திண்டுக்கல் புத்தகக் கண்காட்சி 2019

திண்டுக்கல் இலக்கியக் களம் நடத்தும் 8-வது புத்தகக் கண்காட்சி திண்டுக்கல்லில் உள்ள டட்லி பள்ளி மைதானத்தில் 28/11/2019 அன்று தொடங்கி 08/12/2019 வரை மொத்தம் 11 நாட்கள் நடைபெற உள்ளது. 7 வருடங்களாக சிறப்பாக நடந்து முடிந்த புத்தக சங்கமம் இவ்வருடம் கோலாகலமாகவும் புதிய சிறப்பம்சங்களுடனும் அரங்கேற உள்ளது. தவறாமல் சென்று பயன்பெறுங்கள்..! #one minute one book #tamil #book #review #dindigul #book fair #2019

ஆம்பூர் புத்தகத் திருவிழா 2019

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் பாரதி புத்தகாலயம் இணைந்து நடத்தும் ஆம்பூர் புத்தகத் திருவிழா 17/11/2019 அன்று தொடங்கி 27/11/2019 வரை மொத்தம் 11 நாட்களுக்கு, ஆம்பூர் ரயில் நிலையம் எதிரில் உள்ள சரோஜா பிரகாசம் மஹாலில் கோலாகலமாக நடைபெற உள்ளது. அனைவரும் வருக..! அனுமதி இலவசம்..!! way to ambur book festival 2019 #one minute one book #tamil #book #review #ambur #book festival #2019

ராஜபாளையம் புத்தகக் கண்காட்சி 2019

ராஜபாளையத்திலுள்ள காந்தி கலை மண்டபத்தில் 01/11/2019 அன்று தொடங்கும் புத்தகக் கண்காட்சி 17/11/2019 வரை மொத்தம் 17 நாட்களுக்கு நடைபெற உள்ளது. ராஜபாளையத்தில் மீனாட்சி புத்தக நிலையம் மற்றும் இந்து தமிழ் திசை நாளிதழ் இணைந்து நடத்தும் இப்புத்தகத் திருவிழாவில் 10% தள்ளுபடியில் புத்தகங்களை அள்ளிச் செல்லலாம். அனுமதி இலவசம்..! அனைவரும் வாரீர்..!! மேலும் தகவலுக்கு: 94432 62763 way to rajapalayam book exhibition 2019 #one minute one book #tamil #book #review... Continue Reading →

கடலூர் புத்தகத் திருவிழா 2019

கடலூர் டவுன் ஹாலில் 14/10/2019 அன்று தொடங்கிய புத்தகத் திருவிழா 21/10/2019 வரை நாள்தோறும் மொத்தம் 8 நாட்களுக்கு நடைபெற உள்ளது. குழந்தைகளுக்காக ஒரு லட்சம் தலைப்பிலான புத்தகங்கள் இங்கே காட்சிப்படுத்தப்பட உள்ளன. குழந்தைகளிடையே வாசிப்பை ஊக்கப்படுத்தும் விதமாக நடைபெற உள்ள குழந்தைகளுக்கான புத்தகத் திருவிழாவிற்கு உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். way to cuddalore book festival 2019 #one minute one book #tamil #book #review #cuddalore #book festival #2019

திருவண்ணாமலை புத்தகக் கண்காட்சி 2019

திருவண்ணாமலை வேங்கிகால் ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபத்தில் 11/10/2019 அன்று தொடங்கிய புத்தகக் கண்காட்சி 20/10/2019 வரை நாள்தோறும் மொத்தம் 10 நாட்களுக்கு நடைபெற உள்ளது. திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம், பள்ளிக் கல்வித்துறை மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் முன்னின்று நடத்தும் மூன்றாம் ஆண்டு புத்தகக் கண்காட்சிக்கு உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். way to tiruvannamalai book exhibition 2019 #one minute one book #tamil #book #review #tiruvannamalai #book exhibition #2019

சுரண்டை புத்தகக் கண்காட்சி 2019

சுரண்டை காமராஜர் வணிக வளாகத்தில் 11/10/2019 அன்று தொடங்கிய புத்தகக் கண்காட்சி 20/10/2019 வரை மொத்தம் 10 நாட்களுக்கு நடைபெற உள்ளது. காலை 10 மணிக்கு தொடங்கும் பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள் மாலை 4 மணி வரையும், மாலை 5 மணிக்கு தொடங்கும் இலக்கியக் கூட்டங்கள் இரவு 8 மணி வரையும், மேலும் மாணவர்களுக்கான கலை நிகழ்ச்சிகளும் கோலாகலமாக நடைபெற உள்ளன. மாணவ, மாணவிகள் மற்றும் குடும்பத்தாரையும் இப்புத்தகத் திருவிழாவிற்கு அன்புடன் அழைக்கிறோம். வருக! பயன்பெருக!! way... Continue Reading →

சிவகங்கை புத்தகக் கண்காட்சி 2019

சிவகங்கை பேருந்து நிலையம் அருகிலுள்ள சபரி மஹாலில் 25/09/2019 அன்று தொடங்கும் புத்தகக் கண்காட்சி 06/10/2019 வரை மொத்தம் 12 நாட்களுக்கு 10% தள்ளுபடியில் நடைபெற உள்ளது. வாசகர்களாகிய உங்கள் வாசிப்புக்கு விருந்தளிக்க வரும் சிவகங்கை புத்தகக் கண்காட்சிக்கு உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம். #one minute one book #tamil #book #sivagangai #book fair #2019

திருச்சி புத்தகக் கண்காட்சி 2019

திருச்சி தில்லை நகரில் உள்ள மக்கள் மன்றம் மைதானத்தில், 5,00,000 புத்தகங்கள் மற்றும் 60 அரங்குகளுடன் 14/09/2019 தொடங்கும் புத்தகக் கண்காட்சி 23/09/2019 வரை மொத்தம் 10 நாட்கள் நாள்தோறும் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெற உள்ளது. ரோட்டரி கிளப் மற்றும் லேண்ட்மார்க் எக்ஸ்போ இணைந்து நடத்தும் திருச்சி புத்தகக் கண்காட்சி, வெற்றிகரமான 4-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் புத்தகக் கண்காட்சிக்கு வாசிப்பாளர்களாகிய உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். 10%... Continue Reading →

காரைக்குடி புத்தகக் கண்காட்சி 2019

காரைக்குடி கம்பன் மணி மண்டபத்தில் 13/09/2019 அன்று தொடங்கிய புத்தகக் கண்காட்சி 22/09/2019 வரை மொத்தம் 10 நாட்களுக்கு 10% தள்ளுபடியில் நாள்தோறும் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெற உள்ளது. வாசிப்பை நேசிக்கும் உங்கள் அனைவரையும் காரைக்குடி புத்தகக் கண்காட்சிக்கு அன்புடன் அழைக்கிறோம். #one minute one book #tamil #book #karaikudi #book fair #2019

ஈரோடு புத்தகத் திருவிழா 2019

‘ஈரோடு’ அப்படின்னு சொன்னவுடனே முதல்ல உங்களுக்கு ஞாபகம் வர விஷயம் மஞ்சள் தான். அப்படிப்பட்ட மஞ்சள் மாநகரத்துக்கு இன்னொரு சிறப்பும் இருக்கு. அதுதான் மக்கள் சிந்தனைப் பேரவை நடத்தும் புத்தகத் திருவிழா. இந்து தமிழ் திசை நாளிதழிலிருந்து ஈரோடு புத்தகத் திருவிழா.. தமிழ்நாட்டுலயே சென்னைக்கு நிகரா நம்ம ஈரோடு புத்தகத் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததா இருக்கு. இதுக்கு முக்கியக் காரணம் வாசகர்களாகிய உங்களுடைய புத்தக வாசிப்பு இன்னும் நீடிச்சு இருக்கறது தான். ஈரோட்டுல நடக்கற தவிர்க்க... Continue Reading →

Blog at WordPress.com.

Up ↑