மரண வீடு

புராதன ஓலைச்சுவடிகள் நாட்டுடைமையாக மாற்றப்படாமல் போனதால் சிலருக்கு சொத்துக்களாகவும், சிலருக்கு சந்தைப் பொருட்களாகவும் தோற்றமளிக்கிறது. இம்முறை ஃபெலுடா, தபேஷ், லால்மோகன் பாபு மூவரும் தங்கள் விடுமுறை தினங்களைப் பூரியில் களிக்க கடற்கரை விடுதியில் தங்கினர். அதிகாலை கடற்கரை நடையில் பயணம் ஒரு பிணத்திற்கு அருகே சென்று நின்றது. போலீசிற்கு தகவல் சென்றது. மர்மங்களில் சிக்கிக்கொள்ளாமல் ஓய்வினைத் தொடர்ந்தார் ஃபெலுடா. தபேஷ் சுற்றுப்புற விசித்திரங்களைத் தலையில் போட்டு உருட்டிக்கொண்டிருந்தான். புராதன ஓலைச்சுவடிகள் வைத்திருந்த சென். நெற்றியில் கைவைத்து எதிர்காலம்... Continue Reading →

தேவியின் சாபம்

ஓய்வைக் கழிப்பதற்காகத் தன் நண்பரின் அழைப்பை ஏற்று ஹஸாரி பாகில் தங்குவதற்கு முடிவு செய்கிறார் ஃபெலுடா. ஹஸாரி பாக் பயணத்தின்போது அறிமுகமான சௌதுரி தன்னுடைய தந்தையின் பிறந்தநாள் விழாவிற்கு ஃபெலுடாவிற்கு அழைப்பு விடுத்தார். ஹஸாரி பாகிற்கு வந்து சேர்ந்ததும் தொப்ஷேவிற்கும் கங்குலிக்கும் எதிராக புலி ஒன்று தோன்றி மறைந்தது. அப்பொழுதுதான் தி கிரேட் மெஜஸ்டிக் சர்க்கஸிலிருந்து புலி தப்பித்த செய்தி கிடைத்தது. அதிர்ச்சிக்குப் பழக்கப்பட்ட ஃபெலுடா, சௌதுரி வீட்டு விழாவிற்கு செல்கிறார். அங்கே தான்.. ஓய்வுப் பயணம்... Continue Reading →

கைலாஷில் ஒரு கொலையாளி

இந்தியாவின் புராதன சிலைகளைத் திருடி வெளிநாட்டிற்கு விற்கும் ஒரு கும்பலைத் தேடிப் புறப்படுகிறார் ஃபெலுடா. குற்றவாளியிடம் இருக்கும் தலையில்லாத யக்ஷி சிலையைத் தேடிச் செல்லும் வழியில் ஒரு விமான விபத்து ஏற்படுகிறது. இதற்கிடையே முக்கியக் குற்றவாளியான மல்லிக் அவுரங்காபாத் புறப்பட்டுச் செல்ல அவரைப் பின்தொடர்ந்து செல்லும் ஃபெலுடாவிற்கு மல்லிக்கின் நோக்கம் தெரியவருகிறது. அதே நேரத்தில் சந்தேகத்திற்கிடமாக அங்கே வரும் சுற்றுலாப் பயணி ஒருவர் கொலை செய்யப்படுகிறார். இந்நிலையில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க  மாறுவேடத்தில் வருகிறார் ஃபெலு. இவை அனைத்தையும்... Continue Reading →

காத்மாண்டு கொள்ளையர்கள்

காத்மாண்டுவில் தான் வேலை செய்வதாகவும், தன்னைப் போலவே அச்சு அசலாக இருக்கும் இன்னொரு நபர் தனக்கு எதிராக சூழ்ச்சி செய்து தன்மேல் பழிவரச் செய்ய எண்ணுவதாகவும் ஃபெலுடாவிடம் கூறிய பத்ரா தனக்கு உதவும்படி கேட்டுக் கொள்கிறார். அன்று இரவே அணிகேந்திர சோம் என்பவர் ஃபெலுடாவிற்கு போன் செய்து அவரை சந்தித்து ஒரு முக்கியமான விசயத்தைப் பற்றி அவரிடம் பேச விரும்புவதையும் தெரிவித்தார். அதற்கு அடுத்த நாளே அணிகேந்திர சோம் கொலை செய்யப்பட, கொலையாளியை கண்டுபிடிக்க ஃபெலுடா, தொப்ஷே... Continue Reading →

பம்பாய் கொள்ளையர்கள்

ஜடாயு எழுதிய பம்பாய் கொள்ளையர்கள் என்ற புத்தகத்தை இந்தியில் படமாக்கவிருப்பதால் லால்மோகன் கங்குலியின் அழைப்பை ஏற்று அவருடன் பம்பாய்க்கு விரைகின்றனர் ஃபெலுடா மற்றும் தபேஷ். கூடவே ஒரு பார்சலை கொடுத்து பம்பாயில் இருக்கும் ஒருவரிடம் சேர்ப்பிக்குமாறு கங்குலியிடம் உதவி கோருகிறார் சன்யால். அங்கு காத்திருக்கும் ஆபத்தை அறியாமல் உற்சாகத்துடன் இருந்த கங்குலியிடமிருந்து பார்சலை வாங்கி சென்றவன் திடீரென கொலை செய்யப்படுகிறான். கொலை செய்யப்பட்ட இடத்தில் கிடைத்தது கங்குலியின் அடையாளக் குறிப்புகள் அடங்கிய ஒரு பேப்பர் கிடைக்க, இங்கிருந்து... Continue Reading →

கேங்டாக்கில் வந்த கஷ்டம்

யமன்தக் – 9 தலைகளும் 34 கைகளும் கொண்ட திபெத்திய கடவுள். ஃபெலுடாவும், தொப்ஷேவும் மியூசியத்தில் யமன்தக் சிலையைப் பார்த்தபோது அதன் தோற்றம் இருவருக்கும் சற்று கலக்கமாகத்தானிருந்தது. யமன்தக் - திபெத்திய கடவுள்(Yamantaka) இந்த முறை இருவருக்கும் விடுமுறை சிக்கிம் தலைநகர் கேங்டாக்கில் தொடங்கியது. யமன்தக் சிலையை வைத்திருந்த ஷெல்வான்கரைச் சுற்றி பல மர்ம பின்னல்கள் இருந்தது. விபத்துக்குள்ளாகி ஷெல்வான்கர் இறந்த பிறகு அவரிடம் இருந்த அந்த திபெத்திய கடவுள் சிலை மாயமாக மறைந்து போனது. விபத்து... Continue Reading →

மகாராஜாவின் மோதிரம்

பயணம் செய்வது  பலருக்குப் பிடித்த ஒரு செயல். அப்படியான லக்னோவை நோக்கிய பயணத்தின் போது, தான் எதிர் கொண்ட நிகழ்வை சொல்ல ஆரம்பிக்கிறான் தபேஸ். லக்னோவிற்கு கிளம்பும் அன்றைய பொழுது, ஃபெலுவிற்கும் ஒருவித ஆர்வம் தொற்றிக்கொண்டிருந்தது. அழகான நகரம் அவர்களுக்கு மறக்க முடியாத சம்பவங்களை அள்ளி தர இருக்கின்றது என யாரும் அறிந்திருக்கவில்லை. தொடக்கப்புள்ளி, ஔரங்கசீப்பின் விலைமதிப்பற்ற மோதிரம். பல மனிதர்கள் கதையில் தலையிட, அதில் ஒரு மருத்துவருக்குப் பழமையான பொருட்களை சேகரிக்கும் ஒரு மனிதரால் வெகுமதியாக... Continue Reading →

அனுபிஸ் மர்மம்

வரலாற்றின் பழமையான பொருள்கள் மீது ஆர்வம் கொண்ட நீலமணி சன்யாலுக்கு வந்தது ஓவிய வடிவ எழுத்துக்களாலான ஒரு கடிதம். அதில் உள்ள குறியீடுகளைப் புரிந்துகொள்ள முடியாததால் ஃபெலுடாவின் உதவி நாடுகிறார், சன்யால். அவருடைய அழைப்பை ஏற்று வீட்டிற்கு சென்ற ஃபெலு பாபு அது எகிப்து முறைப்படி எழுதப்பட்ட ஒரு மிரட்டல் கடிதம் என்பதைக் கண்டுபிடிக்கிறார். மேலும் நீலமணி பாபு ஏலத்தில் புதிதாக வாங்கிய எகிப்து கடவுளான அனுபிஸ் என்ற சிலையை ஃபெலுடாவிடம் காட்ட, சிலைக்காக ஒருவேளை மிரட்டல்... Continue Reading →

மர்மமான ஒரு குடித்தனக்காரர்

ஜமீன் பரம்பரையைச் சேர்ந்த சுபிர் தத்தாவின் அண்ணன் நிஹார் தத்தா, அமெரிக்காவில் ஒரு புகழ்பெற்ற உயிர்ம வேதியல் விஞ்ஞானி. லேபில் வேலை செய்து கொண்டிருந்த போது ஏற்பட்ட வெடி விபத்தில் பார்வையை இழந்துவிட்டார். அப்படியே அவருடைய கண்டுபிடிப்புக்கான ஆராய்ச்சியும் நின்று விட்டது. இதனிடையில் ஒரு மர்ம நபர் நிஹாரின் அறைக்குள் நுழைந்து எதையோ தேடிய விவரம் சுபிருக்குத் தெரியவர ஃபெலுடாவிடம் உதவி கேட்டு வருகிறார், சுபிர். அழைப்பை ஏற்று சுபிர் வீட்டிற்கு சென்ற ஃபெலுடாவிடம், தன்னுடைய வீட்டில்... Continue Reading →

Blog at WordPress.com.

Up ↑