி விவேக் யமஹாவில் வேகமாகப் பறந்துகொண்டிருந்தான். நீலேஷ் மற்றும் ரோஸி இருவரும் மர்ம நபரால் கொலை செய்யப்பட்டிருந்தனர். ஸ்தலத்திற்கு வந்த விவேக்கிற்கு கிடைத்தது கேஸின் முதல் தடயம். இந்தக் கேஸை விவேக் விசாரித்துக்கொண்டிருக்கும் போதே செந்தாமரைக்கண்ணன், கார்மேகம், பச்சையப்பன் என்ற மூவருக்கும் கொலைமிரட்டல் வருகிறது. நடந்த கொலை மற்றும் கொலை மிரட்டலிலிருந்து விவேக்கிற்கு கேஸில் ஒரு துப்பு கிடைக்கிறது. அவர்களுக்கு பாதுகாப்பு கொடுத்துக் கொண்டிருக்கும் போதே பிரசாந்த் என்பவன் சம்பந்தமே இல்லாமல் கொலை... Continue Reading →

அதிரடி ஆட்டம்! – Crime Novel

“இந்தியாவிற்கு இந்தியாதான் பகைநாடு..” ரூபலா மற்றும் கோகுல்நாத்துடன் விவேக் தனது மாருதி ஜென்னில் மகாபலிபுர ரோட்டில் இருந்த ஹோட்டலுக்குப் பறந்து கொண்டிருந்தான். அங்கிருந்து யாருமறியாமல் ஓய்வுபெற்ற விண்வெளித்துறை இயக்குநர் பட்டாச்சார்யாவைச் சந்திக்கத் திருக்கழுக்குன்றம் விரைந்தான். விவேக்கிற்கு விபரீதம் காத்திருந்தது. விவேக்கைக் கொல்ல எதிராளிகள் அவன் சென்றுகொண்டிருந்த காரில் மேக்னடிக் டையனமைட்டைப் பொருத்தினர். அதேவேளையில் நாஸா விண்வெளித்துறையைச் சேர்ந்த லூயிஸ் என்பவன் ‘ப்ராக்ரஸ்’ என்ற சர்வதேச விண்வெளி நிலையத்தின் உதவியுடன் எதிரி நாடுகளில் பூகம்பங்களையும், மணற்புயலையும் உருவாக்கி சுவிஸ்... Continue Reading →

கறுப்பு நெருப்பு – Crime Novel

“தாய்நாட்டிற்கான துரோகம், பாதகம்..” “ப்ளாக் ஃபயர் தட்டாரப் பூச்சி வேல் விண் பரிதி” சிங்கப்பூரிலிருந்து ப்ளைட்டில் வந்துகொண்டிருந்த பரிதி என்பவனை சந்தேகப்பட்டு அவனிடம் பேச்சு கொடுத்து உண்மையை வாங்க தமிழ் தெரிந்த மானஸாவை அனுப்பி வேவு பார்க்கின்றார் பைலட் வைபவ். மானஸாவும் அந்தப் பரிதியின் கூட்டாளி என்பது தெரியாததால் அவன் கடத்தி செல்ல வேண்டிய பொருள் ஈஸியாக இந்தியா வந்து சேர்கிறது. அந்த விபரீத பொருளைக் கடத்த உதவிய மானஸா நான்கு மாதங்களுக்கு பிறகு ஒரு விபத்தில்... Continue Reading →

ஐந்து கிராம் நிலவு – Crime Novel

வருடம் 2049..உணவாக மாத்திரையும், கடவுளாக பிரதமர் தேஜ்ஜும் மக்களுக்கு பழக்கப்படுத்தப்பட்டு இருந்தனர். பிரதமரை எதிர்த்து கேள்வி கேட்பவர்களை எதிரிகளாக எண்ணி சுட்டுப் பொசுக்கினர். மேலும் வெறி பிடித்த ரோபோட்டுகளை எதிர்ப்பவர்கள் மீது ஏவிவிட்டனர். நடப்பதை எல்லாம் பார்த்து கொதித்துப் போயிருந்த சிலர் அந்த இயக்கத்தில் சேர்ந்து பிரதமருக்கு எதிராக அவருக்குத் தெரியாமல் மறைமுகமாக வேலை செய்தனர். பாரி, சோலை, காசி, அகில் மற்றும் திலக் அந்தக் காவலாளிகளிடம் இருந்து தப்பித்து தாங்கள் கேள்விப்பட்ட விசயம் உண்மையா என்பதை... Continue Reading →

மென்மையாய் ஒரு வன்முறை – Crime Novel

“பணம் பத்தும் செய்யும், அவ்வளவு ஏன் கொலை கூட செய்யும்..” மூன்று மாதத்திற்குப் பிறகு விடுமுறையைக் கழிக்க அண்ணன் பாலமுரளி வீட்டிற்கு சேரனில் வந்துகொண்டிருந்த வைசாலி கடத்தப்படுகிறாள். அதிகாலை வேளையில் வைசாலியை அழைத்து வர கிளம்பிச் சென்ற பாலமுரளி விஷ ஸ்ப்ரே மூலமாக மர்ம நபர் ஒருவரால் தாக்கப்படுகிறான். ஹாஸ்பிடலில் அட்மிட் செய்த பிறகு மீண்டும் ஒருமுறை பாலமுரளி மீது கொலை முயற்சி நடக்கிறது. நடப்பது எதுவும் புரியாமல் தவிக்கிறாள் பாலமுரளியின் மனைவி நர்த்தனா. ஹாஸ்டலில் தங்கியிருந்த... Continue Reading →

‘கி’(க)லியுகம்! – Crime Novel

மழை பூப்பூவாய்த் தூறிக் கொண்டிருந்த போது வீட்டிற்கு கிளம்பத் தயாரான டாக்டர் மிருத்தியுஞ்சனைப் பார்க்க இரண்டு இளைஞர்கள் அந்த மனநல மருத்துவமனைக்கு வந்திருந்தனர். முன்னிரவு நேரத்தில் வந்த அந்த இரண்டு பேரையும் பார்த்த டாக்டரிடம் காசியே முதலில் பேச ஆரம்பித்தான். தன்னுடைய நண்பன் கலிவரதன் சில நாள்களாக இயல்பாக இல்லாததைத் தெரிவித்த காசி, அவனுடைய ஆன்மிக ஈடுபாட்டைப் பற்றியும் அதனால் அவனுக்கு நேர்ந்த அனுபவத்தைப் பற்றியும் கூறினான். மேலும் கோவிலில் அவன் பார்த்த ஸ்வர்ணதேக ஸ்வாமிகள் என்ற... Continue Reading →

ஹரிதா ஒரு ஆச்சரியக்குறி! – Crime Novel

“உண்மையான காதலை மனிதர்களால் மட்டுமல்ல, அறிவியலாலும் பிரிக்க முடியாது..” தன் கல்யாணத்துக்காகப் பார்த்து வைத்திருந்த இரண்டு மாப்பிள்ளைகளில் யாரை முடிவுசெய்வது என்ற குழப்பத்திலேயே காலேஜுக்கு போனாள் ஹரிதா. ஆச்சரியம் அளிக்கும் வகையில் அவளுடைய பெயருக்கு ஒரு லெட்டர் வந்திருந்தது. ஹரிதாவுக்கு முன்பின் யாரென்றே தெரியாத ப்ரணேஷ் என்பவன் அந்தக் காதல் கடிதத்தை எழுதியிருந்தான். அதைப் படித்த ஹரிதாவுக்கு பயத்தில் நா வறண்டது. கல்யாணம் நிச்சயமாக இருக்கும் இந்நிலையில் யாரோ விளையாடுகிறார்கள் என்று நினைத்த அவளுக்கு மீண்டும் ஒரு... Continue Reading →

முதல் நிமிஷம் – Crime Novel

“குள்ளநரிக் கூட்டத்தை அழிக்க சிலவேளைகளில் சிங்கமும் உயிர்த்தியாகம் செய்ய வேண்டியிருக்கும்..” புது மில்லினியம் 2000 பிறக்கப் போவதை முன்னிட்டு அதை வானில் கொண்டாட முடிவெடுத்த விமானிகளின் ஆசையை நிறைவேற்ற சீஃப் கமேண்டர் விக்ரம்சிங் மேலிடத்தில் அனுமதி வாங்கியிருந்தார். விமானத்தை பரிசோதித்த பிறகு, சரியாக 11.30-க்கு ஆரம்பித்து பைலட் முதல் ஸ்கேவன்ஞ்சர் வரை அனைத்து ஊழியர்களும் வானில் வட்டமடித்தபடியே நியூ இயர் கொண்டாட்டத்தில் இருந்தனர். வரவிருந்த அபாயத்தை உணராத ராதிகாவும் அவர்களுடைய கொண்டாட்டத்தில் சேர்ந்து கொண்டாள். விமானத்தின் கண்ட்ரோலை... Continue Reading →

ஜமுனா! ஜாக்கிரதை! – Crime Novel

பென்னர்கட்டாவில் உள்ள சாஃப்ட்வேர் கம்பெனியின் கட்டிடம் வெடுகுண்டு வைத்து தகர்க்கப்பட்டது. காரணம், ப்ளாக் ஃப்ளேம்ஸ் என்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த தீவிரவாத இயக்கம் என்றும், அந்த இயக்கத்தைச் சேர்ந்த கோப்பெருந்தேவி என்ற பெண்ணைக் கைது செய்துள்ளதாகவும் தமிழ்நாட்டு டி.ஜி.பி ஹரிஹரசுதனுக்குப் போன் செய்த பெங்களூர் டி.ஜி.பி கெம்பண்ணா தகவல் தெரிவித்தார். அப்படியொரு இயக்கமே தமிழ்நாட்டில் இல்லை என்று மறுத்த டி.ஜி.பி ஹரிஹரசுதன், மேற்கொண்டு வெடிகுண்டு விபத்தைப் பற்றி விசாரிக்க க்ரைம் பிராஞ்ச்சை சேர்ந்த அகிலன் என்பவரை பெங்களூருக்கு அனுப்பி... Continue Reading →

குறித்துவைத்துக் கொல்! – Crime Novel

“பொய் சில நேரம் உண்மைக்குத் தூண்டில் போடும்..” காதல், சினிமா, அரசியல் பற்றிய காரசாரமான கேள்விகளுக்கு பதில் அளித்து பேட்டியை முடித்துவிட்டு வீட்டிற்கு கிளம்ப முயன்ற பிரபல  நடிகை சாருபாலாவின் செல்போன் சிணுங்கியது. அரசியல் ஒரு செப்டிக் டேங்க் எனப் பேட்டியளித்த நடிகை சாருபாலாவை, பெயர் தெரியாத ஒரு அரசியல் கட்சியின் பிரமுகர் போன் செய்து மிரட்டுகிறான். வீட்டில் தன்னுடைய பேட்டியைப் பார்த்து, தனக்கு ஆரத்தி எடுத்து அம்மா வரவேற்பாள் என்று எதிர்பார்த்திருந்த சாருபாலாவிற்கு ஏமாற்றமே மிஞ்சியது.... Continue Reading →

23-வது ஜன்னல் – Crime Novel

“யாருக்கும் தெரியாது என்று நாம் நம்பும் ஒரு விஷயம், நமக்கே தெரியாமல் சில சமயம் வேறொருவருக்கும் தெரிந்திருக்கலாம்..” “கொடுத்து கெடுப்பானுக்கும் கெடுத்து கொடுப்பானுக்கும் நடுவில் பருந்து மூக்கின் எல்லைக்கப்பால் அஞ்சில் ஒன்றின் வழியினிலே இருபத்து ஏழில் இருபத்து மூன்றாவது அதிபதியின் கீழே ஆறடி இருட்டினிலே காண்மின் கோடி கோடி பசும்பொன்... நவ மாணிக்கம்.” ஐஸ்வர்ய பெருமாள் கோவிலில் கிடைத்த புதையல் பற்றிய தாமிரத் தகட்டை நவநீத பட்டர் எடுத்துக் கொடுத்தபோது, ஆர்க்கியாலஜி டிபார்ட்மெண்ட்டில் டைரக்டராக இருந்து ஓய்வு... Continue Reading →

இங்கேதான் இறப்பார்கள் – Crime Novel

“தவறு செய்பவர்கள் தண்டிக்கப்படாமல் நல்லவர்களே எப்போதும் தண்டிக்கப்படுவது காலத்தின் கட்டாயம்..” ஒரு கொலைக் கேஸைப் பற்றி கோகுல்நாத்துடன் பேசிக்கொண்டு வந்த  விவேக், கூவம் பாலத்தின் மேல் ஒரு கும்பல் கூடியிருப்பதைப் பார்த்துவிட்டு தன்னுடைய யமஹாவை ஓரமாக நிறுத்தினான். பாலத்தின் கீழே இருந்தது ஒரு மனிதனின் உயிரற்ற உடல். மிகக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டிருந்த அவனது முகத்தில் எந்த உறுப்புமே இல்லை. தற்கொலை கேஸாக இருக்கும் என்ற கோகுல்நாத், பாடிக்கு அருகே  இருந்து விவேக் எடுத்த தடயத்தைப் பார்த்தவுடன்... Continue Reading →

ஏழாவது அறிவு – Crime Novel

“விசித்திர நிகழ்வுகளும், வினோத மனிதர்களும் இருக்கும் வரை உலகம் ஏதோ ஒரு இடத்தில் பாவங்களையும் குற்றங்களையும் சுமந்து கொண்டு தான் இருக்கும்..” விஷ்ணு ஸ்தலத்திற்கு வந்த பிறகு விவேக்குடன் சேர்ந்து அந்த பயலாஜிகல் மியூசியத்திற்குள் இருவரும் நுழைந்த போது, அங்கு கமிஷனர், மியூசியத்தின் டைரக்டர், ஃபாரன்ஸிக் ஆபீசர்  மற்றும் டாக்டர் ஆகியோர் அரைவட்ட மேசையில் அமர்ந்திருந்தனர். அவர்களின் இறுகிய முகத்தைக் கண்ட விவேக்கிற்கு விசயத்தின் தீவிரம் புரிந்தது. மியூசியத்தின் ஸ்பெசிமேன்ஸ் வைக்கப்படிருந்த அறைக்குள் புதிதாக வைக்கப்பட்டிருந்த ஒரு... Continue Reading →

ஊசி முனையில் ஓர் உயிர் – Crime Novel

“ஊசி முனையில் ஊசலாடிக்கொண்டிருக்கும் ஓர் உயிர்..மருத்துவமும் விஞ்ஞானமும் நம்மைக் காப்பதற்கா..? அழிப்பதற்கா..?” மனித உழைப்பை அதிகரிக்கச் செய்யும் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த சக்சேனாவும் அவருடைய மனைவி வினயாவும் நிருபர்களுக்கு தங்களுடைய ஆராய்ச்சி பற்றிய பேட்டியை முடித்து விட்டு வீட்டிற்கு கிளம்பும் வேளையில், சிபிஐ ஆபிசரை உடன் அழைத்து வந்திருந்த  விக்ரம் அவர்களை மறித்து அவர்களின் ஆராய்ச்சி சட்டவிரோதமானது என சண்டையிடுகிறான். இந்நிலையில் விக்ரம் அவர்கள் மூவரால் கொலை செய்யப்படுகிறான். சக்சேனாவும் வினயாவும் ஆராய்ச்சி செய்வதற்கு தங்களுடைய ஆபிசில் வேலை... Continue Reading →

