ஒரு பௌர்ணமி மரணம் – Crime Novel

அன்றைய தினம் திருமணம் முடிந்து ரிசப்ஷனில் நின்றுகொண்டிருந்தனர் ஜெயந்த்-சுப்ரியா தம்பதியினர். ரிசப்ஷனுக்கு வந்திருந்த ஜெயந்தின் நண்பன் மனோஜ் தேனிலவிற்காக புதுமணத் தம்பதியரை தன்னுடைய கெஸ்ட் ஹவுஸிற்கு அழைக்கிறான்.

ஜெயந்தும் சுப்ரியாவும் ஊட்டியில் உள்ள மனோஜின் ஜண்டேவாலா எஸ்டேட்டிற்குச் சென்றபோது மனோஜ் வேலை விஷயமாக வெளியூர் கிளம்பிக்கொண்டிருந்தான். எஸ்டேட் மேனேஜர் விஜய்யிடம் ஜெயந்த்-சுப்ரியாவிற்குத் தேவையான வசதிகளை செய்து தருமாறு கூறிவிட்டு கிளம்பிவிடுகிறான் மனோஜ்.

அங்கு வந்த விஜயைப் பார்த்த சுப்ரியா திடுக்கிட்டாள். காலேஜில் தன்னைக் காதலிப்பதாகக் கூறி தன் பின்னால் சுற்றி வந்த ஒரு பொறுக்கி இந்த எஸ்டேட்டின் மானேஜராக இருப்பதை அறிகிறாள். மேலும் சுப்ரியா தனியாக இருக்கும்போது உரிமை எடுத்துக்கொண்டு அவளிடம் பேச்சுக்கொடுக்கிறான் விஜய்.

விஜயிடம் பேசுவதைத் தவிர்த்த சுப்ரியா கணவனிடம் உண்மையைச் சொல்ல முடியாமல் தவிக்கிறாள். எங்கே ஜெயந்த் தன்னை தவறாக நினைத்துவிடுவானோ என்று பயந்த சுப்ரியா ஊட்டி சென்றதிலிருந்தே கடுகடுவென இருந்தாள்.

இதற்கிடையில் திடீரென ஜெயந்த் வேலை விஷயமாக ஊருக்குச் செல்ல வேண்டிய கட்டாயம். சுப்ரியாவைத் தனியே விட்டுவிட்டு அவன் மட்டும் ஊருக்குச் செல்ல, இந்த சூழ்நிலையை சாதகமாக்கிக் கொண்ட விஜய் அவளை அடைய நினைக்கிறான்.

மேற்கொண்டு சுப்ரியாவை அன்று இரவு தன்னிடம் வரும்படி மிரட்டிச் செல்கிறான். ஆனால் எதிர்பாராத விதமாக திடீரென அவனுடைய கெஸ்ட் ஹவுசில் இருந்து சத்தம் வர அங்கு சென்று பார்த்த சுப்ரியா அதிர்ந்தாள். வயிற்றில் கத்திக்குத்துடன் ரத்த வெள்ளத்தில் மிதந்துகொண்டிருந்தான் விஜய்.

அந்த நேரம் திடீர் பிரவேசமாக அங்கு வருகிறான் ஜெயந்த். சுப்ரியாவின் கையில் இருந்த கத்தியைப் பார்த்த ஜெயந்த் அவள் தான் குற்றவாளி என முடிவு செய்கிறான். மேற்கொண்டு ஜெயந்த்-சுப்ரியா வாழ்வில் நடந்தது என்ன..? உண்மையான குற்றவாளி யார்..? கொலைக்கான நோக்கம் என்ன..?

#one_minute_one_book #tamil #book #review #crime_novel #rajeshkumar #oru_pournami_maranam

want to buy : https://noveljunction.com/BookInfo.aspx?bookRefId=354

Leave a Reply

Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: