அவள் ஒரு ஆச்சரியக்குறி – Crime Novel

கல்லூரிக்குச் சென்ற வனிதா ஸ்பெஷல் கிளாஸ் முடிந்து வழக்கமான நேரத்தைத் தாண்டியும் வீடு வந்து சேரவில்லை. பயந்த அவளுடைய அப்பா ராமநாதன் பஸ் ஸ்டாப்பிற்குச் சென்று வனிதாவிற்காகக் காத்திருக்கிறார்.

நேரம் தான் போய்க்கொண்டிருந்ததே தவிர எந்த பஸ்ஸிலும் வனிதா வரவில்லை. கடைசி பஸ்ஸும் போய்விட, பதற்றத்துடன் வீடு திரும்பிய ராமநாதன் மனைவி சாவித்திரியிடம் சொல்லிவிட்டு, வனிதாவின் தோழி மாலதி வீட்டிற்குச் சென்று விசாரிக்கிறார்.

மாலதி சொன்ன தகவல் ராமநாதனை திடுக்கிட வைக்கிறது. வனிதா ஸ்பெஷல் கிளாஸிற்கே அன்று செல்லவில்லை என்பதை அறிந்த ராமநாதன் விஷயத்தைப் போலீசிடம் கொண்டு செல்கிறார். போலீஸ் ஒருபக்கம், ராமநாதன் ஒருபக்கம் என அனைவரும் சேர்ந்து வனிதாவைத் தேடுகின்றனர்.

அடுத்த நாள் காலையில் வனிதாவிடம் இருந்து ஒரு கடிதம் வந்து சேர்கிறது. அதில் அவளுக்கு பிடித்தவனுடன் திருமணம் செய்து கொண்டதாகவும் புது வாழ்க்கையை ஆரம்பிக்கப் போவதாகவும் கூறி, கல்யாண போட்டோவையும் இணைத்து அனுப்பியிருந்தாள் வனிதா.

போட்டோவையும் கடிதத்தையும் எடுத்துக்கொண்டு போலீஸ் ஸ்டேஷன் செல்ல இருந்த நிலையில், வனிதாவின் வீட்டிற்கு வருகிறான் சுனில் குமார். வனிதாவும் சுனில் குமாரும் கடந்த ஒரு வருடங்களாகக் காதலித்து வருவதாகக் கூறி அவர்களை மேலும் திகைக்க வைக்கிறான்.

வனிதா கல்யாணம் செய்துகொண்டதை நம்பாத சுனில் குமார், அவள் அனுப்பிய கடிதத்தை வாங்கிப் படித்தபோது அதிர்ந்தான். வனிதா ஆபத்தில் இருப்பதாகவும் அவளுக்கு உதவி தேவைப்படுவதாகவும் அவளுடைய பெற்றோர்களிடம் கூறினான் சுனில் குமார்.

அவன் சொல்லிக்கொண்டிருந்த அதே வேளையில் வனிதா இருட்டான ஒரு ரூமில் கைகால் கட்டப்பட்ட நிலையில் இருக்க, அவளைக் கொலை செய்து குளத்தில் வீசுவதற்காக இரண்டு பேர் அந்த ரூமிற்குள்ளே நுழைகின்றனர்.

அடைபட்டுக் கிடந்த வனிதா கல்யாண போட்டோவையும் கடிதத்தையும் அனுப்பியது எப்படி..? வனிதாவை கடத்தியது யார்..? அவளைக் கொள்வதால் எதிரிகளுக்கு என்ன லாபம்..? திடீரென்று முளைத்த வனிதாவின் காதலன் சுனில் குமார் சொல்வது உண்மையா..?

#one_minute_one_book #tamil #book #review #crime_novel #rajeshkumar #aval_oru_aachariyakkuri

want to buy : https://noveljunction.com/BookInfo.aspx?bookRefId=951

Leave a Reply

Powered by WordPress.com.

Up ↑

Discover more from One Minute One Book

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading