சிவப்பு வானம் – Crime Novel

ஏரோபிளேன் நடுவானில் பறந்து கொண்டிருக்க, நிதி அமைச்சர் தேவநந்தன் தன் குடும்பத்தினருடன் விமானத்தில் வெகேஷனிற்கு சென்று கொண்டிருந்தார். டாய்லெட் சென்றுவிட்டு வந்தமர்ந்த சிறிது நேரத்திலேயே நெஞ்சைப் பிடித்துக்கொண்ட அவர் அப்படியே உயிரை விடுகிறார். ஃபிளைட்டில் இருந்த டாக்டர் அவரது மரணத்தை உறுதி செய்கிறார்.

அமைச்சரின் மரணத்தில் சந்தேகமடைந்த ஐ.ஜி, இந்தக் கேஸை க்யூ பிரான்ச்சை சேர்ந்த சஞ்சீவிடம் ஒப்படைக்கிறார். ஐ.ஜியின் சந்தேகத்திற்கு காரணம் ஹை ஃப்ளை ஏர்லைன்ஸ்-ல் அடுத்தடுத்து வரிசையாக விஐபி-களுக்கு மட்டுமே நிகழ்ந்த ஹார்ட் அட்டாக் சம்பவங்கள் தான். ஆனால் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டோ மூன்று மரணங்களும் இயற்கை மரணங்கள் என அடித்துச் சொல்லியது.

முதல் முறை ஒரு கூடங்குளம் அட்டாமிக் பவர் ப்ராஜெக்ட்டை சேர்ந்த சயின்டிஸ்ட் அன்வரும், இரண்டாவது முறை பிரபல தொழிலதிபர் சந்திரமௌலியும் உயிரிழக்க, மூன்றாவதாக இப்போது அமைச்சர் தேவநந்தன் உயிரிழக்கிறார். இந்த மூன்று சம்பவங்களும் ஒரே மாதிரி நடந்திருந்த காரணத்தினால், தன்னுடைய உயிரைப் பணயம் வைத்து உண்மையான குற்றவாளியைக் கண்டுபிடிக்க ஐ.ஜி அந்த விமானத்தில் பயணிக்கிறார்.

ஆனால், எதிர்பாராத விதமாக அவரும் அதே பாணியில் ஹார்ட் அட்டாக்கில் உயிரை விடுகிறார். ஒரே ஏர்லைன்ஸ்-ல் அடுத்தடுத்த சம்பவங்கள் நடப்பதால் அங்கிருந்து தன்னுடைய சந்தேகப் பார்வையை வீசுகிறான் சஞ்சீவ். விசாரணை நடந்துகொண்டிருக்கும்போதே அடுத்த மரணமும் நிகழ்கிறது. நிராலஜிஸ்ட் விஷ்ணுவர்தனும் உயிரிழக்க, மேற்கொண்டு கேஸை நகர்த்த முடியாமல் திணறிக் கொண்டிருந்த சஞ்சீவிற்கு ஒரு தடயம் கிடைக்கிறது. ஐ.ஜியின் இறக்கும் தருவாயில் கூடவே ஒரு துப்பும் விட்டுச் சென்றிருக்கிறார்.

ஐ.ஜி விட்டுச் சென்ற தடயத்தை வைத்து சஞ்சீவால் அடுத்த மரணத்தைத் தடுக்க முடிந்ததா..? நடந்த சம்பவங்களுக்கெல்லாம் யார் காரணம்..? இதன் பின்னணி என்ன..?

#one_minute_one_book #tamil #book #review #crime_novel #rajeshkumar #sivappu_vaanam #red_sky

want to buy : https://noveljunction.com/Bookinfo.aspx?bookRefId=382

Leave a Reply

Powered by WordPress.com.

Up ↑

Discover more from One Minute One Book

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading