புதுச்சேரி புத்தகத் திருவிழா 2019

புதுச்சேரி எழுத்தாளர்கள் புத்தகச் சங்கம் நடத்தும் 23-வது தேசிய புத்தகத் திருவிழா 20/12/2019 அன்று தொடங்கி 29/12/2019 வரை மொத்த 10 நாட்களுக்கு புதுச்சேரி வள்ளலார் சாலையிலுள்ள வேல் சொக்கநாதன் திருமண நிலையத்தில் நடைபெற உள்ளது. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தலைப்புகளில் பல்வேறு மொழிகளில் புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. 10% தள்ளுப்படியுடன் அதிக புத்தகங்களை வாங்கும் வாசகர்களுக்கு புத்தக விரும்பி, புத்தக ராஜா, புத்தக ராணி, புத்தக மகாராஜா, புத்தக மகாராணி ஆகிய விருதுகளும் மற்றும் எழுத்தாளர்களுக்கும்... Continue Reading →

வேலூர் புத்தகக் கண்காட்சி 2019

தமிழ்நாடு புத்தக விற்பனையாளர்கள் சங்கம், வேலூர் லயன்ஸ் கிளப் மற்றும் தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் இணைந்து நடத்தும் வேலூர் புத்தகக் கண்காட்சி 13/12/2019 அன்று தொடங்கி 25/12/2019 வரை மொத்தம் 13 நாட்களுக்கு வேலூர் எத்திராஜம்மாள் பாலசுந்தர முதலியார் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. 5,000 தலைப்புகளில், 5,00,000 புத்தகங்கள் வரை உங்கள் வருகைக்காகக் காத்திருக்கின்றன. வாருங்கள்! அள்ளிச் செல்லுங்கள்!! way to vellore book fair 2019 #one minute... Continue Reading →

திண்டுக்கல் புத்தகக் கண்காட்சி 2019

திண்டுக்கல் இலக்கியக் களம் நடத்தும் 8-வது புத்தகக் கண்காட்சி திண்டுக்கல்லில் உள்ள டட்லி பள்ளி மைதானத்தில் 28/11/2019 அன்று தொடங்கி 08/12/2019 வரை மொத்தம் 11 நாட்கள் நடைபெற உள்ளது. 7 வருடங்களாக சிறப்பாக நடந்து முடிந்த புத்தக சங்கமம் இவ்வருடம் கோலாகலமாகவும் புதிய சிறப்பம்சங்களுடனும் அரங்கேற உள்ளது. தவறாமல் சென்று பயன்பெறுங்கள்..! #one minute one book #tamil #book #review #dindigul #book fair #2019

சிவகங்கை புத்தகக் கண்காட்சி 2019

சிவகங்கை பேருந்து நிலையம் அருகிலுள்ள சபரி மஹாலில் 25/09/2019 அன்று தொடங்கும் புத்தகக் கண்காட்சி 06/10/2019 வரை மொத்தம் 12 நாட்களுக்கு 10% தள்ளுபடியில் நடைபெற உள்ளது. வாசகர்களாகிய உங்கள் வாசிப்புக்கு விருந்தளிக்க வரும் சிவகங்கை புத்தகக் கண்காட்சிக்கு உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம். #one minute one book #tamil #book #sivagangai #book fair #2019

திருச்சி புத்தகக் கண்காட்சி 2019

திருச்சி தில்லை நகரில் உள்ள மக்கள் மன்றம் மைதானத்தில், 5,00,000 புத்தகங்கள் மற்றும் 60 அரங்குகளுடன் 14/09/2019 தொடங்கும் புத்தகக் கண்காட்சி 23/09/2019 வரை மொத்தம் 10 நாட்கள் நாள்தோறும் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெற உள்ளது. ரோட்டரி கிளப் மற்றும் லேண்ட்மார்க் எக்ஸ்போ இணைந்து நடத்தும் திருச்சி புத்தகக் கண்காட்சி, வெற்றிகரமான 4-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் புத்தகக் கண்காட்சிக்கு வாசிப்பாளர்களாகிய உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். 10%... Continue Reading →

காரைக்குடி புத்தகக் கண்காட்சி 2019

காரைக்குடி கம்பன் மணி மண்டபத்தில் 13/09/2019 அன்று தொடங்கிய புத்தகக் கண்காட்சி 22/09/2019 வரை மொத்தம் 10 நாட்களுக்கு 10% தள்ளுபடியில் நாள்தோறும் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெற உள்ளது. வாசிப்பை நேசிக்கும் உங்கள் அனைவரையும் காரைக்குடி புத்தகக் கண்காட்சிக்கு அன்புடன் அழைக்கிறோம். #one minute one book #tamil #book #karaikudi #book fair #2019

Blog at WordPress.com.

Up ↑