#24 கேள்விகள் பல! பதில் ஒன்று!!

இந்த நாட்டின் மொத்தப் பரப்பில் 11% பனியால் சூழப்பட்டிருக்கும்.இந்த நாட்டின் தலைநகர் ரெக்யவிக்.இது எரிமலைகளின் நாடு என்றழைக்கப்படுகிறது. 200 எரிமலைகள் உள்ளன. மேலும் வெந்நீர் ஊற்றுகள் அதிகம்.நோர்டிக்(Nordic) நாடுகள் என்றழைக்கப்படும் நாடுகளில் ஒன்று.வட ஐரோப்பாவிலுள்ள ஒரு தீவு நாடு.ஆர்டிக் நரி, பனி மான், பஃபின் பறவை, கம்பளி ஆடு, திமிங்கிலம் போன்றவை இந்த நாட்டின் முக்கியமான உயிரினங்கள்.இந்த நாட்டில் இலவசமாக கல்வி வழங்கப்படுகிறது.இந்த நாட்டு தேசியக் கொடியில் உள்ள சிவப்பு எரிமலையையும், வெள்ளை பனியையும், நீலம் கடலையும்... Continue Reading →

#23 கேள்விகள் பல! பதில் ஒன்று!!

இந்த நாட்டின் தலைநகர் மஸ்கட்.இதன் அண்டை நாடுகள் பெட்ரோலியத்தை முக்கிய ஏற்றுமதியாகக் கொண்டிருந்தாலும் இந்த நாட்டின் முக்கிய ஏற்றுமதி மீன்கள், பேரீட்சை மற்றும் உலோகங்கள்.இந்த நாட்டில் வருமானவரி இல்லை.இந்தியா, பாகிஸ்தான் மற்றும் இலங்கை நாடுகளைச் சேர்ந்தவர்கள் இந்த நாட்டில் அதிகமாக வாழ்கின்றனர்.குற்றச் செயல்கள் மிகக் குறைவாக நடைபெறும் நாடு.குறுக்காக வைக்கப்பட்ட கத்திகள் இந்த நாட்டின் சின்னம்.தலைசிறந்த கப்பல் கட்டுமான நிபுணர்கள் இந்த நாட்டைச் சேர்ந்தவர்கள்.அரேபியத் தீபகற்பத்தின் தென் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள நாடு.1970 ஜூலை 23 அன்று... Continue Reading →

#22 கேள்விகள் பல! பதில் ஒன்று!!

இந்த நாடு 1971-ஆம் ஆண்டு விடுதலை பெற்றது.உலகிலேயே நான்காவது எண்ணெய் வளம் மிக்க நாடு.ஏழு அமீரகங்களைக் கொண்ட நாடு.அவற்றில் அதிக மக்கள் தொகை உள்ள நாடு துபாய்.இந்த நாட்டில் ஒட்டகச் சவாரி பிரபலம்.இந்நாட்டின் தலைநகர் அபுதாபி, இரண்டாவது பெரிய நகரமும் இதுவே.முக்கிய விளைபொருள் பேரீட்சை.அரபிக், பாரசீகம், ஆங்கிலம், இந்தி மற்றும் உருது போன்ற மொழிகள் இந்த நாட்டில் பேசப்படுகின்றன.பாரசீக வளைகுடாவில் அரேபியத் தீபகற்பத்தில் அமைந்துள்ள நாடு இது.இந்த நாடு ஓமனுக்கும் சவுதிக்கும் இடையே அமைந்துள்ளது. இந்தப் பத்து... Continue Reading →

#21 கேள்விகள் பல! பதில் ஒன்று!!

இந்நாட்டின் தேசிய விளையாட்டு குஸ்தி.இந்த நாட்டின் மிகப்பெரிய ஏரி காரகுல்.மொத்தம் 900 நதிகள் 10 கி.மீ. தூரத்தில் இருக்கின்றன.அலுமினியம் மற்றும் பருத்தி போன்றவை இந்நாட்டின் முக்கியமான ஏற்றுமதிப் பொருட்கள்.இந்த நாட்டின் தலைநகர் டுஷான்பே.இந்த நாடு மத்திய ஆசியாவில் உள்ள மலைப்பாங்கான நாடு.இங்குள்ள மலைகளில் 700 சதுர கிலோமீட்டர்களுக்கு பனியால் மூடப்பட்டிருக்கிறது. துருவப் பிரதேசங்களைத் தவிர்த்து, அதிகப் பனி இங்குதான் இருக்கிறது.பட்டுச்சாலை என்று அழைக்கப்பட்ட தொன்மையான வணிகப் பாதை இதன் வழியாகச் செல்கிறது.நுரெக் அணை, நீரிலிருந்து மின்சாரம் எடுப்பதற்காகக்... Continue Reading →

#20 கேள்விகள் பல! பதில் ஒன்று!!

இது ஒரு ஐரோப்பிய நாடு.இந்த நாட்டின் தலைநகர் மாட்ரிட். இந்நாட்டின் மிகப்பெரிய நகரமும் இதுதான்.அமெரிக்கா, பிரான்ஸ் நாடுகளுக்கு அடுத்ததாக இந்த நாட்டுக்கு தான் சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகின்றனர்.விண்வெளி வீரர்களின் உடைகளை முதலில் வடிவமைத்ததும் இந்த நாட்டவர்கள் தான்.இந்த நாட்டில் கால்பந்து மிகவும் பிரபலமான விளையாட்டு.புகழ்பெற்ற ஓவியர் பாப்லோ பிகாசோ இந்த நாட்டைச் சேர்ந்தவர்.உலகின் மொத்த ஆலிவ் எண்ணெய் உற்பத்தியில் பாதிக்குமேல் இந்த நாட்டில்தான் தயாராகிறது.இந்த நாட்டின் தேசிய மொழிதான் உலகிலேயே அதிகமாகப் பேசப்படும் இரண்டாவது மொழி.இரண்டாவது... Continue Reading →

#19 கேள்விகள் பல! பதில் ஒன்று!!

இரண்டாம் சூர்யவர்மனால் ஆரம்பிக்கப்பட்டு அவரின் மறைவுக்குப் பிறகே இக்கோவில் முழுமை பெற்றது.கம்போடியாவில் உள்ள இந்தக் கோவில் இந்து சமய கோவிலாக இருந்து பின்னர் புத்த சமய கோவிலாக மாறியது.12-ஆம் நூற்றாண்டில் யசோதரபுரத்தில் கட்டப்பட்ட இது ஒரு விஷ்ணு கோவில்.கம்போடியா நாட்டு தேசியக் கொடியில் இடம்பெற்றுள்ளது இக்கோவில்.நகரம் மற்றும் கோவில் இவற்றின் கெமர் மொழிச் சொல்லே இந்தக் கோவிலின் பெயர்.உலகின் மிகப்பெரிய மத வழிபாட்டுத் தலம்.பிரான்ஸ், ஜப்பான் மற்றும் சீனா போன்ற பல நாடுகள் தற்போது இந்தக் கோவிலைப்... Continue Reading →

#18 கேள்விகள் பல! பதில் ஒன்று!!

இவர் 19 பிப்ரவரி 1627-ஆம் ஆண்டு இன்றைய மகாராஷ்டிராவில் பிறந்தார்.இவர் மராட்டியப் பேரரசை ஆட்சி செய்த மன்னர்களில் தலைசிறந்து விளங்கியவர். மராட்டியப் பேரரசுக்கு அடித்தளம் அமைத்தவர்.சாகாஜி போன்ஸ்லே மற்றும் ஜிஜாபாய் இருவருக்கும் இளைய மகனாகப் பிறந்தவர்.இளம் வயதிலேயே வாள் பயிற்சி, வில் பயிற்சி, குதிரையேற்றம் மற்றும் யானை ஏற்றம் போன்றவற்றில் சிறந்து விளங்கினார்.இவர் கொரில்லாப் போர் முறையைப் பயன்படுத்தி தன் எதிரிகளை வீழ்த்தினார்.இவருடைய ஆட்சிக் காலத்தில் சுமார் 10-க்கும் மேற்பட்ட கோட்டைகளைக் கட்டினார்.மிகச் சிறந்த கடற்படை தளத்தை... Continue Reading →

#17 கேள்விகள் பல! பதில் ஒன்று!!

இந்த நாட்டின் அண்டை நாடுகளாக ரஷ்யா, சீனா மற்றும் கொரியா உள்ளன.பூகம்பங்களும் சுனாமியும் அடிக்கடி நிகழும் நாடு.ரோபோட் தொழில்நுட்பத்தில் முன்னணி வகிக்கும் நாடு.இந்த நாட்டின் தேசிய விளையாட்டு சுமோ.இந்த நாட்டு மக்கள் கடினமான உழைப்பாளிகள். நேரத்தை சரிவர கடைபிடிப்பவர்கள்.தீவுகளால் ஆனது இந்த நாடு. இந்த நாட்டில் 6852 தீவுகள் இருந்தாலும் 4 தீவுகளில் மட்டும் 97% மக்கள் வசிக்கிறார்கள்.இந்த நாட்டின் உயரமான சிகரம் ஃபுஜி.சாமுராய் வீரர்களுக்கு மிகவும் புகழ்பெற்ற நாடு.இந்த நாட்டில் தான் 2020 ஒலிம்பிக் போட்டிகள்... Continue Reading →

#16 கேள்விகள் பல! பதில் ஒன்று!!

இவர் ஆகஸ்ட் 21, 1986-ஆம் ஆண்டு பிறந்தார்.ஜமைக்காவில் பிறந்த இவர் ஒரு தடகள வீரர்.2008-ஆம் ஆண்டு நடைபெற்ற பெய்ஜிங் ஒலிம்பிக்கில் உலக சாதனை படைத்தவர்.ஒலிம்பிக் போட்டிகளில் விரைவோட்டத்தில் ஆறு தங்கப் பதக்கங்களை வென்ற முதல் வீரர்.இவருடைய ஆங்கில சுயசரிதையில் குறிப்பிடப்பட்ட நினைவுகள்,  “இறுதிக்கோட்டை அடைய வெகுதூரம் முன்பே நான் வேகத்தைக் குறைக்கத் தொடங்கிவிட்டேன்; சிறிதளவுகூட களைப்படையவில்லை. அப்போதிருந்த நிலையில், மீண்டுமொருமுறை கூட போட்டியைத் தொடங்கி முடித்திருக்க முடியும்.”ஜமைக்காவின் உயரிய விருதான தனிச்சிறப்பிற்கான தளபதி(Commander of the Order... Continue Reading →

#15 கேள்விகள் பல! பதில் ஒன்று!!

இந்த நாடு 1973-ல் ஆங்கிலேயர்களிடமிருந்து விடுதலை பெற்றது.உலகிலேயே மிக நீளமான நீருக்கடியில் இருக்கும் குகை லுகாயன் தேசியப் பூங்காவில் இருக்கிறது.இங்குள்ள காட்டு உயிரினங்கள், அழகிய கடற்கரைகளைப் பார்ப்பதற்காகவே ஆண்டுக்கு 50 லட்சம் மக்கள் இந்த நாட்டிற்கு படையெடுத்து வருகின்றனர்.1492-ல் அமெரிக்கக் கண்டத்துக்கு வந்தபோது கிறிஸ்டோபர் கொலம்பஸ் பார்வையில் முதலில் பட்டது இந்த நாடுதான்.அட்லாண்டிக் பெருங்கடலில் 700 தீவுகளைக் கொண்ட நாடு இது.இந்த நாட்டின் தலைநகர் நாசோ.வண்ண உடைகள் அணிந்து, பாரம்பரிய இசை, நடனங்களுடன் கொண்டாடப்படும் விழா ஜான்கனூ.உலகிலேயே... Continue Reading →

#14 கேள்விகள் பல! பதில் ஒன்று!!

இவர் டிசம்பர் 22, 1887-ஆம் ஆண்டு இந்தியாவில் பிறந்தார்.இவர் 3000-க்கும் அதிகமான கணிதத் தேற்றங்களைக் கண்டுபிடித்தார்.இவரது பெயரால் 1997-ஆம் ஆண்டு இவர் துறை சம்பந்தப்பட்ட ஆய்விதழ் ஒன்று தொடங்கப்பட்டது.இவர் பிறந்து மூன்று ஆண்டுகள் வரை பேசும் திறன் இல்லாமல் இருந்தார்.இவருடைய “மாக் தீட்டா ஃபங்சன்ஸ்” எனும் ஆராய்ச்சி முடிவுகள் சிறப்பான ஒன்றாக இன்றளவும் கருதப்படுகிறது.1918-ஆம் ஆண்டில் லண்டன் ராயல் சொசைட்டியின் உறுப்பினர் ஆனார் (எஃப்.ஆர்.எஸ் பட்டம்).கணிதம் தவிர மற்ற எல்லாப் பாடங்களிலும் தோல்வியைத் தழுவிய இவர் ஈரோட்டில்... Continue Reading →

#13 கேள்விகள் பல! பதில் ஒன்று!!

மத்தியதரைக்கடலுக்குக் கிழக்குப் பகுதியில் உள்ள ஒரு தீவு நாடு இது.இதன் தலைநகர் நிக்கோசியா.இந்த நாட்டின் கரன்சி யூரோ.இந்த நாடு 35.1264°N மற்றும் 33.4299°E அமைந்துள்ளது.இந்த நாட்டில் எலுமிச்சை, பார்லி, திராட்சை, காய்கறிகள் போன்றவை அதிகம் விளைகின்றன.ஐரோப்பாவின் மிகச் சுத்தமான கடற்கரைகள் இந்த நாட்டில் உள்ளன.தன் நாட்டின் வரைபடத்தை தேசியக்கொடியில் கொண்ட நாடு.மிகக் குறைவான குற்றங்களே இந்த நாட்டில் நடைபெறுவதால், உலகின் பாதுகாப்பான நாடுகளில் இதுவும் ஒன்று.இந்த நாட்டில் உள்ள பாபோஸ் நகரம் உலகப் பாரம்பரியச் சின்னமாக யுனெஸ்கோவால்... Continue Reading →

#12 கேள்விகள் பல! பதில் ஒன்று!!

இவர் ஏப்ரல் 29, 1891-ஆம் ஆண்டு புதுவையில் பிறந்தார்.இவர் தமிழாசிரியராகப் பணியாற்றியுள்ளார்.கண்டழுதுவோன், கிறுக்கன், கிண்டல்காரன் போன்ற பல புனைபெயர்கள் இவருக்கு உண்டு.தந்தை பெரியாரின் தீவிரத் தொண்டர்.மரணத்திற்குப் பின் இவருடைய படைப்புக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றார்.சௌமியன் என்ற நாடகத்தை எழுதியவர்.இவரை கவுரவிக்கும் விதமாக திருச்சியில் இவரது பெயரில் ஒரு பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது.கவிஞர், எழுத்தாளர், அரசியல்வாதி, திரைப்படக் கதாசிரியர் என்று பன்முகம் கொண்டவர்.இவர் குயில் என்னும் திங்களிதழை நடத்தி வந்தார்.திருக்குறளின் பெருமையை விளக்கி இவர் 5 கட்டளைக் கலித்துறைப்... Continue Reading →

#11 கேள்விகள் பல! பதில் ஒன்று!!

