இங்கு பஞ்சர் போடப்படும்

பைக்கு..பறபற..காரு..பறபற..லாரியே..பறன்னு எங்க பாத்தாலும் காரு, பைக்கு, லாரி, குட்டி யானைன்னு புகைய தள்ளிட்டு போயிட்டும் வந்துட்டும் இருக்கு. பரபரப்பான நம்ம வாழ்க்கையில இன்ஜின் பொருத்தப்பட்ட இந்த இரும்பு குதிரைகள் தவிர்க்கமுடியாததா இருப்பதாலேயே, கண்டிப்பா வாகனங்கள் சார்ந்த அனுபவங்கள் நிறைய  வந்து போயிருக்கும். இது எல்லாத்தையும் கலந்துகட்டி போட்ட கதைங்க தான் “இங்கு பஞ்சர் போடப்படும்”. மோட்டார் விகடனில் புதிய முயற்சியாக வெளிவந்த நகைச்சுவைக் கதைகளின் தொகுப்பு இப்புத்தகம். அராத்து பற்றி சொல்லியே ஆகவேண்டும். இச்சம்பவங்களை நேரில் கண்ட... Continue Reading →

திகில் ஆத்திசூடி!

அது ஒரு பாழடைந்த பங்களா... ‘ஆ’...என்று ஒரு அலறல் சத்தம் கேட்டது... இதயம் ‘லப்... டப்... லப்... டப்’ என்று படபடத்தது... ஈஸி சேர் ஒன்று தானாக காற்றில் அசைந்தது... உள்ளுணர்வு ஏதோ சொல்லியது... ஊளையிடும் சத்தம் தூரத்தில் கேட்டது. ஓநாய்களாக இருக்குமோ? என்னை ஒரு அமானுஷ்ய உருவம் பின் தொடர்ந்தது. நான் பயத்தில் நடுங்கினேன். ஏன் என்னை பார்த்து பயப்படுகிறாய்? பல ஆண்டுகளுக்கு முன் நான்தான் உன்... ‘ஐயோ’ என்று அலறியபடியே தடுமாறி விழுந்தேன். ஒரு... Continue Reading →

வாங்க சிரிக்கலாம்

புத்தகத்திலிருந்து ஒரு எடுத்துக்காட்டு : எலி கடித்த பின்... “எனக்கு பெருவிரலில் இரத்தம் கொட்ட ஆரம்பித்தது. நான் போட்ட கத்தலில் அந்தத் தெருவே பயந்து ஒரு கிழவிக்கு உடனே சாமி வந்து விட்டது. ஆளாளுக்கு ஒவ்வொரு வைத்தியம் சொன்னார்கள். ஒருவர் மூன்று வருடம் கழித்து வலிப்பு வரும் என்று சொன்னார். ஒரு கிழவி நாள் தவறாமல் வந்து ‘இப்ப எப்படி இருக்கு? கண்ணு எரியுதா? கண்ணு கலங்குதா’ என்று கேட்டபடியே இருக்க இந்த கிழத்தைப் பொறுத்த வரை... Continue Reading →

சிரிக்கும் வகுப்பறை

பள்ளிக்கூடமே ஒரு வணிக மையமாகவும், கல்வியே வியாபாரமாகவும் மாறிப்போன இந்த காலத்துப் பையன் திவாகருக்கு ஸ்கூல் அப்படிங்கற வார்த்தையே பிடிக்காது. மற்ற உயிர்களெல்லாம் சுதந்திரமா சுத்திட்டு வாழ்க்கையை என்ஜாய் பண்ணிட்டு இருக்கும்போது, மனுசங்க மட்டும் ஏன் ஸ்கூலுக்கு போகணும்? எதுக்காக படிக்கணும்? படிக்கறதுனால என்ன கிடைக்கப் போகுது? இப்படி எல்லாருக்குமே வர்ற வழக்கமான கேள்விகள் தான் திவாகருக்கும் வரும். அதீத கற்பனையும் அற்புதமான அறிவுத்திறனும் உள்ள மாணவனான திவாகருக்கும் மனப்பாடம் பண்ணி படிக்கறதே புடிக்காது. அவன் வகுப்பில... Continue Reading →

ராஜராஜ சோழனும் விஞ்ஞானி ராஜாமணியும்

புத்தகத்தோட தலைப்பைப் பாத்த உடனே உங்கள்ள பலருக்கு ஆச்சரியமாவும் சிரிப்பாகவும் கூட இருக்கலாம். ராஜராஜ சோழன் டைம் மெசின் யூஸ் பண்ணி இந்தக் காலத்துக்கு வந்தா எப்படி இருக்கும்னு கற்பனையோட கொஞ்சம் காமெடியும் சேர்த்து நல்லா வெச்சு செஞ்சிருப்பாரு இந்த புத்தகத்தோட ஆசிரியர் யோகி(விஜயகுமார் ஜெயராமன்). ராஜாமணி, நம்ம இந்தியாவைச் சேர்ந்த ஒரு விஞ்ஞானி. டைம் மெசின் கண்டுபிடிக்கறது தான் அவரோட வாழ்நாள் லட்சியம். அவரோட நெடுநாள் கனவு நனவாக இன்னும் சிலமணி நேரங்களே இருக்க..ராஜாமணிக்கு கையும்... Continue Reading →

Powered by WordPress.com.

Up ↑