எட்டும் தூரத்தில் IAS

IAS தேர்வுக்கு எதைப் படிக்க வேண்டும்? எப்படிப் படிக்க வேண்டும்? தேர்வுக்குத் தயாராகும்போது குறிப்பெடுப்பது எப்படி? பிரிலிமினரி தேர்வு, மெயின் தேர்வு மற்றும் நேர்காணலை அணுகுவது எப்படி? சிறந்த பொழுதுபோக்கை வளர்த்துக்கொள்வது எப்படி? திட்டமிட்டு கவனத்துடன் படிப்பது எப்படி? கட் ஆஃப்-ன் முக்கியத்துவம், விருப்பப் பாடத்தைத் தேர்ந்தெடுப்பதில் உள்ள சிக்கல்கள் என்னென்ன? மற்றும் IAS தேர்வுக்கான பாடத்திட்டத்துடன் தன்னுடைய சொந்த அனுபவங்களையும் சேர்த்து ஒரு IAS அதிகாரியாக இல்லாமல் சக நண்பனாக இருந்து இப்புத்தகத்தை எழுதியிருக்கிறார், டாக்டர்... Continue Reading →

கண்ணன் பாட்டு

மகாகவி பாரதியின் முப்பெரும் பாடல்களில் ஒன்று, கண்ணன் பாட்டு. பண்டையக் காலத்தில் இறைவனைத் தலைவனாகவும், மற்ற பிற உயிர்களைத் தலைவியாகவும் பாவித்து இறைவன் ஒருவனே அவனை அடையும் மற்ற உயிர்களைப் பற்றி பாடல்களை எழுதி வந்தனர். புதுமை விரும்பியான மகாகவி பாரதி தன்னைத் தலைவனாகவும், இறைவனைத் தலைவியாகவும் பாவித்து பாடல்களைப் பாடியிருக்கிறார் மகாகவி. இவ்வாறு இறைவனாகிய கண்ணனைத் தன் தோழனாகவும், தாயாகவும், தந்தையாகவும், சேவகனாகவும், சீடனாகவும், விளையாட்டுப் பிள்ளையாகவும், காதலனாகவும், காந்தனாகவும், ஆண்டானாகவும், கண்ணம்மாவைத் தன் குழந்தையாகவும்,... Continue Reading →

கறுப்பு மலர்கள்

“தலைப்புகள் தமிழ் மரபுக்குப் புதியவை. கவிதைக்கான கருவும் புதுமையானதே. புதுமையின் தோற்றம் முதலில் குழப்பத்தைத் தரும். படிக்கப் படிக்க மயக்கத்தைத் தரும். மயக்க வைக்கும் சொற்சித்திரங்கள் இவை.” வடக்கத்தி மங்கையர்போல் முழுக்கவும் மூடாமல், கேரளமாதர் போல் முழுக்கவும் திறந்துவிடாமல், தமிழகப் பெண்கள் போல் ஒதுங்கியும் ஒதுங்காமல் அழகு காட்டும் கவிதைகளை இதில் நாம் காண்கிறோம்.                                               -கவியரசர் கண்ணதாசன். நம்முடைய சமுதாயத்தில் புறக்கணிக்கப்பட்டவர்களும், விளிம்பு நிலையில் வாழ்ந்து வருபவர்களுமான திருநங்கைகள், கைம்பெண்கள், யாசிப்பவர்கள், ஏழைகள், மாற்றுத்திறனாளிகள், பாலியல்... Continue Reading →

யாருக்கும் வெட்கமில்லை

‘சோ’ இந்தப் பெயர் பலருக்குப் பரிச்சயமானது. இவர் பேனா புரட்சியையோ, பகுத்தறிவையோ, நம்பிக்கையையோ சார்ந்து எழுதவில்லை. இவர் எடுத்திருப்பது உண்மைகளையே. அதோட பிம்பங்கள்ள ஒண்ணுதான் “யாருக்கும் வெட்கமில்லை”. இதப் பாத்ததும் பலருக்கு பலவித எண்ணங்கள் அல்லது ஒரு நிமிஷம் உங்கள நிறுத்தி கூட இருக்கலாம். அதுதான் உண்மையோட மேஜிக். “உண்மை பேசும் தைரியம் இந்த சோ ராமசாமிக்கு அதிகம்” என அவருடைய முன்னுரை எழுத்துக்களை வெச்சே நிரூபிச்சிருப்பார். இக்கதை எளிமையான குடும்ப சூழலில் தொடங்கி பெண்ணியத்தையும், சமூகப்... Continue Reading →

முத்துப்பட்டன் கதை

மனித உணர்வையும், உறவுகளையும் மதித்து சாதி வெறியை எதிர்த்து வெற்றி பெற்ற வீரன் ஒருவனின் வரலாறே இந்த முத்துப்பட்டன் கதை. ஆதி காலம் தொடங்கி இந்தக் காலம் வரை பிறப்பால் மனிதர்கள் என்பதை மறந்து, சாதியால் வேறுபட்டு நிற்கின்றார்கள் மனிதர்கள். நெல்லை மாவட்டத்தில் இன்றும் இக்கதையை வில்லுப்பாட்டாகப் பாடி வருகின்றனர். மேல்சாதிக் குடும்பத்தில் எட்டவதாகப் பிறந்தவன் முத்துப்பட்டன். பொய்மைக்கு எதிரானவன், தீமைக்கு புறம்பானவன். காட்டில் ஒரு நாள் தாகம் தீர நீர் அருந்திக் கொண்டிருந்தவனின் பார்வையில் பட்டனர்... Continue Reading →

Powered by WordPress.com.

Up ↑