இந்த நாடு 1991-ம் ஆண்டு சோவியத் யூனியனிடமிருந்து விடுதலை பெற்றது.குத்துச்சண்டை, பளு தூக்குதல், ஜூடோ, கால்பந்து, செஸ் போன்ற விளையாட்டுகள் மிகவும் பிரபலமானவை.செஸ் விளையாட்டுப் பள்ளியிலேயே சொல்லித் தரப்படுகிறது.ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த ‘டேவிட் தி இன்வின்சிபிள்’ என்ற தத்துவ அறிஞரின் தத்துவங்கள் புகழ்பெற்றவை.டென்னிஸ் வீரரான ஆந்த்ரே அகஸ்ஸி இந்த நாட்டு வம்சாவளியைச் சேர்ந்தவர்.கிறிஸ்தவ மதத்தை அதிகாரப்பூர்வ மதமாக ஏற்றுக் கொண்ட முதல் நாடு.விவசாயத்தில் அதிகம் ஈடுபடும் நாடு. திராட்சை அதிக அளவில் விளைவிக்கப்படுகிறது.இந்த நாட்டில் 1988-ம் ஆண்டு... Continue Reading →

#10 கேள்விகள் பல! பதில் ஒன்று!!

இந்த நாட்டில் குத்துச்சண்டை விளையாட்டு பிரபலம்.கலிவரின் பயணங்கள் நாவலை எழுதிய ஜொனாதன் ஸ்விஃப்ட், ஆஸ்கர் வைல்டு இந்த நாட்டைச் சேர்ந்தவர்கள்.கோட்டைகள் சூழ்ந்த நாடு.பாம்புகளே இல்லாத நாடு.இது ஐரோப்பாவில் உள்ள ஒரு தீவு நாடு. எங்கும் பசுமை சூழ்ந்திருப்பதால் ‘மரகதத் தீவு’ என்று அழைக்கப்படுகிறது.சுற்றுச்சூழலில் அக்கறை கொண்ட நாடு. பொது இடங்களில் புகைப்பிடிப்பதை தடுத்து, பிளாஸ்டிக் பைகளுக்கு வரி விதித்த முதல் நாடு இது.இந்த நாட்டின் வட பகுதி ஐக்கிய ராஜ்ஜியத்தின் ஆட்சியில் இருக்கிறது.இதன் தலைநகர் டப்ளின்.இலக்கியத்துக்கான நோபல்... Continue Reading →

#9 கேள்விகள் பல! பதில் ஒன்று!!

1) இந்த நாடு ஜூன் 30, 1960-ம் ஆண்டு சுதந்திரம் அடைந்தது. 2) இந்த நாட்டின் முந்தைய பெயர் ஸைர்(Zaire) 3) இந்த நாடு மத்திய ஆப்பிரிக்காவில் உள்ளது. உலகின் மிகப்பெரிய 11-வது நாடு. 4) இந்த நாட்டின் தலைநகர் கின்ஷஸா. இதுவே இந்த நாட்டின் மிகப்பெரிய நகரம். 5) இங்குள்ள மழைக்காடுகளில் மனிதக் குரங்கு, மலை கொரில்லா, ஒகபி, வெள்ளைக் காண்டாமிருகம் போன்ற அரிய விலங்கினங்கள் காணப்படுகின்றன. 6) இந்த நாட்டில் பாயும் நதி ஆப்பிரிக்க... Continue Reading →

#8 கேள்விகள் பல! பதில் ஒன்று!!

இவர் அக்டோபர் 2, 1904-ல் பிறந்தவர்.இவர் இந்தியாவின் பிரதம அமைச்சர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர்.1965-ஆம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் போரின் போது இந்தியாவை இக்கட்டான சூழலில் இருந்து காப்பாற்றியவர்.“ஜெய் ஜவான் ஜெய் கிஸான்” என்பது இவரின் வீர முழக்கம்.இந்திய தேசிய காங்கிரஸின் மூத்த தலைவர்.காந்தியக் கொள்கைகளைத் தீவிரமாகப் பின்பற்றுபவர். அதனால் இவர் இறந்த பின் காந்தியடிகளை அடக்கம் செய்த இடத்தின் அருகிலேயே இவருடைய உடலும் அடக்கம் செய்யப்பட்டது.பதவியில் இருந்தபோது வெளிநாட்டில் இறந்த ஒரே இந்தியப் பிரதமர்.இந்தியாவின் சுதந்திரத்திற்காகப் போராடிய முக்கிய... Continue Reading →

#7 கேள்விகள் பல! பதில் ஒன்று!!

இந்த நாட்டின் தலைநகர் வார்சா.அதிக பறவை சரணாலயங்கள் உள்ள நாடு.தேசியச் சின்னம் வெள்ளைக் கழுகு.உருளைக்கிழங்கு, கோதுமை, பழங்கள், காய்கறிகள் போன்றவை அதிகம் விளைவதால் எதிர்காலத்தில் ‘ஐரோப்பாவின் தானியக் கூடை’ ஆக இந்த நாடு இருக்கும் என்கிறார்கள்.தேசியக் கொடியின் மேல் பாதி வெள்ளையாகவும், கீழ்ப் பாதி சிவப்பாகவும் இருக்கும்.இந்தக் கண்டத்தின் அதிக எடை கொண்ட விலங்காக ஐரோப்பிய எருது உள்ளது.பொலோனியம், ரேடியம் என்ற இரு தனிமங்களைக் கண்டறிந்து, இரண்டு நோபல் பரிசுகளைப் பெற்ற விஞ்ஞானி மேரி க்யூரி இந்நாட்டைச்... Continue Reading →

#6 கேள்விகள் பல! பதில் ஒன்று!!

இவர் ஜூன் 24-ம் தேதி 1925-ஆம் ஆண்டு பிறந்தார்.இவர் பிறந்த ஊர் சிறுகூடல்பட்டி.இவர் சிறந்த கவிஞர்.சாகித்திய அகாடமியின் விருதினைப் பெற்றவர்.இவர் தமிழ்நாடு அரசின் ‘அரசவைக் கவிஞர்’ பதவியை அலங்கரித்தவர்.அண்ணாமலை அரசர் நினைவுப் பரிசினைப் பெற்றவர்.இவர் ஆயிரக்கணக்கான திரைப்பட பாடல்களை எழுதியுள்ளார்.இவர் தமிழ் விழா ஒன்றில் பங்குபெற அமெரிக்கா சென்றபோது இயற்கை எய்தினார்.தென்றல், தென்றல்திரை, சண்டமாருதம் ஆகிய இதழ்களின் ஆசிரியர்.இவரது வாழ்க்கை வரலாறு ‘வனவாசம்’ என்ற தலைப்பில் வெளிவந்தது. இந்தப் பத்து கேள்விகளும் மிகவும் பிரபலமான ஒரு நபரைக்... Continue Reading →

#4 கேள்விகள் பல! பதில் ஒன்று!!

இவர் 1965-ஆம் ஆண்டு செப்டம்பர் 19-ம் தேதி பிறந்தார்.அமெரிக்க குடியுரிமை பெற்றவர்.இவர் பெற்றோர் தீபக் பாண்ட்யா, போனி பாண்ட்யா.இவரின் பூர்விகம் இந்தியா.இவருக்கு வயது 44.இவரின் கணவர் பெயர் மைக்கேல் ஜெ.வில்லியம்ஸ்.இவர் 1998-ஆம் ஆண்டு ஜூன் மாதம் நாஸா விண்வெளி மையத்துக்கு தேர்வு செய்யப்பட்டார்.விண்வெளிக்குப் பயணம் செய்த பெண்களில் மூன்று சாதனைகளை செய்தவர்.அதிக நாட்கள் விண்வெளியில் தங்கியவர்.விண்வெளியில் இருந்து ஜூன் 22, 2007-ல் பூமிக்குத் திரும்பி வந்தார். இந்தப் பத்து கேள்விகளும் ஒரு நபரைக் குறிக்குது. முடிஞ்சா தேடிக்... Continue Reading →

#3 கேள்விகள் பல! பதில் ஒன்று!!

தெற்கு ஆப்பிரிக்காவில் உள்ள நாடு.1990-ல் தென்னாப்பிரிக்காவிடமிருந்து விடுதலை பெற்றது.சிறுத்தைகள் அதிகம் இருக்கும் 6 ஆப்பிரிக்க நாடுகளில் இதுவும் ஒன்று.‘துணிச்சல் மிக்க நாடு’ என்ற பெயரும் இதுக்கு உண்டு.வைரம், செம்பு, யுரேனியம், தங்கம், காரீயம், லித்தியம் போன்றவை இந்த நாட்டின் இயற்கை வளங்கள்.இதன் தலைநகரம் விந்தோக்.அரசியல் அமைப்புச் சட்டத்தில் சுற்றுச் சூழல் பாதுகாப்பை அறிமுகப்படுத்திய முதல் நாடு இதுதான்.இந்த நாட்டின் தேசிய விலங்கு ஆப்பிரிக்க இரலை (Oryx).இங்குள்ள மிக உயரமான மலை பிரான்ட்பர்க்.உலகின் பழமையான பாலைவனங்களில் ஒன்றான நமீப்... Continue Reading →

#2 கேள்விகள் பல! பதில் ஒன்று!!

இதை ‘நெபுகட் நேசர்’ என்பவர் தன் மனைவியின் ஆசைக்காக அமைத்தார்.கி.மு 600-ம் வருடம் இது உருவாக்கப்பட்டது.இது ஈராக் நாட்டின் தலைநகரான ‘பாக்தாத்’க்கு அருகில் உள்ளது.தரையிலிருந்து 60 அடி உயரத்தில் அமைந்திருந்தது.‘யூப்ரடிஸ்’ நதியின் கிழக்குக் கரையில் 400 அடி சதுரத்தில் உருவாக்கப்பட்டது.இதனைச் சுற்றி கட்டப்பட்ட சுற்று சுவரில் நான்கு குதிரைகள் எளிதாக ஓடும்.அந்த சுவர்களுக்கு நூறு வாயில்கள் இருந்தன.இதற்கு தண்ணீர் கொண்டு செல்ல பல அடிமைகள் இருந்தனர்.இதன் உயரத்தில் மரங்கள், செடிகள், கொடிகள், புல்வெளிகள் இருந்தன.இது உலக அதிசயங்களில்... Continue Reading →

#1 கேள்விகள் பல! பதில் ஒன்று!!

இவர் 1880-ஆம் ஆண்டு பிறந்தார்.இவர் ஆறாவது மாதத்திலேயே பேச ஆரம்பித்துவிட்டார்.இவர் நீச்சல் அடிக்கவும், படகு ஓட்டவும், குதிரை சவாரி செய்யவும் பயிற்சி பெற்றார்.இவரது ஆசிரியை மிஸ் ஆன் ஸல்லிவன்.இவருக்கு தனது இரண்டாவது வயதில் வந்த காய்ச்சலால் பார்வையும், கேட்கும் திறனும் குறைந்து போனது.கல்லூரியில் சேர்ந்தபோது இவருக்கு வயது இருபது.தொடு உணர்ச்சியாலும், மோப்ப சக்தியாலும் உலகில் உள்ள பொருட்களை பற்றி தெரிந்து கொண்டதை ‘நான் வாழும் உலகம்’ நூலில் எழுதினார்.இவரை உலகின் எட்டாவது அதிசயம் என புகழாரம் சூட்டினர்.இவரது... Continue Reading →

ரிப்பீட்டு

யார் தைச்ச சட்டை? எங்க தாத்தா தைச்ச சட்டை? சட்டை தைச்சதாரு. இந்த வாக்கியத்தை வேகமாகச் சொல்லிப் பார்த்திருப்பீர்கள் இல்லையா? அந்த மாதிரி சில வாக்கியங்கள் இதோ. நம்ம வீட்டுத் தச்சர் நல்ல தச்சர், தோளூர் தச்சர் சொத்தைத் தச்சர்.கிழவன் உழுத புழுதியிலே கிண்டி எடுத்த பனையோலை, கிண்டி எடுத்த பனையோலையில் கீழே ஏழோலை மேலே ஏழோலை.புட்டு சுட்டு புட்டியிலே போட்டு புட்டைக் கொடுத்தேன். புட்டைக் கொட்டிக்கொண்டு புட்டியைத் தாடா.சோறும் சோளச்சோறு. சாறும் கீரைச் சாறு, ஓடும்... Continue Reading →

Blog at WordPress.com.

Up ↑