One india tamil-வலைத்தளத்தில் நமக்கு விருப்பமான, க்ரைம் கதைகளின் மன்னன் ராஜேஷ்குமார் அவர்களின் க்ரைம் நாவல்களை வாசித்து, திகிலை ரசித்து மகிழுங்கள்.. One india tamil-ல் தற்போது வாரந்தோறும் வெள்ளிக்கிழமை அன்று விறுவிறுப்பான “ஃப்ளாட் நெம்பர் - 144 அதிரா அப்பார்ட்மெண்ட்” தொடர் வெளிவந்து வாசகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. கீழே உள்ள லிங்க்கை க்ளிக்கி நாவலை வாசிக்கத் தொடங்குங்க வாசகர்களே..! https://tamil.oneindia.com/topic/%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-144-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D “விபரீதங்கள் இங்கே விற்கப்படும்” நாவலைப் படிக்க கீழே உள்ள லிங்க்கை க்ளிக்கவும்.. https://tamil.oneindia.com/topic/rajesh-kumar-crime-novels?page-no=4... Continue Reading →
Bynge App
தொடர்கதைகளுக்கென உருவாக்கப்பட்ட ஒரு செயலியாக Bynge இருப்பது, தமிழ் இலக்கிய எழுத்துலக வரலாற்றில் புதுமையான மற்றும் வரவேற்கத்தக்க முயற்சியாகும். தமிழ் இலக்கிய வாசகர்களுக்கென உருவாக்கப்பட்டுள்ள இந்த செயலியில், முன்னணி எழுத்தாளர்களான ராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகர், அராத்து, இந்திரா சௌந்தர்ராஜன், ஜி.ஆர்.சுரேந்தர்நாத் போன்றவர்களின் நாவல்கள் தொடர்கதையாக வெளிவந்து செயலியை அலங்கரிக்கின்றன. கிட்டத்தட்ட இருபது எழுத்தாளர்கள் எழுதிவரும் Bynge செயலியில் தற்போது வலம் வருபவை பற்றிய சிறு குறிப்பு.. எழுத்தாளர்களும் - அவர்களின் எழுத்துக்களும்.. ராஜேஷ்குமார் – நள்ளிரவுச் செய்திகள்... Continue Reading →
சர்வைவா
கற்பனைகள்… பெரிய உருண்டையான இந்த பூமியில் வாழும் ஒட்டுமொத்த உயிரினங்களிலும் மனிதனை மட்டும் தனித்துக் காட்டும் ஒரு சமாச்சாரம்தான் கற்பனைகளும், கனவுகளும். இங்கு நடக்கும் அத்தனைக்கும் விதை போட்டது இதுதான். who knows…?! நாம் இப்போது வாழும் வாழ்க்கையை ஏதோ ஒரு ஆதி மனிதன் கனவாக கூட பார்த்திருக்கலாம். இன்னும் விளக்கமாக சொன்னால், ஏதோ ‘ஒரு’ மனிதன் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் நெருப்பினைக் கண்டுபிடித்திருப்பான். ஆனால் அதை எப்படி கையாளுவதென வேறு வேறு மனிதர்கள் தங்களது மூளைகளில்... Continue Reading →
பவளப் பள்ளத்தாக்கு – Crime Novel
புரபொசர் சூர்யநாராயணன் திடீரென கண்விழித்த போது, தான் ஒரு அறையில் அடைக்கப்பட்டிருப்பதை உணர்ந்தார். இதற்கு முன் நடந்த சம்பவங்கள் அவரது மனதில் ஓடின. ஜனாதிபதி கையால் விருது வாங்கக் காத்திருந்த அவர் திடீரென வியர்த்துக் கொட்டி, நெஞ்சைப் பிடித்துக் கொண்டு மயங்கி விழுந்திருந்தார். அந்த அறையில் இருந்த இருவர், புரபொசரைக் கேள்வியால் துளைத்துக் கொண்டிருந்தனர். அவர்களது கேள்வி இதுதான்.. பயோஸான் 4 நுண்ணுயிர்கள்!! அதைப் பற்றி தனக்கு ஒன்றும் தெரியாது மறுத்துக் கொண்டிருந்த புரபொசருக்கு முன்னால், அவர்கள்... Continue Reading →
பெண்ணொன்று கண்டேன்..?!
மனிதன் இரசிக்கவே இரவுகள் பிறந்ததோ? அடடே..! எத்தனை அமைதி! இவ்வுலகிலும், என்னுள்ளத்திலும்! காரணம் அவள்தான். தொட்டிலில் படுத்துறங்கும் அளவிற்கு வயதில்லை. இருந்தும் தூக்கம் இல்லாமல் தடுமாறும் போதெல்லாம் தாலாட்டு பாடி கண்ணுறங்க செய்திருக்கிறாள். காலையில் தோன்றும் சூரியனை நான் கண்டதில்லை. காரணம், என்னை அவள் மடியில் இருந்து பிரிக்க அந்த சூரியனுக்கும் விருப்பமில்லை. முதலில் கண்ட முகமும் அவள்தான்; முதலில் நான் காணும் முகமும் அவள்தான். காணும் இடமெல்லாம் அவள் மட்டுமே தெரிந்தாள். நான் யாரென்று அவளிடம்... Continue Reading →
உலகம் உன் வசம்..!
COMMUNICATION.. உங்களால கொஞ்ச நேரத்துக்கு யாருகிட்டயும் பேசாம அமைதியா இருக்க முடியுமா..? கண்டிப்பா முடியாது. பேச்சு... இது இல்லாம நிறைய பேரால இருக்கவே முடியாது. என்னால சாப்பிடாம கூட இருக்க முடியும். ஆனா, பேசாம சத்தியமா இருக்க முடியாதுன்னு நிறைய பேர் சொல்லி கேள்விப்பட்டு இருப்பீங்க. இப்போ நாம பாக்க போறது வெறும் பேச்சைப் பத்தி மட்டும் இல்லன்னு சொல்லிக்கறேன். COMMUNICATION அப்படின்னா பேசறது மட்டும் தான்னு நிறைய பேர் நினைச்சிட்டு இருக்காங்க. ஆனா, அது உண்மை... Continue Reading →
சிம்லா ரம்யா..?! – Crime Novel
அன்று மாலை ரம்யாவைப் பெண் பார்க்க செல்ல இருந்தான் ரகுநாதன். ஆனால், தன்னுடைய மோசமான பழக்கவழக்கங்களைப் பற்றி அட்சரசுத்தமாக புட்டுப்புட்டு வைத்துவிட்டு சென்ற ரம்யாவை நினைத்து அந்த நிமிடம் மனதிற்குள் கறுவிக்கொண்டிருந்தான் ரகு. அவளைப் பழிவாங்க சமயம் பார்த்துக் காத்திருந்தான். அதே நேரம் தனக்கு வரும் வரன்களைக் காரணம் சொல்லி தட்டிக்கழித்துக் கொண்டிருந்த அந்த ரம்யா, பிரபாகரிடம் சற்று பயத்துடன் பேசிக்கொண்டிருந்தாள். பிரபாகரும் ரம்யாவும் காதலர்கள். வரன்களின் உண்மையான சுயரூபத்தை அவர்களிடமே சொல்லி விலக வைப்பது அவர்களின்... Continue Reading →
அதே இரவு..! – Crime Novel
நான்கு வருட சிறைத்தண்டனை முடிந்த ரதீஷ், தன்னுடைய காதலி சூர்யாவை சந்திக்க அவள் வீட்டிற்கு வருகிறான். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த சூர்யாவிற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜனுடன் திருமணம் முடிந்திருந்தது. திருமணமான விசயத்தைக் கேள்விப்பட்டு அதிர்ந்த ரதீஷின் கையில் இருந்தது சூர்யா கொடுத்திருந்த லவ் லெட்டர். சூழ்நிலை காரணமாக சூர்யாவிற்காக சிறைக்கு சென்ற ரதீஷ், தன்னை அவள் திருமணம் செய்யாமல் ஏமாற்றியதால், அந்த லெட்டரை வைத்து சூர்யாவிடம் பணம்கேட்டு அவளை ப்ளாக்மெயில் செய்கிறான். தன் கணவர் ராஜனுக்குத் தெரியாமல்,... Continue Reading →
நீல நிற நிமிஷங்கள்.! – Crime Novel
புகழ்பெற்ற டென்னிஸ் வீராங்கனையான கிருபாவின் அப்பாவிற்கு திடீரென ஹார்ட் அட்டாக் ஏற்பட, ஹாஸ்பிடலில் அட்மிட் செய்கிறார்கள். கிருபாவின் ரசிகை என சொல்லிக்கொண்டு ஹாஸ்பிடலுக்கே போன் வர, பெண் குரலில் பேசிய ஒருவன் கிருபாவிடம் தவறான நோக்கத்துடன் பேசுகிறான். இந்த விசயத்தைக் கிருபா தன் அம்மா வசுந்தராவிடம் கூற, கிருபாவின் அம்மாவிற்கும் அதேபோல் அழைப்பு வர, உதவி போலீஸ் கமிஷனரிடம் விசயத்தைக் கொண்டுபோகிறாள் வசுந்தரா. மேற்கொண்டு தான் பார்த்துக்கொள்வதாக போலீஸ் சொல்லி செல்ல, ஒருநாள் வீட்டிற்கே வந்து மிரட்டுகிறான்... Continue Reading →
உதடுகள் சுடும்..?! – Crime Novel
மும்பையில் உள்ள தனது ஆட்டோ காரேஜை நிழல் காரியங்களுக்கு பயன்படுத்தி வந்த நகுல் லட்சாதிபதியாவதற்கு ஒரு பெரிய வாய்ப்பு வந்தது. குபேர் என்ற பணக்காரரிடம் உள்ள புகைபிடிக்கும் பைப்பில் கோடிக்கணக்கான மதிப்புள்ள டிவைன் வைரங்கள் இருப்பதாகவும், அதை எடுத்துக் கொடுத்தால் ஒரு கோடி ரூபாய் கொடுக்க ஆள் தயாராக இருப்பதாகவும் நண்பன் சாம்பமூர்த்தி சொல்ல, களத்தில் இறங்குகிறான் நகுல். ஐந்து லட்சத்திற்கு விலை போகக்கூடிய பழங்கால புகைக்கும் பைப் குபேரிடம் இருப்பதாகக்கூறி அதை எடுத்துத் தருமாறு, அவரது... Continue Reading →
33 புதிய சிந்தனை வெற்றிக் கதைகள்.!
ஃலைப்-ல ஜெயிக்கறதுக்கு இங்க நிறைய பேருக்கு மோட்டிவேசன்னு ஒண்ணு கண்டிப்பா தேவைப்படுது. அது ஃசெல்ப் மோட்டிவேசனா இருந்தாலும் சரி, இல்ல ஒருத்தர்கிட்ட இருந்து கிடைக்கற மோட்டிவேசனா இருந்தாலும் சரி. இப்படி ஒவ்வொருத்தருக்குமே அவங்க ஃலைப்-ல ஏதாவது ஒரு சில எடத்துல கண்டிப்பா மோட்டிவேசன் தேவைப்பட்டிருக்கும். ஜெயிக்கற எல்லாருமே அவங்க எதைப் பாத்து, இல்ல யாரைப் பாத்து மோட்டிவேட் ஆனாங்கன்னு ஒரு இன்ஸ்பிரேஷன் ஸ்டோரி சொல்லிருப்பாங்க. அப்படிப்பட்ட ஒரு மோட்டிவேசன் புக் தான் இந்த சிந்தனை வெற்றிக் கதைகள்.... Continue Reading →
அக்கறையாய் ஒரு அக்கிரமம் – Crime Novel
கார்த்தீஷ்-நிகிலாவின் எதிர்வீட்டிற்கு புதிதாக ஜெயபால்-ஹேமா தம்பதி குடிவருகின்றனர். முன்பகை காரணமாக சண்டை போட்டு பிரிந்திருந்த முன்னாள் நண்பன் ஜெயபாலைப் பார்த்த கார்த்தீஷ் வெகுண்டான். சமாதானப்படுத்த வந்த போலீஸ் இன்ஸ்பெக்டரான ஜெயபாலை சந்திக்க மறுக்கிறான் கார்த்தீஷ். லட்ச ரூபாய் மதிப்புள்ள கஞ்சா பொருட்களைக் கடத்த திட்டம் போட்ட கும்பலைப் பிடித்துக்கொடுத்த ஃபாரஸ்ட் ரேஞ்ச் ஆபிசர் கார்த்தீஷைப் பழிவாங்குவதற்காக அவன் வீட்டிற்குள் நுழைகிறான் ஒருவன். வீட்டில் அவன் மனைவி நிகிலா மட்டுமே இருக்க, அவளை மிரட்டி கார்த்தீஷ் வரும்வரை காத்திருந்து... Continue Reading →
உடைந்த இரவு – Crime Novel
மனைவி மைத்ரேயி வந்த நேரம் தான், தன்னுடைய கம்பெனியின் முன்னேற்றத்திற்குக் காரணம் என்று பெருமையாக நினைத்துக்கொண்டிருந்தான் தினேஷ். ஆனால், மைத்ரேயியோ அதற்கு நேர்மாறாக கணவனை ஏமாற்றிக்கொண்டே தன் முன்னாள் காதலன் பாஸ்கருடன் தவறான தொடர்பு வைத்திருந்தாள். இதற்கிடையில் தங்களுக்கு இடைஞ்சலாக இருக்கும் தினேஷை ஒரேயடியாக தீர்த்துக்கட்டி விட்டு இருவரும் சந்தோசமாக இருக்க முடிவு செய்கின்றனர். இந்நிலையில் திடீரென ஒரு பெண் போன் செய்து மைத்ரேயியை மிரட்டுகிறாள். பாஸ்கருடனான தொடர்பை விட்டுவிட வேண்டும் என்றும் இனி கணவனுடன் ஒழுங்காக... Continue Reading →
விரைந்து வா விவேக் – Crime Novel
தன்னுடைய மனைவி நளினியின் நடத்தையில் சந்தேகப்படும் கெளதம், அவளைத் தீர்த்துக்கட்ட நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறான். ஓடும் ரயிலில் சிங் வேஷம் போட்டு நளினியைத் தீர்த்துக்கட்டிவிட்டு தற்கொலை போல சித்தரிக்கத் திட்டம் தீட்டுகிறான். இன்னொரு பக்கம் மந்திரி பதவி பறிபோகக் காரணமாகக் காரணமாக இருந்த ரிப்போர்ட்டர் நீரஜாவைத் தீர்த்துக்கட்ட காத்திருந்த கோதண்டத்திற்கு, தணல் தங்கராஜ் ஒரு மாஸ்டர் பிளான் போட்டுக்கொடுக்கிறான். அதன்படி ஒத்தக்கால் தாமஸ் என்ற ரவுடியை வைத்து ரயிலில் நீரஜாவின் உயிரைப் பறிப்பதாகத் திட்டம். கொலைத்திட்டங்களுக்கு நடுவில்... Continue Reading →
ஆல்பிரெட் ஹிட்ச்காக்கின் – மர்மக்கதைகள்
ஒவ்வொரு நாவல்களும் (அ) கதைகளும் வாசிப்பவர்களை கனவுலகுக்கு அழைத்துச் செல்லும். அவற்றில் சில எதார்த்தமாகவும், சில அசாத்தியமாகவும், சில சிந்திக்கவும் வைக்கும். இதன் வரிசையில் வெகுசில கதைகளே நம்மை திகிலூட்டும். அதுபோன்ற ஒரு கதைத் தொகுப்பே “ஆல்பிரெட் ஹிட்ச்காக்கின் – மர்மக்கதைகள்”. ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு ரகம். மொத்தம் 11 கதைகள். எல்லாக் கதைகளிலும் ஏதோ ஒரு சாமானிய விஷயமே உங்களை அச்சுறுத்தும், புதிர் போடும், திகிலாக்கும். உதாரணத்திற்கு ஒரு துண்டு பேப்பர், இரண்டு கதவுகள், சிறு... Continue Reading →
கிழக்கே போகும் உயிர்..?! – Crime Novel
அடிபட்டு விழுந்துகிடந்த அந்த இளைஞனின் பெயர் தாஸ் என்று அவன் டயரியை வைத்து டிராபிக் போலீஸ் கண்டுபிடித்தனர். ஸ்பாட்டுக்கு வந்த கோகுல்நாத்தும் அவினாஷும் வேறு தடயங்களைத் தேடிக் கொண்டிருக்க, ஒரு துண்டு சீட்டு அவன் பேண்ட் பாக்கெட்டில் இருந்து கிடைத்தது. “Life Towards East” என்று அந்த சீட்டில் எழுதப்பட்டிருந்த வார்த்தைக்கு அர்த்தம் புரியாமல் குழம்பிப் போயினர் போலீஸ். தாஸின் வீட்டை சோதனையிட்ட போலீசாருக்கு கிடைத்தது, அவன் காதலி சந்தியாவின் அட்ரஸ். சந்தியாவைத் தேடிச்சென்ற போலீஸுக்கு அவளின்... Continue Reading →
ஆண்ட்ராய்டின் கதை
“Game Changer” நியூட்டனின் முதல்விதியின் அடிப்படையில், டெக்னாலஜியின் இயக்க நடைமுறையை மாற்றியதில் முக்கியமானது Steve Jobs-ம் அவரது ஐபோனும். ஆண்ட்ராய்டோட கதையில ஐபோனா..? அப்படீன்னு உங்க மனசு ஒரு கேள்வி கேக்கும்...அதுக்கான பதிலை நான் கடைசியில சொல்றேன். இந்த புத்தகம் ஒரு மினி சைஸ் History Book. ஆனா போர் அடிக்காம..நிறைய ஆச்சர்யங்களைத் தரும். அதேசமயம் கதையில அங்கங்க மலரும் நினைவுகளும் வந்துபோகும். அப்புறம் மானே..தேனே..பொன்மானே.. மாதிரி அங்கங்க Fun Facts-ம் வரும். உற்சாகமேற்படுத்தும் நடை உங்களை... Continue Reading →
தித்திக்கும் தீ..! – Crime Novel
பைகாரா அணையைப் பற்றிப் பேட்டி எடுக்கப் போவதாக அணையின் நிர்வாகி சிக்கந்தரிடம் தன்னை அறிமுகம் செய்துகொண்ட லட்சணா, அவரிடம் பேச்சுக்கொடுத்துக் கொண்டே அணையில் விழுந்து தற்கொலைக்கு முயற்சிக்கிறாள். நீச்சல் தெரியாத சிக்கந்தர் மிகவும் கஷ்டப்பட்டு அவளைக் காப்பாற்றி ஹாஸ்பிடலில் சேர்க்கிறான். உண்மையில் வந்திருந்த அவள் பிரஸ் ரிப்போர்ட்டர் இல்லை என்பதை அறிந்த சிக்கந்தர் திடுக்கிடுகிறான். சிறுவயதிலேயே பெற்றவர்களை இழந்து அனாதை விடுதியில் வளர்ந்த லட்சணா தன்னுடைய தற்கொலைக்கான காரணத்தை யாரிடமும் தெரிவிக்க மறுத்துவிடுகிறாள். காதல் தோல்வியால் தற்கொலைக்கு... Continue Reading →
ETA ஓர் அறிமுகம்..
Euskadi Ta Askatasuna.. பெயரைப் பார்த்தவுடன் ஏதோ MNC கம்பெனி என்று நினைத்து இந்தப் பதிவைத் தவிர்த்துவிட வேண்டாம். ETA - இது ஒரு தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கம். இவர்களின் ஆசை, கனவு, லட்சியம், விருப்பம் எல்லாமே பாஸ்க்..பாஸ்க்..பாஸ்க் மட்டுமே. ஸ்பெயின் நாட்டின் கீழ் தன்னாட்சி அதிகாரத்துடன் இயங்கிவரும் பாஸ்க்-கை தனி சுதந்திர நாடாக்க விரும்பி, அந்த ஒரு நோக்கத்திற்காக மட்டுமே கடிவாளம் போட்டபடி இயங்கிவரும் அமைப்பே இந்த ETA. ஆரம்பத்தில் நல்ல பிள்ளையாக அமைதி... Continue Reading →
விவேக் விஷ்ணு வெற்றி..! – Crime Novel
கண்டிப்புக்கு பேர்போன அந்த லேடிஸ் ஹாஸ்டலுக்கு விவேக் சென்ற போது நேரம் முன்னிரவைத் தாண்டியிருந்தது. வார்டனின் அவசர அழைப்பால் ஹாஸ்டலுக்கு விரைந்துவந்த விவேக் தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு சென்றான். மொட்டை மாடியில் தண்ணீர்த் தொட்டிக்கு அருகில் ஒரு இளைஞனின் பிணம் சாய்த்து உட்காரவைக்கப்பட்டிருந்தது. பிணத்திடம் இருந்து கிடைத்த தபால் ரசீதை தடயமாக வைத்துக்கொண்டு அது சம்பந்தமாக விசாரிக்க சென்ற விஷ்ணுவுக்கு, அதில் ஒரு பெண் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவருகிறது. அடையாளம் தெரியாத அந்தப் பிணத்தை பற்றிய உண்மையோடு... Continue Reading →
நிழலின் நிறம் சிவப்பு..?! – Crime Novel
ஸ்டெனோவாக வேலை பார்த்துக் கொண்டிருக்கும் பாக்யாவைப் பெண் பார்க்க வந்திருந்தவர்கள் அளவுக்கு அதிகமாக வரதட்சணை கேட்க, மாப்பிள்ளை வீட்டாரிடம் பாக்யா சண்டை போட, பார்த்துக்கொண்டிருந்த அவளின் அம்மா நெஞ்சைப் பிடித்துக்கொண்டு அப்படியே மடங்கி விழுகிறாள். பாக்யாவின் அம்மாவிற்கு உடனடியாக இருதயத்தில் ஆபரேஷன் செய்ய வேண்டிய சூழல். ஆபிசில் முதலாளி ரகோத்தமராவிடம் கடனாகப் பணம் கேட்கப் போன பாக்யாவிற்கு அதிர்ச்சி காத்திருந்தது. வயதான தன்னைத் திருமணம் செய்து கொண்டால் மட்டுமே பண உதவி கிடைக்கும் என முதலாளி சொல்ல..பாக்யா... Continue Reading →
நந்திபுரத்து நாயகி
Spoiler Alert..! பொன்னியின் செல்வனுக்கு பிறகே இந்தப் புத்தகத்தை எடுக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். சூழ்நிலை காரணமாக உடனே எழுத வேண்டியதாகிவிட்டது. இதுவரை பொன்னியின் செல்வன் புதினத்தைப் படிக்காத வாசகர்கள், அதை முடித்துவிட்டு இந்தப் புத்தகத்தை வாசிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். அருண்மொழிவர்மன் தன்னுடைய சித்தப்பாவிற்கு முடிசூட்டியவுடன் அவரை, கடல் கடந்த நாட்டிற்கு சிலகாலம் அனுப்பி வைக்கிறாள் குந்தவை. அந்த நேரத்தை உபயோகப்படுத்தி நடக்கும் சில சம்பவங்களும் அருண்மொழி நந்திபுரம் வந்தபிறகு நிகழும் சில சம்பவங்களுமே இந்தக் கதை.... Continue Reading →
எங்கும் விவேக்..! எதிலும் விவேக்..! – Crime Novel
அறிவியல் கருத்தரங்கில் கலந்துகொள்ளவிருக்கும் விஞ்ஞானிகளைக் கொல்வதற்கு டைனமைட்டை வெடிக்க வைக்க அந்தக் கூட்டத்திலேயே ஒரு கருப்பு ஆடு இருக்கிறது. இதுபற்றி உளவுத்துறைத் தலைவர் சக்ரவர்த்திக்கு ரகசிய தகவல் கிடைக்கிறது. உதவிக்கு விவேக்-விஷ்ணுவைக் கூப்பிட்ட உளவுத்துறைத் தலைவர், அந்தக் கருப்பு ஆடு யார் என்பதையும், அவருக்கு கிடைத்த தகவல் பற்றியும் கூற, விசயத்தைக் கேள்விப்பட்ட விவேக் திடுக்கிட்டான். கதையில் திடீர் திருப்பமாக ரகசிய தகவல் கொடுத்த ராஜமாணிக்கத்தின் சலடம் போலீசிற்கு கிடைக்கிறது. இதற்கடுத்ததாக ராஜமாணிக்கத்தின் காதலி புவனேஸ்வரியைக் கொலைவெறியுடன்... Continue Reading →
ஊருக்கு நல்லது சொல்வேன்..!
தாய்மைக்கு உதாரணமாக காந்தாரியும்.. துறவுக்கு உதாரணமாக விவேகானந்தரும்.. குடும்பத்துக்கு உதாரணமாக டால்ஸ்டாயும்.. புலனடக்கத்துக்கு உதாரணமாக புகழ்பெற்ற தத்துவஞானி டயோஜனிஸும்.. அன்பு தான் மதம் என்று மதத்திற்கு உதாரணமாக காந்தியும்.. மனிதத்துக்கு உதாரணமாக ஏசுவும்.. நட்புக்கு உதாரணமாக மார்க்ஸும்.. நன்றிக்கு உதாரணமாக சிசரோவும்.. முயற்சிக்கு உதாரணமாக ஐன்ஸ்டீனும்.. வாழ்க்கைக்கு உதாரணமாக புத்தரும்.. தானத்துக்கு உதாரணமாக குருநானக்கும்.. ஆசைக்கு உதாரணமாக நெப்போலியனும்.. நேர்மைக்கு உதாரணமாக லால்பகதூர் சாஸ்திரியும்.. மன்னிப்புக்கு உதாரணமாக நபிகளும்.. அடிக்கற்களுக்கு உதாரணமாக பகத்சிங்கும்.. ஊக்கத்திற்கு உதாரணமாக மைக்கேல்... Continue Reading →
நந்தி ரகசியம்
கோவிந்தராஜ உடையாரிடம் ஒண்டிப்பிழைக்க வந்தவள் சிந்தாமணி. உடையாரின் மனைவி திரௌபதியையும் புத்தி சுவாதீனமில்லாத மகன் வேலப்பனையும் விரட்டிவிட்டாள். உடையார் இறப்பதற்கு முன் அவருடைய மொத்த சொத்துக்களையும் தன்பேரில் எழுதி வாங்கிக்கொண்டாள் சிந்தாமணி. பரம்பரை சொத்தான பொட்டல் காட்டை மட்டும் திரௌபதியின் பேரில் எழுதிவிட்டாள் சிந்தாமணி. நடப்பது எதையும் கண்டும் காணாமல் இருந்த ஊர்மக்களால், திரௌபதியையும் வேலப்பனையும் பார்த்துப் பரிதாபப்பட மட்டுமே முடிந்தது. கருநாகங்கள் மட்டுமே வசிக்கும் அந்தப் பொட்டல்வெளியில் இருந்தது ஒரு சிவன் கோவில். இடிந்த சிவன்... Continue Reading →
பணம்..பதவி..பலி..! – Crime Novel
MLA எலக்சனில் அமோக வெற்றி பெற்ற உற்சாகக் களிப்பில் இருந்த மாணிக்கராஜுக்கு ஒரு மிரட்டல் கடிதம் வந்தது. அதில் மந்திரிப் பதவியேற்றால் உயிர் பறிக்கப்படும் என்றிருக்க, அந்த மொட்டைக் கடுதாசியைக் குப்பையில் கிழித்துப் போட்டார் மாணிக்கராஜ். விதி வலியது..முதல்வரை சந்திக்கச் சென்னை செல்ல இருந்த மாணிக்கராஜ் ரயில்வே ஸ்டேஷனில் வைத்தே கொலை செய்யப்படுகிறார். இதற்கடுத்ததாக முதல்வராகப் போகும் ராமபத்ரனுக்கு ஒரு மிரட்டல் விடுக்கப்பட்டது. அந்த மிரட்டல் கடிதத்தில் ஐந்து பேரைக் குறிப்பிட்டு அவர்களுக்கு மந்திரி பதவி தரக்கூடாது... Continue Reading →
ஆம்னி புக்ஸ் நூலகம்
சுமார் 2 லட்சம் புத்தகங்களுடன், 6 ஆயிரம் சதுர அடியில் ஏசி மற்றும் லிப்ட் வசதிகளுடன் “ஆம்னி புக்ஸ் நூலகம்” கோவை பீளமேடு ஃபன்மால் சாலையில் கோவிந்தராஜன் மற்றும் அவரது சகோதரர்கள் இணைந்து தொடங்கியுள்ளனர். அனைத்துத் துறை நூல்களும் இங்கு உள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயன்பெறும் வகையில் வயதுவாரியாக நூல்கள் இங்கு தரம்பிரித்து வைக்கப்பட்டுள்ளது. அரசியல், அறிவியல், கிரியேட்டிவ், கலை, விவசாயம், பொருளாதாரம், கணினி சம்பந்தமான புத்தகங்கள் இங்கு இடம்பெற்றுள்ளன. ஆராய்ச்சி மற்றும்... Continue Reading →
5am to 5 pm – Crime Novel
ஜப்பானில் தொழிற்பயிற்சியை முடித்துக்கொண்டு இந்தியா திரும்பிய கீர்த்தியுடன் திடீர் திருப்பமாக நிறைமாத கர்ப்பிணியான காதரினா வந்திறங்க, அண்ணன் லீலாகிருஷ்ணன் திடுக்கிடுகிறான். இந்நிலையில் அண்ணன் லீலாகிருஷ்ணனைப் பற்றிய ஒரு மொட்டை கடுதாசி தம்பியிடம் சிக்குகிறது. லாபத்தில் போய்க்கொண்டிருந்த கம்பெனி திடீரென நஷ்டத்தில் ஓடுவதாக கீர்த்திக்கு கணக்கு காண்பிக்கப்படுகிறது. உண்மையைக் கண்டுபிடித்த கீர்த்தி அவன் அண்ணனிடம் சண்டை போடுகிறான். மொத்த சொத்தையும் அபகரிக்கத் திட்டம் போட்ட லீலாகிருஷ்ணனும் அவன் மனைவியும் கீர்த்தியைத் தீர்த்துக்கட்ட முடிவு செய்கின்றனர். காதரினாவுடன் கீர்த்தி கிளம்பிய... Continue Reading →
திக்…திக்…டிசம்பர் – Crime Novel
வேலை கிடைத்த சந்தோசத்தின் உச்சத்தில் இருந்த ஹரிஷின் தலைக்குள் திடீரென ஒரு பிரளயம் ஏற்பட்டது. மூக்கில் இருந்து ரத்தம் வடிய அப்படியே சரிந்தான் அவன். ஹாஸ்பிடலில் அவனுக்கு எய்ட்ஸ் நோய் என்று ரிப்போர்ட் வருகிறது. அங்கேயே அவனுடைய அம்மா இறக்க, காதலி மீரா அவனை விட்டு விலக, இதனால் மனநோயாளியாகிறான் ஹரிஷ். ஸ்டெரிலைஸ் செய்யப்படாத ஊசி போட்டுக்கொண்டதால் தான், தனக்கு எய்ட்ஸ் வந்திருப்பதாக டாக்டர் ஒருவர் சொன்னதை நம்பிய ஹரிஷ் டாக்டர்களை வெறுக்கிறான். தன்னுடைய ரத்தத்தால் “ஐ... Continue Reading →
பட்டாம்பூச்சியின் தூது
அன்புள்ள வாசகர்களுக்கு, நீங்கள் நலமாக உள்ளீர்களா? நானும் நலம் தான். ‘நான் நலம்’ என்றாலே பலருக்கும் மனதில் இவன் நன்றாக இருக்கிறான் போல..?!! என்ற சலிப்பு ஏற்பட்டுவிடுகிறது. நலம் என்பது மனதில் கிடைக்கின்ற நிரந்தரமற்ற திருப்திதானே தவிர அது ஒரு நபரின் வாழ்க்கையை குறிக்காது. இன்றைக்கு பல இளைஞர்கள், “நான் நலமாக உள்ளேன்” என்று சொல்லவே தயங்குகின்றனர். அதற்கு பல காரணங்கள் உள்ளன - பலர் படிக்கின்ற காலத்தில் கவனம் சிதறி வாழ்க்கையை இழக்கின்றனர், பலர் என்ன... Continue Reading →
விதி எழுதும் விரல்கள்
வசந்த்..உலகத்துல இருக்கற எல்லாக் கெட்டப்பழக்கங்களும் தெரிஞ்சவன். வாத்தியார் பையன் மக்குன்னு சொல்லுவாங்க..ஆனா, இங்க கதையே வேற. கம்ப்யூட்டர்ல பயங்கர நாலெட்ஜ் உள்ள வசந்துக்குப் பணம்ங்கறது ஒரு போதைப் பொருள் மாதிரி. அது ஒண்ணு மட்டும் இருந்துட்டா உலகத்துல என்ன வேணாப் பண்ணலாம்னு ஒரு எண்ணம். கணக்கே இல்லாம சம்பாதிச்சும் பணத்து மேல தீராக்காதல். அப்படிப்பட்ட வசந்துக்கு மத்திய மந்திரியோட பையன் சம்பத் கிட்ட வேலை செய்யற வாய்ப்பு தானா தேடிவருது. ஆரம்பத்துல நல்ல பையன் மாதிரி வேலை... Continue Reading →
உள்ளத்தைக் கிள்ளாதே – Crime Novel
நீலேஷ் கம்பெனி விஷயமாக ஃபாரீன் சென்றுவிட்டதால், நிர்வாகப் பொறுப்பை சில மாதங்களுக்கு தங்கை திலக்ஷனா பார்த்துக்கொண்டிருந்தாள். தங்கள் கம்பெனியின் பெயிண்ட் ஃபார்முலா வேறொரு கம்பெனிக்கு விற்கப்பட்டதை அறிந்த திலக்ஷனா, அதற்கு காரணமான கணேஷமூர்த்தியை சஸ்பென்ட் செய்கிறாள். கோபத்தில் கொதித்த கணேஷமூர்த்தி திலக்ஷனாவைப் பழிதீர்க்க மோசமான ஒரு திட்டம் தீட்டுகிறான். இதற்கிடையில் மூணுமாத கர்ப்பிணியான நிவேதனா, நீலேஷைத் தேடிக்கொண்டு புனேவில் இருந்து வந்து எதிர்பாராதவிதமாக கோமா நிலைக்கு செல்கிறாள். அவ்வப்போது கோமாவில் இருந்து நினைவு திரும்பும் நிவேதனா யார்..?... Continue Reading →
11 மணி 59 நிமிஷம் 59 வினாடிகள் – Crime Novel
ஒரு ரகசிய ப்ராஜெக்ட்டை, தன்னுடைய பர்சனல் அசிஸ்டெண்ட் ராஜூக்கு கூட தெரிவிக்காமல், பரம ரகசியமாக செய்து கொண்டிருந்தார் ப்ரொபசர் மெஹ்ரா. மெஹ்ராவின் இளம் மனைவி ரெஜிதாவை மட்டும் ஒருமுறை ப்ராஜெக்ட் அறைக்கு அழைத்துச் செல்கிறார். யாருமே அறிந்திராத அந்த ரகசிய ப்ராஜெக்ட் - மனித உணர்வுள்ள ரோபோ “ஸ்ரீ”. ரெஜிதாவைத் தவறாகப் பார்த்து அவளை அடைய நினைக்கிறது அந்த ஸ்ரீ. இந்நிலையில் ப்ராஜெக்ட் முடியும் தருவாயில் இருக்க, அதன் தகவல்களைத் திருடித் தருமாறு ராஜின் காதலியைக் கடத்தி,... Continue Reading →
அறிவியல் எது? ஏன்? எப்படி?
“தகவல்! தகவல்! தகவல்! எனக்கு நிறைய தகவல் தேவை...” தகவல்களையும், அறிவியல் விநோதங்களையும் தேடிப் படிக்கிற மனோபாவம் பொதுவா சின்னவங்கள்ள இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருக்கும் இருக்கும். அப்படிப்பட்டவங்களுக்கு ஒரு அருமையான புதையல்னே சொல்லலாம் என்.ராமதுரை எழுதுன “அறிவியல் எது? ஏன்? எப்படி?”-ங்கற புத்தகம். இதுல அப்படி என்ன சிறப்பா இருக்கப் போகுதுன்னு நிறைய அறிவியல் கட்டுரைகளைப் படிச்சவங்களுக்குத் தோணலாம். தலைப்பு: ஒரு தகவலை மனசுல பதிய வெக்கணும்னா நமக்கு ஆர்வமும் எதிர்பார்ப்பும் அவசியமான விசயம். இதுல... Continue Reading →
சங்க நூல்களில் மரங்கள்
“அத்தி, அரையம், ஆசினி, ஆத்தி, ஆலம், இத்தி, இரத்தி, இலஞ்சி, இலுப்பை, இல்லம், உழிஞ்சில், உன்னம், ஒடு, ஓமை, கடு, கண்டல், காஞ்சி, குழில், குருந்து, சந்தனம், செயலை, ஞாழல், ஞெமை, தில்லை, தேக்கு, நாகம், நொச்சி, பயின், புன்கு, பெரு, மயிலை, மருதம், முருங்கை, மூங்கில், யா, வஞ்சி, வழை, வாகை, விடத்தேர், வேங்கை, வேம்பு.” படிக்கும்போதே தெரிஞ்சிருக்கும் புரிஞ்சும், புரியாத இந்த வார்த்தைகள் எல்லாமே மரங்களின் பெயர்கள்தான். ஆனால், சங்க காலத்துல பயன்படுத்தப்பட்ட மரங்களின்... Continue Reading →
ஜன்னல் நிலா! – Crime Novel
சாதாரண குடும்பத்தில் பிறந்த பெண்ணிற்கு, திடீரென நடிகையாகும் வாய்ப்பு கிடைக்கிறது. குடும்ப சூழ்நிலை காரணமாக சினிமாவைத் தேர்ந்தெடுக்கும் அவள், தன்னுடைய காதலைத் தியாகம் செய்ய நேரிடுகிறது. பிரபல நடிகரின் சூழ்ச்சியால் நடிகையான அவளுக்கு பின்னால் பின்னப்பட்டிருக்கும் சதியை அவள் உணரும்போது அவளுடைய காதலனை இழக்கிறாள். எல்லாவற்றிக்கும் மேலாக யாருக்காக தன்னுடைய காதலை இழந்தாலோ அவர்களின் சுயரூபம் அந்த நடிகைக்குத் தெரியவர, குழப்பத்தில் இருந்த அவள் சாவைத் தேர்ந்தெடுத்துப் பின் தன்னுடைய முடிவை மாற்றிக்கொள்கிறாள். குடும்ப சூழல் ஒரு... Continue Reading →
சென்னை நிரந்தரப் புத்தகக் கண்காட்சி
சென்னை அரசு அருங்காட்சியகத்தில் உள்ள கன்னிமரா நூலகம் அருகில் புதுப்பிக்கப்பட்ட ‘நிரந்தரப் புத்தகக் கண்காட்சி’ அரங்கம் வாசகர்கள் பயன்பெறும் வகையில் தமிழக அரசால் அமைக்கப்பட்டுள்ளது. 30,௦௦௦ தலைப்புகளுடன், ஆண்டு முழுவதும் வாரத்தில் 7 நாட்களும் இந்தப் புத்தகக் காட்சி நடைபெறும். ஆண்டு முழுவதும் புத்தகங்களுக்கான விலையில் 10% தள்ளுபடியும் உண்டு. ஏராளமான தலைப்புகளுடன் உலகில் இங்கு மட்டுமே இத்தனை தமிழ் நூல்களைக் காணலாம். #one_minute_one_book #tamil #book #review #permanent_chennai_book_fair
என் இனிய இயந்திரா..
இயற்கை விதிகள்.. மிகவும் துல்லியமான, சக்திமிகுந்த, கடவுளின் கோட்பாடுகள். அவை ஏற்கனவே பல மடங்கு மேம்பாடடைந்து அண்டத்தை இயக்குகிறது. இதில் அறிவியல் விதிகள் இயற்கையின் சொற்ப விந்தைகளை புரிந்துகொள்ளும் அளவே வளர்ந்திருக்கிறது. அதிலும் மனிதனின் கோட்பாடுகளைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட ஒரு compact edition-தான் இந்த modern technology. 2020.. ரோபோக்களும் மனிதர்களும் இணைந்து வாழும் ஒரு புது யுகத்தின் தொடக்கம். நிலா எனும் ஒரு அழகிய பெண்ணும், ஜீனோ எனும் ஒரு இயந்திர நாயும், இவர்களுடன் மனிதனும்... Continue Reading →
மஞ்சள் மாநகரம்
ஈரோடு (Erode).. இதுக்கு ரெண்டு பேரு இருக்குங்க. ஒண்ணு பெரியார் மாவட்டம், இன்னொன்னு மஞ்சள் மாநகரம். தொன்றுதொட்டுன்னு ஆரம்பிச்சா, பேச நிறைய இருக்குங்க. காளிங்கராயன் வாய்க்கால்ல இருந்து பவானி ஜமக்காளம் வரைக்கும், மணிக்கூண்டு பன்னீர் செல்வம் பார்க்குல இருந்து மேட்டூர் டேம் வரைக்கும் ஒவ்வொன்னுக்கும் ஒவ்வொரு கதை இருக்கு. அத எல்லாம் போகப்போக பார்க்கலாம். பெரும்பள்ளம், காளிங்கராயன் வாய்க்கால் பாயற இந்தக் குறிப்பிட்ட நிலப்பகுதிக்கு ஈரோடைன்னு பேருங்க. அது மருவி ஈரோடுன்னு மாறிடுச்சு. 1979 - வரைக்கும்... Continue Reading →
இருட்டுக்கு இரண்டு நிறம்..(?) – Crime Novel
எப்படியாவது சினிமாவில் பெரிய ஆளாக வந்துவிட வேண்டும் என்பது கணேசனின் அவா. மனோகரி ஒரு கம்பெனியில் டைபிஸ்ட்டாக வேலை செய்பவள். இருவரும் காதலர்கள். பணம் பத்தும் செய்யும் என்பது இவர்கள் இருவருக்கும் சரியாகப் பொருந்தும். சினிமா வாய்ப்பு தேடிச் சென்ற கணேசனுக்கு ஒரு பிரபல நடிகையைத் திருமணம் செய்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்க, மனோகரிக்கு அவள் முதலாளியைத் திருமணம் செய்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கிறது. இருவரும் ஒருவரை ஒருவர் நேசிப்பது போலவே நடித்து தங்கள் கனவு நிறைவேற... Continue Reading →
உறைந்து போன உண்மை – Crime Novel
அந்த நிமிடம் ஹாஸ்பிடலில் இருந்த கீர்த்தனாவுக்கு நடந்ததெல்லாம் ஒரு கனவு போல கண்முன் வந்துபோனது. கீர்த்தனாவின் அப்பா அஸ்வினிகுமாரை மாப்பிள்ளையாக செலக்ட் செய்தது, அஸ்வினிகுமாரை மீட் பண்ண கீர்த்தனா ரெஸ்டாரன்ட் போனது, அங்கே அவன் மூச்சுபேச்சற்ற நிலையில் இருந்தது, ஹாஸ்பிடலில் சேர்த்ததும் அவனுடைய செல்லுக்கு போலீசிடமிருந்து போன் வந்தது, இது எல்லாவற்றையும் விட அஸ்வினிகுமார் ஒரு மாதம் பாண்டிச்சேரி மென்டல் கேர் ஹாஸ்பிடலில் தங்கி ட்ரீட்மென்ட் எடுத்தது பற்றி அங்கிருந்த நர்ஸ் சொல்ல கீர்த்தனா சற்று ஆடித்தான்... Continue Reading →
அந்த சந்திரனே சாட்சி.! – Crime Novel
குன்னூர் இருட்டுக்குள் விழுந்துகொண்டிருந்த அந்த வேளையில், தன்னுடைய கார் ரிப்பேர் ஆனதால் கொண்டைஊசி வளைவில் கவலையுடன் உதவிக்கு காத்திருந்தாள் சுபலேகா. ஆனால், இரண்டு ரௌடிகளிடம் சுபலேகா மாட்டிக்கொள்ள அவளை வேனில் கடத்திச் செல்கிறார்கள். லேகாவின் பக்கத்து எஸ்டேட்டில் வேலை செய்யும் சதீஸ் அவளைக் காப்பாற்றுகிறான். இருவருக்கும் இடையே காதல் மலர்கிறது. இந்நிலையில் பெற்றோர்களை இழந்திருந்த லேகாவிற்கு திருமணம் செய்ய அவளுடைய மாமா அவளுக்கு மாப்பிள்ளை தேடுகிறார். இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி ஓடிப்போய் திருமணம் செய்துகொள்ள திட்டம் போடுகின்றனர்.... Continue Reading →
மீண்டும் விவேக்கின் விஸ்வரூபம் – Crime Novel
இந்திய ராணுவத்திற்காக 90 நாட்கள் சிறப்புப் பயிற்சி கொடுக்கப்பட்டு உருவாக்கபட்ட 156 தலைசிறந்த வீரர்களை கவுரவிக்க நடந்து கொண்டிருந்த விழாவில் திடீரென வெடித்தது வெடிகுண்டு. அதில் 57 வீரர்கள் இறக்க, அரங்கில் வெடிகுண்டு வெடித்ததற்கான தடயமே ஃபாரன்சிக்கிற்கு கிடைக்கவில்லை. இந்த சம்பவத்தைக் காரணம் காட்டி சமூக ஆர்வலர் சத்யஸ்வரூப் பட்டாச்சார்யா அரசாங்கத்திற்கு எதிராக உண்மையான குற்றவாளியைக் கைது செய்ய உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார். போராட்டத்தின்போது அந்த வெடிகுண்டு சம்பவத்துக்கு இரண்டு மந்திரிகள் தான் காரணகர்த்தா எனவும் அவர்... Continue Reading →
துளிர்
“இது எதிர்காலத்தின் கதை” “என்ன ஒரே நிசப்தமா இருக்குது?” என்று கூறிக்கொண்டே கண்களைத் திறந்தான். வானத்தில் கருமேகம் சூழ்ந்திருந்தது. ஆங்காங்கே பழுப்பு நிறம் கொண்ட மேகங்களும் இருந்தது. அதைப் பார்த்த அவன், “ஓகோ மழை பெய்ய போகுதா, பெய்யட்டும் பெய்யட்டும் தண்ணீர் பஞ்சம் வராமல் இருந்தா சரி!” என்று தனக்குத்தானே பேசிக்கொண்டே போர்வையை இழுத்துப் போர்த்த கையை அங்கும் இங்கும் துலாவினான். ஆனால், அவன் கையில் சிக்கியது வெறும் மண்ணே!! அதிர்ச்சியில் எழுந்து சுற்றிமுற்றி பார்த்த அவனுக்கு... Continue Reading →
தீ நிலா – Crime Novel
ஆண்களின் தவறுகளை எல்லாம் தன் எழுத்துக்களில் தெறிக்கவிடும் எழுத்தாளர் இந்துவதனாவைச் சந்திப்பதை கடைசி ஆசையாக தூக்குத்தண்டனை விக்டர் தெரிவிக்கிறான். போலீஸ், நீதிபதி என யாரிடமும் இதுவரை சொல்லாதிருந்த கொலை செய்ததற்கான காரணத்தை இந்துவிடம் சொல்லி, எப்போதும் ஆண்கள் மட்டுமே தவறு செய்வதில்லை, தவறு செய்யும் பெண்களும் இருக்கிறார்கள் என்பதைச் சொல்லி தன் வாழ்க்கையை வைத்து ஒரு கதை எழுதக் கோருகிறான். விக்டர் விவகாரத்தில் முக்கியமாக மாஜி எம்எல்ஏ சம்பந்தப்பட்டிருக்க, அவரிடமிருந்து இந்துவிற்கு மிரட்டல் வருகிறது. அதைப் பொருட்படுத்தாத... Continue Reading →
மூன்றாம் பரிமாண சிந்தனை..?!
“WRITER’S BLOCK” இந்த வார்த்தை உங்களுக்கு புதுசா இருக்கலாம். இது ஒருவகை மனோநிலை, இது பொதுவா எழுத்தாளர்களுக்கு ஏற்படும். இந்த நிலையில சிக்கினா எழுத்தாளர் கதி அதோகதிதான். எவ்வளவு தெளிவா ஒரு விசயத்த புரிஞ்சு வெச்சிருந்தாலும் அத படைப்பாற்றலோட வெளிப்படுத்த முடியாம திணற ஆரம்பிச்சிருவாங்க. இந்த WRITER’S BLOCK-ல சிக்குனவங்க சின்ன சின்ன எழுத்தாளர்கள் மட்டும் இல்லைங்க, என்ன மாதிரி (நகைச்சுவை J) பெரிய எழுத்தாளர்களும்தான். “WRITER’S BLOCK” பற்றி இங்க பேசவேண்டிய அவசியம் இருக்கு. காரணம்... Continue Reading →
மீண்டும் ஆகஸ்ட் 15 – Crime Novel
கடந்த இரண்டு வருடங்களாக மனநலம் பாதிக்கப்பட்ட கிராமமாக மாறிவரும் புதிரான வாடாமல்லி கிராமத்தைப் பற்றிக் கேள்விப்பட்ட ரெட்ஸ்டார் டிவியைச் சேர்ந்த நான்கு பேர் தீட்சண்யா தலைமையில் கிராமத்தை வந்தடைந்தனர். வந்த முதல் நாளே நான்குபேரில் ஒருவனான நித்தி காணாமல் போக விஷயம் விஸ்வரூபம் எடுக்கிறது. அதேநாளில் மனநலம் பாதிக்கப்பட்ட மாரம்மா என்ற பெண் கொலை செய்யப்பட, திக்கு தெரியாமல் போலீஸ் திணறுகிறது. இதற்கிடையே அமெரிக்காவிலிருந்து வாடாமல்லி கிராமத்திற்கு அனுப்பப்பட்ட ஒரு கடிதம் போலீஸ் கைக்குக் கிடைக்க அதுவே... Continue Reading →
இளம் குற்றவாளிகள் உருவாவது ஏன்?
நாட்டில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற சம்பவங்கள் பெருகிவரும் இந்த சூழலில் வளரும் சில சிறார்களும் அதையே பின்பற்றி குற்றங்களில் ஈடுபடுகின்றனர். இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு (IPC) 392-ன் படி திருட்டில் ஈடுபடும் நபருக்கு பத்தாண்டுகள் முதல் பதினான்கு ஆண்டுகள் வரை கடுமையான சிறை தண்டனையும், குற்றத்திற்கேற்ப அபராதமும் விதிக்கப்படும். ஆனால், இதே குற்றத்தை 18 வயதிற்குக் கீழ் உள்ள சிறார்கள் செய்தால்...? நம் நாட்டில் சிறார்கள் குற்றச் செயல்களில் ஈடுபடும்போது அவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக... Continue Reading →
அது ஒரு நிலாக் காலம்..! – Crime Novel
தன்னுடைய கணவர் இளங்கோவிற்கும், தன் தோழி நந்தினிக்கும் இடையே உள்ள தொடர்பை அறிந்து கொண்ட கவுசல்யா அதைத் தட்டிக்கேட்க, கோபத்தில் இளங்கோ கவுசல்யாவைத் தள்ளிவிடுகிறான். அதேவேளையில் கிடைத்த பியூன் வேலையை செய்யாமல், சினிமா சான்ஸுக்காக அலைந்துகொண்டிருந்த வேலுவின் உண்மையான சுயரூபம் விமலாவிற்குத் திருமணத்திற்குப் பிறகுதான் தெரியவருகிறது. பிறகு இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை வருகிறது. இதற்கிடையே கவுசல்யா காணாமல் போக, குடிபோதையில் சட்டையில் ரத்தக்கறையுடன் போலீசில் பிடிபடுகிறான் வேலு. ஒரே நேரத்தில் இரண்டு கணவன்-மனைவிகளின் வாழ்க்கையில் ஏற்படும்... Continue Reading →
#6 கதை சொல்ல போறோம்(Kutty Story #6)
PROFIT ஆ..? LOSS ஆ..? ஒரு அப்பாவும், 3 வயது மகனும் அவர்களுடைய புதிய காரை துடைத்துக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது சிறுவன் ஒரு சிறிய கல்லை எடுத்து காரின் கதவு பக்கத்தில் சுரண்டிக் கொண்டிருந்தான். சத்தத்தைக் கேட்ட அப்பாவுக்கு கோபம் தலைக்கேறியது. கடுப்பில் மகனுடைய கையைப் பிடித்து, நான்கு முறை உள்ளங்கையில் விளாசிவிட்டார். அப்பொழுதுதான் கவனித்தார் அவர் அடித்தது ஸ்பேனரைக் கொண்டு என்பதை. வலியில் துடித்த மகனை மருத்துவமனைக்கு தூக்கிக் கொண்டு ஓடினார். பல எலும்புகள் முறிந்துவிட்டதால்..இனி விரல்களை... Continue Reading →
விளக்கம் ப்ளீஸ் விவேக்..!
சந்தேகம்... சந்தேகமா...? “சந்தேகம் சாத்தானின் பல்லக்கு அற்புதம்!!! எனக்கு நம்பிக்கை இல்லை ராமசாமி!!! நம்பிக்கைதான் ஆண்டவரின் நங்கூரம் அற்புதம்!!!” இந்த வசனத்தை super delux படத்தில் பார்த்திருப்பீர்கள். ஆனால், சந்தேகமும், புறணி பேசவும் ஆரம்பித்த பிறகு தான், சிந்தனையும் அறிவும் நமக்கு வளர்ந்ததாக ஆராய்ச்சி முடிவுகள் பறைசாற்றுகின்றன. ஆகையால் இதெல்லாம் நம் பிறவிகுணம். 20-களில் நம் சந்தேகங்களை கூகுள் பிதா தீர்த்து வைத்துக் கொண்டிருந்தார், நேற்றுவரை. ஆனால், 90-களில் அதாவது க்ரைம் நாவலில் விவேக் தோன்றியபின் அவரின்... Continue Reading →
இனி, மின்மினி – Crime Novel
நியூயார்க்கில் உள்ள ஒரு தம்பதியின் மகள் சில்வியா. பெரிய பெரிய டாக்டர்களினாலேயே கண்டுபிடிக்க முடியாத விசித்திரமான நோய் அந்தப் பெண்ணுக்கு. தங்களுடைய வீட்டை விற்றால் தான் சில்வியாவின் மருத்துவ செலவைப் பார்க்க முடியும் என்ற சூழலில், வீட்டை விலை கேட்டு இந்தியாவிலிருந்து வருகிறார் விஜேஷ். உண்மையில் இதற்குமுன் அந்த வீட்டை விலைபேசி அக்ரிமெண்ட் போட்ட இருவரும் ஹார்ட் அட்டாக்கினால் இறக்க, விஜேஷை ஒரு பெண் போனில் எச்சரிக்கிறாள். மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணாக அனைவரும் நினைக்கும் சில்வியா, அவளுடைய... Continue Reading →
மரகத லிங்கம்
மரகத லிங்கம் ஒரு காலத்தில் சிவன்குடியின் செழிப்பிற்கும் வனப்பிற்கும் காரணமாக இருந்தது. உச்சிப் பொழுதில் மரகத லிங்கத்தைப் பார்க்கும் போது மனித மனதின் குறைகள் அனைத்தும் தீரும் என்பது அந்த ஊரின் ஐதீகமாக இருந்தது. இவ்வளவு பெருமை வாய்ந்த லிங்கம் ஒருநாள் திடீரென களவு போனது. அந்நாளில் இருந்து சிவன்குடி பொலிவிழந்து களையிழந்து தன் மக்களையும் இழந்தது. பல வருடங்களுக்குப் பிறகு இன்று அந்தப் பழம்பெருமை வாய்ந்த பாழடைந்த சிவன்குடி சிவன் கோவிலை சீர்செய்ய ஒருவன் வருகிறான்.... Continue Reading →
காதலுக்கு கண் இருக்கு..?! – Crime Novel
வைஷ்ணவியும் ராஜேந்திரனும் காதலர்கள். இருவரும் ஒருநாள் பீச்சில் இருந்து கிளம்பும்போது ராஜாக்கிளி என்ற ரௌடி ராஜேந்திரனை வம்பிழுக்க, பிரச்சினை போலீஸ் வரை செல்கிறது. ஆனால், அந்த வாரத்தில் ஒரு நாள் வைஷ்ணவியின் வீட்டில் கை வெட்டப்பட்ட நிலையில் ராஜாக்கிளி இறந்து கிடக்கிறான். இந்நிலையில் பணக்காரனான ராஜேந்திரனின் அப்பா அவர்களுடைய திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்க, கல்யாண வேலைகள் மும்முரமாக நடக்கின்றன. கல்யாணத்திற்குப் பத்திரிக்கை அடித்த நிலையில், ராஜேந்திரனை ரயில்வே ஸ்டேஷனுக்கு வரச் சொன்ன வைஷ்ணவி அவன் முன்னாலேயே சயனைட்... Continue Reading →
மனிதரில் எத்தனை நிறங்கள்..?
பயங்கர அலறலுடன் வழக்கமாக வரும் அந்தக் கெட்டக் கனவிலிருந்து விழித்துக் கொண்டாள் ஆர்த்தி. தாத்தா-பாட்டியுடன் வாழும் இந்த ஆர்த்தி மிகப்பெரிய சொத்துக்கு ஒரே வாரிசு. ஆனால், தங்கள் மகள் இறக்க காரணமாக இருந்த அந்தக் குடும்பத்தில் பேத்தியையும் இழக்க விரும்பாத தாத்தா-பாட்டி இருவரும் ஆர்த்தியை சிறுவயதிலேயே கண்காணாத இடத்திற்கு அழைத்து வந்தனர். திடீரென தாத்தாவின் உடல்நிலை மோசமாக, கையில் காசு இல்லாத நிலையில் அத்தை சிவகாமியிடம் உதவி கேட்கிறாள் ஆர்த்தி. ஆச்சரியப்படும் வகையில் உதவி கிடைக்க, அவர்கள்... Continue Reading →
ஒன்றும் ஒன்றும் மூன்று – Crime Novel
சினிமா வாய்ப்புக்காக சென்னை சென்றுவிட்டு திரும்பிய கைலாஷ் வீடு பூட்டப்பட்டிருப்பதை அறிந்து அக்கம்பக்கத்தில் விசாரிக்கிறான். யாருக்கும் அவன் மனைவி தேவி எங்கே என்று தெரியவில்லை. தேவியைத் தேடிக் களைத்த கைலாஷ் உதவிக்கு போலீஸிடம் போகிறான். இதற்கிடையில் பார்சலில் ஒரு பெண்ணின் பிணம் போலீசிற்கு கிடைக்கிறது. அந்தப் பார்சலில் இருந்த பெண் தேவியோடு ஒத்துப்போக, கொலைக்கான காரணத்தை போலீஸ் வலைவீசி தேடுகிறது. அதே வேளையில் தேவியைப் பார்க்க வரவிருந்த அவளுடைய தோழி ஸ்வஸ்திகா திடீரென காணாமல் போகிறாள். ஸ்வஸ்திகாவின்... Continue Reading →
நாகர்களின் இரகசியம்
தான் அழிக்க வேண்டிய தீமை சந்திரவம்சிகள் அல்ல என்பதை உணர்ந்த சிவன், நாகர்களின் மூலம் தான் தீமையை கண்டறிய முடியும் என்று எண்ணி, நாகர்களின் இருப்பிடத்தைத் தேடிச் செல்கிறார். நாகர்களைப் பற்றித் தெரிந்துகொள்ள மகதம் வழியாக காசியை வந்தடைகிறது சிவனின் பரிவாரம். இந்நிலையில் சதி கருவுற்றிருக்க, சிவனுக்கும் சதிக்கும் ஒரு மகன்(கார்த்திக்) பிறக்கிறான். காசியிலிருந்து ப்ரங்காவை அடைந்து அங்கிருந்து நாகர்களைக் கண்டுபிடிப்பது தான் சிவனின் திட்டம். சதி கார்த்திக்கைப் பார்த்துக் கொள்ளும் பொருட்டு காசியிலேயே தங்கிவிட சிவன்... Continue Reading →
உன்னை விட்டால் யாருமில்லை – Crime Novel
முதலமைச்சர் நீலமேகம் இறந்தபின் கட்சியில் அடுத்ததாக தனக்கு பதவி கிடைக்கும் என்ற நோக்கத்துடன் அவரைக் கொல்ல சதி செய்கின்றார் கல்வி அமைச்சர் பார்த்திபராஜன். அதைத் தெரிந்துகொண்ட கட்சித் தொண்டன் கல்யாணராமனையும் கொலை செய்கின்றனர் பார்த்திபராஜனின் ஆட்கள். இந்தக் கேஸை விசாரிக்க வந்த இன்ஸ்பெக்டர் கண்ணனையும் தீவைத்து எரித்து விடுகின்றனர். அடுத்ததாக சுதந்திரதின விழாவிற்கு கோட்டையில் கொடி ஏற்ற சென்ற முதலமைச்சர் நீலமேகத்தைக் கொல்ல வெடிகுண்டு வைக்க, இந்த இடத்தில் விவேக் வருகிறான். சதி முறியடிக்கப்பட்டது. ஆனால், திடீரென... Continue Reading →
#5 கதை சொல்ல போறோம்(Kutty Story #5)
https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); கருப்பா..? வெள்ளையா..? ஒரு ஊரில் இரண்டு சகோதரர்கள் இருந்தனர். ஒருவன் போதைப்பழக்கம் உள்ளவன். எப்போதும் குடும்பத்தில் இருப்பவர்களை நையப்புடைத்து மிரட்டி, பணம் வாங்கிக் குடித்துக்கொண்டே இருப்பான். பிறருக்கு தொல்லை கொடுத்து இன்பம் பெரும் கெட்டகுணம் கொண்டவன். மற்றவன் சமூகத்தில் மதிக்கப்படுபவனாகவும் நல்ல குடும்பத் தலைவனாகவும் நல்ல குணம் கொண்டவனாகவும் இருந்தான். அருமையாக தனது குடும்பத்தை பராமரித்து வந்தான். ஊரில் உள்ளவர்களுக்கு வியப்பு. ஒரே தகப்பனுக்குப் பிறந்த ஒரே சூழ்நிலையில்... Continue Reading →
பேசும் பொம்மைகள்
இன்றைய காலக்கட்டத்தில் எவ்வளவோ தொழில்நுட்பம். அதில் ஆக்கபூர்வமானதும் உள்ளது. அழிக்கக்கூடியதும் உள்ளது. ஆனால், எவ்வளவு தொழில்நுட்பம் வளர்ந்தாலும் தொட முடியாத எல்லைகளும் இருக்கத்தான் செய்கிறது. சமீபத்தில் elon musk வெளியிட்ட ‘neuralink’ மாதிரியான தொழில்நுட்பங்கள் செல்போன்களுக்கு ஒருபடி மேலே சென்று நம் எண்ணங்களையும் எட்டிப் பார்க்கப் போகிறது. சென்ற நூற்றாண்டில் வல்லரசுகள் ஒரு புது யோசனையை முன்னிறுத்தி ஒரு செயல்முறையை அறிமுகப்படுத்தினார்கள். அதுவே ‘downloading’. மனித நினைவுகளை கணினி மூலமாக பதிவு செய்யக்கூடிய ஒரு தொழில்நுட்பம். இதை... Continue Reading →
திகில் ரோஜா – Crime Novel
கல்லூரித் தோழி அபிநயாவிடம் தன் அக்காவின் திருமணத்திற்குப் பண உதவி கேட்க அவள் வீட்டிற்கு வந்த விஜயாவிற்கு அந்த வீட்டில் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி காத்திருந்தது அப்போது தெரியாது. யோகா மாநாட்டிலிருந்து இரவு வந்துவிடுவாள் என்று சொல்லி அபிநயாவின் கணவன் மோகன் சொல்ல, சற்று தயக்கத்துடனேயே தங்க முடிவெடுக்கிறாள். ஆபிஸ் வேலை இருப்பதாகச் சொல்லி மோகன் வெளியேற முதலில் அவளைத் தாக்கியது, பக்கத்து அறையிலிருந்த அபிநயாவின் போட்டோவுக்கு போடப்பட்டிருந்த பூமாலை, வீட்டின் பின்னால் புதைக்கப்பட்டிருந்த ஒரு பிணம்,... Continue Reading →
மலையருவி
தலைப்பைப் பார்த்தவுடனே கவிதைத் தொகுப்புன்னு நினைச்சிராதிங்க, மலையருவி - தமிழ் நாடோடிப் பாடல்களின் தொகுப்பு. ஒரு குழந்தை பிறந்தவுடன் பாடும் தாலாட்டில் ஆரம்பித்து, வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் நிகழும் சூழ்நிலைகளைக் கூறும் ஆண்-பெண் தர்க்கம், தெய்வம், கும்மி, கள்ளன் பாட்டு, தொழிலாளர் பாட்டு, தெம்மாங்கு, ஒப்பாரி எனும் பாடல்களின் தொகுப்பாக அமைந்திருக்கும். வேலைக்கு இடையே சலிப்பு ஏற்படாமல் இருக்க பாடப்பட்டவையே இந்த நாடோடிப் பாடல்கள். ஒவ்வொரு பாடல் வரிகளும் ஒவ்வொரு விதமான உணர்ச்சிகளின் வெளிப்பாடாக அமைந்திருக்கும். அதாவது... Continue Reading →
வாழ்வியல் நகைச்சுவை
“துன்பம் வரும் வேளையிலே சிரிங்க”ன்னு சொன்ன வள்ளுவர் வார்த்தைக்கு இலக்கணமா வாழ்ந்திருக்காரு, இந்தப் புத்தகத்தின் ஆசிரியரும் பேச்சாளருமான கு.ஞானசம்பந்தன் அவர்கள். நம்ம ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் நகைச்சுவை இருக்குங்க. சீரியஸான இடத்துல கூட யாரால இயல்பா புன்னகைக்க முடியுதோ, அவங்களுக்கு எந்தக் கஷ்டமும் பெருசா தெரியாது. இந்தப் புத்தகத்தில், நாட்டைப் பற்றியும்.. பழைய படங்களில் வரும் தரமான நகைச்சுவை பற்றியும்.. சுற்றுலாவினால் கிடைக்கின்ற மகிழ்ச்சி பற்றியும்.. நம் தமிழ்நாட்டிற்கே உரிய திருவிழாக்கள் பற்றியும்.. கிராமத்தில் நாம் இழந்த அற்புதமான... Continue Reading →
மனிதன் – Crime Novel
காரில் கிடைத்த அந்த ஆண் பிணத்தைப் பற்றி கேள்விப்பட்ட விவேக்கிற்கு விசித்திரமாக இருந்தது. உடலில் வேறெந்த ரத்தக்காயமும் இல்லை. ஆனால், அவனுடைய மார்புப்பகுதியில் ஒரு ஓட்டை போட்டு மொத்த ரத்தத்தையும் உறிஞ்சியிருந்தார்கள். இந்தப் பிணம் கிடைத்த சிறிது நேரத்தில் டாக்டர் பரமேஸ்வரன் லாரி ஏற்றிக் கொலை செய்யப்பட, இரண்டு கேஸிலும் ஒரு நூலிழை ஒற்றுமை இருப்பதாக விவேக் உணர்ந்தான். விசாரணையில் முதலில் கொலை செய்யப்பட்ட நபர் சிதம்பரத்தைப் பற்றி ஒரு முக்கிய தகவல் கிடைத்தது. ரேர் ப்ளட்... Continue Reading →
Top 5 Rajeshkumar Crime Novels in Tamil
தமிழகத்தில் க்ரைம் கதைகள் என்றால் வாசகர்கள் உச்சரிப்பது "ராஜேஷ்குமார்" என்ற பெயரையே. ராஜேஷ்குமார் ஆயிரக்கணக்கில் கிரைம் கதைகளை எழுதியுள்ளார். பலரது நீண்ட தூரப் பயணம், தனிமை நேரங்கள், சுவாரஸ்ய பொழுதுபோக்கிற்கு தோழனாக இருந்தவை இந்த நாவல்கள். இதில் நான் படித்தது சிறிதளவே. ஆனால், அவற்றில் மிகுந்த சுவாரஸ்யத்தையும், வாசிப்பிற்கு பிள்ளையார் சுழி போட விரும்புபவர்களுக்கு ஏற்ற ஐந்து நாவல்கள் பற்றி இங்கே.. அதிரடி ஆட்டம் : - க்ரைம் கதைகள் பல தளங்களில் அமைத்து எழுதப்படுபவை. அதில்... Continue Reading →
அறிவியல் 1000
“ரோட்டுல தூரத்துல இருந்து பாக்கறப்போ தெரியற தண்ணி பக்கத்துல போகப்போக மறைஞ்சு போகுதே ஏன்..? வானம் ஏன் நீல கலர்ல தெரியுது..? இடி இடிக்கும்போது ஏன் மரத்துக்கு கீழ நிக்கக் கூடாது..? மரக்கட்டை ஏன் தண்ணில மிதக்குது..? தண்ணியில எண்ணெய் ஏன் கரைய மாட்டிக்குது..? ஓடற பஸ்ல இருந்து இறங்கக்கூடாது ஏன்..?” இதுமாதிரியான நிறைய கேள்விகள் உங்களுக்குள்ளயும் கண்டிப்பா இருந்திருக்கும். இந்த எல்லாக் கேள்விகளுக்குமான ஒரே பதில் சயின்ஸ், அதாவது அறிவியல். எப்பவும் நாம மனப்பாடம் பண்ற... Continue Reading →
விவேக் இன் டோக்கியா – Crime Novel
சிபிஐ டைரக்டர் மங்கள் பாண்டேவிடம் ரிப்போர்ட்டை ஒப்படைக்க டெல்லி சென்ற விவேக்-விஷ்ணுவிடம் ஒரு உதவி கோரினார் மங்கள் பாண்டே. மாஜி ஜட்ஜ் ஸ்வாதி சிங்கின் அதிரடி தீர்ப்புகளால் அவருக்கு அரசியல் ரீதியாக எதிரிகள் இருப்பதாகவும், அதனால் அவருடைய மகள் ஹன்ஸாவிற்கு அந்த மன அழுத்தத்தின் காரணமாக ரேர் ஹார்ட் ப்ராப்ளம் வந்திருப்பதாகவும் கூறிய பாண்டே, டோக்கியோவில் உள்ள ஒரு மருத்துவமனையில் மட்டுமே இந்த நோயை சரி செய்ய முடியும் என்பதையும் கூறினார். ஸ்வாதி சிங் மற்றும் ஹன்ஸா... Continue Reading →
#4 கதை சொல்ல போறோம்(Kutty Story #4)
இதுதான் உலகமா? இதுதான் வாழ்க்கையா? சிறுவன் ஒருவன் ஏரிக்கரையில் விளையாடிக்கொண்டிருக்கிறான். அப்போது, “என்னைக் காப்பாற்று”, “என்னைக் காப்பாற்று” என்று ஒரு அலறல். ஆற்றோரத் தண்ணீரில், வலைக்குள் சிக்கியிருக்கும் முதலை ஒன்று சிறுவனைப் பார்த்து பரிதாபமாகக் கதறுகிறது. ‘மாட்டேன்’. உன்னை விடுவித்தால் என்னை விழுங்கிவிடுவாய். ‘காப்பாற்ற மாட்டேன்’ என மறுக்கிறான் சிறுவன். ஆனால், முதலை, “நான் உன்னை சத்தியமாக சாப்பிட மாட்டேன். என்னைக் காப்பாற்று” என்று கண்ணீர் விடுகிறது. முதலையின் பேச்சை நம்பி சிறுவனும் வலையை அறுக்க ஆரம்பிக்கிறான்.... Continue Reading →
வாய்மையே சில சமயம் வெல்லும்
ஸ்கூல் பிக்னிக் சென்றிருந்த சித்ராவிடம் அவளது அப்பாவின் உடல்நிலை மோசமாக இருப்பதாக பொய்சொல்லி, உதவி செய்வது போல் தன்னுடைய காரில் அழைத்துச் சென்று மானபங்கப்படுத்தி போட்டோ எடுக்கிறான் சகல விதமான கெட்டப்பழக்கங்களும் உள்ள வினோத். சித்ராவைக் காப்பாற்றி அழைத்துச் செல்ல வருகிறார், சித்ராவின் வீட்டு மாடியில் தங்கியிருக்கும், அவளை ஒருதலையாக காதலிக்கும் விஜயகுமார். இதற்கிடையே மாதர் சங்கத்தைச் சேர்ந்த நித்யாவிற்கு சித்ரா பற்றி தெரியவர, தான் வினோத்திற்கு தண்டனை வாங்கித்தருவதாக கூற, கடைசியில் விஷயம் பேப்பரில் வெளிவருகிறது.... Continue Reading →
விவேக் விஷ்ணு ஒரு விடுகதை – Crime Novel
தற்கொலை செய்துகொள்ளும்படி தன்னுடைய காதில் அடிக்கடி ஒரு குரல் ஒலிப்பதாகக் கூறி மனநல மருத்துவர் மணிமேகலையைச் சந்திக்க வருகிறாள் தமயந்தி. ஆனால், டாக்டரிடம் வந்துவிட்டு சென்ற சில மணி நேரங்களிலேயே வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொள்கிறாள். உயிருடன் இருக்கும்போதே டி.ஐ.ஜி. பால்ராஜூக்கும் ஐஏஎஸ் ரவீந்திரனுக்கும் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டை அனுப்பிய எதிரி அந்த ரிப்போர்ட்டில் இருப்பது போலவே பாம்பு கடிக்க வைத்து இருவரையும் கொலை செய்கிறான். அதேபோல் தன் பெயர் “ச ரி க ம... Continue Reading →
வென்று வா விவேக் – Crime Novel
நான் ஒரு கைதி. டெல்லி பாலிகஞ்ச் சிறை. இந்த மாதம் 17 ஆம் தேதி. விபரீதம் ஆபத்து. தடுக்கவும். உங்கள் உயர் அதிகாரிகளை மட்டும் தொடர்பு கொள்க. இதை அலட்சியப்படுத்த வேண்டாம். அந்த அதிகாலை வேளையில் ஒரு டாக்ஸி டிரைவர் கொண்டு வந்த எச்சரிக்கைக் கடிதத்தைப் படித்த விவேக் திகைத்தான். உடனே டெல்லி கிளம்பிய விவேக் அங்கிருந்த மேலதிகாரிகளை சந்தித்து, நடக்கப் போகிற விபரீதத்தைத் தடுக்க முதலில் சிறைக்கு சென்று பார்வையிட முடிவு செய்தான். சிறையில் அவர்களுக்கு... Continue Reading →
ஹாங்காங் விழிகள் – Crime Novel
பிரபல டைரக்டர் ஜெயக்கொடி தன் மகள் நிஷாவிற்கு பார்த்திருந்த ஹாங்காங் மாப்பிள்ளையின் குணநலன்களைப் பற்றி விசாரிக்க ஸ்கைவியூ டிடெக்டிவ் சரண்-வெண்ணிலாவிடம் உதவி கேட்கிறார். ஆனால், நிஷா வேறு ஒருவரைக் காதலிப்பது சரணுக்குத் தெரிய வருகிறது. அதே நேரத்தில் ஜமீன் பரம்பரைக்குச் சொந்தமான கடத்தப்பட்ட இரு வைரங்களை மறைமுகமாக வாங்க வைதேகியும் வந்தியத்தேவனும் ஹாங்காங் விரைகிறார்கள். இதற்கிடையில் ஹாங்காங்கில் இருந்த சரண்-வெண்ணிலா அறையில் கத்திக்குத்துப் பட்ட ஒருவன் வந்து ஒரு பொருளைக் கொடுத்து அதை உரிய நபர்களிடம் சேர்ப்பிக்கச்... Continue Reading →
ஒரு நிமிஷ நிசப்தம் – Crime Novel
தனக்கு வரப்போகும் மாப்பிள்ளை குறைந்தது பத்து லட்சமாவது வைத்திருக்க வேண்டும் என்ற தன் அப்பாவின் கோரிக்கையைக் கேட்ட அபிநயா தன் காதலை அவரிடம் சொல்லவந்து பின் நிறுத்திக்கொண்டாள். பலமாக யோசித்த அபி ஒரு முடிவுக்கு வந்து தன் திட்டத்தை காதலன் சபரியிடம் ஒப்பித்தாள். திட்டப்படி அபியை ஒரு ஆள் கடத்தி பத்து லட்சம் பணம் கேட்டு அவள் அப்பாவை மிரட்டி பணம் வாங்குவது, சில நாட்கள் கழித்து அபியைப் பெண் கேட்டு திருமணம் செய்து கொள்வது. அனைத்தும்... Continue Reading →
வாயுபுத்ரர் வாக்கு
பிரகஸ்பதி.. தன் நண்பன் உயிரோடு கிடைத்த சந்தோஷத்தை விட, ஐந்து வருடங்களாக மறைந்து வாழ வேண்டிய அவசியம் என்ன? என்ற கேள்வி சிவனைத் துளைத்தெடுக்கிறது. மேலும் பஞ்சவடியில் தங்களைக் கொல்வதற்கு எதிரிகளான சக்ரவர்த்தி தக்ஷரும், அயோத்தி அரசர் திலீபரும் கைகோர்த்திருப்பது அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால், இந்த சதி திட்டத்திற்குப் பின்னால் அவர்கள் இருவரையும் ஆட்டிவைக்கும் ஒரு சூத்திரதாரி இருப்பதை சிவன் உணர்ந்தார். ஒரு யுகத்தின் மிகப்பெரிய நன்மையே(சோமரசம்) தீமையாக மாறும் என்பதை அறிந்த சிவனுக்கு... Continue Reading →
முதல் தீக்குச்சி – Crime Novel
கேள்விக்கு நடுவே முதல் தீக்குச்சி பற்றவைக்கப்பட்டது…
ஒளிந்தாலும் விடமாட்டேன் – Crime Novel
பணத்திற்கு மசியாமல், ஒழுக்கமான நடிகையாக வலம்வந்து கொண்டிருந்த நடிகை தாமினியைத் தன் வலையில் வீழ்த்தத் திட்டம் போட்டு அவளைத் தன் வீட்டிற்கு வரவழைக்கிறார் கலாச்சாரத் துறை அமைச்சர். அவருடைய விருப்பத்திற்கிணங்காத தாமினி அவரை எதிர்த்துப் போராடுகிறாள். இதனால் கோபமடைந்த அமைச்சரின் மூலமாக பட வாய்ப்புகளை இழக்கிறாள் தாமினி. மேலும், அமைச்சர் கொலைமுயற்சியும் செய்ய அது தோல்வியில் முடிகிறது. அமைச்சரை எதிர்த்து எதுவும் செய்ய முடியாமல் தவிக்கிறாள் தாமினி. திடீரென்று ஒருநாள் ஜூவாலஜிகல் வெப்பன் மூலமாக அமைச்சர் இறந்த... Continue Reading →
#3 கதை சொல்ல போறோம்(Kutty Story #3)
நீங்க என்ன குப்பைத்தொட்டியா? "குருவே என்னால் வாழ்க்கையில் முன்னேற முடியவில்லை" என்று சலிப்புடன் சொன்னவனை நிமிர்ந்து பார்த்தார் குரு. 'வருத்தப்படாதே, என்ன பிரச்சினை?' என்று கேட்டார் குரு. என்னைப் பற்றி குறை கூறுபவர்கள் அதிகரித்து விட்டார்கள் அவர்களை எப்படி சமாளிப்பது என்று தெரியவில்லை என்றான் வந்தவன். வந்தவனின் பிரச்சினை குருவிற்கு புரிந்தது. குரு அவனுக்கு ஒரு சம்பவத்தை சொல்ல ஆரம்பித்தார். "அமெரிக்காவில் ஒரு டாக்ஸியில் இந்தியர் ஒருவர் பயணித்துக்கொண்டிருந்தார். காலை நேரம் நிறைய போக்குவரத்து இருந்ததால் சிரமப்பட்டுதான்... Continue Reading →
தலையுதிர் பருவம் – Crime Novel
புதிதாக திருமணமான சரவணகுமாரும் மதுலிகாவும் முன்னிரவு நேரத்தில் நண்பன் ரவிஷங்கரின் கெஸ்ட் ஹவுஸ் போய்ச் சேர்ந்த போது காற்றில் சில்வண்டுகளின் சப்தம் மனதில் ஒரு கிலியை ஏற்படுத்தியது. வாட்ச்மேனும் சொந்த வேலையாக வெளியே சென்றுவிட ஆளரவமற்ற அந்த அத்துவானக் காட்டில் இருவரும் தனித்து விடப்பட்டனர். திடீரென இரவில் அறைக்கு வெளியே யாரோ நடக்கும் சப்தம் கேட்க திடுக்கிட்டு விழித்த மது கணவனிடம் தான் கேட்டதைக் கூற இங்கிருந்து கதை சூடு பிடிக்க ஆரம்பிக்கிறது. தொடர்ந்து டெலிபோன் இணைப்பு... Continue Reading →
#2 கதை சொல்ல போறோம்(Kutty Story #2)
ஏ.டி.எம் கார்டு பெற்றோர்கள்! ஆதார் கார்டு பிள்ளைகள்! உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் அவரை மறுமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியும், அவரால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. என் மனைவி, அவள் நினைவாக எனக்கு ஒரு மகனை விட்டு சென்று இருக்கிறார். அவனை வளர்த்து ஆளாக்குவது ஒன்றே என் வேலை, அவன் சந்தோஷத்தில் அகமகிழ்ந்து, அவன் வெற்றியில் நான் திளைத்திருப்பது எனக்கு போதும். இனி அவனுக்காக வாழப்போகிறேன். இன்னொரு துணை எனக்கு தேவை இல்லை என கூறிவிட்டார். வருடங்கள் உருண்டோடியது.... Continue Reading →
அடுத்த இலக்கு – Crime Novel
அமிலத்தில் சிதைந்த ஒரு பெண்ணின் பிணம் ஹோட்டலில் கிடைத்த போது அது யாரென்று தெரியாமல் போலீஸ் திணறிக் கொண்டிருந்தது. அதே நேரம் தங்களுடைய பெண் அபூர்வாவைக் காணவில்லை என அவளுடைய அப்பாவும் அம்மாவும் பத்து நாட்களாகத் தேடிக் கொண்டிருந்தனர். அபூர்வமாக பிணத்தில் இருந்து கிடைத்த ஒரு தடயம் அந்தப் பெண் டிவி நடிகை நிரஞ்சனா என்று சொல்லியது. கொலைக்கான மோட்டிவ் புரியாமல் தவித்துக் கொண்டிருந்த போலீசின் சந்தேகம் பிரபலமான மாஜி எம்எல்ஏ மீது விழுந்தது. நிரஞ்சனாவின் மரணத்திற்கான... Continue Reading →
#1 கதை சொல்ல போறோம்(Kutty Story #1)
வாழ்க்கையின் மதிப்புதான் என்ன ? தன்னைப் பற்றி தாழ்வுமனப்பான்மை கொண்ட ஒருவன் கடவுளை வேண்டி தவமிருந்தபின் அவன் முன்னே கடவுள் தோன்றினார். அவன் கடவுளிடம் என்னை ஏன் இப்படி படைத்தீர்கள்? என் வாழ்க்கையின் மதிப்புதான் என்ன? என்று கேட்டான். கடவுள், அவனிடம் ஒரு சிகப்புக் கல்லை கொடுத்து இதன் மதிப்பை அறிந்துவா, ஆனால் விற்கக்கூடாது என்றார். அவன் அக்கல்லை ஒரு மாதுளை வியாபாரியிடம் காண்பித்ததற்கு, அவன் ஒரு டஜன் மாதுளை கொடுப்பதாகக் கூறினான். அதையே உருளைக்கிழங்கு வியாபாரியிடம் காண்பித்ததற்கு ஒரு மூட்டை கிழங்கு... Continue Reading →
இந்தியனாய் இரு..! – Crime Novel
“இந்த இந்தியாவில் பிறந்ததற்காக நான் வெட்கப்படுகிறேன்” என்ற தலைப்பில் துங்கபத்ரா பேசி முடித்த அடுத்த நிமிடம் அரங்கமே கைதட்டலால் அதிர்ந்தது. கல்லூரிப் பேச்சுப்போட்டியில் அரசாங்கத்தை சாடி துங்கபத்ரா பேசிய பேச்சின் எதிரொலியாக டேனியல் என்பவன் அவளைச் சந்திக்க வந்தான். அவளும் தங்களைப் போலவே அரசாங்கத்தின் மீது தீராத கோபத்தில் இருப்பதால் தங்களுடைய இயக்கத்தில் அவளைச் சேர்க்கிறார்கள். அரசாங்கத்தை அதிரவைக்க சில விபரீதமான திட்டங்களை அவர்களுடன் சேர்ந்து துங்கபத்ரா செயல்படுத்திய அனைத்துமே புஸ்வாணமாகிப் போகிறது. இந்தியனாய் இருப்பதே வெற்றிதான்..... Continue Reading →
ரெடிமேட் சொர்க்கம் – Crime Novel
கஷ்டப்பட்டு பாடி சம்பாதித்த சொத்துக்களை தன்னுடைய இஷ்டப்படி பெற்றோர்கள் சிறிதும் நல்வழியில் செலவிட சம்மதிக்காததால் ஒரு கடத்தல் நாடகத் திட்டம் போடுகிறாள் பாடகி சுரபி. ரத்ததானம் செய்யப்போவதாகச் சொல்லி ரிக்கார்டிங் தியேட்டரிலிருந்து கிளம்பிய சுரபி, காதலன் ஹேமந்த் மற்றும் அவன் நண்பன் சையத்துடன் சேர்த்து கடத்தல் நாடகத்தைத் தொடங்க இருந்த நேரத்தில், நிஜ கடத்தல்காரர்களிடம் மாட்டிக்கொள்ள விஷயம் விஸ்வரூபம் எடுக்கிறது. கடத்தல்காரர்கள் நிர்பந்தித்த தொகையை எடுத்துச் சென்ற சுரபியின் தந்தை கொல்லப்படுகிறார். அதேபோல் அவளுடைய தாயும் கொல்லப்படுகிறாள்.... Continue Reading →
விடை சொல் விவேக் – Crime Novel
நண்பரைப் பார்க்க டெல்லிக்குச் சென்றிருந்த புரொபசர் பிரிஜேஷை சந்திக்க டெல்லி சென்றான் விவேக். காரணம் டெல்லியில் இருந்து சென்னைக்கு புரொபசருக்கு வந்திருந்த பார்சலில் விபரீதமான முறையில் இருந்த தலை முதல் கால் வரை உரித்து எடுக்கப்பட்டிருந்த மனிதத் தோல். பார்சலை டெல்லியிலிருந்து அனுப்பி வைத்தது ஒரு பெண். புரொபசர் தங்கியிருந்த வீட்டை அடைந்த விவேக்கை மேலும் திடுக்கிடச் செய்தது, கத்தியால் கொலையுண்டிருந்த ஒரு இளம்பெண். அந்த வீட்டில் புரொபசரும் இல்லை, அவரின் நண்பரும் இல்லை. பார்சலில் வந்திருந்த... Continue Reading →
அரை மில்லி மீட்டரில் ஓர் ஆபத்து..! – Crime Novel
இரண்டு வருடங்களாகியும் தனக்கு இன்னும் வேலை கிடைக்கவில்லையே என்ற விரக்தியில் இருந்த கிருஷ்ணாவால் தன்னுடைய காதலி சந்தியாவிற்கு அரசு வேலை கிடைத்ததை எண்ணி சந்தோஷப்பட முடியவில்லை. இதைத் தெரிந்துகொண்ட ஒருவன் அவனைத் தொடர்ந்து சென்று வேலைவாங்கித் தருவதாக ஒரு கம்பெனிக்கு அழைத்துச் செல்ல இங்கே இருந்து விபரீதம் ஆரம்பமாகிறது. கம்பெனியின் சட்டவிரோத காரியத்திற்கு தன்னைப் பகடைக்காயாக மாற்றப்போவதை உணர்ந்த கிருஷ்ணா உள்ளுக்குள் அதிர்ந்தான். இந்நிலையில் வாட்டர் போர்டு ஆபிசில் இருந்த முக்கியமான ஒரு ரெகார்டுக்காக கொலை நடக்கிறது.... Continue Reading →
சித்திரப்பாவை
அண்ணாமலை-கலைகளின் மீது அதீத ஆர்வமுள்ள ஒரு ஓவியக் கலைஞன். தன்னுடைய அப்பா சிதம்பரத்தின் ஆசையான இன்ஜினியரிங் படிப்பைப் படிக்க விரும்பாமல் ஓவியப் படிப்பின் மீது தன் ஆசையை வைக்கிறான். ஆனால், அவரின் ஆசையை ஓரளவு பூர்த்தி செய்கிறான் அவருடைய கண்காணிப்பில் இருக்கும் மாணிக்கம். இதற்கிடையே ஓவிய ஆசிரியர் கதிரேசன் மற்றும் அவரது மகள் ஆனந்தியின் நட்பு அண்ணாமலைக்கு கிடைக்க, அவன் ஓவியக் கல்லூரியில் சேர்வதற்கான வாய்ப்பு கிடைக்கிறது. கல்லூரி திறப்பதற்கு முன் ஆனந்தியின் வீட்டுக்கு ஓவியம் கற்றுக்... Continue Reading →
வந்தார்கள்..வென்றார்கள்.!
வாழ்ந்து சென்றவர்களை விட, வென்று சென்றவர்களே வரலாற்றில் பொறிக்கப்படுகிறார்கள். இது வென்றவர்களின் வரலாறு. இந்தியா பல இயற்கை அரண்களைக் கொண்டு பாதுகாக்கப்பட்ட ஒரு புதையல் பெட்டி. இந்திய வளங்களைப் பற்றிய கதைகள், பல கூட்டங்களை ஈர்த்தது. சவாலான அரண்கள் பல பலசாலிகளை வம்பிற்கு இழுத்தது. கி.பி. 1191 முகமது கோரி தான் நம் இந்தியாவிற்கு வெளியில் இருந்து வந்த முதல் அச்சுறுத்தல். பிறகு தைமூர், கஜினி முகமது என்று ஒரு பெரிய பெயர்ப் பட்டியலே உள்ளது. பிரிட்டிஷ்காரர்கள்... Continue Reading →
ஃபர்ஸ்ட் ஃப்ளைட் டூ பாரீஸ் – Crime Novel
க்ரைம் பிரான்ச் மீட்டிங்கை அட்டென்ட் பண்ணுவதற்காக ரூபலாவுடன் பம்பாய் வந்த விவேக்குடன் ஒரு வழக்கும் தொடர்ந்து வந்துவிட்டது. கடுப்பான ரூபலாவைப் பொருட்படுத்தாமல் உயரதிகாரியை சந்திக்க சென்றான் விவேக். அடுத்த நாள் கிளம்பவிருக்கும் முதல் பாரீஸ் ஃப்ளைட்டுக்கு ஆபத்து என்று தகவல் சொல்லியது அந்த அறையில் இருந்த அனைத்து கம்ப்யூட்டர்களும். அந்த விமானத்தில் பறக்க இருந்த பிரபலமான நடிகர் சசிதரனுக்கும் நடிகை நட்சத்திராவுக்கும் விடப்பட்ட மிரட்டல் என்றெண்ணிய விவேக் அவர்களிடம் மட்டும் உண்மையைச் சொல்லிவிட்டு, உடனே ஒரு வியூகத்தை... Continue Reading →
சில்லுக் கருப்பட்டி
புத்தகங்கள் பற்றிய எனது வலைப்பூவில் முதன் முதலில் ஒரு திரைப்படத்தைப் பற்றி நான் எழுதுகிறேன். இது நான் சுவைத்த "சில்லுக் கருப்பட்டி". இது ஒரு Anthology திரைப்படம். நான்கு வித்தியாசமான கதை. 1. Pink Bag | 2.காக்காக் கடி | 3.Turtle | 4.Hey Ammu. இது Movie Review இல்லை. இது எனக்குள் தோன்றிய சிந்தனைகள். (குறிப்பு : ரசனைகள் ஒருவருக்கொருவர் வேறுபடலாம்.) குப்பைமேட்டில் கதை பிறக்கிறது. ஒரு குழந்தைப் பருவக் காதல். நேர்முகம்... Continue Reading →
Pandemic around the world
This 2020 is pandemic(Corona Virus) period. People faced different pandemic/epidemic at different periods in this world. Often many people are not aware of pandemic. Many authors write about pandemic happened in particular time period. These book gives us a clear and wide knowledge about pandemic. Come on friends..let us see authors opinions and facts about... Continue Reading →
இப்படிக்கு ஓர் இந்தியன் – Crime Novel
காலபைரவன் எச்சரிக்கை - சாலையில் வைக்கப்பட்டிருந்த அந்த விபரீதமான ஃபிளக்ஸ் போர்டை பார்த்த ஒருவர் போலீசிற்கு தகவல் தெரிவிக்க, விரைந்து வந்த போலீசார் இது வெற்று மிரட்டல் என்று நினைத்த நேரத்தில் அதே போன்று இன்னொரு ரயிலில் கிடைக்கிறது. இரண்டு ஃபிளக்ஸிலும் இருந்த போன் நம்பர்களுக்கும் போன் செய்து எச்சரிக்கை செய்தது போலீஸ். ஆனால் விபரீதம் வேறு வடிவத்தில் வந்தது. வேறு கேஸ் விஷயமாக கமிஷனரைப் பார்க்கப் போன விவேக்கிற்கு இந்த ஃபிளக்ஸ் விவகாரம் தெரிய வருகிறது.... Continue Reading →
Free Tamil e-Book Websites
இந்த டிஜிட்டல் உலகத்துல மட்டுமில்ல எப்பவுமே தகவல்களுக்கு ஒரு தனி மவுசு தான். தகவல், அப்படின்னு ஒன்னு இல்லைன்னா பேப்பருக்கு அவசியமே இல்லாம போயிருக்கும். அப்படிப்பட்ட ஒரு பொன்னான தகவல்கள்தான் இந்த பதிவு “இலவச வாசிப்பு”. வாசிப்பு பழக்கத்தை ஊக்கப்படுத்த பல குழுக்கள் பல காலகட்டங்களில் பல முயற்சிகளை செஞ்சிருக்காங்க. இன்றளவும் செஞ்சிட்டு தான் இருக்காங்க. அதுல, சில முயற்சிகள் ரொம்ப அழகாகவும் வெற்றிகரமாகவும் இருந்திருக்கு. “இலவச வாசிப்பு” எப்போதும் பல பேருடைய பெருமுயற்சிகளுக்குப் பிறகு தான்... Continue Reading →
வாடகை தேவதை – Crime Novel
சமீபத்தில் நடந்த டென்னீஸ் போட்டியில் வென்று உலக அளவில் இன்று பேசப்பட்டு வரும் குந்தவை டிவி பேட்டியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சளைக்காமல் பதில் சொல்லிக்கொண்டிருந்தாள். பேட்டியை முடித்துவிட்டு திரும்புகையில் வீட்டில் ஒரு பூகம்பம் காத்திருக்கிறது என்று அவளுக்கு அப்போது தெரியாது. ராமன் நாயரும் அவரது மனைவி தங்கம்மாவும் தான் குந்தவையின் உண்மையான அப்பா அம்மா என்று சொல்லி டாக்டர் பாரிஜாதம் நர்ஸ் சுந்தரவள்ளியுடன் அவர்கள் இருவரையும் குந்தவையின் வீட்டிற்கு அழைத்து வர, அதைக் கேட்ட குந்தவையின் பெற்றோர்கள்... Continue Reading →
காதல் தேசத்துக்கு ஒரு விசா..! – Crime Novel
மிஸ் இந்தியா பட்டம் வென்ற கையோடு கோயம்புத்தூர் ஏர்போர்ட்டில் கால் வைத்தாள் நர்த்தனா. தன்னுடைய அப்பா சொன்ன அடையாளங்களை வைத்து, புது கார் டிரைவரை அந்தக் கூட்டத்தில் தேடிக்கொண்டிருந்த போது இரண்டு ரௌடிகள் நர்த்தனாவிடம் வம்பிழுக்க, அவளைக் காப்பாற்றி வீட்டில் சேர்க்கிறான் டிரைவர் அசோக். அசோக்கின் சாதுர்யம் நர்த்தனாவிற்கு பிடித்துப் போக, அவன் விலகிச் சென்றாலும் வலிய போய் பேசுகிறாள் நர்த்தனா. இருவருக்கும் காதல் மலர, விஷயம் நர்த்தனாவின் அப்பா காதுக்கு செல்ல இங்குதான் விபரீதம் ஆரம்பமாகிறது.... Continue Reading →
அம்மா..
பல கனவுகளுடனும் எதிர்பார்ப்புகளுடனும் தன்னுடைய திருமண வாழ்வில் அடியெடுத்து வைக்கும் ஒரு சக மனுஷி. சமைக்க, வீட்டுவேலை செய்ய, தன்னுடைய தேவைகளைப் பூர்த்தி செய்ய என அவளை வெறும் ஒரு இயந்திரமாக மட்டுமே உபயோகிக்கும் ஆண். இப்படிப்பட்ட ஆணாதிக்க சூழ்நிலையில், மற்ற உறவினர்களின் கேலிப்பேச்சுக்கும் ஆளாக நேர்கிறது. இதற்கிடையே இரண்டு குழந்தைகள். சிறுவயது முதலே அன்பும் கனிவும் மரியாதையும் சொல்லிக் கொடுத்து அக்குழந்தைகளை வளர்க்கிறாள் அந்த அன்னை. வீட்டில் கணவனுக்கு கீழேயும் அலுவலகத்தில் மேலதிகாரிக்குக் கீழேயும் இருக்க... Continue Reading →
மரண வீடு
புராதன ஓலைச்சுவடிகள் நாட்டுடைமையாக மாற்றப்படாமல் போனதால் சிலருக்கு சொத்துக்களாகவும், சிலருக்கு சந்தைப் பொருட்களாகவும் தோற்றமளிக்கிறது. இம்முறை ஃபெலுடா, தபேஷ், லால்மோகன் பாபு மூவரும் தங்கள் விடுமுறை தினங்களைப் பூரியில் களிக்க கடற்கரை விடுதியில் தங்கினர். அதிகாலை கடற்கரை நடையில் பயணம் ஒரு பிணத்திற்கு அருகே சென்று நின்றது. போலீசிற்கு தகவல் சென்றது. மர்மங்களில் சிக்கிக்கொள்ளாமல் ஓய்வினைத் தொடர்ந்தார் ஃபெலுடா. தபேஷ் சுற்றுப்புற விசித்திரங்களைத் தலையில் போட்டு உருட்டிக்கொண்டிருந்தான். புராதன ஓலைச்சுவடிகள் வைத்திருந்த சென். நெற்றியில் கைவைத்து எதிர்காலம்... Continue Reading →
நிறம் மாறும் நிஜங்கள் – Crime Novel
கல்யாணத்தைப் பிடிவாதமாக மறுக்கும் மைத்ரேயி கல்யாணம் செய்து கொண்டால்தான் சொத்துக்கள் அவள் பெயருக்கு மாறும் என்று உயில் எழுதி வைத்துவிட்டு இறந்து விடுகிறார் மைத்ரேயியின் அப்பா. அதற்காக போலியாக ஒரு திருமணத்திற்கு ஏற்பாடு செய்ய முடிவெடுக்கிறாள். இந்நிலையில் மைத்ரேயியின் தோழி புவனா வேலை விஷயமாக அவள் வீட்டிற்கு வந்து தங்க, திருமணமான தன் தோழி புவனாவிடம் உதவி கேட்கிறாள் மைத்ரேயி. புவனா முதலில் மறுத்துப் பின், வரவிருக்கும் ஆபத்தை அறியாமல் தன் கணவனை மைத்ரேயியிற்குப் போலியாகத் திருமணம்... Continue Reading →
ஆபத்து இங்கே ஆரம்பம்..! – Crime Novel
விவேக் அந்த பிணத்தைப் பற்றி யோசித்துக்கொண்டே நடந்தவற்றை அசைபோட்டான். நீலேஷின் மனைவி கஸ்தூரி வேறு ஒருவனுடன் சென்று விட, மனைவியைப் பிரிந்த துக்கத்தில் இருந்த நீலேஷ் நண்பன் ரமணனின் கெஸ்ட் ஹௌசிற்கு ஓய்வெடுக்க வருகிறான். வந்த இடத்தில் ஒரு பெண்ணின் பிணம் கிடைக்கிறது. இதற்கிடையில் கேஸில் விவேக்கிற்கு ஒரு முக்கியமான தடயம் கிடைக்கிறது. அதை வைத்து விசாரித்துக் கொண்டிருந்த அவனுக்கு அந்தக் கொலைக்கான காரணம் தெரியவருகிறது. அந்தப் பெண்ணின் பிணம் யாருடையது என்பதை கிடைத்த தடயத்தின் மூலம்... Continue Reading →
தேவியின் சாபம்
ஓய்வைக் கழிப்பதற்காகத் தன் நண்பரின் அழைப்பை ஏற்று ஹஸாரி பாகில் தங்குவதற்கு முடிவு செய்கிறார் ஃபெலுடா. ஹஸாரி பாக் பயணத்தின்போது அறிமுகமான சௌதுரி தன்னுடைய தந்தையின் பிறந்தநாள் விழாவிற்கு ஃபெலுடாவிற்கு அழைப்பு விடுத்தார். ஹஸாரி பாகிற்கு வந்து சேர்ந்ததும் தொப்ஷேவிற்கும் கங்குலிக்கும் எதிராக புலி ஒன்று தோன்றி மறைந்தது. அப்பொழுதுதான் தி கிரேட் மெஜஸ்டிக் சர்க்கஸிலிருந்து புலி தப்பித்த செய்தி கிடைத்தது. அதிர்ச்சிக்குப் பழக்கப்பட்ட ஃபெலுடா, சௌதுரி வீட்டு விழாவிற்கு செல்கிறார். அங்கே தான்.. ஓய்வுப் பயணம்... Continue Reading →
முடிந்தால் உயிரோடு – Crime Novel
மாமனாருடன் சேர்ந்து வேலை செய்யாததால் சூழ்ச்சி செய்து தன்னுடைய கம்பெனியை தன்னுடைய மனைவியிடமே ஏலத்தில் இழந்துவிட்ட சோகத்தில் இருந்தான் குருப்ரசாத். இந்நிலையில் குருப்ரசாத்தை தங்கள் கம்பெனிக்கு இழுக்க முயற்சி செய்கிறாள் குருப்ரசாத்தின் மனைவி வர்ணா. பேச்சு கைகலப்பில் முடிந்து குருப்ரசாத் இறக்கிறான். குருப்ரசாத்தின் பி.ஏ ஜெயச்சந்திரனும் வர்ணாவும் சேர்ந்து அவனை கெஸ்ட் ஹௌசில் புதைக்கின்றனர். அண்ணனைத் தேடி வரும் மைதிலி அவனைக் காணாமல் விவேக்கிடம் உதவி கோர, விவேக்கால் முடிந்ததா என்பதே மீதிக்கதை. #one_minute_one_book #tamil #book... Continue Reading →