விதி எழுதும் விரல்கள்

வசந்த்..உலகத்துல இருக்கற எல்லாக் கெட்டப்பழக்கங்களும் தெரிஞ்சவன். வாத்தியார் பையன் மக்குன்னு சொல்லுவாங்க..ஆனா, இங்க கதையே வேற. கம்ப்யூட்டர்ல பயங்கர நாலெட்ஜ் உள்ள வசந்துக்குப் பணம்ங்கறது ஒரு போதைப் பொருள் மாதிரி. அது ஒண்ணு மட்டும் இருந்துட்டா உலகத்துல என்ன வேணாப் பண்ணலாம்னு ஒரு எண்ணம். கணக்கே இல்லாம சம்பாதிச்சும் பணத்து மேல தீராக்காதல்.

அப்படிப்பட்ட வசந்துக்கு மத்திய மந்திரியோட பையன் சம்பத் கிட்ட வேலை செய்யற வாய்ப்பு தானா தேடிவருது. ஆரம்பத்துல நல்ல பையன் மாதிரி வேலை செஞ்சுட்டு இருந்த வசந்த், சம்பத் தன்னை முழுசா நம்பறான்னு தெரிய ஆரம்பிச்ச உடனே வசந்த் தன்னோட வேலைய காட்டறான்.

நடுவுல ஒரு பொண்ணப் பாக்கறான். நிலா..அவனோட வாழ்க்கையை மாத்த வந்தவ.

நிறைய வெளிநாட்டுப் பயண வாய்ப்பும், தண்ணி மாதிரி செலவு பண்ண காசும் வசந்துக்கு கிடைச்சது. இதுல திக்குமுக்காடிப் போன வசந்துக்கு ஒரு திட்டம் தோணுது. கிட்டத்தட்ட 3400 கோடி கணக்குல வராத பணத்தை சம்பத்துக்கே தெரியாம அவன்கிட்ட இருந்து தன்னோட அக்கௌன்ட்டுக்கு மாத்தறான் வசந்த்.

இவ்வளவு காசையும் சம்பத் கிட்ட சுருட்டுன வசந்த், இனி அந்தக் காசை வெச்சிட்டு என்ன செய்ய போறான்னு..?! பல திருப்புமுனைகளோட கதை எழுதியிருப்பாரு என்.கணேசன். காசு தான் முக்கியம்னு நினைக்கற ஒருத்தன் நல்லவனா மாறுனா எப்படி இருக்கும்..நல்லவனா மாற நினைக்கற அவன் தலையில் எழுதப்பட்டிருக்கும் விதி என்ன..?

#one_minute_one_book #tamil #book #review #interesting #n_ganesan #vidhi_ezhudhum_viralgal

want to buy : https://www.amazon.in/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-Tamil-Ganeshan-ebook/dp/B07ZHMLFRX

Leave a Reply

Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: