இருவேறு உலகம் கதையில் இல்லுமினாட்டி கூட்டத்தில் அனைவரின் முன்னிலையில் உடல் கருகி இறந்த விஸ்வம், போதையினால் இறந்துகொண்டிருந்த வேறு ஒருவனின் உடலில் புகுவது போல ஆரம்பித்திருக்கும் இந்தக் கதை. கதையின் ஆரம்பமே விறுவிறுப்பைக் கூட்டி ஊடு சடங்கு பற்றியும், உயிர் கூடுவிட்டு கூடு பாய்வதைப் பற்றியும் புதுப்புதுத் தகவல்களுடன் படிப்பவர்களின் மனதில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும். அதீத போதையின் காரணமாக நரம்புகள் செயலிழந்து இறந்துகொண்டிருந்த ஒருவன் திடீரென மருத்துவர்களே எதிர்பாராத வகையில் உயிர் பிழைக்கிறான். அதே வேளையில்... Continue Reading →
நீ..நான்..தாமிரபரணி.!
25 வருடங்களுக்கு முன்.. காதலை மையப்படுத்தி சேதுபதி எழுதிய நீ..நான்..தாமிரபரணி.. நாவல் வெகுவாகப் பிரபலமாகிறது. ஆனால், சில நாட்களிலேயே நாவல் எழுதிய ரைட்டர் சேதுபதி காணாமல் போகிறார். ரைட்டரைத் தேடிச் சென்ற சிலருக்கு பெரிய இடத்தில் இருந்து மிரட்டலும் எச்சரிக்கையும் வந்த வண்ணம் இருக்கிறது. 25 வருடங்களுக்குப் பிறகு.. சேதுபதியைத் தேடும் பொறுப்பை தன்னுடைய “உண்மை” பத்திரிக்கையின் துடிப்பான ரிப்போர்ட்டரான அருணிடம் ஒப்படைக்கிறார் ஆசிரியர் அம்பலவாணன். அவரும் ஒரு காலத்தில் சேதுபதியைத் தேடச் சென்று எதிரிகளின் கோபத்தை... Continue Reading →
விதி எழுதும் விரல்கள்
வசந்த்..உலகத்துல இருக்கற எல்லாக் கெட்டப்பழக்கங்களும் தெரிஞ்சவன். வாத்தியார் பையன் மக்குன்னு சொல்லுவாங்க..ஆனா, இங்க கதையே வேற. கம்ப்யூட்டர்ல பயங்கர நாலெட்ஜ் உள்ள வசந்துக்குப் பணம்ங்கறது ஒரு போதைப் பொருள் மாதிரி. அது ஒண்ணு மட்டும் இருந்துட்டா உலகத்துல என்ன வேணாப் பண்ணலாம்னு ஒரு எண்ணம். கணக்கே இல்லாம சம்பாதிச்சும் பணத்து மேல தீராக்காதல். அப்படிப்பட்ட வசந்துக்கு மத்திய மந்திரியோட பையன் சம்பத் கிட்ட வேலை செய்யற வாய்ப்பு தானா தேடிவருது. ஆரம்பத்துல நல்ல பையன் மாதிரி வேலை... Continue Reading →
மனிதரில் எத்தனை நிறங்கள்..?
பயங்கர அலறலுடன் வழக்கமாக வரும் அந்தக் கெட்டக் கனவிலிருந்து விழித்துக் கொண்டாள் ஆர்த்தி. தாத்தா-பாட்டியுடன் வாழும் இந்த ஆர்த்தி மிகப்பெரிய சொத்துக்கு ஒரே வாரிசு. ஆனால், தங்கள் மகள் இறக்க காரணமாக இருந்த அந்தக் குடும்பத்தில் பேத்தியையும் இழக்க விரும்பாத தாத்தா-பாட்டி இருவரும் ஆர்த்தியை சிறுவயதிலேயே கண்காணாத இடத்திற்கு அழைத்து வந்தனர். திடீரென தாத்தாவின் உடல்நிலை மோசமாக, கையில் காசு இல்லாத நிலையில் அத்தை சிவகாமியிடம் உதவி கேட்கிறாள் ஆர்த்தி. ஆச்சரியப்படும் வகையில் உதவி கிடைக்க, அவர்கள்... Continue Reading →
இருவேறு உலகம்
“ஒரு சிறிய விதைக்குள் எத்தனை விருட்சங்கள் வேண்டுமானாலும் இருக்கலாம்”. உலக நன்மைக்காக இயங்கும் ஆன்மீக ரகசிய இயக்கத்தின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் மாஸ்டருக்கு, பூமி தற்போது அழிவு நிலைக்குப் போய்க்கொண்டிருப்பதையும், அதற்கு தூய்மையிலும் தூய்மையான அறிவில் உச்சமாக இருக்கும் ஒருவனைத் தீய சக்திகள் பயன்படுத்தி பூமியை அழிக்க நினைப்பதையும் அறிந்தபோது அவர் மனம் பதறியது. இந்நிலையில் மேற்சொன்ன மேன்மையான க்ரிஷ் எதிரிகளின் சூழ்ச்சியினால் பாம்புக்கடிக்கு உள்ளாகிறான். ஆனால், அதிர்ஷ்டவசமாக வேற்றுகிரஹவாசியால் காப்பாற்றப்படுகிறான். அதேவேளையில் மர்ம மனிதன் மாஸ்டரின்... Continue Reading →