ஜப்பானில் தொழிற்பயிற்சியை முடித்துக்கொண்டு இந்தியா திரும்பிய கீர்த்தியுடன் திடீர் திருப்பமாக நிறைமாத கர்ப்பிணியான காதரினா வந்திறங்க, அண்ணன் லீலாகிருஷ்ணன் திடுக்கிடுகிறான். இந்நிலையில் அண்ணன் லீலாகிருஷ்ணனைப் பற்றிய ஒரு மொட்டை கடுதாசி தம்பியிடம் சிக்குகிறது. லாபத்தில் போய்க்கொண்டிருந்த கம்பெனி திடீரென நஷ்டத்தில் ஓடுவதாக கீர்த்திக்கு கணக்கு காண்பிக்கப்படுகிறது. உண்மையைக் கண்டுபிடித்த கீர்த்தி அவன் அண்ணனிடம் சண்டை போடுகிறான். மொத்த சொத்தையும் அபகரிக்கத் திட்டம் போட்ட லீலாகிருஷ்ணனும் அவன் மனைவியும் கீர்த்தியைத் தீர்த்துக்கட்ட முடிவு செய்கின்றனர். காதரினாவுடன் கீர்த்தி கிளம்பிய... Continue Reading →