இதுவரை எத்தனை சீரியல்களில் அவர் கேரக்டர் கொல்லப்பட்டது என்பது கோவிந்தராஜிற்கே தெரியாது. குறைந்தது 15 சீரியல்களிலாவது அவர் இறந்திருப்பார். இந்த சீரியலிலும் கோவிந்தராஜ் சாவதற்கு தேதி குறித்து விட்டார்கள். ஆம்...இளவயதில் கிடைத்த டாக்டர், வக்கீல், போலீஸ் என்று நடித்துக்கொண்டிருந்த வேஷங்கள் எல்லாம் இப்போது அவரை விட்டு தூர சென்று விட்டிருந்தன. இப்போதெல்லாம் அவருக்கு அப்பா வேடங்கள் மட்டுமே வருகின்றன. காலத்திற்கேற்ப கோவிந்தராஜின் சீரியல் வேடங்களும் வேகமாக மாறிவந்தன. இதைக் கூட ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், “மரணம்..” அனைவருக்கும் சகிக்க... Continue Reading →