#5 மூளைக்கு வேலை

மகிழினி வீட்டில் இருந்து புறப்பட்டு, கிழக்கு நோக்கி நடந்து சென்று, முதலாவது சந்தியில் இடதுபக்கம் திரும்பி நடந்து, இரண்டாம் சந்தியில் மீண்டும் இடதுபக்கம் திரும்பி நடந்து, ரதியின் வீட்டை நெருங்கிய போது, வீட்டு முற்றத்திலிருந்து நிலா என்னைப் பார்த்துக்கொண்டிருந்தாள். நிலா எந்தத் திசை நோக்கி நிற்கிறாள்?45 என்ற எண்ணை நான்கு பகுதிகளாகப் பிரித்துக்கொள்க. முதற்பகுதியில் 2-ஐக் கூட்டுக. இரண்டாவது பகுதியில் 2-ஐக் கழிக்க. மூன்றாவது பகுதியில் 2-ஆல் பெருக்குக. நான்காவது பகுதியை 2-ஆல் வகுக்க. இவ்வாறு செய்தால்... Continue Reading →

#3 மூளைக்கு வேலை!!

10 மீட்டர் உயரமான ஒரு சுவரில் ஒரு நத்தை ஏறுகிறது. ஒரு நாளைக்கு 3 மீட்டர் ஏறினால், 2 மீட்டர் சறுக்கிக் கீழிறங்குகிறது. அது சுவரின் உச்சியை அடைய எத்தனை நாள் செல்லும்? சென்னை மாநகரத்திலே திருவாளர் கவுண்டமணி ஆறு அறைகள் கொண்ட ஒரு வீடு கட்டி, அந்த ஆறு அறைகளையும் ஒவ்வொரு குடும்பத்திற்கு வாடகைக்கு விட்டிருக்கிறார். முதல் மாதம் ஒவ்வொரு குடும்பத்திடமும் ரூபா 10 வீதம் மொத்தம் 60 ரூபா வாடகையாக வாங்கிவிட்டார். தனது வீட்டிற்குத்... Continue Reading →

#2 மூளைக்கு வேலை (IQ)

ராஜேஷ் கடற்கரை வழியே சென்று கொண்டிருந்தான். அவனின் வலது பக்கத்தில் சூரியன் மறைந்து கொண்டிருந்தது. ராஜேஷ் எத்திசையை நோக்கிச் சென்றான்?எலியிடமிருந்து எடுத்த வைரஸ் கிருமியை நீர் நிரம்பிய ஒரு கிளாஸில் போட்டால், வினாடிக்கு விநாடி இரு மடங்காகும். ஒன்று இரண்டாகி, இரண்டு நான்காகி அப்படியே அதிகரிக்கும். கிளாஸ் மொத்தமாக வைரஸ் கிருமியால் நிரப்புவதற்கு முப்பது வினாடிகள் ஆனது என்றால், அந்த கிளாஸின் அரைப்பங்கு நிரம்ப எவ்வளவு நேரம் ஆகும்?இராமனுக்குச் சீதை என்றிருந்தபோது, அரிச்சந்திரனுக்குச் சந்திரமதி இருந்தாள். சந்திரமதிக்குச்... Continue Reading →

#1 மூளைக்கு வேலை..

வயசென்ன? 1) எப்பவும் பள்ளிக்கு சீக்கிரமா வர்ற மாலு அன்னிக்கு லேட்டா வந்தாள். “ஏன் லேட்டா வந்தே?”னு ஃப்ரண்ட்ஸ் கேட்டதற்கு, “தம்பி அழுதுகொண்டு இருந்தான். அம்மா வர்றவரை அவனை சமாளிச்சுட்டு வர லேட்டாயிடுச்சு” என்றாள். ஃப்ரண்ட்ஸ் எல்லோரும் “உனக்கு தம்பி இருக்கிறதைச் சொல்லவே இல்லையே...என்ன வயசு உன் தம்பிக்கு?” என்றனர். “என் தம்பியின் வயசால் என் வயசைப் பெருக்கினாலும் வகுத்தாலும் ஒரே விடைதான் வரும். என் தம்பி வயசைக் கண்டுபிடித்துக் கொள்ளுங்கள்” என்றாள்! கண்டுபிடிச்சிட்டீங்களா? 2) இதுவும்... Continue Reading →

Blog at WordPress.com.

Up ↑