வாங்க சிரிக்கலாம்

புத்தகத்திலிருந்து ஒரு எடுத்துக்காட்டு :

எலி கடித்த பின்…

“எனக்கு பெருவிரலில் இரத்தம் கொட்ட ஆரம்பித்தது. நான் போட்ட கத்தலில் அந்தத் தெருவே பயந்து ஒரு கிழவிக்கு உடனே சாமி வந்து விட்டது. ஆளாளுக்கு ஒவ்வொரு வைத்தியம் சொன்னார்கள். ஒருவர் மூன்று வருடம் கழித்து வலிப்பு வரும் என்று சொன்னார்.

ஒரு கிழவி நாள் தவறாமல் வந்து ‘இப்ப எப்படி இருக்கு? கண்ணு எரியுதா? கண்ணு கலங்குதா’ என்று கேட்டபடியே இருக்க இந்த கிழத்தைப் பொறுத்த வரை எனக்கு எங்கே பைத்தியம் பிடிக்காமல் போய் விடுமோ என்ற கவலைதான் நாளுக்கு நாள் அதிகமாகி விட்டது. நான் நன்றாக இருக்கிறேன் என்றதும் அவள் முகம் தொங்கிப் போனது…”

யதார்த்தத்தை சற்றே மிகைப்படுத்திச் சொல்லும் இந்தத் திறமை ஞானசம்பந்தனுக்கு இருக்கிறது.

                                                    -எழுத்தாளர் சுஜாதா

கிராமப் பேருந்தில் தன்னுடைய வாழ்க்கைப் பயணத்தை சொல்ல ஆரம்பித்த எழுத்தாளர் கு.ஞானசம்பந்தன் அவர்கள் எலி வேட்டையை முடித்துவிட்டு, வீரம்மாவை சந்தித்து விட்டு, டிஸ்கோ வெட்டிக் கொண்டு, ஆனா ஆவனாவைக் கற்றுக்கொண்டு, பொங்கலுக்கு கரும்பு வாங்கச் சென்று, தீபாவளிக்கு வெடிகள் வெடித்து, கிராமத்து ராத்திரிகளில் பேய்க்கு பயந்து, பள்ளி நாடகத்தில் வேடம் போட்டு, இறுதியில் மொடாக் குடிகாரர் பூசாரியான சம்பவங்கள் வரைக்கும் யாருடைய மனத்தையும் புண்படுத்தாமல், வயிறு வலிக்கும் அளவுக்கு சிரிக்க வைக்கும்படி எளிமையாக எழுதியிருப்பார். சிரிப்புக்கு 100% கேரண்டி.

தேடல் தொடரட்டும் இணைந்திருங்கள் one minute one book உடன்.

#one minute one book #tamil #book #review #comedy #ku.gyanasampandan #vaanga sirikkalam

want to buy : https://www.amazon.in/Vaanga-Sirikkalam-Ku-Gyanasampandan/dp/8184461712

Leave a Reply

Powered by WordPress.com.

Up ↑

Discover more from One Minute One Book

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading