உயிரின் ஒலி – Crime Novel

பரமானந்த ரிஷியின் தீவிர பக்தனான தமிழ்ச்செல்வன் தனது மனைவி வைஷ்ணவியுடன் ரிஷிகளின் ஆசிரமத்திற்குச் சென்றுகொண்டிருந்தான்.  ஆசிரமத்திற்குள் நுழையும் முன் இயற்கை உபாதை அதிகரிக்க ஒரு பெரிய பாறையின் மறைவில் ஒதுங்கினான் தமிழ்ச்செல்வன்.

பாறைக்குப் பின்னால் இருந்து இருவர் கிசுகிசுப்பாக பரமானந்த ரிஷிகளைப் பற்றி அவதூறாகப் பேசிக்கொண்டிருந்தது  இவனுடைய காதில் விழுந்தது. உச்சகட்ட கோபமடைந்த தமிழ்ச்செல்வன் அவர்களை உலுக்கி எடுக்க, பேசிக்கொண்டிருந்த இருவரும் பரமானந்த ரிஷிகளின் சீடர்கள் என்பது தாமதமாக தமிழ்ச்செல்வனுக்குப் புரிகிறது.

இரண்டு சீடர்களிடம் இருந்து பரமானந்த ரிஷிகளின் லீலைகளைப் பற்றித் தெரிந்துகொண்ட தமிழ்ச்செல்வன் உண்மையை உலகுக்கு எடுத்துரைக்க கேமராவுடன் வைஷ்ணவியை அழைத்துக்கொண்டு தியான மண்டபத்தை அடைகிறான். ஆனால் எதிர்பாராத விதமாக இவன் புகைப்படம் எடுத்ததை அறிகிறான் சீடர்களில் ஒருவன்.

தியான மண்டபத்தில் இருந்து தப்பித்த தமிழ்ச்செல்வன்-வைஷ்ணவி இருவரும் பேருந்திற்காக காத்திருக்காமல் நடந்தே சிறிது தூரம் செல்கின்றனர். இந்நிலையில் வழியில் ஒரு லாரி வர, இருவரும் கைகாட்டி ஏறிக்கொண்டனர்.

திடுக்கிடும் திருப்பமாக அந்த லாரி பரமானந்த ரிஷிகளுக்குச் சொந்தமானது என்பது தெரிய வருகிறது. தமிழ்ச்செல்வனையும் வைஷ்ணவியையும் மிரட்டி அந்தக் கேமராவைப் பறித்த டிரைவரும் கிளீனரும் அவர்கள் கண்முன்னாலேயே அதை லாரிக்கு அடியில் வைத்து நொறுக்கினர்.

மேற்கொண்டு அவர்களையும் இந்த விஷயத்தில் இருந்து ஒதுங்கி இருக்குமாறு எச்சரித்து அனுப்பினர். ஆனால் அடுத்த நாளே தமிழ்ச்செல்வன் விபத்தில் உயிரிழக்கிறான். தமிழ்ச்செல்வனின் மரணத்தில் சந்தேகமடைந்த வைஷ்ணவி கோர்ட் படியேற..வைஷ்ணவியின் அனைத்து முயற்சிகளையும் முறியடிக்கிறார் பரமானந்த ரிஷிகள்.

தமிழ்ச்செல்வனின் மரணம் விபத்தா..? கொலையா..? பரமானந்த ரிஷிகளின் முகமூடி கிழிக்கப்பட்டதா..? கோர்ட்டில் வைஷ்ணவிக்கு சாதகமான தீர்ப்பு கிடைத்ததா..?

#one_minute_one_book #tamil #book #review #crime_novel #rajeshkumar #uyirin_oli

want to buy : https://noveljunction.com/BookInfo.aspx?bookRefId=339

Leave a Reply

Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: