என் இனிய விரோதியே – Crime Novel

கெமிஸ்ட்ரி கோல்ட் மெடலிஸ்ட்டான கல்யாண் அன்று இன்டெர்வியூவிற்கு கிளம்பிக் கொண்டிருந்தான். கல்யாணின் அப்பா இன்ஸ்பெக்டர் கிருஷ்ணராஜின் கல்லூரி நண்பர்களான கமலசேகர் & சிவராமின் பெர்டிலைசர் கம்பெனி அது.

எப்படியும் வேலை கிடைத்துவிடும் என்ற சந்தோசத்தில் கிளம்பிய கல்யாண் வழியில் அவனுடைய காதலி வந்தனாவை சந்தித்துவிட்டுச் செல்கிறான். கல்யாண் இன்டெர்வியூவிற்குச் செல்லும் அதே பெர்டிலைசர் கம்பெனியில் தான் வந்தனாவின் தோழி சுதந்திராவும் ரிஷப்ஷனிட்டாக வேலை பார்க்கிறாள்.

கம்பெனியின் பிரம்மாண்டத்தை ரசித்துக்கொண்டே வந்த அவன், சுதந்திராவிடம் இன்டெர்வியூ பற்றிய தகவல்களைத் தெரிந்துகொண்டு உள்ளே சென்றான். அவனுடைய முறை வந்ததும் எழுந்த கல்யாண் உள்ளே போக, இவனுக்காக காத்திருந்த கமலசேகர் & சிவராம் அவனுடைய அப்பாவைப் பற்றி விசாரித்துவிட்டு வேலைக்கான ஆர்டரைக் கையில் கொடுத்தனர்.

வேலை கிடைத்துவிட்ட சந்தோசத்தில் திக்குமுக்காடிப் போன அவன், அறையில் இருந்து வெளியில் வந்தவுடன் இயற்கை உபாதையின் காரணமாக, மேலே இருந்த போர்டை கவனிக்காமல் MD-க்கள் உபயோகிக்கும் டாய்லெட்டிற்குள் நுழைந்து விடுகிறான். எதிர்பாராத விதமாக உள்ளே சென்ற அவன் கால் வழுக்கிவிட, சப்போர்ட்டிற்காக சுவரைப் பிடிக்கப் போக அங்கிருந்த பட்டனைத் தெரியாமல் அழுத்தி விடுகிறான்.

அப்போது திடீரென பாத்ரூமில் வைக்கப்பட்டிருந்த பெரிய கண்ணாடி நகர்ந்து வழிவிட, கல்யாணின் கண்கள் ஆச்சரியத்தில் அகல விரிந்தது. கண்ணாடி இருந்த இடத்தில் தங்க பிஸ்கட்டுகளும், பணக்கட்டுகளும் இருக்க அப்போது அந்த பாத்ரூமிற்குள் நுழைகிறான் ஒருவன்.

போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணராஜ் தன்னுடைய மகனை அந்தக் கம்பெனிக்கு வேவு பார்ப்பதற்காக அனுப்பியிருப்பதாக முடிவு செய்த கமலசேகரும் சிவராமும் சேர்ந்தே கல்யாணைத் தீர்த்துக்கட்டுகின்றனர். கொலையை விபத்தாக மாற்றி போலீசையும் நம்ப வைக்கின்றனர். ஆனால், கல்யாணின் மரணத்தில் சந்தேகமடைந்த அவனுடைய காதலி வந்தனா, அவளே முன்வந்து தனியாக விசாரிக்கிறாள். அவளையும் தீர்த்துக்கட்ட எதிரிகள் முடிவு செய்திருந்த வேளையில் வந்தனா தப்பித்தாளா..? எதிரிகளின் நிழலான காரியங்களைப் போலீஸ் கண்டுபிடித்ததா..? கமலசேகரும் சிவராமும்  சேர்ந்து கல்யாணை எப்படி கொலை செய்தனர்..?

வேலைக்காகச் சென்ற ஒருவன் விதியின் காரணமாக உயிரையே இழக்க நேரிட, உண்மைகள் வெளியே வந்தனவா..?

#one_minute_one_book #tamil #book #review #crime_novel #rajeshkumar #en_iniya_virodhiye

want to buy : https://noveljunction.com/BookInfo.aspx?bookRefId=400

Leave a Reply

Powered by WordPress.com.

Up ↑

Discover more from One Minute One Book

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading