சாகாவரம்

மனித இயல்புக்கு மாறாக நடந்ததற்குப் பரிகாரம் தேடிச்சென்ற ஒரு மனிதனை வாழ்வின் இன்னொரு எல்லைக்குக் கொண்டு சேர்த்ததே வெ.இறையன்பு வரித்த சாகாவரம். நீண்ட நாள் உயிரோடு வாழவேண்டும் என்ற ஆசை(!) எனக்கு உங்களுக்கு என நிறைய பேருக்கு இருந்திருக்கும். மரணத்தை வென்றவர்கள் சிலரே. அவர்களில் ஒருவரைத் தான் இங்கு நாம் சந்திக்க இருக்கிறோம். சாகாவரம்.. தாவரவியல் ஆசிரியரான நசிகேதனின் மகிழ்ச்சியான வாழ்வைப் புரட்டிப் போட்டது உடனிருந்தவர்களின் அடுத்தடுத்த மரணம். நான்கு மாதங்களில் நான்கு மரணங்களைப் பார்த்திருந்த நசிகேதன்... Continue Reading →

மனிதன் மாறிவிட்டான்

நிமிர்ந்து நடக்கத் தொடங்கிய நாள் முதல் இன்று வரை மனிதன் தனது உணவு, உடை, இருப்பிடம், கலாச்சாரம், மொழி போன்றவற்றில் தனக்குத்தானே மேம்பட்டவனாகப் பார்க்கப் பழகிவிட்டான். ஆனால், இயற்கை எல்லோரையும் சமமாகத் தான் வைத்திருக்கிறது. ஆயிரம் தான் பூசி மொழுகினாலும் பிறவிகுணம் கண்டிப்பா போகாது. அந்த மாதிரி கற்கால மனிதனிலிருந்து இக்கால மனிதனை எல்லா வகையிலும் செய்யும் ஒப்பீடே வெ.இறையன்பு எழுதிய “மனிதன் மாறிவிட்டான்”. இது ஒரு சிறப்பான முயற்சி. நம் உடல்மொழி, உறுப்புகள், நம் இயல்பான... Continue Reading →

முடிவு எடுத்தல்

“இன்றே முடிவெடுங்கள்..” “சரியான முடிவு உங்கள் வாழ்வை மாற்றும்..” “பாத்ததுமே முடிவு பண்ணிருவீங்க..” இது போன்ற பரிந்துரைகளை நீங்கள் தொலைக்காட்சியிலோ, விளம்பரங்களிலோ பார்த்திருக்கலாம். முடிவுகள் என்பது நமக்கு வாடிக்கையாகிப் போன ஒன்று. ஒருவர் எடுக்கும் முடிவு அவர்களின் திறன், நம்பிக்கை, பொறுப்பு, நுண்ணறிவு போன்றவைகளை பிரதிபலிக்கும். எனவே சில வரம்புகளை, பாதிப்புகளை, சார்த்திருப்பவர்களை கருத்தில் கொள்ள வேண்டியது அவசியமே. ஆனால், சொந்த தனிப்பட்ட முடிவுகள் இதிலிருந்து வேறுபடுகிறது. சிலர் மூளையைக் கழுவி ஒரு சிலரைத் தவறான முடிவெடுக்க... Continue Reading →

விவாதம்

பேச்சு ஒரு அடிப்படை உரிமை நம்ம சமூகத்துல. ‘வாயுள்ள புள்ளை பொழைச்சுக்கும்’னு சொல்றதும் இவங்கதான், ‘வாயில்லேன்னா உன்ன நாய் தூக்கிட்டுப் போயிரும்’னு சொல்றதும் இவங்கதான், ‘வாயால கேட்டவன்டா நீ’ அப்படின்னு சொல்றதும் இந்த சமூகம் தான். இந்த மாதிரி பல வசைபாடல்களுக்கு மேடை அமைச்சு தருவது நம்ம பங்கேற்கும் ஏதாவது ஒரு விவாதம் தான். விவாதம்னா..? ‘நடுவர் அவர்களே’ன்னு பேசற பட்டிமன்றங்கள், ‘கணம் கோர்ட்டார் அவர்களே’ன்னு முழங்கற நீதிமன்றங்கள், ‘நீயா? நானா?’னு போட்டி போட்டு பேசற நிகழ்ச்சிகள்... Continue Reading →

Powered by WordPress.com.

Up ↑