நாகர்களின் இரகசியம்

தான் அழிக்க வேண்டிய தீமை சந்திரவம்சிகள் அல்ல என்பதை உணர்ந்த சிவன், நாகர்களின் மூலம் தான் தீமையை கண்டறிய முடியும் என்று எண்ணி, நாகர்களின் இருப்பிடத்தைத் தேடிச் செல்கிறார். நாகர்களைப் பற்றித் தெரிந்துகொள்ள மகதம் வழியாக காசியை வந்தடைகிறது சிவனின் பரிவாரம். இந்நிலையில் சதி கருவுற்றிருக்க, சிவனுக்கும் சதிக்கும் ஒரு மகன்(கார்த்திக்) பிறக்கிறான். காசியிலிருந்து ப்ரங்காவை அடைந்து அங்கிருந்து நாகர்களைக் கண்டுபிடிப்பது தான் சிவனின் திட்டம். சதி கார்த்திக்கைப் பார்த்துக் கொள்ளும் பொருட்டு காசியிலேயே தங்கிவிட சிவன்... Continue Reading →

உலராத ரத்தம்

(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); விவேக் தன் முழங்கையில் பிசுபிசுத்த அந்த உலராத ரத்தத்தைப் பார்த்தவாறு இருட்டில் ஆழ்ந்திருந்த பங்களாவின் பின் வராந்தாவிற்கு வந்து பாத்ரூமை நோக்கி நடந்தான். ருத்ரமூர்த்தியும் அவர் குடும்பமும் ஒரு வாரத்திற்கு முன்புதான் அந்த பங்களாவிற்கு இடம்பெயர்ந்திருந்தனர். வந்த முதல்நாளே அமானுஷ்யங்கள் விரட்டத் தொடங்கியிருந்தது. அழுகிய தலையற்ற உடல், பேசி நகரும் பல் இளித்த மனித தலை, புகை உருவம், பூசாரி கோர கொலை, ருத்ரமூர்த்தியின் மருமகளின் மரணம். இவையனைத்தும் நம்பூதிரி... Continue Reading →

கோச்சடையான்

கோச்சடையான் | நரசிம்மவர்மன் | பதுமகோமளை | பரமேஸ்வர பல்லவர் இந்த நாலு பேரையும் இணைக்கிறது சாளுக்கிய மன்னன் புலிகேசியின் மகன் விக்ரமாதித்தன் பல்லவ சாம்ராஜ்யத்தில் பெரும்படையோடு ஊடுருவி சின்னாபின்னமாக்கினான் புலிகேசி புதல்வன். பல்லவ கட்டுப்பாட்டில் இருந்த உறையூர் அரண்மனை சாளுக்கிய சேனையின் உறைவிடமானது. பல்லவ அரச வாரிசுகளும், விசுவாசிகளும் தலைமறைவானார்கள். பெரும்படையை கையில் கொண்டு உறையூரைச் சுற்றி இருந்த குறுநில மன்னர்களை மிரட்டி வாழ்வாதாரத்தைச் சூறையாடினான் புலிகேசி புதல்வன். தமிழ் மண்ணில் அந்நியன் ஒருவன் ஆளுவதா?... Continue Reading →

கொலையுதிர் காலம்

கணேஷிற்கும் வசந்திற்கும்  குழப்பம் மேலோங்கியிருந்தது. வியாசன் வீட்டில் அரங்கேறிய சம்பவங்கள்,  கொலைகள், கிடைத்த வெற்றுத் தடயங்கள். கணேஷின் தலைக்குள் சில கேள்விகளை உசுப்பியது. “இவ்வளவும் யார்? எதற்காக செய்கிறார்கள்? 4000 ஹெக்ட்டர் பரப்பு கொண்ட 1 கோடி ரூபாய் (1981-ல்) சொத்துக்காகவா? அல்லது வியாசர்களால் கொல்லப்பட்ட  புத்திரவதியின் பழி பிசாசின் லீலையா?” “விஞ்ஞானமா? பைசாசமா?” சில காரியங்களை உங்களுக்கு சொல்கிறேன்...காரணங்களை கண்டுபிடிக்க முடியுதான்னு முயற்சி பண்ணுங்க. நீங்களா இருந்தா உங்க அடுத்த நடவடிக்கை என்னவா இருக்கும்? குமாரவியாசன்,... Continue Reading →

புத்தம் சரணம் கச்சாமி!

திபெத்தை தன் வசப்படுத்த சீனர்கள் கௌதம புத்தரின் மறுபிறப்பான மைத்ரேயரை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர திட்டம் தீட்டினர். சீனாவின் பிடியில் மாட்டிக்கொண்டிருந்த திபெத்தியர்கள், தங்களுடைய கடவுளாக கருதும் மைத்ரேய புத்தருக்கு சீன உளவுத்துறை மூலமாக ஆபத்து வரவிருப்பதை உணர்ந்தார்கள். பத்து வயதே ஆன இளம் மைத்ரேயரைக் காப்பாற்ற பிரதமரிடம் ஆலோசித்து அமானுஷ்யனிடம் உதவி கோருகிறார், தலாய்லாமா. தன் குடும்பத்தினரின் பாதுகாப்புக்காக  மறைந்து வாழ்ந்து கொண்டிருந்த அமானுஷ்யன், அந்த அழைப்புக் கடிதம் வந்தபோது தான் திபெத்தில் ஆரம்ப காலத்தில்... Continue Reading →

சங்கமித்திரை

இந்தியாவின் no.1 ஐ.டி.கம்பெனியில் சேர்வதற்காக இன்டர்வியூவிற்கு வந்திருந்தாள் சங்கமித்திரை. டெஸ்ட் பிரேக்கில் ரெஸ்ட்ரூம் போன அவளுக்கு காத்திருந்தது ஒரு அதிர்ச்சி. தலையில் அடிபட்டு செத்த நிலையில் ஒரு பெண் கீழே கிடக்க, மூன்று பேர் ரத்தக்கறையுடன் நின்றிருந்தனர். நடந்த விவரங்கள் எதுவும் தெரியாமல் கம்பெனியின் டைரக்டர் திவாரி இருக்க, டிடெக்டிவ் ஏஜென்சியைச் சேர்ந்த பாலச்சந்திரன் சங்கமித்திரையைத் தேடி அந்தக் கம்பெனிக்கு வருகிறார். வந்த இடத்தில் அவருக்கு கிடைத்த தகவல் வைரக்கடத்தல் கும்பல் வரை நீள்கிறது. சங்கமித்திரை என்னவானாள்?... Continue Reading →

தண்ணீர் தேசம்

இதை கதை என்பதா..? கவிதை என்பதா..? கவிதை சொல்லும் கதை இதுதான் சரியா இருக்கும். இது ஒரு ‘love story’ இல்லை. இதை ஒரு ‘survival story’ அப்படின்னும் சொல்லலாம். அனுபவமா..? அறிவியலா..? மனித அனுபவ அறிவியல் என்றும் சொல்லலாம். ஆனால், வைரமுத்துவைப் படிக்கும்போது நம்மை அறியாமல் ஒரு சிலிர்ப்பும், சிந்தனையும் வாழ்வின் மீதான வித்தியாசமான கண்ணோட்டமும் உருவாகும் நிச்சயமாக. அந்த வரிசையில் தண்ணீர் தேசம் ஒரு பொக்கிஷம்தான். கவிதைக்கதை கடற்கரையில் தொடங்கி கடல் அலையில் முடிகின்றது.... Continue Reading →

ஆதலினால் கொலை செய்தேன்..!

உறவு என சொல்லிக்கொள்ள இந்த உலகில் யாருமில்லாத அவனிடம் ஒரு தேவதையாய் வந்து சேர்கிறாள், அதிஷா. துரதிர்ஷ்டவசமாக ஒருநாள் அவளைப் பலர் கற்பழித்துக் கொலை செய்ய, கொன்றவர்கள் பணம் கொடுத்து போலீசை சரிகட்டுகின்றனர். இதனால் மனமுடைந்த அவன் தன்னுடைய காதலியின் மரணத்திற்குப் பழிவாங்குதல் என்ற கோணத்தில் அமைந்த சிறுகதையே “ஆதலினால் கொலை செய்தேன்”. #one minute one book #tamil #book #review #short story #keeladi pathippagam #aadhalinal kolai seithen want to read... Continue Reading →

#23 கேள்விகள் பல! பதில் ஒன்று!!

இந்த நாட்டின் தலைநகர் மஸ்கட்.இதன் அண்டை நாடுகள் பெட்ரோலியத்தை முக்கிய ஏற்றுமதியாகக் கொண்டிருந்தாலும் இந்த நாட்டின் முக்கிய ஏற்றுமதி மீன்கள், பேரீட்சை மற்றும் உலோகங்கள்.இந்த நாட்டில் வருமானவரி இல்லை.இந்தியா, பாகிஸ்தான் மற்றும் இலங்கை நாடுகளைச் சேர்ந்தவர்கள் இந்த நாட்டில் அதிகமாக வாழ்கின்றனர்.குற்றச் செயல்கள் மிகக் குறைவாக நடைபெறும் நாடு.குறுக்காக வைக்கப்பட்ட கத்திகள் இந்த நாட்டின் சின்னம்.தலைசிறந்த கப்பல் கட்டுமான நிபுணர்கள் இந்த நாட்டைச் சேர்ந்தவர்கள்.அரேபியத் தீபகற்பத்தின் தென் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள நாடு.1970 ஜூலை 23 அன்று... Continue Reading →

இரண்டு கலர் கோடுகள் – “Home pregnancy test”

இந்த கோடுகளின் எதிர்பார்ப்பு மனிதிக்கு மனிதி வேறுபடுகிறது. இதைப் புரிந்துகொள்வது மிக எளிது. இந்த கோடு விரும்பத்தக்கதாக இருக்க திருமண அந்தஸ்து தேவைப்படுகிறது. அவ்வளவுதான். இப்போது திருமணமாகாத சோபியாவின் tester-இல் இரண்டு கோடுகள். மனக்குரங்கு குதிரையாக மாறி இதயத்தையும் இழுத்துக்கொண்டு ஓடத் தொடங்குகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையுள்ள பெண்ணுக்கு இதில் இருந்து வெளியேற உள்ள வாய்ப்புகளையும் சூழ்நிலைகளையும் விவரிப்பதே அரவிந்த் சச்சிதானந்தம் அவர்களின் இந்த “இரண்டு கலர் கோடுகள்”. #one minute one book #tamil #book #review... Continue Reading →

கைலாஷில் ஒரு கொலையாளி

இந்தியாவின் புராதன சிலைகளைத் திருடி வெளிநாட்டிற்கு விற்கும் ஒரு கும்பலைத் தேடிப் புறப்படுகிறார் ஃபெலுடா. குற்றவாளியிடம் இருக்கும் தலையில்லாத யக்ஷி சிலையைத் தேடிச் செல்லும் வழியில் ஒரு விமான விபத்து ஏற்படுகிறது. இதற்கிடையே முக்கியக் குற்றவாளியான மல்லிக் அவுரங்காபாத் புறப்பட்டுச் செல்ல அவரைப் பின்தொடர்ந்து செல்லும் ஃபெலுடாவிற்கு மல்லிக்கின் நோக்கம் தெரியவருகிறது. அதே நேரத்தில் சந்தேகத்திற்கிடமாக அங்கே வரும் சுற்றுலாப் பயணி ஒருவர் கொலை செய்யப்படுகிறார். இந்நிலையில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க  மாறுவேடத்தில் வருகிறார் ஃபெலு. இவை அனைத்தையும்... Continue Reading →

