இந்திய விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்ட "அக்னி புத்திரன்" என்ற ராக்கெட்டை எதிரிகள் கடத்திச் செல்கின்றனர். ராக்கெட்டை மீட்பதற்காக எக்ஸ் ஏஜென்ட் விக்ரமை தொடர்புகொள்கிறது உளவுத்துறை. தன் புது மனைவி மீராவுடன் தேனிலவைக் கொண்டாடிக் கொண்டிருந்த விக்ரம் உளவுத்துறைக்கு உதவ மறுக்கிறான். அதற்குள் விக்ரமின் இருப்பிடத்தைத் தெரிந்துகொண்ட வில்லன் சுகிர்தராஜா, விக்ரமைக் கொலை செய்வதற்கு ஆட்களை ஏவி விடுகிறான். எதிர்பாராத விதமாக கொலைகாரன் விக்ரமிற்கு பதிலாக அவன் மனைவி மீராவை குறி தவறி சுட்டுவிடுகிறான். மீராவைக் கொன்றவர்களைப் பழிவாங்குவதற்காக களத்தில்... Continue Reading →
என் இனிய இயந்திரா..
இயற்கை விதிகள்.. மிகவும் துல்லியமான, சக்திமிகுந்த, கடவுளின் கோட்பாடுகள். அவை ஏற்கனவே பல மடங்கு மேம்பாடடைந்து அண்டத்தை இயக்குகிறது. இதில் அறிவியல் விதிகள் இயற்கையின் சொற்ப விந்தைகளை புரிந்துகொள்ளும் அளவே வளர்ந்திருக்கிறது. அதிலும் மனிதனின் கோட்பாடுகளைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட ஒரு compact edition-தான் இந்த modern technology. 2020.. ரோபோக்களும் மனிதர்களும் இணைந்து வாழும் ஒரு புது யுகத்தின் தொடக்கம். நிலா எனும் ஒரு அழகிய பெண்ணும், ஜீனோ எனும் ஒரு இயந்திர நாயும், இவர்களுடன் மனிதனும்... Continue Reading →
பேசும் பொம்மைகள்
இன்றைய காலக்கட்டத்தில் எவ்வளவோ தொழில்நுட்பம். அதில் ஆக்கபூர்வமானதும் உள்ளது. அழிக்கக்கூடியதும் உள்ளது. ஆனால், எவ்வளவு தொழில்நுட்பம் வளர்ந்தாலும் தொட முடியாத எல்லைகளும் இருக்கத்தான் செய்கிறது. சமீபத்தில் elon musk வெளியிட்ட ‘neuralink’ மாதிரியான தொழில்நுட்பங்கள் செல்போன்களுக்கு ஒருபடி மேலே சென்று நம் எண்ணங்களையும் எட்டிப் பார்க்கப் போகிறது. சென்ற நூற்றாண்டில் வல்லரசுகள் ஒரு புது யோசனையை முன்னிறுத்தி ஒரு செயல்முறையை அறிமுகப்படுத்தினார்கள். அதுவே ‘downloading’. மனித நினைவுகளை கணினி மூலமாக பதிவு செய்யக்கூடிய ஒரு தொழில்நுட்பம். இதை... Continue Reading →
வாய்மையே சில சமயம் வெல்லும்
ஸ்கூல் பிக்னிக் சென்றிருந்த சித்ராவிடம் அவளது அப்பாவின் உடல்நிலை மோசமாக இருப்பதாக பொய்சொல்லி, உதவி செய்வது போல் தன்னுடைய காரில் அழைத்துச் சென்று மானபங்கப்படுத்தி போட்டோ எடுக்கிறான் சகல விதமான கெட்டப்பழக்கங்களும் உள்ள வினோத். சித்ராவைக் காப்பாற்றி அழைத்துச் செல்ல வருகிறார், சித்ராவின் வீட்டு மாடியில் தங்கியிருக்கும், அவளை ஒருதலையாக காதலிக்கும் விஜயகுமார். இதற்கிடையே மாதர் சங்கத்தைச் சேர்ந்த நித்யாவிற்கு சித்ரா பற்றி தெரியவர, தான் வினோத்திற்கு தண்டனை வாங்கித்தருவதாக கூற, கடைசியில் விஷயம் பேப்பரில் வெளிவருகிறது.... Continue Reading →
கொலையுதிர் காலம்
கணேஷிற்கும் வசந்திற்கும் குழப்பம் மேலோங்கியிருந்தது. வியாசன் வீட்டில் அரங்கேறிய சம்பவங்கள், கொலைகள், கிடைத்த வெற்றுத் தடயங்கள், கணேஷின் தலைக்குள் சில கேள்விகளை உசுப்பியது. “இவ்வளவும் யார்? எதற்காக செய்கிறார்கள்? 4000 ஹெக்ட்டர் பரப்பு கொண்ட 1 கோடி ரூபாய் (1981-ல்) சொத்துக்காகவா? அல்லது வியாசர்களால் கொல்லப்பட்ட புத்திரவதியின் பழி பிசாசின் லீலையா?” “விஞ்ஞானமா? பைசாசமா?” சில காரியங்களை உங்களுக்கு சொல்கிறேன்...காரணங்களை கண்டுபிடிக்க முடியுதான்னு முயற்சி பண்ணுங்க. நீங்களா இருந்தா உங்க அடுத்த நடவடிக்கை என்னவா இருக்கும்? குமாரவியாசன்,... Continue Reading →
நில்..கவனி..தாக்கு
ஒரு புத்தகத்தை எடுத்தோம், படித்தோம், முடித்தோம் என்றில்லாமல் சுவைத்தோம், லயித்தோம், பெற்றோம் அறிவை என இருப்பது பயன். சுஜாதாவின் எழுத்தில் உருவானவன் நான். நான் யார், யாராகவோ இருக்கலாம். அவற்றில் அவரின் கதாப்பாத்திரங்களில் கதாநாயகன் இக்கதையில்.. கதைத் தலையில் பிக்கப், ட்ராப் செய்யும் பணிக்கு வந்திருக்கும் சொல்லப்படாத மத்திய அரசுத் துறையின் அதிகார ஆசாமி. முதலிலேயே என்னைப் பார்த்து கண் போன்ற கடமையை நழுவவிட்டுவிட்டேன். விட்ட இடத்திலிருந்து செல்ல சில அத்தியாயங்கள் சுவாரஸ்யமானதாக, மசாலா, ஹவாலா, சவாலா... Continue Reading →
ஜீனோம்
“மனித உடல் கட்டிடம்..அறைகள் அதன் செல்கள்..அலமாரி ஒரு செல்லின் உட்கரு..அதில் உள்ள புத்தகம் DNA..ஒவ்வொரு புத்தகமும் 46 பக்கங்களைக் கொண்டுள்ளது. அதில்(ஜீனோம்) உள்ளது ஜீவரகசியம்”. “ஆரம்பக் குறிப்பு : இந்த அத்தியாயத்தைக் கஷ்டப்பட்டு புரிந்து கொண்டுவிட்டீர்கள் என்றால் இனி வரப்போகும் அதிசயங்களை வியப்பது சுலபமாகி விடும்”. -ஜீனோம் புத்தகத்திலிருந்து.. ஜீனோம்.. லைட் போட்ட உடனே ஓடி மறைகிற கரப்பான்பூச்சியும் நீங்களும் ஒரே மாதிரியான மூலப் பொருளிலிருந்து வந்தவங்க தான்னு சொன்னா உங்களால ஏத்துக்க முடியுமா? தி... Continue Reading →