கறுப்பு ரத்தம் – Crime Novel

சேவியரும் லாரன்ஸும் அவசர அவசரமாக குணசீலியை பிக் அப் செய்வதற்காக ரயில்வே ஸ்டேஷனை வந்தடைந்தனர். ஒரு மாத கல்லூரி விடுமுறைக்காக சென்னையில் இருந்து கோவைக்கு வந்து கொண்டிருந்தாள் குணசீலி. ட்ரெயின் அப்போது தான் ஸ்டேஷன் வந்தடைகிறது.

குணசீலி அவளுடைய கம்பார்ட்மெண்ட்டில் இருந்து இறங்காததால், இருவரும் ரயிலுக்குள்ளே சென்று பார்க்கிறார்கள். அங்கே குணசீலியின் பொருட்கள் மட்டும் பெர்த்தில் இருக்க அவளைக் காணவில்லை. ரயில் முழுவதும் தேடிவிட்டு கடைசியாக பாத்ரூம் பூட்டப்பட்டிருப்பதை கண்டுபிடித்த சேவியர், கதவைத் தட்ட உள்ளே இருந்து எந்த சத்தமும் வராமல் போக, ரயில்வே போலீசாரின் உதவியால் கதவைத் திறக்க…

கோணல் மாணலாக மடங்கிய நிலையில் பாத்ரூமிற்குள் செத்துக் கிடக்கிறாள் குணசீலி. கடைவாயில் ஓரத்தில் காய்ந்து போன கறுப்பு ரத்தம்.

தீவிர விசாரணைக்குப் பிறகு ஒரு தடயமும் கிடைக்காமல் தற்கொலை என கேஸை முடித்து வைக்கிறது போலீஸ்.

குணசீலி மரணத்தில் சந்தேகமடைந்த சேவியரும் லாரன்ஸும் சென்னை சென்று மேற்கொண்டு விசாரிக்கின்றனர். குணசீலி அபார்சன் செய்திருந்த திடுக்கிடும் தகவல் அவர்களை வந்து சேருகிறது. ஹாஸ்பிடலுக்குச் சென்று விசாரித்த இருவருக்கும் மேலும் ஒரு திடுக்கிடும் தகவல் கிடைக்கிறது. குணசீலியின் பெயரில் ரமணி என்ற பெண் அபார்சன் செய்துகொண்டது தெரியவருகிறது.

எல்லாத் தவறுகளும் ரமணியிடம் இருந்து ஆரம்பிப்பதாக உணர்ந்த சேவியர்-லாரன்ஸ் இருவரும் ரமணியைத் தேடிச் செல்கின்றனர். ஆனால் ரமணி தலைமறைவாகிறாள்.

நிலைமை இவ்வாறிருக்க சர்ச்சுக்குப் பின்னால் அழுகிய நிலையில் ஒரு பெண்ணின் பிணம் கிடைக்கிறது. அந்தப் பெண்ணின் கடைவாயின் ஓரத்திலும் கறுப்பு ரத்தம்.

விசாரணையில் இறந்த அந்தப் பெண் வெரோனிகா ராணி என்று தெரிகிறது. இந்த முறை விழித்துக் கொண்ட போலீஸ் கேஸை முடுக்கி விடுகிறது. கேஸின் முடிச்சுகளை அவிழ்க்க உள்ளே வருகிறான் விவேக்.

விவேக் விசாரித்துக்கொண்டிருக்கும்போதே அதே பாணியில் ரமணியின் பிணம் கார் டிக்கியில் கிடைக்கிறது. இந்நிலையில் சர்ச்சில் இருந்து முன்னிரவு நேரத்தில் விவேக் வீட்டிற்கு ஒரு தகவலைச் சொல்ல வந்த சர்ச் வேலையாள் ஆபிரகாம் வீட்டு வாசலில் வைத்தே மர்ம நபர் ஒருவனால் கொலை செய்யப்படுகிறான்.

ரமணியைத் தவிர கேஸில் சம்பந்தப்பட்ட அனைவரும் கிறிஸ்டியனாக இருக்க..இறந்த அனைவருக்கும் கொடிய கடல் பாம்பின் விஷம் கொடுத்து கொலை செய்யப்பட்டிருப்பதைக் கண்டுபிடிக்கிறான் விவேக். நடந்த கொலைகளுக்கெல்லாம் காரணம் என்ன..? குற்றவாளி யார்..? அடுத்த கொலை நடக்கும் முன் விவேக் அதைத் தடுக்க முடிந்ததா..?

#one_minute_one_book #tamil #book #review #crime_novel #black_death #rajeshkumar #karuppu_rattham

want to buy : https://noveljunction.com/BookInfo.aspx?bookRefId=630

Leave a Reply

Powered by WordPress.com.

Up ↑

Discover more from One Minute One Book

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading