#8 மூளைக்கு வேலை

லட்சுமிப்பாட்டிக்குத் தன் பேத்தியைப் பார்க்காமல் இருக்க முடிவதில்லை. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் தன் பேத்தியைக் காணச் சென்றுவிடுவார்கள். முந்தைய நாள் தன் பேத்தியைப் பார்க்கச் சென்றிருந்தால், நாளை என்ன கிழமை?தேவா தன் நண்பனை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் கோவிலில் சந்திப்பான். முதல் வெள்ளிக்கிழமை 11-40 மணிக்குச் சந்தித்தான். அடுத்த வெள்ளிக்கிழமை 12-50 மணிக்குச் சந்தித்தான். அதற்கு அடுத்த வெள்ளிக்கிழமை 2 மணிக்குச் சந்தித்தான். இனிவரும் வெள்ளிக்கிழமை எத்தனை மணிக்குச் சந்திப்பான்? Solve if you can Friends.. #one_minute_one_book #tamil... Continue Reading →

#7 மூளைக்கு வேலை

Solve if you can Friends.. வந்தியத்தேவன் தனது வீட்டிலிருந்து தனது வேலைத்தளத்திற்குச் சென்று திரும்ப 30 கிலோமீட்டர்கள் சைக்கிள் ஓட்ட வேண்டும். அவனது வீட்டிற்கும் வேலைத்தளத்திற்கும் இடையில் சரி நடுவில் ஒரு கோவில் உள்ளது. அக்கோவில் வந்தியத்தேவனின் வீட்டிலிருந்து எத்தனை கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது?வானதியின் தந்தை சுரேஷின் தந்தைக்கு மகனாவார். அப்படியென்றால் வானதி, சுரேஷுக்கு என்ன முறை? #one_minute_one_book #tamil #book #review #riddle

#6 மூளைக்கு வேலை

தைப்பொங்கல் திருநாள். அம்மா பொங்கல் செய்தார்கள். பொங்கலிற்கு ஒவ்வொரு முந்திரிப்பருப்புக்கும் இவ்விரு முந்திரி வற்றல் இட்டார்கள். மொத்தமாக 600 முந்திரிப்பருப்புக்களும் முந்திரி வற்றல்களும் இடப்பட்டிருந்தால், பொங்கலில் எவ்வளவு முந்திரி வற்றல்கள் இடப்பட்டன?காற்றற்ற வெற்றிடமான ஓர் அறை 200 மீட்டர் உயரமானது. உச்சியில் அமைக்கப்பட்ட தளத்திலிருந்து ஒரு இரும்புத்துண்டைக் கீழே போட அது 3 வினாடிகளில் நிலத்தை வந்தடைந்தது. அதே தளத்தில் இருந்து ஒரு பறவையின் சிறகினைக் கீழே போட்டால் எத்தனை வினாடிகளில் அது நிலத்தினை வந்தடையும்? Solve... Continue Reading →

#5 மூளைக்கு வேலை

மகிழினி வீட்டில் இருந்து புறப்பட்டு, கிழக்கு நோக்கி நடந்து சென்று, முதலாவது சந்தியில் இடதுபக்கம் திரும்பி நடந்து, இரண்டாம் சந்தியில் மீண்டும் இடதுபக்கம் திரும்பி நடந்து, ரதியின் வீட்டை நெருங்கிய போது, வீட்டு முற்றத்திலிருந்து நிலா என்னைப் பார்த்துக்கொண்டிருந்தாள். நிலா எந்தத் திசை நோக்கி நிற்கிறாள்?45 என்ற எண்ணை நான்கு பகுதிகளாகப் பிரித்துக்கொள்க. முதற்பகுதியில் 2-ஐக் கூட்டுக. இரண்டாவது பகுதியில் 2-ஐக் கழிக்க. மூன்றாவது பகுதியில் 2-ஆல் பெருக்குக. நான்காவது பகுதியை 2-ஆல் வகுக்க. இவ்வாறு செய்தால்... Continue Reading →

#4 மூளைக்கு வேலை

எண்ணெய் வாங்குவதற்காக கிரி கியூவில் வரிசையாக நிற்கிறார். அந்த வரிசையில் சரி நடுவில் அவர் நிற்கிறார். இடது பக்கத்திலிருந்து வலது பக்கமாக எண்ணினாலும், வலது பக்கத்திலிருந்து இடது பக்கமாக எண்ணினாலும் 213-ஆக வருகிறார். எனில், அந்த கியூவில் மொத்தம் எத்தனை பேர் நிற்கிறார்கள்? ராகுல் கப்பல் ஒன்றில் பயணம் செய்துகொண்டிருந்தான். ஹுக்ளி நதியூடாக வங்காளவிரிகுடாவில் அக்கப்பல் பிரவேசித்தபோது, அது சற்று உயர்ந்து மிதந்தது. காரணம் என்ன? அன்றைய கூலியைப் பெற்றுக்கொண்டு ராஜா வெளியில் வந்தான். அவன் மனைவி... Continue Reading →

#3 மூளைக்கு வேலை!!

10 மீட்டர் உயரமான ஒரு சுவரில் ஒரு நத்தை ஏறுகிறது. ஒரு நாளைக்கு 3 மீட்டர் ஏறினால், 2 மீட்டர் சறுக்கிக் கீழிறங்குகிறது. அது சுவரின் உச்சியை அடைய எத்தனை நாள் செல்லும்? சென்னை மாநகரத்திலே திருவாளர் கவுண்டமணி ஆறு அறைகள் கொண்ட ஒரு வீடு கட்டி, அந்த ஆறு அறைகளையும் ஒவ்வொரு குடும்பத்திற்கு வாடகைக்கு விட்டிருக்கிறார். முதல் மாதம் ஒவ்வொரு குடும்பத்திடமும் ரூபா 10 வீதம் மொத்தம் 60 ரூபா வாடகையாக வாங்கிவிட்டார். தனது வீட்டிற்குத்... Continue Reading →

#8 கேள்விகள் பல! பதில் ஒன்று!!

இவர் அக்டோபர் 2, 1904-ல் பிறந்தவர்.இவர் இந்தியாவின் பிரதம அமைச்சர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர்.1965-ஆம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் போரின் போது இந்தியாவை இக்கட்டான சூழலில் இருந்து காப்பாற்றியவர்.“ஜெய் ஜவான் ஜெய் கிஸான்” என்பது இவரின் வீர முழக்கம்.இந்திய தேசிய காங்கிரஸின் மூத்த தலைவர்.காந்தியக் கொள்கைகளைத் தீவிரமாகப் பின்பற்றுபவர். அதனால் இவர் இறந்த பின் காந்தியடிகளை அடக்கம் செய்த இடத்தின் அருகிலேயே இவருடைய உடலும் அடக்கம் செய்யப்பட்டது.பதவியில் இருந்தபோது வெளிநாட்டில் இறந்த ஒரே இந்தியப் பிரதமர்.இந்தியாவின் சுதந்திரத்திற்காகப் போராடிய முக்கிய... Continue Reading →

#2 மூளைக்கு வேலை (IQ)

ராஜேஷ் கடற்கரை வழியே சென்று கொண்டிருந்தான். அவனின் வலது பக்கத்தில் சூரியன் மறைந்து கொண்டிருந்தது. ராஜேஷ் எத்திசையை நோக்கிச் சென்றான்?எலியிடமிருந்து எடுத்த வைரஸ் கிருமியை நீர் நிரம்பிய ஒரு கிளாஸில் போட்டால், வினாடிக்கு விநாடி இரு மடங்காகும். ஒன்று இரண்டாகி, இரண்டு நான்காகி அப்படியே அதிகரிக்கும். கிளாஸ் மொத்தமாக வைரஸ் கிருமியால் நிரப்புவதற்கு முப்பது வினாடிகள் ஆனது என்றால், அந்த கிளாஸின் அரைப்பங்கு நிரம்ப எவ்வளவு நேரம் ஆகும்?இராமனுக்குச் சீதை என்றிருந்தபோது, அரிச்சந்திரனுக்குச் சந்திரமதி இருந்தாள். சந்திரமதிக்குச்... Continue Reading →

#1 மூளைக்கு வேலை..

வயசென்ன? 1) எப்பவும் பள்ளிக்கு சீக்கிரமா வர்ற மாலு அன்னிக்கு லேட்டா வந்தாள். “ஏன் லேட்டா வந்தே?”னு ஃப்ரண்ட்ஸ் கேட்டதற்கு, “தம்பி அழுதுகொண்டு இருந்தான். அம்மா வர்றவரை அவனை சமாளிச்சுட்டு வர லேட்டாயிடுச்சு” என்றாள். ஃப்ரண்ட்ஸ் எல்லோரும் “உனக்கு தம்பி இருக்கிறதைச் சொல்லவே இல்லையே...என்ன வயசு உன் தம்பிக்கு?” என்றனர். “என் தம்பியின் வயசால் என் வயசைப் பெருக்கினாலும் வகுத்தாலும் ஒரே விடைதான் வரும். என் தம்பி வயசைக் கண்டுபிடித்துக் கொள்ளுங்கள்” என்றாள்! கண்டுபிடிச்சிட்டீங்களா? 2) இதுவும்... Continue Reading →

Blog at WordPress.com.

Up ↑