முகில் மைக்கல் மர்மம்..?!

ராயரின் பேரைச் சொன்னால்  அந்த குப்பமே நடுங்கும். அந்த அளவிற்கு ராயரிடம் மரியாதை இருந்தது. புதிதாக வந்திருந்த இன்ஸ்பெக்டரைத் தவிர. ராயரை அவமானப்படுத்த நினைத்த இன்ஸ்பெக்டருக்கு ராயர் மகனின் போதைப் பொருள் விவகாரம் போதுமானதாக இருந்தது.

போலீஸ், கோர்ட்டு என்று மாறி மாறி அலைந்து மைக்கலை ஒருவழியாக வெளியே கொண்டுவந்துவிட்டார் ராயர். தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாத இன்ஸ்பெக்டர் கோர்ட்டில் வைத்தே மைக்கலை கொல்ல ஆட்களை அனுப்ப, ராயர் குறுக்கே வந்து விழுந்து மைக்கலை காப்பாற்றுகிறார்.

சாகும் தருவாயில் மைக்கல் தன்னுடைய மகன் அல்ல என்ற உண்மையைக் கூறுகிறார் ராயர். மைக்கலின் வாழ்க்கை தலைகீழாகிறது. தன்னைப் பற்றித் தேடத் தொடங்குகிறான்.

இன்னொரு பக்கம்…

முந்தைய நாள் நண்பர்களுடன் பார்ட்டியைக் கொண்டாடிவிட்டு வீட்டிற்கு வந்ததில் இருந்தே முகிலுக்கு தன்னிடம் ஏதோ மாறுதல் தெரிந்தது. அதுமட்டுமில்லாமல் அவனுடைய காரில் இருந்து எடுத்து வந்த அழகிய வேலைப்பாடுடைய வாளைப் பற்றி  முகிலிடம் விசாரிக்கிறாள் முகிலின் மனைவி மது. அப்போது தான் அந்த வாளில் முகில் கையை கிழித்துக் கொண்டது முகிலுக்கு ஞாபகம் வருகிறது. ஆபீஸிற்கு கிளம்பிக்கொண்டிருந்தவன் அப்படியே மயங்கி விழுகிறான்.

அன்றில் இருந்து வீடு ஹாஸ்பிடல் வீடு ஹாஸ்பிடல் என்று மாறி மாறி அவனைப் பார்த்துக்கொண்டாள் மது. அவனுடைய தேகம் மெலிந்துகொண்டே வர, ஒரு கட்டத்தில் அவன் அவனாகவே இல்லை.

தாக்குப்பிடிக்க முடியாத மது உதவிகேட்டு, பாதர் ஜெரால்டை வீட்டிற்கு அழைக்கிறாள். வீட்டு வாசலிலேயே பிண வாடை அடிக்க, அதைக் கண்டுகொள்ளாமல் உள்ளே சென்ற பாதர் ஜெரால்டு, முகில் உடலில் சாத்தான் இருப்பதைக் கண்டுபிடிக்கிறார்.

ஒரு பக்கம் மைக்கல் தன்னைப் பற்றித் தேடிக்கொண்டிருக்க, இன்னொரு பக்கம் முகில் தன்னை இழந்துகொண்டிருக்க…

இருவரின் வாழ்க்கையிலும் திருப்புமுனையாக பாதர் ஜெரால்டு இருக்கிறார்.

அதிரும் அமானுஷ்ய கிளைமாக்ஸ் உடன் ராகவ சந்தோஷ் அவர்களின் முகில் மைக்கல் மர்மம்.

#one_minute_one_book #tamil #book #review #horror #thriller #raagava_santhosh #mugil_maikkal_marmam

want to read free : https://freetamilebooks.com/ebooks/mugil_michael_secrets/

Leave a Reply

Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: