இதனால் தெரிவிப்பது என்ன வென்றால்..?(ஈரோடு புத்தகத் திருவிழா 2020)

2004 முதல் 2019 வரை ஒவ்வொரு வருடமும் கோலாகலமாக அரங்கேறிய ஈரோடு புத்தகத் திருவிழா, கரோனா பரவல் மற்றும் அது சார்ந்த பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு இந்த வருடம் ரத்து செய்யப்படுவதாக மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவர் திரு.ஸ்டாலின் குணசேகரன் அறிக்கை வெளியிட்டுள்ளார். ஜூன் 31 முதல் ஆகஸ்ட் 11 வரை மாலை 6 மணிமுதல் 9 மணிவரை ஏற்கனவே 2020 புத்தகத் திருவிழாவுக்கு திட்டமிடப்பட்ட சொற்பொழிவுகள் இணையவழி நேரடி ஒளிபரப்பாக வழங்க முடிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகஅந்த அறிக்கையில்... Continue Reading →

ஒளிந்தாலும் விடமாட்டேன்

பணத்திற்கு மசியாமல், ஒழுக்கமான நடிகையாக வலம்வந்து கொண்டிருந்த நடிகை தாமினியைத் தன் வலையில் வீழ்த்தத் திட்டம் போட்டு அவளைத் தன் வீட்டிற்கு வரவழைக்கிறார் கலாச்சாரத் துறை அமைச்சர். அவருடைய விருப்பத்திற்கிணங்காத தாமினி அவரை எதிர்த்துப் போராடுகிறாள். இதனால் கோபமடைந்த அமைச்சரின் மூலமாக பட வாய்ப்புகளை இழக்கிறாள் தாமினி. மேலும், அமைச்சர் கொலைமுயற்சியும் செய்ய அது தோல்வியில் முடிகிறது. அமைச்சரை எதிர்த்து எதுவும் செய்ய முடியாமல் தவிக்கிறாள் தாமினி. திடீரென்று ஒருநாள் ஜூவாலஜிகல் வெப்பன் மூலமாக அமைச்சர் இறந்த... Continue Reading →

#3 கதை சொல்ல போறோம்(Kutty Story #3)

நீங்க என்ன குப்பைத்தொட்டியா? "குருவே என்னால் வாழ்க்கையில் முன்னேற முடியவில்லை" என்று சலிப்புடன் சொன்னவனை நிமிர்ந்து பார்த்தார் குரு. 'வருத்தப்படாதே, என்ன பிரச்சினை?' என்று கேட்டார் குரு. என்னைப் பற்றி குறை கூறுபவர்கள் அதிகரித்து விட்டார்கள் அவர்களை எப்படி சமாளிப்பது என்று தெரியவில்லை என்றான் வந்தவன். வந்தவனின் பிரச்சினை குருவிற்கு புரிந்தது. குரு அவனுக்கு ஒரு சம்பவத்தை சொல்ல ஆரம்பித்தார். "அமெரிக்காவில் ஒரு டாக்ஸியில் இந்தியர் ஒருவர் பயணித்துக்கொண்டிருந்தார். காலை நேரம் நிறைய போக்குவரத்து இருந்ததால் சிரமப்பட்டுதான்... Continue Reading →

தலையுதிர் பருவம்

புதிதாக திருமணமான சரவணகுமாரும் மதுலிகாவும் முன்னிரவு நேரத்தில் நண்பன் ரவிஷங்கரின் கெஸ்ட் ஹவுஸ் போய்ச் சேர்ந்த போது காற்றில் சில்வண்டுகளின் சப்தம் மனதில் ஒரு கிலியை ஏற்படுத்தியது. வாட்ச்மேனும் சொந்த வேலையாக வெளியே சென்றுவிட ஆளரவமற்ற அந்த அத்துவானக் காட்டில் இருவரும் தனித்து விடப்பட்டனர். திடீரென இரவில் அறைக்கு வெளியே யாரோ நடக்கும் சப்தம் கேட்க திடுக்கிட்டு விழித்த மது கணவனிடம் தான் கேட்டதைக் கூற இங்கிருந்து கதை சூடு பிடிக்க ஆரம்பிக்கிறது. தொடர்ந்து டெலிபோன் இணைப்பு... Continue Reading →

#2 கதை சொல்ல போறோம்(Kutty Story #2)

ஏ.டி.எம் கார்டு பெற்றோர்கள்! ஆதார் கார்டு பிள்ளைகள்! உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் அவரை மறுமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியும், அவரால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. என் மனைவி, அவள் நினைவாக எனக்கு ஒரு மகனை விட்டு சென்று இருக்கிறார். அவனை வளர்த்து ஆளாக்குவது ஒன்றே என் வேலை, அவன் சந்தோஷத்தில் அகமகிழ்ந்து, அவன் வெற்றியில் நான் திளைத்திருப்பது எனக்கு போதும். இனி அவனுக்காக வாழப்போகிறேன். இன்னொரு துணை எனக்கு தேவை இல்லை என கூறிவிட்டார். வருடங்கள் உருண்டோடியது.... Continue Reading →

அடுத்த இலக்கு

அமிலத்தில் சிதைந்த ஒரு பெண்ணின் பிணம் ஹோட்டலில் கிடைத்த  போது அது யாரென்று தெரியாமல் போலீஸ் திணறிக் கொண்டிருந்தது. அதே நேரம் தங்களுடைய பெண் அபூர்வாவைக் காணவில்லை என அவளுடைய அப்பாவும் அம்மாவும் பத்து நாட்களாகத் தேடிக் கொண்டிருந்தனர். அபூர்வமாக பிணத்தில் இருந்து கிடைத்த ஒரு தடயம் அந்தப் பெண் டிவி நடிகை நிரஞ்சனா என்று சொல்லியது. கொலைக்கான மோட்டிவ் புரியாமல் தவித்துக் கொண்டிருந்த போலீசின் சந்தேகம் பிரபலமான மாஜி எம்எல்ஏ மீது விழுந்தது. நிரஞ்சனாவின் மரணத்திற்கான... Continue Reading →

எலியின் பாஸ்வேர்டு

டெக்னாலஜி நமக்கெல்லாம் ஒரு வரமா..? சாபமா..?னு மிக எளிமையா, நம்ம எல்லாருக்குமே ரொம்ப நல்லாத் தெரிஞ்ச பரம எதிரிகளான எலிக்கும், பாம்புக்கும் இடையே நடக்கற ஒரு தொழில்நுட்பப் போர் தான் இந்த எலியின் பாஸ்வேர்டு. டெக்னாலஜிய வெச்சு ஒண்ணை உருவாக்கவும் முடியும், இருக்கற ஒண்ணை அழிக்கவும் முடியும்னு எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் எலி, பாம்பு கதையை வெச்சு நகைச்சுவையுடன் கற்பனையும் கலந்து ஓட்டியிருக்கிறார். பாம்புகளால அழிஞ்சிட்டு வர தன்னோட இனத்தைக் காப்பாத்தறதுக்காக எலிங்க முயல் கிட்ட உதவி கேட்டு... Continue Reading →

Blog at WordPress.com.

Up ↑