இந்திய நாடு என் வீடு – Crime Novel

இந்திய ராணுவ ரெஜிமென்டில் அந்நிய நாட்டுத் தீவிரவாதிகள் சதி செய்ய இருப்பதாக பாதுகாப்பு அமைச்சகத்திடம் இருந்து மேஜர் காசிநாத்திற்கு ரகசியத் தகவல் வந்து சேர்கிறது. தீவிரவாதிகளின் ஊடுருவலைத் தடுத்து ரெஜிமென்ட்டைப் பாதுகாக்க உயரதிகாரிகள் கொண்ட கூட்டத்தைக் கூட்டுகிறார் மேஜர்.

அந்தக் கூட்டமே அந்த ரெஜிமெண்ட்டில் இருந்த தருணின் மேல் சந்தேகப்பட்டு அவனுடைய ரியாக்ஷனைச் சோதிப்பதற்குத் தான். அன்றைக்கு மனைவியுடன் ஷாப்பிங் சென்றிருந்த தருணைப் பற்றி எல்லாத் தகவல்களும் அறிந்த ஒருவன் தருணிடம் தனியாகப் பேசுவதற்காக அழைக்கிறான்.

மனைவியை வீட்டிற்கு அனுப்பி விட்டு அந்த மர்ம நபரைச் சந்திக்க பார்க் செல்கிறான் தருண். ராணுவ ரெஜிமெண்ட்டில் தாக்குதல் நடத்துவதற்காக தருணுக்கு திட்டம் போட்டுக் கொடுத்த அவன் ஐந்து லட்சம் பேரம் பேசுகிறான்.

உஷாரான தருண் தீவிரவாதியான அவனை மடக்க நினைக்கிறான். ஆனால் எதிர்பாராத விதமாக அவனுடைய கூட்டாளி உதவிக்கு வர இருவரும் தப்பிச் செல்கின்றனர்.

நடந்த சம்பவங்களை மேஜரிடம் தெரிவித்த தருண், தீவிரவாதிகளின் சதியை முறியடிப்பதற்கு எதிர் திட்டம் தீட்டுகிறான். ஆனால் தருணையே சந்தேகப்பட்ட மேஜர் அவனுக்குத் தெரியாமல் அவனுடைய நடவடிக்கைகளை கவனிக்கிறார்.

தன்னை யாரும் நம்பாததால் தனியாக அந்நியர்களின் ஊடுருவலைத் தடுக்கச் செல்கிறான் தருண். இந்நிலையில் அவனுக்குத் தேவைப்பட்ட ஒரு பொருளை எடுப்பதற்காக சேப்டி அறைக்கு சென்ற அவனைக் கையும் களவுமாகப் பிடிக்கிறார் மேஜர்.

தருண் தான் தீவிரவாதிகளின் கைக்கூலி என சித்தரித்த மேஜர் அவனிடம் இருந்து உண்மையை வாங்குவதற்காக ரெட் செல்லில் வைத்து தருணை டார்ச்சர் செய்ய கடைசியில் அவன் உயிரிழக்கிறான்.

இந்நிலையில் அந்நிய நாடான பாகிஸ்தானுடன் அமெரிக்காவும் சேர்ந்து கொண்டு இந்தியாவிற்கு எதிராக சதி செய்கிறது. அனைத்து உண்மைகளையும் அறிந்த தருணின் உயிர் நண்பன் சுனில் நண்பனுக்கு ஏற்பட்ட களங்கத்தை நீக்கி, நாட்டை அந்நிய சக்திகளிடம் இருந்து காப்பாற்றினானா..? மேஜர் காசிநாத் தருணை சந்தேகிக்க காரணம் யார்..?

#one_minute_one_book #tamil #book #review #crime_novel #rajeshkumar #india_naadu_en_veedu

want to buy : https://noveljunction.com/BookInfo.aspx?bookRefId=336

Leave a Reply

Powered by WordPress.com.

Up ↑

Discover more from One Minute One Book

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading