கொஞ்சம் மேகம் கொஞ்சம் நிலவு!

"கான்வென்ட்டில் படிக்கும் பள்ளிக் குழந்தைகளைக் கடத்தி, அவர்களை கஷ்டப்படுத்தி, அவர்கள் படும் துன்பத்தை அணுஅணுவாக ரசிக்கும் ஒரு சைக்கோவின் கதை.." ஷ்யாம், சாய் என்ற 6 வயது சிறுவனைத் தன்னுடைய கெஸ்ட் ஹவுஸில் அடைத்து வைத்து உணவு ஏதுமின்றி, அவனுடைய உடம்பிலிருந்து ரத்தத்தை சிரிஞ்சில் உறிஞ்சி, அவன் அழுவதைப் பொருட்படுத்தாமல் சிறுவனுடைய கண்ணீர்த் துளிகளை ருசித்து அதை ரசித்துக் கொண்டிருந்தான். ஷ்யாமிற்கு விபா என்ற பெண்ணுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. சாய் என்ற சிறுவன் விபாவின் அப்பாவிற்கு சொந்தமான... Continue Reading →

நெப்போலியன் கடிதம்

“என்னோட கிளியைத் திருடியவனை உங்களால கண்டுபிடித்து தர முடியுமா..?” சவால் விடும் ஆறு வயது சிறுவனுக்காக கேஸை அணுகும் ஃபெலுடாவிற்கு பழம்பெரும் பொக்கிஷங்களைப் பார்க்க வாய்ப்பு கிடைக்கிறது. கிளியின் கூண்டில் இருந்த ரத்தம். போன இடத்தில் நடக்கும் கொலை!! கொலையானது சிறுவனின் தாத்தா. கொலையாளி யார்? கொலையாளியை பிடிக்க விரையும் ஃபெலுடா, கண் முன்னே மாயமான குற்றவாளி. சிக்கல்கள் அடுக்கி கொண்டே போக, காணாமல் போன வரலாற்று சிறப்பு வாய்ந்த பொக்கிஷம். அந்த பொக்கிஷம் நெப்போலியனின் கடிதம்.... Continue Reading →

ஜீனோம்

“மனித உடல் கட்டிடம்..அறைகள் அதன் செல்கள்..அலமாரி ஒரு செல்லின் உட்கரு..அதில் உள்ள புத்தகம் DNA..ஒவ்வொரு புத்தகமும் 46 பக்கங்களைக் கொண்டுள்ளது. அதில்(ஜீனோம்) உள்ளது ஜீவரகசியம்”. “ஆரம்பக் குறிப்பு : இந்த அத்தியாயத்தைக் கஷ்டப்பட்டு புரிந்து கொண்டுவிட்டீர்கள் என்றால் இனி வரப்போகும் அதிசயங்களை வியப்பது சுலபமாகி விடும்”.                                      -ஜீனோம் புத்தகத்திலிருந்து.. ஜீனோம்.. லைட் போட்ட உடனே ஓடி மறைகிற கரப்பான்பூச்சியும் நீங்களும் ஒரே மாதிரியான மூலப் பொருளிலிருந்து வந்தவங்க தான்னு சொன்னா உங்களால ஏத்துக்க முடியுமா? தி... Continue Reading →

பூட்டிய பணப்பெட்டி

‘ஒன்று இரண்டு.. ஷூவைப் போடு.. மூன்று நான்கு.. கதவை மூடு.. ஐந்து ஆறு.. குச்சியை எடு.. ஏழு எட்டு.. கதவைத் திற.. ஒன்பது பத்து.. ஒரு பெரிய தடித்த கோழி.. பதினொன்று, பன்னிரெண்டு.. தோண்டு, துளாவு..’ ------------------------------------------------------------------------------------ ஃபெலுடாவிற்கு முதியவர் ஒருவரிடமிருந்து வந்த கடித அழைப்பை ஏற்று கல்கத்தாவிலிருந்து வரலாற்று சிறப்பு மிக்க பிளாசிப் போர் நடந்த கிராமத்திற்கு செல்கிறார். அழைப்பின் நோக்கம் புதிரின் முடிச்சை  அவிழ்ப்பதற்கான சவால். விடைக்கு பரிசாக ஃபெலுடாவிற்கு கிடைக்க இருப்பதோ கிடைப்பதற்கரிய... Continue Reading →

உலகை மாற்றிய சமன்பாடுகள்

சமன்பாடுகள்.. AB2+BC2 = AC2 இந்த சமன்பாடு உங்கள்ள நிறைய பேருக்கு எங்கேயோ பார்த்த ஞாபகம்(?) போல தோணும். இதாங்க பிதாகரஸ் தேற்றம். ஆனா இந்த தேற்றத்தோட பயன்பாடு என்னங்க..? யாராச்சும் சொல்ல முடியுமா? பள்ளிப் பருவத்தை தாண்டி வந்த எல்லாருமே கண்டிப்பா இந்த சமன்பாடு(equation) வார்த்தையைக் கேட்டிருப்போம். சிலர் எவன்டா இதையெல்லாம் கண்டுபிடிச்சான்னு திட்டிருப்போம், சிலர் அர்த்தமே புரியாம மனப்பாடம் பண்ணி தான் கண்டிப்பா எழுதியிருப்போம். நமக்கு  சமன்பாடும் தெரியாது, அதோட பயன்பாடும் தெரியாது. ஒரு... Continue Reading →

எளிய தமிழில் CSS

எக்ஸாம்ல content இருந்தா மட்டும் பத்தாது, presentation ரொம்ப முக்கியம். அப்போ தான் மார்க் நிறைய கிடைக்கும். அதுபோல நீங்க ஒரு வலைத்தளம் தொடங்கறிங்க, அதுக்கு மக்கள் கிட்ட வரவேற்பு கிடைக்கணும்னா தரமான பதிவுகளைத் தாண்டி கவர்ச்சியும் வேணும். இப்போ அந்த content தான் HTML, presentation தான் CSS. HTML-ங்கறது உங்க வலைத்தளத்துல இருக்க வேண்டிய தேவையான வரைமுறைகளுடன் கூடிய கருவிகளைக்(tools) கொண்டிருக்கும். இது ஒரு வலைத்தளம் நிறுவ போதுமான ஒன்று. CSS என்பது இந்த... Continue Reading →

மொஸாட்

மொஸாட்.. மொஸாட் லிஅலியா பெட். அலியா பெட்னு சொன்னவுடனே ஏதோ நடிகைன்னு நினைச்சிராதிங்க. இது ஒரு உதவி அமைப்பாகத் தொடங்கி  பின்னாளில் உலகமே பார்த்து நடுங்கும், அமெரிக்காவே தொட பயப்படும் இஸ்ரேலின் ‘மொஸாட்’ என்னும் உளவு அமைப்பாக மாறியது. இஸ்ரேல்.. ஹிட்லரிடமிருந்து தப்பித்து, எஞ்சிய யூதர்களினால் இரண்டாம் உலகப் போருக்கு பிறகு உருவாக்கப்பட்ட தேசமே இஸ்ரேல். புதியதாக உருவாக்கப்பட்ட நாடு என்பதால் அந்நிய நாடுகளின் ஆக்கிரமிப்பு, தீவிரவாத அச்சுறுத்தல் போன்ற பல நெருக்கடிகளை சமாளித்தே வலிமையானது. இவைகளை... Continue Reading →

சாவி

கருமியான(கஞ்சமான) ஒரு இசைக்கலைஞர் இறக்கும் தருவாயில் கூறிய புதிர் வார்த்தையின் பின்னணியில் இருந்தது ஒரு ரகசியம். ரகசியமறிய உதவி கேட்டவரின் ஆவல் ஃபெலுவிற்கும் வர ரகசியத்தின் பாதையில் கதை நகருகிறது. இசைக்கலைஞரின் வீடு அபூர்வ இசைக்கருவிகளால் நிரம்பியுள்ளது ஃபெலுவிற்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. குழப்பத்தில் சிக்கியிருந்த கதையின் நடுவில் அபூர்வ இசைக்கருவிகளை வாங்க வந்த புதிய நபரின் தகவல்கள் ஃபெலுடாவின் உள்ளுணர்வை எழுப்பியது. சிறுவனின் தகவல் ஃபெலுவை ரகசியத்தின் முடிச்சை அவிழ்க்க தூண்டுகோலாக அமைந்தது. கதையும் நகர புதிரும்... Continue Reading →

உளவுத்துறை

ஒற்றாடல் “துறந்தார் படிவத்த ராகி இறந்தாராய்ந்து என்செயினும் சோர்விலது ஒற்று”.                                  -குறள் 586 ஒற்று-உளவு. இதுக்கு சீனியாரிட்டி யாருன்னா நம்ம தமிழர்கள் தான். ஏன்னா, நம்ம சங்க இலக்கியங்களிலேயே உளவு பாக்கறது பத்தியும், உளவாளிகள் பத்தியும் எழுதப்பட்ட சாட்சிகள் இருக்கு. உளவு கண்டுபிடிச்சவங்களையே, உளவு பாக்க வந்தவங்களை கவனிக்காம விட்டதால தான் நாம அடிமையாகிட்டோம், பிரிட்டிஷ்காரன்கிட்ட. இப்போ காலம் மாறிப் போச்சு. ஒரு வலிமையான நாட்டுக்கான specification list-ல முதலிடம் அந்த நாட்டோட உளவுத்துறைக்கே!!... Continue Reading →

பிக்சல்

சி.ஜெ.ராஜ்குமார்.. எழுதும் சக்தி பெற்ற அனுபமிக்க திரைப்பட ஒளிப்பதிவாளர். இவரது முதல் புத்தகம் அசையும் படம், பரவலான வரவேற்பைப் பெற்றது. காரணம், தமிழில் வெளியான முதல் ஒளிப்பதிவு தொழில்நுட்ப கட்டுரைகள். இவரது நடை சாதாரணமாகவும், அதிக கவித்துவம் இல்லாதது புரிந்து கொள்வதற்கான நேர்மறை அதிர்வுகளை ஏற்படுத்துகிறது. இதைத் தொடர்ந்து., பிக்சல்.. இயக்குனரின் கற்பனையின் நிழலை நிஜமாக்குவதில் ஒளிப்பதிவாளரின் பங்கு தவிர்க்க முடியாதது. ஒளிப்பதிவின் வளர்ச்சி பல முன்னேற்றங்களைக் கடந்து வந்தது. பிக்சல்-முழுக்க டிஜிட்டல் தொழில்நுட்பத்தை விளக்கும் நூல்.... Continue Reading →

எல்லோரும் வல்லவரே

வல்லவர்கள்.. வல்லவர்னா யாரு? ஒரு சின்னக் கதை மூலமா விளக்கிடலாம். பரீட்சை நடக்குது, இந்த முறை நாட்டுக்காக. அரசாளக் கூடிய வல்லமை  மூன்று மகன்கள்ள யாருக்கு இருக்குன்னு தெரிஞ்சுக்க ஆசைப்படற அரசர், ஒரு முடிச்சு தானியங்கள் கொடுத்து, ஆறு மாசக் கெடுவோட மூணு பேரையும் காட்டுக்கு அனுப்பறாரு. மூத்தவர் ரெண்டு மாசத்திலயும், நடுவர் நான்கு மாசம் மட்டுமே தாக்கு பிடிக்க முடிஞ்சுது. நாம பேச வேண்டியது ஆறு மாசமும் தாக்கு பிடிச்ச வல்லவரைப் பத்தி, அவரோட யுக்தி-உற்பத்தி.... Continue Reading →

ராஜேஷ்குமாரின் விவேக், விஷ்ணு, ரூபலா

ராஜேஷ்குமார்.. “க்ரைம் கதைகளின் மன்னன்” என்றழைக்கப்படும் ராஜேஷ்குமார் தமிழில்  1500-ம் மேற்பட்ட க்ரைம் நாவல்களையும், 2000-ம் மேற்பட்ட சிறுகதைகளையும் எழுதியுள்ளார். க்ரைம் கதைகளையே ஏன் அதிகம் எழுதுகிறீர்கள் என்ற கேள்விக்கு, “நமது புராண, இலக்கியங்களில் மண்ணாசைக்கு மகாபாரதம்; பெண்ணாசைக்கு ராமாயணம் இருக்கிறது. இவ்வளவு ஏன் சிலப்பதிகாரம் கூட 50% க்ரைம் சப்ஜெக்ட் தான். இவைகளில் இல்லாத க்ரைமா? சாகாவரம் பெற்றிருக்கும் காவியங்களே க்ரைமை அடிப்படையாய் வைத்து புனையப்பட்டிருக்கும் போது சாமானியன் நான் மட்டும் எழுதினால் அது தவறா?... Continue Reading →

இதையெல்லாம் நீங்க கண்டிப்பா தெரிஞ்சிக்கணும்…!

தம்பி.. சொல்லுங்கய்யா.. புதுசா ஒரு அக்கௌன்ட் ஓபன் பண்ணனும், யாருகிட்ட கேக்கனுங்க..? அங்க பாருங்க..அங்க 2-ம் நம்பர் கவுண்ட்டர், அங்க போய் கேளுங்க சொல்லுவாங்க.. சரிங்க தம்பி.. (2-ம் நம்பர் கவுண்ட்டரில்) சார்.. சொல்லுங்க உங்களுக்கு என்ன வேணும்? அக்கௌன்ட் ஒன்னு ஓபன் பண்ணனும்..? அப்படியா? இப்போவேவா? இல்ல சார், அக்கௌன்ட் ஓபன் பண்ண என்னலாம் தேவைன்னு கேட்டுட்டு போகலானுதான்..பிறகு தான் எடுத்துட்டு வரணும்.. அப்படியா..? அந்த 5-ம் நம்பர் கவுண்ட்டர்ல சொல்லுவாங்க போங்க.. உங்களுக்கு தெரியாதுங்களா..?... Continue Reading →

டார்ஜீலிங்கில் ஓர் அபாயம்

புராதன பொருட்களின் மீது ஆர்வமுள்ள ராஜன் பாபுவிற்கு வந்து சேரும் ஒரு கடிதம் அவரை திகிலடையச் செய்கிறது. திகிலுக்கு காரணம் அதிலிருந்த வார்த்தைகள் மட்டுமில்லை. அந்தக் கடிதம் எழுதப்படாமல், செய்தித் தாள்கள் மற்றும் புத்தகத்தின் பக்கங்களைக் கிழித்து ஒட்டப்பட்டிருந்தது. இதன் மர்மம் புரியாமல் தன் நிம்மதியை இழந்து கொண்டிருந்த ராஜன் பாபுவிற்கு உதவ ஃபெலுடா அவ்விடம் வந்தார். அவரது சந்தேகப் படலம் ராஜன் பாபுவிற்கு பரிச்சயமான மூன்று பேரின் மீது விரிகிறது, கூடவே அவரது முதல் துப்பறியும்... Continue Reading →

ஈரோடு புத்தகத் திருவிழா (04-08-2019)

ஈரோடு புத்தகத் திருவிழாவின் மூணாவது நாளான இன்று நடந்த சொற்பொழிவு, புத்தகத்துக்கு கிடைச்ச மிகப்பெரிய விழிப்புணர்வு. இன்றைய தலைப்பு முதலாவதாக ‘வாசிக்கலாம் யோசிக்கலாம்’-இந்து தமிழ் திசை எடிட்டர் கே.அசோகன், இரண்டாவதாக ‘கற்றதைச் சொல்கிறேன்’-பேராசிரியர் கு.ஞானசம்பந்தன். மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன் அவர்கள் அறிமுக உரையாற்றினார். மேலும், சிகாகோவில் நடந்த தமிழ் முச்சங்க விழாவில் நடந்த அனுபவங்களையும், கூலித் தொழிலாளியின் புத்தகத்திற்கான நன்கொடை பற்றியும், எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் நாளை(05-08-2019) பங்கேற்கவிருக்கும் கேள்வி பதில் நிகழ்வு பற்றியும்,... Continue Reading →

ஈரோடு புத்தகத் திருவிழா 2019

‘ஈரோடு’ அப்படின்னு சொன்னவுடனே முதல்ல உங்களுக்கு ஞாபகம் வர விஷயம் மஞ்சள் தான். அப்படிப்பட்ட மஞ்சள் மாநகரத்துக்கு இன்னொரு சிறப்பும் இருக்கு. அதுதான் மக்கள் சிந்தனைப் பேரவை நடத்தும் புத்தகத் திருவிழா. இந்து தமிழ் திசை நாளிதழிலிருந்து ஈரோடு புத்தகத் திருவிழா.. தமிழ்நாட்டுலயே சென்னைக்கு நிகரா நம்ம ஈரோடு புத்தகத் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததா இருக்கு. இதுக்கு முக்கியக் காரணம் வாசகர்களாகிய உங்களுடைய புத்தக வாசிப்பு இன்னும் நீடிச்சு இருக்கறது தான். ஈரோட்டுல நடக்கற தவிர்க்க... Continue Reading →

வாடிக்கையாய் சில கொலைகள்

மர்மம்.. மர்மக்கதைகளுக்கு மக்களிடையே எப்பவுமே மவுசு குறையாது. ஒரு கொலைக்கான காரணத்தையோ, இல்ல ஒருத்தர் காணாமல் போனதுக்கான காரணத்தையோ, இல்ல புதையல் எதையாவது தேடிப்போறதையோ மையமா வெச்சு கதை அமைஞ்சிருக்கும். கதைகளில் ஏற்படுகிற நம்பமுடியாத திருப்பங்கள் (twist) ஒரே வரியைத் திரும்பத் திரும்பப் படிக்கும் அனுபவத்தை ஏற்படுத்துகிறது. வாடிக்கையாய் சில கொலைகள்.. ஈராக்கில் அகழ்வாராய்ச்சி பண்ற குழுவுல அந்தக் குழுத் தலைவரோட மனைவி தனக்கு ஏதோ ஆபத்து இருக்கறதா நினைச்சு பயப்படறாங்க. அவங்க பாதுகாப்புக்காக ஒரு நர்ஸ்-அ... Continue Reading →

ஃபெலுடா

‘டிடெக்டிவ்’னு சொன்னதும் சிலருக்கு ஷெர்லாக் ஹோல்ம்ஸ் (Sherlock holmes), சினிமாப் பிரியர்களுக்கு கணியன் பூங்குன்றனும் புத்தில வந்து போவாங்க. ஃபெலுடா.. சிலருக்கு இந்தப் பெயர் அறிமுகம் இல்லாததாகவும், சிலருக்கு அபிமான கதாப்பாத்திரமாகவும் தோன்றலாம். வங்காள எழுத்தாளர் சத்யஜித் ரேவின் தொடர்களிலும், நாவல்களிலும் பயன்படுத்தப்பட்ட பிரபலமான கதாப்பாத்திரம் தான் ஃபெலுடா. சாதாரணமாக வங்கியில் வேலை செய்யும் இளைஞன், துப்பறியும் கதைகளைத் தேடிப் படிக்கும் பழக்கத்தை வளர்த்துக்கொள்ளவே தனது திறமைகளையும் சேர வளர்த்துக்கொள்கிறான். விடுமுறையில் டார்ஜிலிங்கில் தங்கியிருந்த நாட்களில் தற்செயலாக,... Continue Reading →

வாஷிங்டனில் திருமணம்

கல்யாணம்.. கல்யாணம்னு சொன்ன உடனே பலருக்கு நினைவுக்கு வர விஷயம் பெரும்பாலும் சோறுதான். ஆனால், அதையும் தாண்டி நம்ம திருமண முறைகள் ரொம்பவும் விசித்திரமானது மற்றும் சடங்கு, சம்பிரதாயங்கள் நிறைஞ்சது. பொதுவா ஒரு பழமொழி இருக்கு.."வீட்டைக் கட்டிப் பாரு, கல்யாணத்தைப் பண்ணிப் பாரு”.. கல்யாணத்துக்குப் பொருத்தம் பாக்கறதுல இருந்து பந்தில நடக்கற பங்காளி சண்டை வரைக்கும், தேர இழுத்து தெருவுல விட்ட மாதிரி ஜேஜேனு எல்லாம் நடந்து முடிஞ்சிரும். கற்பனைக்கு கைகால் இல்லை. உங்க கல்யாணத்த எக்ஸ்சிபிசன்... Continue Reading →

Blog at WordPress.com.

Up ↑