நந்தி ரகசியம்

கோவிந்தராஜ உடையாரிடம் ஒண்டிப்பிழைக்க வந்தவள் சிந்தாமணி. உடையாரின் மனைவி திரௌபதியையும் புத்தி சுவாதீனமில்லாத மகன் வேலப்பனையும் விரட்டிவிட்டாள். உடையார் இறப்பதற்கு முன் அவருடைய மொத்த சொத்துக்களையும் தன்பேரில் எழுதி வாங்கிக்கொண்டாள் சிந்தாமணி. பரம்பரை சொத்தான பொட்டல் காட்டை மட்டும் திரௌபதியின் பேரில் எழுதிவிட்டாள் சிந்தாமணி. நடப்பது எதையும் கண்டும் காணாமல் இருந்த ஊர்மக்களால், திரௌபதியையும் வேலப்பனையும் பார்த்துப் பரிதாபப்பட மட்டுமே முடிந்தது. கருநாகங்கள் மட்டுமே வசிக்கும் அந்தப் பொட்டல்வெளியில் இருந்தது ஒரு சிவன் கோவில். இடிந்த சிவன்... Continue Reading →

மரகத லிங்கம்

மரகத லிங்கம் ஒரு காலத்தில் சிவன்குடியின் செழிப்பிற்கும் வனப்பிற்கும் காரணமாக இருந்தது. உச்சிப் பொழுதில் மரகத லிங்கத்தைப் பார்க்கும் போது மனித மனதின் குறைகள் அனைத்தும் தீரும் என்பது அந்த ஊரின் ஐதீகமாக இருந்தது. இவ்வளவு பெருமை வாய்ந்த லிங்கம் ஒருநாள் திடீரென களவு போனது. அந்நாளில் இருந்து சிவன்குடி பொலிவிழந்து களையிழந்து தன் மக்களையும் இழந்தது. பல வருடங்களுக்குப் பிறகு இன்று அந்தப் பழம்பெருமை வாய்ந்த பாழடைந்த சிவன்குடி சிவன் கோவிலை சீர்செய்ய ஒருவன் வருகிறான்.... Continue Reading →

Powered by WordPress.com.

Up ↑