சிங்கப்பூர் விநாடிகள் – Crime Novel

“ஒரு பொய்யை இன்னொரு பொய்யே வெல்லும்..” பக்கா உமனைசரான அண்ணியின் அண்ணன் முகுந்த், தனக்கு மாப்பிள்ளையாக்க நினைப்பதை விரும்பாத இன்பா, தன் அண்ணனை எதிர்த்து எதுவும் பேச முடியாத நிலை. நிலைமை இவ்வாறிருக்க முகுந்த்தும் அவன் தங்கையும் திட்டமிட்டபடியே இன்பா தங்கியிருக்கும் வீட்டிற்கே வந்து ஒரு வாரம் தங்கி செல்ல வருகிறான் முகுந்த். இதற்கு நடுவில் ஃபேஸ்புக்கில் ஃபிரெண்டாகிப் பின் காதலனாய் மாறி தற்போது சிங்கப்பூரில் வேலை செய்யும் குமரேஷிடம் விசயத்தைத் தெரியப்படுத்துகிறாள், இன்பா. மும்பையில் தோழி... Continue Reading →

ரத்தத்தில் ஒரு ராத்திரி – Crime Novel

“கூடா நட்பு குடும்பத்தையும் கெடுக்கும், உயிரையும் கொல்லும்..” வெளிநாட்டில் இரண்டு வருடக் கல்லூரிப் படிப்பை முடித்து விட்டு, யூனிவர்சிட்டி நண்பன் ஹேமச்சந்திரனுடன் மெட்ராஸ் வருகிறாள், ஸிம்ஹா. விமான நிலையத்தில் தன்னை வரவேற்க அக்கா-அத்தானுடன் வருவாள் என்று எதிர்பார்த்திருந்த ஸிம்ஹாவிற்கு ஏமாற்றமே மிஞ்சியது. கோபத்துடன் தன் அக்கா வீட்டிற்கு சென்ற ஸிம்ஹாவிற்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. அவளுடைய மாமா தயாநிதி ஹார்ட் அட்டாக்கினால் இறந்துவிட்டதை அறிந்த ஸிம்ஹா அது இயற்கையான மரணம் இல்லை என நம்புகிறாள். தயாநிதி இயற்கையாக... Continue Reading →

வினயா ஒரு விடுகதை – Crime Novel

“மாயைகளைத் தோற்றுவிப்பதன் மூலம் உண்மைக்குத் திரை போட முடியாது..” டி.ஜி.பி மார்த்தாண்டத்துடன் விவேக் பார்த்துக்கொண்டிருந்த வீடியோவில் காட்டின் பின்னணியில் இருட்டில் நான்கு பேர் சேர்ந்து ஒரு பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த விபரீதமான சம்பவம் ஓடிக் கொண்டிருந்தது. வீடியோவிலிருந்த பெண்ணை எங்கேயோ பார்த்த ஞாபகம் விவேக்கிற்கு வர அவள் அக்னிபுத்ரி என்பதையும், டிடெக்டிவ் ஏஜென்சியில் வேலை பார்ப்பவள் என்பதையும் நினைவிற்குக் கொண்டு வருகிறான் விவேக். ஆனால், கொலை செய்யப்பட்ட அக்னிபுத்ரி உயிரோடு இருக்கிறாள். கொலை செய்யப்பட்டது அச்சில்... Continue Reading →

காற்று உறங்கும் நேரம் – Crime Novel

"தவறைத் தவறுதலாகத் தவறாக செய்யும் போது அதனால் விளையக் கூடிய நன்மை நீண்டநாள் நீடிக்காது.." இரவு 11.30 மணி.. இன்ஸ்பெக்டர் கோகுல்நாத்திற்கு புரொபசர் நாத்திடமிருந்து போன் வருகிறது. தன்னுடைய வீட்டு மாடியில் யாரோ நடப்பது போன்ற சத்தமும், மாடிக்கு சென்று பார்த்தால் அறை வெறுமையாக இருந்தது என்றும் புரொபசர் நாத் கூற, திகைத்த கோகுல்நாத் விவேக்கையும் கூட்டிக் கொண்டு அந்த ராத்திரி வேளையில் பணிக்கர் பங்களாவிற்கு சென்றபோது ஒரு சத்தமும் கேட்கவில்லை. ஆனால், மறுநாளே புரொபசர் நாத்... Continue Reading →

திக்…திக்…திலகா – Crime Novel

“பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளைக் களையெடுக்க அவதரித்த ஒரு நரசிம்ம அவதாரம் திலகா..” யமுனாவைக் காதலிப்பதாக நடித்து அவளை தவறாக உபயோகப்படுத்தி நீலப்படம் எடுக்க நினைக்கிறான், திவாகர். அவளை ஏமாற்றி ஒரு விளம்பரக் கம்பெனிக்கு அழைத்துச் செல்கிறான். அங்கு வேலை பார்க்கும் சரளா, திவாகருக்கு தெரியாமல் ஒரு கடிதத்தை யமுனாவிடம் கொடுத்து அவளை எச்சரிக்கிறாள். திடீரென்று சரளா கொலை செய்யப்படுகிறாள். இதற்கிடையில் திவாகர் பற்றிய உண்மைகள் யமுனாவிற்கு தெரிய வருகிறது. தன்னுடைய பாதுகாப்புக்காக மனித உரிமைக் கமிஷனிடம்... Continue Reading →

அந்த 69 நாட்கள்! – Crime Novel

“ஆர்வம் ஆசையாக மாறும்போது அதன் விளைவுகள் மோசமானதாக இருக்கும்..” சென்னையிலிருந்து கோவைக்கு வேலை சம்பந்தமாக வந்திருந்த வெங்கட், வழக்கமாய் தங்கும் தன்னுடைய நண்பன் கல்யாண் வீட்டிற்கு சென்ற போது அங்கு அவனைக் காணவில்லை. மேலும், அவனுடைய அறையிலிருந்த ரத்தத்துளிகள் வெங்கட்டையும், கல்யாணின் தங்கை ஆருத்ராவையும் கலக்கமடையச் செய்தது. இதற்கிடையில் கல்யாணின் விசித்திரமான நடவடிக்கையைப் பற்றி அவனுடைய தங்கை கூறியபோது ஏதோ தவறு நேர்ந்திருப்பதை வெங்கட் உணர்ந்தான். அவனுடைய அறையைப் போலீஸ் சோதனை போட்டபோது கிடைத்த டையரியைப் புரட்டியபோது... Continue Reading →

ஒரு நதி..ஒரு பௌர்ணமி..ஒரு பெண் – Crime Novel

“கண்ணெதிரே நடக்கும் தவறுகளைத் தட்டிக் கேட்கத் தயங்கும் கோழைத்தனமே அடுத்தடுத்த தவறுகளின் ஆரம்பப் புள்ளி..” டி.ஜி.பி. மௌரியா விவேக்கின் வீட்டிற்கு வந்த நேரம் விவேக் & விஷ்ணு இருவரும் வாக்கிங் செல்ல புறப்பட்டுக் கொண்டிருந்தனர். விஷயமில்லாமல் அவர் வீட்டிற்கு வரமாட்டார் என்பதை அறிந்திருந்த விவேக்கிடம், ப்ரீப் கேஸின் உள்ளேயிருந்து ஒரு கேஸ் ஃபைலை நீட்டினார் மௌரியா. ஃபைலின் மேல் எழுதப்பட்டிருந்த வார்த்தைகள் இருவரையும் திகைப்படையச் செய்தது. அது, ஒரு நதி.. ஒரு பௌர்ணமி.. ஒரு பெண்.. தலை... Continue Reading →

வெல்டன் விவேக் – Crime Novel

"புத்திசாலிசாலித்தனம் துரோகத்துக்கு துணை போகக் கூடாது. அதேபோல் புத்திசாலி இளைஞர்கள் தீவிரவாதத்திற்கு துணை போகக் கூடாது." விவேக் ஜாக்கிங் போவதற்காக தயாராகிக்கொண்டிருந்த நேரம், ஒரு அதிர்ச்சியான தகவலோடு வந்தான் விஷ்ணு, அவன் கையில் அன்றைய தின பேப்பர். பேப்பரில் மாஜி ஏர்மார்ஷல் மித்ராராய் அகால மரணமடைந்தார் என்ற செய்தி விவேக்கையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அவர் விவேக்கிற்கு நன்கு பரிச்சயமானவர். துக்கம் விசாரிக்க சென்ற இருவருக்கும் காத்திருந்ததோ மேலும் ஒரு அதிர்ச்சி, முழுதாய் உயிரோடிருக்கும் மித்ராராய். ஆனால், அன்றிரவே மினி... Continue Reading →

மேனகாவின் மே மாதம் – Crime Novel

“ஆசை, அதிகாரம், வக்கிரம், துரோகம் சூழ அரங்கேற்றப்படும் பாவங்களுக்கு அன்பு, நட்பு, பரிவு பார்வையாளர்களாக மட்டும் அல்லாமல் கோவம், ரௌத்திரம், வீரம் கொண்டு பழிதீர்க்கும். காத்திரு!!” விடியற்காலையில் வந்த தகவல், ஆக்ஸிடெண்ட்டில் கண்டெடுக்கப்பட்ட 7 பிணங்கள். உயிர் பிழைத்த டிரைவரால் அடையாளம் காணப்பட்ட 6 பிணங்கள். 7-வதாக உள்ள இளம்பெண்ணின் பிணம் வந்த காரணம்..? மேனகா..காதல்..கொலை..வக்கிரம்.. சாதாரண மருந்தகத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்த நர்ஸ் மேனகாவிற்கு அவள் எதிர்பார்த்த பெங்களூர் வேலைக்கான அழைப்பு அவளுக்கு வந்து சேர்ந்தது. புதிய... Continue Reading →

கொஞ்சம் மேகம் கொஞ்சம் நிலவு! – Crime Novel

"கான்வென்ட்டில் படிக்கும் பள்ளிக் குழந்தைகளைக் கடத்தி, அவர்களை கஷ்டப்படுத்தி, அவர்கள் படும் துன்பத்தை அணுஅணுவாக ரசிக்கும் ஒரு சைக்கோவின் கதை.." ஷ்யாம், சாய் என்ற 6 வயது சிறுவனைத் தன்னுடைய கெஸ்ட் ஹவுஸில் அடைத்து வைத்து உணவு ஏதுமின்றி, அவனுடைய உடம்பிலிருந்து ரத்தத்தை சிரிஞ்சில் உறிஞ்சி, அவன் அழுவதைப் பொருட்படுத்தாமல் சிறுவனுடைய கண்ணீர்த் துளிகளை ருசித்து அதை ரசித்துக் கொண்டிருந்தான். ஷ்யாமிற்கு விபா என்ற பெண்ணுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. சாய் என்ற சிறுவன் விபாவின் அப்பாவிற்கு சொந்தமான... Continue Reading →

ராஜேஷ்குமாரின் விவேக், விஷ்ணு, ரூபலா

ராஜேஷ்குமார்.. “க்ரைம் கதைகளின் மன்னன்” என்றழைக்கப்படும் ராஜேஷ்குமார் தமிழில்  1500-ம் மேற்பட்ட க்ரைம் நாவல்களையும், 2000-ம் மேற்பட்ட சிறுகதைகளையும் எழுதியுள்ளார். க்ரைம் கதைகளையே ஏன் அதிகம் எழுதுகிறீர்கள் என்ற கேள்விக்கு, “நமது புராண, இலக்கியங்களில் மண்ணாசைக்கு மகாபாரதம்; பெண்ணாசைக்கு ராமாயணம் இருக்கிறது. இவ்வளவு ஏன் சிலப்பதிகாரம் கூட 50% க்ரைம் சப்ஜெக்ட் தான். இவைகளில் இல்லாத க்ரைமா? சாகாவரம் பெற்றிருக்கும் காவியங்களே க்ரைமை அடிப்படையாய் வைத்து புனையப்பட்டிருக்கும் போது சாமானியன் நான் மட்டும் எழுதினால் அது தவறா?... Continue Reading →

Powered by WordPress.com.

Up ↑