இது தப்பிக்கும் வேளை – Crime Novel

பிரபல சினிமா நடிகையான கார்த்திஜாவைப் பெண் கேட்டு வருகிறான் சிங்கப்பூரின் கோடீஸ்வரர்களில் ஒருவனான மதன். ஆரம்பத்தில் திருமணத்திற்கு யோசித்த அவள் பிறகு மதனுக்கு ஒரு கண்டிஷன் போடுகிறாள்.

திருமணத்திற்குப் பிறகு கார்த்திஜாவின் சொத்துக்களை மதன் எதிர்பார்க்கக் கூடாது என்பதே அந்த கண்டிஷன். கார்த்திஜாவின் கண்டிஷனுக்கு ஒத்துக்கொள்கிறான் மதன்.

இந்நிலையில் மதனைப் பற்றிய மோசமான விஷயங்களுடன் ஒரு கடிதம் கார்த்திஜாவின் வீட்டிற்கு வருகிறது. மதன் ஊரில் உள்ள அத்தனை அயோக்கியத்தனங்களையும் செய்பவன் என்பதைப் படித்த அவள் அதிர்ந்தாள். மேற்கொண்டு கார்த்திஜாவின் அம்மா சிங்கப்பூரில் தனக்கு தெரிந்தவர்களிடம் மதனைப் பற்றி விசாரிக்க அவன் நல்லவன் என்ற செய்தி கிடைக்கிறது.

எப்படியோ இருவருக்கும் விமரிசையாகத் திருமணம் நடந்து பத்து நாட்கள் கடந்த நிலையில் சிங்கப்பூர் கிளம்புகின்றனர். மதன்-கார்த்திஜா பயணிக்கும் அதே ஃபிளைட்டில் விவேக்-ரூபலா கேஸ் விஷயமாக சிங்கப்பூர் பயணிக்கின்றனர்.

விவேக்கின் முதல் பார்வையே மதன் தவறானவன் எனச் சொல்கிறது. ஒருவழியாக சிங்கப்பூரில் அடியெடுத்து வைத்த விவேக்-ரூபலா எதிர்பாராத விதமாக மதனுடைய ஹோட்டலிலேயே தங்குகின்றனர். இங்கிருந்து அடுத்தடுத்த திருப்பங்களுடன் நகரும் கதை நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்தும்.

விவேக் வியூகம் உண்மையாக இருக்க, மதனை நம்பிய கார்த்திஜாவின் நிலை என்ன..? வலிய வந்து கார்த்திஜாவைத் திருமணம் செய்த மதனின் நோக்கம் என்ன..?

#one_minute_one_book #tamil #book #review #crime_novel #rajeshkumar #idhu_thappikkum_velai

want to buy : https://noveljunction.com/BookInfo.aspx?bookRefId=372

Leave a Reply

Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: