Amazon Kindle Free Book Offer for 30 Days

ஊரடங்கு படிக்க நல்ல புத்தகங்கள் கிடக்கு.. மகா ஜனங்களே!! இதனால நான் சொல்லிக்கொள்வது என்ன அப்படின்னா…?! வீட்டுல அடக்க ஒடுக்கமா இருக்கிற நமக்கு எவ்வளவுதான் Insta, FB, Whatsapp, Share Chat - அ தள்ளுனாலும் நேரத்தை மட்டும் தள்ளவே முடியாத காரணத்தினால் உங்களுக்காக ஒரு Tip - கொடுக்கிறேன் கேட்டுக்கோங்கோ... நம்ம Amazon Kindle app-ல் நிறைய நல்ல புத்தகங்களை 30 நாட்களுக்கு இலவசமாக படிக்க தராங்க. அதனால App - அ Install பண்ணிட்டு... Continue Reading →

#31 கேள்விகள் பல! பதில் ஒன்று!!

அதிகமாக சர்க்கரை உற்பத்தி செய்யும் நாடு இது.இந்த நாட்டு மக்களை ‘பஜன்’ என்றழைக்கிறார்கள்.இந்த நாட்டின் தேசிய மலர் கொன்றை மலர்.இந்த நாட்டின் தலைநகர் பிரிட்ஜ்டவுன்.இந்த நாடு 1966-ஆம் ஆண்டு பிரிட்டிஷாரிடம் இருந்து விடுதலை பெற்றது.கரீபியன் கடலுக்கு கிழக்கு திசையில் அட்லாண்டிக் பெருங்கடலில் அமைந்துள்ள ஒரு தீவு இது.இந்த நாட்டின் தேசியப் பறவை கூழைக்கடா.இந்த நாட்டில் இலவசக் கல்வி அளிக்கப்படுகிறது.சுற்றுலாப் பயணிகளைக் கவரும் தீவு நாடு இது.கரும்பு பயிரிடுவதற்காக ஆப்பிரிக்காவிலிருந்து மனிதர்களை இங்கே அழைத்து வந்ததால் ஆப்பிரிக்க வம்சாவளியினர்... Continue Reading →

பொன்னான வாய்ப்பு..!

கொரோனா வைரஸ் காரணமாக வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் உங்கள் மூளைக்கு வேலை கொடுக்க ஒரு அரிய வாய்ப்பு. அமீரக எழுத்தாளர்கள் மற்றும் வாசகர் குழுமம் இணைந்து நடத்தும் புத்தக விமர்சனப் போட்டியில் பங்குபெற நீங்கள் செய்ய வேண்டியது இதுதான். நீங்கள் வாசிக்கும் புத்தகத்தைப் பற்றி விமர்சனம் எழுதி kaanalshortstories@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்க வேண்டும். விமர்சனங்களை ஏப்ரல் 13-ஆம் தேதி வரை அனுப்பலாம். மேலும், ஒருவரே எத்தனை விமர்சனங்கள் வேண்டுமானாலும் எழுதலாம். இந்தப் போட்டியில் சிறப்பான... Continue Reading →

வாடகை தேவதை

சமீபத்தில் நடந்த டென்னீஸ் போட்டியில் வென்று உலக அளவில் இன்று பேசப்பட்டு வரும் குந்தவை டிவி பேட்டியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சளைக்காமல் பதில் சொல்லிக்கொண்டிருந்தாள். பேட்டியை முடித்துவிட்டு திரும்புகையில் வீட்டில் ஒரு பூகம்பம் காத்திருக்கிறது என்று அவளுக்கு அப்போது தெரியாது. ராமன் நாயரும் அவரது மனைவி தங்கம்மாவும் தான் குந்தவையின் உண்மையான அப்பா அம்மா என்று சொல்லி டாக்டர் பாரிஜாதம் நர்ஸ் சுந்தரவள்ளியுடன் அவர்கள் இருவரையும் குந்தவையின் வீட்டிற்கு அழைத்து வர, அதைக் கேட்ட குந்தவையின் பெற்றோர்கள்... Continue Reading →

Dear CORONA..

இந்தப் பதிவு எழுதப்படுவதற்கான காரணத்தை முதலிலேயே சொல்லிவிடலாம் என்று நினைக்கிறேன். கொரோனா வைரஸினால் என்னுடைய மனநிலை குறித்து எழுத வேண்டும் என்று ஒரு எண்ணம். அது உங்களது மனதையும் பிரதிபலிக்கலாம். எண்ணங்கள் செயல்படும் வேளை இது. முதலாவதாக சுய ஊரடங்கிற்கு உத்தரவிட்ட அரசிற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அடுத்ததாக அதை முழுமையாக கடைபிடித்த பொதுமக்களுக்கும் நன்றி. ஒரு மாதத்திற்கு முன்பு இவ்வாறெல்லாம் நிகழும் என்று யாராவது சொல்லியிருந்தால் அவர்களிடம் கேலிச் சிரிப்பை சிந்திவிட்டு நகர்ந்திருப்பேன். இன்று 25... Continue Reading →

Top 5 Rajeshkumar Crime Novels in Tamil

தமிழகத்தில் க்ரைம் கதைகள் என்றால் வாசகர்கள் உச்சரிப்பது "ராஜேஷ்குமார்" என்ற பெயரையே. ராஜேஷ்குமார் ஆயிரக்கணக்கில் கிரைம் கதைகளை எழுதியுள்ளார். பலரது நீண்ட தூரப் பயணம், தனிமை நேரங்கள், சுவாரஸ்ய பொழுதுபோக்கிற்கு தோழனாக இருந்தவை இந்த நாவல்கள். இதில் நான் படித்தது சிறிதளவே. ஆனால், அவற்றில் மிகுந்த சுவாரஸ்யத்தையும், வாசிப்பிற்கு பிள்ளையார் சுழி போட விரும்புபவர்களுக்கு ஏற்ற ஐந்து நாவல்கள் பற்றி இங்கே.. அதிரடி ஆட்டம் : - க்ரைம் கதைகள் பல தளங்களில் அமைத்து எழுதப்படுபவை. அதில்... Continue Reading →

#30 கேள்விகள் பல! பதில் ஒன்று!!

இவர் 15/01/1841 அன்று பிறந்தார்.இவர் தமிழ்நாட்டின் விவசாயத்திற்காகவும், குடிநீர் பாசனத்திற்காகவும் முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய ஆங்கிலேயப் பொறியாளர்.தமிழ்நாட்டில் தேனி மாவட்டத்தின் சில ஊர்களில் இன்றளவும் இவரது நினைவாக வருடந்தோறும் கடவுளை வணங்குவது போல் பொங்கல் வைத்து வழிபடும் வழக்கம் உள்ளது.1899-ஆம் ஆண்டு பிரிஸ்பேன் நதியின் வெள்ளப்பெருக்கில் ஏற்படும் சேதத்தைத் தவிர்க்க ஆஸ்திரேலியா அரசு இவரிடம் ஆலோசனை கேட்டது.இவர் சென்னை மாகாண சட்டமன்றத்தின் உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.கஷ்டப்பட்டு கட்டிய பாதி அணை நீரில் அடித்துச் செல்ல, இத்திட்டத்திற்கு ஆங்கிலேய... Continue Reading →

காதல் தேசத்துக்கு ஒரு விசா..!

மிஸ் இந்தியா பட்டம் வென்ற கையோடு கோயம்புத்தூர் ஏர்போர்ட்டில் கால் வைத்தாள் நர்த்தனா. தன்னுடைய அப்பா சொன்ன அடையாளங்களை வைத்து, புது கார் டிரைவரை அந்தக் கூட்டத்தில் தேடிக்கொண்டிருந்த போது இரண்டு ரௌடிகள் நர்த்தனாவிடம் வம்பிழுக்க, அவளைக் காப்பாற்றி வீட்டில் சேர்க்கிறான் டிரைவர் அசோக். அசோக்கின் சாதுர்யம் நர்த்தனாவிற்கு பிடித்துப் போக, அவன் விலகிச் சென்றாலும் வலிய போய் பேசுகிறாள் நர்த்தனா. இருவருக்கும் காதல் மலர, விஷயம் நர்த்தனாவின் அப்பா காதுக்கு செல்ல இங்குதான் விபரீதம் ஆரம்பமாகிறது.... Continue Reading →

#29 கேள்விகள் பல! பதில் ஒன்று!!

ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ஜூவான் டி பெர்முடேஸ் என்பவர் 1505-ஆம் ஆண்டு இந்தத் தீவைக் கண்டுபிடித்தார்.இந்த நாட்டின் தலைநகர் ஹாமில்டன்.இந்த நாட்டின் சின்னம் சிவப்பு சிங்கம்.7 பெரிய தீவுகளும் நிறைய சிறிய தீவுகளும் கொண்ட நாடு இது.இந்த நாடு வட அமெரிக்காவின் கிழக்குக் கடற்கரையில் வட அட்லாண்டிக் கடலில் அமைந்துள்ளது.1609-ஆம் ஆண்டிற்கு பிறகு இங்கிலாந்தின் காலனி இந்த நாட்டில் உருவானது.இந்த நாட்டில் 5 வயது முதல் 15 வயது வரை இலவசக் கல்வி அளிக்கப்படுகிறது.இந்த நாட்டின் முக்கிய... Continue Reading →

சென்னை வடபழனி புத்தகக் கண்காட்சி 2020

புலம் பதிப்பகம் மற்றும் இன்ஃபோ மீடியா இணைந்து நடத்தும் சென்னை வடபழனி புத்தகக் கண்காட்சி 15/03/2020 அன்று தொடங்கி 30/03/2020 வரை மொத்தம் 16 நாட்களுக்கு அம்பிகா எம்பையர் எதிரில் உள்ள கோல்டன் கணேஷா திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. 10-50% வரை சிறப்புத் தள்ளுபடியுடன் கூடிய கோடைகாலப் புத்தகக் கண்காட்சிக்கு அனைவரும் வாரீர்..! way to chennai vadapalani book exhibition 2020 #one_minute_one_book #tamil #book #review #chennai #vadapalani_book_exhibition_2020

Due to CORONA

International Book Fair 2020 of The London Book Fair-UK, The Leipzig Book Fair-Germany, Paris Book Fair-France, Bologna Children’s Book Fair-Italy planning to takes place between 10 March 2020 to 02 April 2020 will be cancelled following the rapid increase of COVID-19 Coronavirus. Following government decisions to ban gatherings of more than 5000 people in confined... Continue Reading →

அம்மா..

பல கனவுகளுடனும் எதிர்பார்ப்புகளுடனும் தன்னுடைய திருமண வாழ்வில் அடியெடுத்து வைக்கும் ஒரு சக மனுஷி. சமைக்க, வீட்டுவேலை செய்ய, தன்னுடைய தேவைகளைப் பூர்த்தி செய்ய என  அவளை வெறும் ஒரு இயந்திரமாக மட்டுமே உபயோகிக்கும் ஆண். இப்படிப்பட்ட ஆணாதிக்க சூழ்நிலையில், மற்ற உறவினர்களின் கேலிப்பேச்சுக்கும் ஆளாக நேர்கிறது. இதற்கிடையே இரண்டு குழந்தைகள். சிறுவயது முதலே அன்பும் கனிவும் மரியாதையும் சொல்லிக் கொடுத்து அக்குழந்தைகளை வளர்க்கிறாள் அந்த அன்னை. வீட்டில் கணவனுக்கு கீழேயும் அலுவலகத்தில் மேலதிகாரிக்குக் கீழேயும் இருக்க... Continue Reading →

மரண வீடு

புராதன ஓலைச்சுவடிகள் நாட்டுடைமையாக மாற்றப்படாமல் போனதால் சிலருக்கு சொத்துக்களாகவும், சிலருக்கு சந்தைப் பொருட்களாகவும் தோற்றமளிக்கிறது. இம்முறை ஃபெலுடா, தபேஷ், லால்மோகன் பாபு மூவரும் தங்கள் விடுமுறை தினங்களைப் பூரியில் களிக்க கடற்கரை விடுதியில் தங்கினர். அதிகாலை கடற்கரை நடையில் பயணம் ஒரு பிணத்திற்கு அருகே சென்று நின்றது. போலீசிற்கு தகவல் சென்றது. மர்மங்களில் சிக்கிக்கொள்ளாமல் ஓய்வினைத் தொடர்ந்தார் ஃபெலுடா. தபேஷ் சுற்றுப்புற விசித்திரங்களைத் தலையில் போட்டு உருட்டிக்கொண்டிருந்தான். புராதன ஓலைச்சுவடிகள் வைத்திருந்த சென். நெற்றியில் கைவைத்து எதிர்காலம்... Continue Reading →

நிறம் மாறும் நிஜங்கள்

கல்யாணத்தைப் பிடிவாதமாக மறுக்கும் மைத்ரேயி கல்யாணம் செய்து கொண்டால்தான் சொத்துக்கள் அவள் பெயருக்கு மாறும் என்று உயில் எழுதி வைத்துவிட்டு இறந்து விடுகிறார் மைத்ரேயியின் அப்பா. அதற்காக போலியாக ஒரு திருமணத்திற்கு ஏற்பாடு செய்ய முடிவெடுக்கிறாள். இந்நிலையில் மைத்ரேயியின் தோழி புவனா வேலை விஷயமாக அவள் வீட்டிற்கு வந்து தங்க, திருமணமான தன் தோழி புவனாவிடம் உதவி கேட்கிறாள் மைத்ரேயி. புவனா முதலில் மறுத்துப் பின், வரவிருக்கும் ஆபத்தை அறியாமல் தன் கணவனை மைத்ரேயியிற்குப் போலியாகத் திருமணம்... Continue Reading →

#28 கேள்விகள் பல! பதில் ஒன்று!!

முதன்முதலில் நிலவில் கால் பதித்த நீல் ஆம்ஸ்ட்ராங் இந்த நாட்டைச் சேர்ந்தவர்.உலகின் மிகப்பெரிய அலுவலக வளாகம் பென்டகன் இந்த நாட்டில் உள்ளது.இத்தாலியக் கடற்பயணியான அமெரிகோ வெஸ்புச்சியின் பெயரைக் கொண்ட நாடு இது.ஐ.நா. பாதுகாப்புக் குழுவில் நிரந்தர உறுப்பினரான நாடு இது.ஐம்பது மாநிலங்களால் உருவான நாடு இது.மிசிசிப்பி மற்றும் மிசெளரி என்ற இரண்டு நீளமான நதிகள் பாயும் நாடு.எடிசன், கிரஹாம் பெல், பெஞ்சமின் ஃபிராங்க்ளின் போன்ற பிரபல விஞ்ஞானிகள் இந்த நாட்டைச் சேர்ந்தவர்கள்.மைக்கேல் ஃபெல்ப்ஸ் மற்றும் முகம்மது அலி... Continue Reading →

தூத்துக்குடி புத்தகக் கண்காட்சி 2020

தூத்துக்குடியில் உள்ள ராமையா மஹாலில் 28/02/2020 அன்று தொடங்கும் புத்தகக் கண்காட்சி 12/03/2020 வரை மொத்தம் 14 நாட்கள் நடைபெற உள்ளது. வாசகர்கள் 10% தள்ளுபடியில் புத்தகங்களை அள்ளிச் செல்லலாம். way to thoothukudi book exhibition 2020 #one_minute_one_book #tamil #book #review #thoothukudi #book_exhibition_2020

நாகர்கோவில் புத்தகக் கண்காட்சி 2020

நாகர்கோவில் பயோனியர் முத்து மஹாலில், மக்கள் வாசிப்பு இயக்கம் நடத்தும் புத்தகக் கண்காட்சி 40 அரங்குகளுடன் இந்த ஆண்டு 27/02/2020 அன்று தொடங்கி 08/03/2020 வரை 11 நாட்களுக்கு நடைபெற உள்ளது. தமிழகத்தின் முன்னணி பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் பங்குபெறும் நான்காம் ஆண்டு புத்தகக் கண்காட்சிக்கு உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். way to nagercoil book exhibition 2020 #one_minute_one_book #tamil #book #review #nagercoil #book_exhibition_2020

Latvian Book Fair 2020

BT 1 and LGA is going to organise The International Book and Publishers Exhibition – Latvian Book Fair held three days between 28 February 2020 to 01 March 2020 at Riga, Latvia. Great Readings for Great Readers..! For more details : http://www.bt1.lv/lbf/eng/index.php way to Latvian Book Fair 2020 #one_minute_one_book #tamil #book #review #latvia #international_book_fair_2020

#27 கேள்விகள் பல! பதில் ஒன்று!!

பசிபிக், கரீபியன் ஆகிய கடல்களின் கரைகளைக் கொண்ட ஒரே தென் அமெரிக்க நாடு இதுதான்.இந்நாட்டின் தலைநகர் பொகோட்டா.இந்நாட்டில் மரகதக் கற்கள் மற்றும் காபி பிரபலம்.இந்த நாட்டின் மிகப் பிரபலமான விளையாட்டு கால்பந்து.அமேசான் மழைக் காடுகளின் ஒரு பகுதி இந்த நாட்டில் இருக்கிறது.இந்த நாடு தென் அமெரிக்காவின் நுழைவாயில் என்றழைக்கப்படுகிறது.ஐந்து வண்ணக் கற்களால் நீரில் தோன்றும் வானவில் போன்று இந்த நாட்டின் மிக அழகான நதி கேனோ கிரிஸ்டஸ் காட்சியளிக்கிறது.இந்த நாடு பனாமா, வெனிசுலா, பிரேசில், ஈக்வடார், பெரு... Continue Reading →

ஆபத்து இங்கே ஆரம்பம்..!

விவேக் அந்த பிணத்தைப் பற்றி யோசித்துக்கொண்டே நடந்தவற்றை அசைபோட்டான். நீலேஷின் மனைவி கஸ்தூரி வேறு ஒருவனுடன் சென்று விட, மனைவியைப் பிரிந்த துக்கத்தில் இருந்த நீலேஷ் நண்பன் ரமணனின் கெஸ்ட் ஹௌசிற்கு ஓய்வெடுக்க வருகிறான். வந்த இடத்தில் ஒரு பெண்ணின் பிணம் கிடைக்கிறது. இதற்கிடையில் கேஸில் விவேக்கிற்கு ஒரு முக்கியமான தடயம் கிடைக்கிறது. அதை வைத்து விசாரித்துக் கொண்டிருந்த அவனுக்கு அந்தக் கொலைக்கான காரணம் தெரியவருகிறது. அந்தப் பெண்ணின் பிணம் யாருடையது என்பதை கிடைத்த தடயத்தின் மூலம்... Continue Reading →

Vilnius International Book Fair 2020

International Vilnius Book Fair is the biggest and most important book fair in the Baltic states. Lithuania capital city of Vilnius Book Fair held between 20 February 2020 and 23 February 2020 at  Lithuanian Exhibition and Congress Centre LITEXPO, Exhibition Halls. Thematic halls : Hall 1 – Music Hall Hall 2 – Culture centers in... Continue Reading →

#26 கேள்விகள் பல! பதில் ஒன்று!!

1946-ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்ற நாடு.இந்த நாட்டின் தேசிய விலங்கு அரேபிய மறிமான் ().இந்த நாட்டில் பெட்ரோல் கிணறுகள் இல்லை.இந்த நாட்டின் மிகப் பழமையான நகரம் பெட்ரா. இந்நகரம் ரோஸ் நகரம் என்றழைக்கப்படுகிறது.இந்த நாட்டின் அருகில்தான் சாக்கடல் () அமைந்துள்ளது.இந்த நாட்டின் தலைநகர் அம்மான் ().தென்மேற்கு ஆசியாவில் அமைந்துள்ள ஓர் அரபு நாடு.அகதிகளை ஏற்றுக்கொள்வதற்குத் தயக்கம் காட்டாத நாடு இது. இப்போதுள்ள மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு அகதிகள்தான்.இஸ்ரேலுடன் அமைதி ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ள இரண்டே நாடுகளில்... Continue Reading →

தேவியின் சாபம்

ஓய்வைக் கழிப்பதற்காகத் தன் நண்பரின் அழைப்பை ஏற்று ஹஸாரி பாகில் தங்குவதற்கு முடிவு செய்கிறார் ஃபெலுடா. ஹஸாரி பாக் பயணத்தின்போது அறிமுகமான சௌதுரி தன்னுடைய தந்தையின் பிறந்தநாள் விழாவிற்கு ஃபெலுடாவிற்கு அழைப்பு விடுத்தார். ஹஸாரி பாகிற்கு வந்து சேர்ந்ததும் தொப்ஷேவிற்கும் கங்குலிக்கும் எதிராக புலி ஒன்று தோன்றி மறைந்தது. அப்பொழுதுதான் தி கிரேட் மெஜஸ்டிக் சர்க்கஸிலிருந்து புலி தப்பித்த செய்தி கிடைத்தது. அதிர்ச்சிக்குப் பழக்கப்பட்ட ஃபெலுடா, சௌதுரி வீட்டு விழாவிற்கு செல்கிறார். அங்கே தான்.. ஓய்வுப் பயணம்... Continue Reading →

Morocco International Book Fair 2020

Salon international de l'edition et du livre 2020 The Ministry of Culture, Youth and Sports and the culture sector announces that it will organize the 26th edition of the International Publishing and Book Fair between 06 February 2020 and 16 February 2020, in the space of the Casablanca Markets and Exhibitions Office, the Tiznit Square,... Continue Reading →

Cuba International Book Fair 2020

Feria Internacional del Libro de La Habana 2020 Cuban Book Chamber organized the 29th International Book Fair will be held between 06 February 2020 and 16 February 2020 in the capital Havana, Cuba. way to Cuba International Book Fair 2020 #one_minute_one_book #tamil #book #review #cuba #international_book_fair_2020

திருப்பூர் புத்தகக் கண்காட்சி 2020

திருப்பூர் மங்கலம் ரோட்டிலுள்ள கேஆர்சி சிட்டி சென்டரில் திருப்பூர் பின்னல் புக் டிரஸ்ட் மற்றும் பாரதி புத்தகாலயம் இணைந்து நடத்தும் புத்தகக் கண்காட்சி 30/01/2020 அன்று தொடங்கி 09/02/2020 வரை மொத்தம் 11 நாட்களுக்கு நடைபெற உள்ளது. 17-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் புத்தகக் கண்காட்சிக்கு அனைவரும் வருக..! way to tiruppur book exhibition 2020 #one_minute_one_book #tamil #book #review #tiruppur #book_exhibition_2020

திருநெல்வேலி புத்தகக் கண்காட்சி 2020

பாளையங்கோட்டையிலுள்ள வஉசி மைதானத்தில் 01/02/2020 அன்று தொடங்கும் புத்தகக் கண்காட்சி 10/02/2020 வரை மொத்தம் 10 நாட்களுக்கு நடைபெற உள்ளது. திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம், தமிழ் வளர்ச்சி பண்பாட்டு மையம் மற்றும் பபாசி இணைந்து நடத்தும் இப்புத்தகக் கண்காட்சிக்கு உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம். நீங்கள் வாங்கும் புத்தகத்திற்கு சிறப்பு தள்ளுபடிகளும் உண்டு. way to tirunelveli book exhibition 2020 #one_minute_one_book #tamil #book #review #tirunelveli #book_exhibition_2020

முடிந்தால் உயிரோடு

மாமனாருடன் சேர்ந்து வேலை செய்யாததால் சூழ்ச்சி செய்து தன்னுடைய கம்பெனியை தன்னுடைய மனைவியிடமே ஏலத்தில் இழந்துவிட்ட சோகத்தில் இருந்தான் குருப்ரசாத். இந்நிலையில் குருப்ரசாத்தை தங்கள் கம்பெனிக்கு இழுக்க முயற்சி செய்கிறாள் குருப்ரசாத்தின் மனைவி வர்ணா. பேச்சு கைகலப்பில் முடிந்து குருப்ரசாத் இறக்கிறான். குருப்ரசாத்தின் பி.ஏ ஜெயச்சந்திரனும் வர்ணாவும் சேர்ந்து அவனை கெஸ்ட் ஹௌசில் புதைக்கின்றனர். அண்ணனைத் தேடி வரும் மைதிலி அவனைக் காணாமல் விவேக்கிடம் உதவி கோர, விவேக்கால் முடிந்ததா என்பதே மீதிக்கதை. #one_minute_one_book #tamil #book... Continue Reading →

விளக்கம் ப்ளீஸ் விவேக்..!

சந்தேகம்... சந்தேகமா...? “சந்தேகம் சாத்தானின் பல்லக்கு அற்புதம்!!! எனக்கு நம்பிக்கை இல்லை ராமசாமி!!! நம்பிக்கைதான் ஆண்டவரின் நங்கூரம் அற்புதம்!!!” இந்த வசனத்தை super delux படத்தில் பார்த்திருப்பீர்கள். ஆனால், சந்தேகமும், புறணி பேசவும் ஆரம்பித்த பிறகு தான், சிந்தனையும் அறிவும் நமக்கு வளர்ந்ததாக ஆராய்ச்சி முடிவுகள் பறைசாற்றுகின்றன. ஆகையால் இதெல்லாம் நம் பிறவிகுணம். 20-களில் நம் சந்தேகங்களை கூகுள் பிதா தீர்த்து வைத்துக் கொண்டிருந்தார், நேற்றுவரை. ஆனால், 90-களில் அதாவது க்ரைம் நாவலில் விவேக் தோன்றியபின் அவரின்... Continue Reading →

France International Comic Festival 2020

Festival International de la Bande Dessinée France 2020 47th Edition of Comic Festival is starting from 30 January 2020 to 02 February 2020 at Angoulême, France. All are invited to visit this festival For more details : https://www.bdangouleme.com/ way to Festival International de la Bande Dessinée France 2020 #one_minute_one_book #tamil #book #review #france #international_comic_festival_2020

International Kolkata Book Fair 2020

Publishers & Booksellers Guild organized the 44th Kolkata International Book Fair which is held between 29 January 2020 and 09 February 2020 located in Central Park Mela Ground, Salt Lake, Kolkata on 12 PM to 8 PM. For more details : guildpb@gmail.com way to International Kolkata Book Fair 2020 #one_minute_one_book #tamil #book #review #international_kolkata_book_fair_2020

தீர்ப்பு

மழை தாறுமாறாகப் பெய்து கொண்டிருந்த நேரத்தில் நான்கு பேர் சேர்ந்து ஒருவனைக் கத்தியால் குத்துவதை இருட்டில் பார்த்துவிட்டாள் சாரதாமணி. அதில் ஒருவன் தன்னிடம் படித்த மாணவன் பரமேஷ். உண்மையை வெளியே சொன்னால் அவளுடைய மகளையும் மருமகனையும் கொன்றுவிடுவதாக மிரட்டிய பரமேஷைப் பார்த்த சாரதாமணிக்கு குலை நடுங்கியது. இந்நிலையில் க்ரைம் பிரான்ச்சில் இருக்கும் தன் மருமகன் அசோக்கிடம் உண்மையைச் சொல்லமுடியாமல் தவிக்கிறாள். அதேவேளையில் குற்றவாளிகளைப் பிடித்துவிட்டதாக நாடகமாடுகிறது போலீஸ். மேற்கொண்டு நடந்தது என்ன? #one_minute_one_book #tamil #book #review... Continue Reading →

ஒரு மதிப்பிற்குரிய குற்றம்…

கள்ளநோட்டு அடிப்பவர்களைப் பற்றி க்ரைம் பிராஞ்ச் விஜிலென்ஸ்-ஐ சேர்ந்த சத்யனுக்கு துப்பு கிடைக்க தனியாளாகச் சென்று அவர்களை மடக்க நினைத்து எதிரிகளிடம் மாட்டி உயிரிழக்கிறான். சூர்யகலாதரன் தன்னுடைய நண்பன் சத்யனின் மரணத்தைப் பற்றி விசாரித்துக்கொண்டிருக்கும்போதே அவனுடைய தங்கை தாரிகாவும் மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறாள். மூன்றாவதாக சூர்யகலாதரனின் மற்றொரு நண்பன் பிரதாப்பும் கொலை செய்யப்பட, இந்த இடத்தில் போலீசுக்கு கொலையில் ஒரு தடயம் கிடைக்கிறது. குற்றத்தை மதிப்பிற்குரிய விஷயமாகக் கருதும் எதிரிகள் யார்? கள்ளநோட்டு கும்பல் பிடிபட்டதா?... Continue Reading →

இருவேறு உலகம்

“ஒரு சிறிய விதைக்குள் எத்தனை விருட்சங்கள் வேண்டுமானாலும் இருக்கலாம்”. உலக நன்மைக்காக இயங்கும் ஆன்மீக ரகசிய இயக்கத்தின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் மாஸ்டருக்கு, பூமி தற்போது அழிவு நிலைக்குப் போய்க்கொண்டிருப்பதையும், அதற்கு தூய்மையிலும் தூய்மையான அறிவில் உச்சமாக இருக்கும் ஒருவனைத் தீய சக்திகள் பயன்படுத்தி பூமியை அழிக்க நினைப்பதையும் அறிந்தபோது அவர் மனம் பதறியது. இந்நிலையில் மேற்சொன்ன மேன்மையான க்ரிஷ் எதிரிகளின் சூழ்ச்சியினால் பாம்புக்கடிக்கு உள்ளாகிறான். ஆனால், அதிர்ஷ்டவசமாக வேற்றுகிரஹவாசியால் காப்பாற்றப்படுகிறான். அதேவேளையில் மர்ம மனிதன் மாஸ்டரின்... Continue Reading →

Jaipur Literature Festival 2020

One of the largest and best literature festival of the world, Jaipur Literature Festival is started from 23 January 2020 to 27 January 2020 at Diggi Palace, Jaipur. Musical & Cultural events are awaiting for your presence. Way to Jaipur Literature Festival 2020 #one_minute_one_book #tamil #book #review #jaipur #literature festival 2020

Cairo International Book Fair 2020

The largest and oldest book fair in the Arab world is to take place at Egypt International Exhibition Centre, which is located at Al-Mosher Tantawy axis in Fifth Settlement. Book Fair held on this year from 22 January  2020 running until 04 February 2020. Way to Cairo International Book Fair 2020 #one_minute_one_book #tamil #book #review... Continue Reading →

வெள்ளை நிழல்!

ஈஸ்வரி தன்னுடைய அப்பாவிடம் தன் காதலைப் பற்றியும் கிரிதர் பற்றியும் கூற வெகுண்ட கோபாலகிருஷ்ணன், கிரிதரை நேரில் சந்திக்க வரச் சொல்கிறார். அவனுடைய அந்தஸ்தை முன்னிறுத்தி அவனை அவமானப்படுத்தி வெளியே அனுப்புகிறார் ஈஸ்வரியின் அப்பா. அவரை விட ஒருபடி மேலே வந்தபிறகு தான் இருவருக்கும் திருமணம் என்று முடிவெடுத்த அவன் அயராது உழைத்து முன்னேறுகிறான். கல்யாணம் ஈஸ்வரி அப்பாவின் சம்மதத்துடன் சிம்பிளாக நடக்க, ஒரு வாரத்திலேயே  அவளை விட்டு தனியாக மெட்ராஸ் செல்கிறான். திடீரென ஒருநாள் ஈஸ்வரி... Continue Reading →

#24 கேள்விகள் பல! பதில் ஒன்று!!

இந்த நாட்டின் மொத்தப் பரப்பில் 11% பனியால் சூழப்பட்டிருக்கும்.இந்த நாட்டின் தலைநகர் ரெக்யவிக்.இது எரிமலைகளின் நாடு என்றழைக்கப்படுகிறது. 200 எரிமலைகள் உள்ளன. மேலும் வெந்நீர் ஊற்றுகள் அதிகம்.நோர்டிக்(Nordic) நாடுகள் என்றழைக்கப்படும் நாடுகளில் ஒன்று.வட ஐரோப்பாவிலுள்ள ஒரு தீவு நாடு.ஆர்டிக் நரி, பனி மான், பஃபின் பறவை, கம்பளி ஆடு, திமிங்கிலம் போன்றவை இந்த நாட்டின் முக்கியமான உயிரினங்கள்.இந்த நாட்டில் இலவசமாக கல்வி வழங்கப்படுகிறது.இந்த நாட்டு தேசியக் கொடியில் உள்ள சிவப்பு எரிமலையையும், வெள்ளை பனியையும், நீலம் கடலையும்... Continue Reading →

2000 சதுர அடி சொர்க்கம்

மிஸ்டர் டிஸ்ஸாஸ்டர் என்று வான இயல் வல்லுனர்களால் வர்ணிக்கப்பட்ட வால்நட்சத்திரத்தைப் பற்றி ஸ்பேஸ் ரிசர்ச் சென்டரின் ரிடையர்ட் டைரக்டர் ரவிசங்கரிடம் விசாரிக்க வருகிறாள் டாக்டர் வாணி சுந்தர். விபரீத வால்நட்சத்திரம் கடினமான உப்புக்களாலும் தாதுக்களாலும் உருவாக்கப்பட்டிருக்கும் வால்நட்சத்திரம் பூமியை உரசிச் செல்வதால் ஓசோனில் ஓட்டை உண்டாக்கி அதன் துகள்கள் பூமியின் மேற்பரப்பில் விழ வாய்ப்புள்ளதாகவும் முழுவதுமாக விவரித்தார் ரவிசங்கர். அடுத்ததாக அவள் கேட்ட கேள்வியில் அதிர்ந்து போன அவர் வந்திருப்பது டாக்டர் இல்லை என்பதை உணர்ந்தார். மேலும்,... Continue Reading →

Blog at WordPress.com.

Up ↑