1+1=0

‘வளையோசை’ பத்திரிக்கைக்கு பேட்டி கொடுப்பதற்காக பத்திரிக்கையின் சீஃப் சப்போர்ட்டர் சுடர்கொடிக்காகக் காத்திருந்த விவேக்கிற்கு வந்து சேர்ந்தது அந்த திடுக்கிடும் செய்தி. வேளச்சேரி ரயில்வே ஸ்டேஷனில் மர்ம நபர் ஒருவரால் அரிவாளால் வெட்டிக் கொல்லப்பட்டிருந்தாள், சுடர்கொடி. ஸ்பாட்டிற்கு விரைந்த விவேக்கின் கையில் கிடைத்தது முக்கியத் தடயமான சுடர்கொடியின் டயரி. மேலும், சுடர்கொடியின் வீட்டை சோதனையிடச் சென்றபோது அவளுடைய அண்ணன் தூக்கில் தொங்கிக்கொண்டிருக்க, அவளுடைய வீட்டில் கிடைத்த பொருள்கள் விவேக்கை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்நிலையில், விவேக்கிற்கு உதவிசெய்ய முன்வருகிறாள் சுடர்கொடியின்... Continue Reading →

ஆன்லைன் புத்தகத் திருவிழா 2020

புத்தாண்டை முன்னிட்டு வெளிவந்துள்ள புதிய புத்தக வெளியீடுகள் (2020) அனைத்தும் commonfolks-இல் Flat 15% சிறப்புத் தள்ளுபடியில் வாங்கி மகிழுங்கள். இந்த மாபெரும் ஆன்லைன் புத்தகத் திருவிழா 08/01/2020 அன்று தொடங்கி 18/01/2020 வரை மட்டுமே. உடனடியாக உங்களுக்குத் தேவையான புத்தகங்களை ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கிப் படியுங்கள்..! அனைத்துப் புத்தகங்களுக்கும் இந்த தள்ளுபடி பொருந்தும். மேலும், உங்களுடைய நண்பர்களுக்கும் commonfolks-ஐ அறிமுகம் செய்து வைத்து ரூ.50 பெற்று மகிழுங்கள். தகவலுக்கு: https://bit.ly/2Qm7Hi0 CommonFolks 7550174762 buy... Continue Reading →

ஈரோடு புத்தகக் கண்காட்சி 2020

ஈரோடு கொங்கு கல்வி நிலையத்தில் 09/01/2020 அன்று தொடங்கும் புத்தகக் கண்காட்சி 13/01/2020 வரை மொத்தம் 5 நாட்களுக்கு காலை 9 மணிமுதல் மாலை 7 மணிவரை நடைபெற உள்ளது. அனைத்து வகையான புத்தகங்களும் 10-15% சிறப்பு தள்ளுபடியில் கிடைக்கும். குறிப்பு: ரூ. 50க்கு புத்தகம் வாங்கும் ஒவ்வொரு நபருக்கும் ஒரு பரிசுக் கூப்பன் வழங்கப்படும். தினமும் ஐந்து நபர்கள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுப் பொருட்கள் வழங்கப்படும். இந்தப் புத்தாண்டில் நூல்கள் நிறைய வாங்கி நூலகம்... Continue Reading →

#22 கேள்விகள் பல! பதில் ஒன்று!!

இந்த நாடு 1971-ஆம் ஆண்டு விடுதலை பெற்றது.உலகிலேயே நான்காவது எண்ணெய் வளம் மிக்க நாடு.ஏழு அமீரகங்களைக் கொண்ட நாடு.அவற்றில் அதிக மக்கள் தொகை உள்ள நாடு துபாய்.இந்த நாட்டில் ஒட்டகச் சவாரி பிரபலம்.இந்நாட்டின் தலைநகர் அபுதாபி, இரண்டாவது பெரிய நகரமும் இதுவே.முக்கிய விளைபொருள் பேரீட்சை.அரபிக், பாரசீகம், ஆங்கிலம், இந்தி மற்றும் உருது போன்ற மொழிகள் இந்த நாட்டில் பேசப்படுகின்றன.பாரசீக வளைகுடாவில் அரேபியத் தீபகற்பத்தில் அமைந்துள்ள நாடு இது.இந்த நாடு ஓமனுக்கும் சவுதிக்கும் இடையே அமைந்துள்ளது. இந்தப் பத்து... Continue Reading →

Up ↑