சர்ப்ப வியூகம் – Crime Novel

ஊட்டியில் உள்ள பிரபல தொழில் அதிபரான உமாபதி தன்னுடைய ஒரே மகளான துர்காவிற்கு வரன் தேடுகிறார். ஆனால் துர்காவும் வல்லப்பும் ஒருவரையொருவர் விரும்புகின்றனர். வீட்டில் அப்பாவிடம் திருமணத்திற்கு சம்மதம் வாங்குகிறாள் துர்கா. இந்நிலையில் எல்லாமே பொருந்திவர ஜாதகத்தில் வல்லப்பிற்கு களத்திர தோஷம் இருப்பது தெரிய வருகிறது. அதாவது திருமணமான ஆறே மாதத்தில் வல்லப்பின் உயிருக்கு கெடு வைக்கிறார் துர்காவின் குடும்ப ஜோசியர் மாதையா. பிடிவாதமாக இருந்த துர்கா வல்லப்பை திருமணம் செய்து கொள்கிறாள். யாரும் எதிர்பாராத வகையில்... Continue Reading →

இனி இல்லை இலையுதிர்காலம்..! – Crime Novel

இரண்டு கிட்னியும் செயலிழந்த நிலையில் வாழ்வின் கடைசி நாட்களை எண்ணிக்கொண்டிருந்தார் நஞ்சுண்டேஸ்வரன். தான் வாழ்வில் முன்னேற காரணமாக இருந்த மாமா நஞ்சுண்டேஸ்வரனைக் காப்பாற்ற விபரீத முடிவை எடுக்கிறார் ஷிவ்ராஜ். தன்னுடைய புட் ப்ராடக்ட்ஸ் கம்பெனிக்கு ஆட்களை இன்டர்வியூ செய்வது போல் நடித்து மாமாவிற்குப் பொருந்தக்கூடிய கிட்னியை எடுக்க ஆரோக்கியமான நபரைத் தேடுகிறார்கள் ஷிவ்ராஜும் அவருடைய மூத்த மகனான விஷ்வாவும். அந்த லிஸ்டில் இன்டர்வியூவிற்கு வருகிறாள் ஜனனி. ஜனனி – ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த, வேலை தேடிக்கொண்டிருக்கும் பெண்.... Continue Reading →

ஆல்பிரெட் ஹிட்ச்காக்கின் – மர்மக்கதைகள்

ஒவ்வொரு நாவல்களும் (அ) கதைகளும் வாசிப்பவர்களை கனவுலகுக்கு அழைத்துச் செல்லும். அவற்றில் சில எதார்த்தமாகவும், சில அசாத்தியமாகவும், சில சிந்திக்கவும் வைக்கும். இதன் வரிசையில் வெகுசில கதைகளே நம்மை திகிலூட்டும். அதுபோன்ற ஒரு கதைத் தொகுப்பே “ஆல்பிரெட் ஹிட்ச்காக்கின் – மர்மக்கதைகள்”. ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு ரகம். மொத்தம் 11 கதைகள். எல்லாக் கதைகளிலும் ஏதோ ஒரு சாமானிய விஷயமே உங்களை அச்சுறுத்தும், புதிர் போடும், திகிலாக்கும். உதாரணத்திற்கு ஒரு துண்டு பேப்பர், இரண்டு கதவுகள், சிறு... Continue Reading →

நந்தி ரகசியம்

கோவிந்தராஜ உடையார் இறப்பதற்கு முன் அவருடைய மொத்த சொத்துக்களையும் தன்பேரில் எழுதி வாங்கிக்கொண்டாள் சிந்தாமணி. கோவிந்தராஜ உடையாரிடம் ஒண்டிப்பிழைக்க வந்த சிந்தாமணி, உடையாரின் மனைவி திரௌபதியையும் புத்தி சுவாதீனமில்லாத மகன் வேலப்பனையும் விரட்டிவிட்டாள். பரம்பரை சொத்தான பொட்டல் காட்டை மட்டும் திரௌபதியின் பேரில் எழுதிவிட்டாள் சிந்தாமணி. நடப்பது எதையும் கண்டும் காணாமல் இருந்த ஊர்மக்களால், திரௌபதியையும் வேலப்பனையும் பார்த்துப் பரிதாபப்பட மட்டுமே முடிந்தது. கருநாகங்கள் மட்டுமே வசிக்கும் அந்தப் பொட்டல்வெளியில் இருந்தது ஒரு சிவன் கோவில். இடிந்த... Continue Reading →

ஊச்சு..

பயம் மனித உணர்வுகளில் ஒன்று. அட்ரீனலினும், என்டோகிரைனும் ரத்தத்தில் கலந்து உடல் முழுவதும் பயம் பரவும். இருந்தாலும் திகிலடைவதும், பயமுறுவதும் ரசிக்கத்தக்கதாக மாறிவருகிறது. இரவு 8:30. மேல்பாறை வனப்பகுதியில் நடக்கும் திருவிழாவினை ஆவணப்படம் எடுக்கச் செல்கின்ற நால்வர், தங்கள் திட்டத்திலேயே இல்லாத சில சம்பவங்களை எதிர்கொள்கின்றனர். அமாவாசை இருளில் தொலைந்து போகின்றனர். அர்ஜூன்-காவல்துறை அதிகாரி. தனது விசாரணையை மேல்பாறை மக்களிடம் இருந்து தொடங்கினான். "முனி அடித்திருக்கும்" "ஓநாய் கொன்றிருக்கும்" என பல கதைகள் அவனின் தைரியத்தை உலுக்கிப்... Continue Reading →

மரகத லிங்கம்

https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); மரகத லிங்கம் ஒரு காலத்தில் சிவன்குடியின் செழிப்பிற்கும் வனப்பிற்கும் காரணமாக இருந்தது. உச்சிப் பொழுதில் மரகத லிங்கத்தைப் பார்க்கும் போது மனித மனதின் குறைகள் அனைத்தும் தீரும் என்பது அந்த ஊரின் ஐதீகமாக இருந்தது. இவ்வளவு பெருமை வாய்ந்த லிங்கம் ஒருநாள் திடீரென களவு போனது. அந்நாளில் இருந்து சிவன்குடி பொலிவிழந்து கலையிழந்து தன் மக்களையும் இழந்தது. பல வருடங்களுக்குப் பிறகு இன்று அந்தப் பழம்பெருமை வாய்ந்த பாழடைந்த... Continue Reading →

வாயுபுத்ரர் வாக்கு

பிரகஸ்பதி.. தன் நண்பன் உயிரோடு கிடைத்த சந்தோஷத்தை விட, ஐந்து வருடங்களாக மறைந்து வாழ வேண்டிய அவசியம் என்ன? என்ற கேள்வி சிவனைத் துளைத்தெடுக்கிறது. மேலும் பஞ்சவடியில் தங்களைக் கொல்வதற்கு எதிரிகளான சக்ரவர்த்தி தக்ஷரும், அயோத்தி அரசர் திலீபரும் கைகோர்த்திருப்பது அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால், இந்த சதி திட்டத்திற்குப் பின்னால் அவர்கள் இருவரையும் ஆட்டிவைக்கும் ஒரு சூத்திரதாரி இருப்பதை சிவன் உணர்ந்தார். ஒரு யுகத்தின் மிகப்பெரிய நன்மையே(சோமரசம்) தீமையாக மாறும் என்பதை அறிந்த சிவனுக்கு... Continue Reading →

Powered by WordPress.com.

Up ↑